Meymand – A 12000 year old village in Iran
தென்கிழக்கு ஈரானிய மாகாணமான
கெர்மனில் ஷாஹர்-பாபக் நகருக்கு அருகில், கற்காலத்தைச் சேர்ந்த
ஒரு கிராமம் உள்ளது. மெய்மண்ட் என்ற அந்த கிராமம் குகைவாசிகளின் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
கெர்மன் மாகாணத்தில்
உள்ள ஷஹர்-இ பாபாக் நகருக்கு வடகிழக்கே தெற்கில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்துடன்
தெஹ்ரானை இணைக்கும் சாலையில் 35 கிலோமீட்டர் தொலைவில்
மெய்மண்ட் அமைந்துள்ளது.
ஈரானில் உள்ள மெய்மண்ட்
போன்ற ஒரு கிராமம் எவ்வளவு காலம் இருந்தது என்பதை புரிந்துகொள்வது கடினம் என்றாலும்
ஈரானிய பீடபூமியில் 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய
மனித வசிப்பிடமாக மெய்மண்ட் நம்பப்படுகிறது.
12,000 ஆண்டுகளுக்கு முன்பு ஈரானிய பீடபூமியின் ஆரம்பகால குடிமக்களுக்கு
மேமண்ட் கிராமம் வசதியான குகைகளையும் மற்றும் தங்குமிட பாறைகளையும் வழங்கி வருகிறது.
அன்றிலிருந்து இன்றுவரை இந்த குடியேற்றம் தொடர்ந்து வருகிறது, இது ஈரானில் எஞ்சியிருக்கும் பழமையான கிராமங்களில் ஒன்றாகும்.
இந்த கிராமம் யுனெஸ்கோவின்
உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும், யுனெஸ்கோ 2005 இல் மெலினா மெர்கூரி சர்வதேச பரிசை இதற்கு வழங்கியது.
உலகின் குறிப்பிடத்தக்க கலாச்சார நிலப்பரப்புகளைப் பாதுகாத்து வளப்படுத்துவதற்கான முயற்சிகளின்
விதிவிலக்கான நிகழ்வுகளை அங்கீகரிப்பதே பரிசின் நோக்கமாகும்.
இந்த 12,000 ஆண்டுகள் பழமையான ஈரானிய குகை கிராமத்தில் 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொடர்ந்து வசித்து வருகின்றனர்
என்பதற்கான சான்றுகள் உள்ளன.
மேமண்டில் உள்ள குடியேற்றத்தின்
பிரமிக்கத்தக்க வயது, கல் பொறிப்புகளின் குறிப்புகளைக்
கொண்டு மனித குடியேற்றங்களின் இருப்பை நிறுவ முடிந்தது.
இருப்பினும், கிராமத்தின் வரையறுக்கும் பண்பு, அதாவது அதன் 300+
நிலத்தடி குகை வீடுகள் கிட்டத்தட்ட 3-4,000
ஆண்டுகளுக்கு முந்தையது. இயற்கை குகைகளுக்கு அருகில், கையால் செதுக்கப்பட்ட வீடுகள் மலைகளின் வரம்பில் உள்ளன.
அவை 3,000 ஆண்டுகளுக்கு முன்பு
இருந்தே உள்ளூர் மக்களின் குடியிருப்புகளாக இருந்துவருவது மட்டுமல்லாமல் அவை இன்னும்
பயன்பாட்டில் உள்ளன.
குகை குடியிருப்புகள்
மத ஆசிரமங்களாக தொடங்கின, ஆனால் குடியேறியவர்கள்
அந்த இடத்திலேயே நீண்ட காலம் தங்கியதால் மெதுவாக நிரந்தர வீடுகளாக பரிணமித்ததாகக் கருதப்படுகிறது.
ஒற்றை அறை குடியிருப்புகள் ஒன்றன் மேல் ஒன்றாக நான்கு மற்றும் ஐந்து அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன, ஆனால் தரிசு ஒவ்வொன்றிலும்
சமையலுக்கான பிரத்தியேக இடம் உள்ளது. உள்ளூர்வாசிகள் அவர்களின்
மூதாதையர்கள் பாரம்பரிய கருவிகளுக்கு மாறாக அப்பகுதியில் காணப்படும் கடினமான, கூர்மையான கற்களைப் பயன்படுத்தி
இந்த எளிமையான குகை வீடுகளை செதுக்கினர் என்று கூறுகின்றனர்.
700 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நாட்டிலுள்ள மற்றொரு குகை
கிராமமான கண்டோவனுடன் ஒப்பிடும்போது, மெய்மண்ட் உண்மையில்
அதை விட பழமையானது; 10,000 ஆண்டுகள் பழமையான கல்
வேலைப்பாடுகள் மற்றும் 6,000 ஆண்டுகள் பழமையான மட்பாண்டங்கள்
கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கிராமங்களில் ஒன்றாகும். முதல் கோட்பாட்டின் படி, இந்த கிராமம் கிமு
800 முதல் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஆரிய பழங்குடியினரால் கட்டப்பட்டது.
கிராமத்தில் தற்போது
சுமார் 130-150 பேர் வசித்து வருகின்றனர், அவர்களில் பலர் நாடோடி மேய்ப்பர்கள், இம் மக்கள் குளிர்கால மாதங்களில் கிராம குகைகளில் வாழ்கின்றனர்.
கோடையில் உயரமான மேய்ச்சல் நிலங்களுக்குச் சென்று விவசாயத்தில் கவனம் செலுத்துகின்றனர்.
நிலப்பரப்பின் இயற்கையான
மண் தன்மைக்கு கிராமவாசிகள் வண்ணம் சேர்க்கவில்லை. அவர்களின் வீடுகளிலோ அல்லது தெருக்களிலோ
தொட்டிகளில் பூக்கள் அல்லது அலங்கார செடிகள் இல்லை. கிராமத்தின் அப்பட்டமான தோற்றம்
அதன் குடிமக்களின் கடுமையான வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது.
மொத்தம் 2,560 அறைகளுடன் மொத்தம் 406 குடியிருப்பு குகை அலகுகள் உள்ளன. சில குகை குடியிருப்புகள் ஐந்து மாடிகள் உயரம்
கொண்டவை. ஏராளமான அலகுகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
சுமார் 100 முதல் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு
முன்பு கற்காலத்தில் அடுக்குகளில் படிந்திருந்த மலைப்பகுதியின் மென்மையான வண்டல் பாறையில்
துளையிட்டு குடியிருப்பு அலகுகள் உருவாக்கப்பட்டன. மேமண்டின் வண்டல் பாறை கான்கிரீட்
போன்ற நிலைத்தன்மை, குகை அலகுகளின் கூரைகளை
தாங்கும் அளவுக்கு கடினமாக இருக்கும் அதே வேளையில், கைமுறை உழைப்பால் வடிவமைக்கும் அளவுக்கு மென்மையானது.
சில கீழுள்ள குகை குடியிருப்புகள்
ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் நுழைவு அகழிகள் குடும்ப சந்திப்புகளும் சமூகக்
கூட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் விதத்தில் அமையப்பெற்றுள்ளன.
கிராமத்தின் நுழைவாயிலுக்கு
அருகில் எட்டு அறைகள் கொண்ட விருந்தினர் இல்லமும் உள்ளது, இருந்தாலும் விருந்தாளிகள் சில நேரங்களில் சில குடியிருப்பாளர்களுடன்
தங்குவதற்கு விரும்பினால், அவ்வாறும் செய்யலாம்.
விருந்தினர் விடுதியின் மாடிகளில், ஆடம்பரமான தங்குமிடங்கள் அல்ல என்றாலும், தரைவிரிப்புகள், சுவரில் செதுக்கப்பட்ட
படுக்கைகள், மென்சூடான விளக்குகள்
மற்றும் நீராவி குளியலுடன் கூடிய பகிரப்பட்ட ஆனால் சுத்தமான குளியலறைகள் உள்ளன.
ஈரான் வளமான வரலாற்றைக்கொண்ட
ஒரு நாடு, மேலும் மேமண்ட் நாட்டின்
பழமையான மற்றும் அழகிய கிராமங்களில் ஒன்றாகும். 2015 ஜூலை 4 அன்று, இந்த கிராமம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின்
பட்டியலில் சேர்க்கப்பட்டது.
மெய்மண்ட் கிராமம் ஈரானியர்களின்
உறுதியான கலாச்சார பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாகும், இது ஏழாவது வரலாற்று, இயற்கை மற்றும் கலாச்சாரப் பணிக்கான விருதைப் பெற்றுள்ளது.
இந்த கிராமத்தில் வசிப்பவர்கள்
தங்கள் விசித்திரமான சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களை இன்றளவிலும் கடைப்பிடித்து
வருகின்றனர், இன்னும் சில சாசானிய
வார்த்தைகளை தங்கள் மொழி மற்றும் பேச்சுவழக்கில் பயன்படுத்துகின்றனர்.
பழங்காலத்திலிருந்தே, கிராமவாசிகள்,
கிராமத்தின் சூழ்நிலை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மற்றும் அதன் மதிப்புமிக்க
இயற்கை வளங்களான நீர், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்
மற்றும் மண் போன்றவற்றைப் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டு, தங்கள் குடியிருப்புகளை சூழவுள்ள ஏராளமான இயற்கை வளங்களை
மதிக்க கற்றுக்கொண்டனர். மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள இயற்கையின் அமைதியை சீர்குலைக்காத
வகையில் வாழ விரும்புகின்றனர்.
அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான வருடங்கள் தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்த பிறகும் கூட இங்குள்ள இயற்கை சூழல் பழமை வாய்ந்ததாகவே உள்ளது. இந்த நவீன யுகத்திலும் குறிப்பிட்ட மாசடையாத, இயல்பு மாறாமல் நிலைத்திருக்கும் தன்மை தான், இப்பகுதிக்கு வரும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறது.
No comments:
Post a Comment