Nuclear technology has promoted Iran’s political status in the world: Kamalvandi
Behrouz Kamalvandi |
அணுசக்தி ஆராய்ச்சியானது ஈரானிய சமூகத்தின் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலகநாடுகள் மத்தியில் ஈரானின் அரசியல் அந்தஸ்தை
உயர்த்தியுள்ளதாகவும் ஈரானின் உயர் அணுசக்தி அதிகாரி கூறுகிறார்.
ஈரான் அணுசக்தி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமல்வந்தி கூறுகையில், இப்போது ஈரான் இஸ்லாமிய குடியரசு மேற்கத்திய
நாடுகளால் உருவாக்கப்பட்ட பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுத்துவருகிறது. பல
பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறோம். அணுசக்தித் துறையின் முக்கியத்துவத்தின்
காரணமாகவே இவை அனைத்திற்கும் முகம்கொடுக்கவேண்டியுள்ளது.
ஈரானை பலவீனப்படுத்தும் தங்கள் முயற்சிகளில், குறிப்பாக நாட்டின் அணுசக்தி தொழில்துறையின் முனேற்றப்
பாதையில் "தடைகளை" உருவாக்க எதிரிகள் முயன்று வருவதாக கமல்வந்தி கூறுகிறார்.
காதாரத் துறையில் அணுசக்தி தொழில்நுட்பத்தின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, இப்போது ஈரானில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான
நோயாளிகள் கதிரியக்க மருத்துவத்தைப் பெறுகிறார்கள் என்று அவர் கூறினார்.
கதிரியக்க மருந்துகள் என்பது கதிரியக்க ஐசோடோப்புகள் எனப்படும் வேதியியல்
கூறுகளின் கதிரியக்க வடிவங்களைக் கொண்ட மருந்துகள் ஆகும்.
அந்த கதிரியக்க ஐசோடோப்புகள் உருவாக்கும் கதிர்வீச்சு வகையைப் பொறுத்து, அவை பல மருத்துவ நிலைமைகளைக் கண்டறிய அல்லது
சிகிச்சையளிக்க அதனைப் பயன்படுத்தப்படலாம்.
அவற்றின் பயன்பாடுகள் மூளை, இதயம், சிறுநீரகம்
மற்றும் எலும்பு போன்ற பல்வேறு உறுப்புகளின் இமேஜிங் முதல் புற்றுநோய் மற்றும் ஹைப்பர்
தைராய்டிசத்திற்கான சிகிச்சை வரை உள்ளன.
சர்வதேச மற்றும் சட்ட விவகாரங்களுக்கான AEOI துறையின் பொறுப்பாளராகவும்
இருக்கும் கமல்வந்தி, அணுசக்தி தொழில்நுட்பத்தில்
ஈரான் தேர்ச்சி பெறவில்லை என்றால் இப்போது அணு மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிரமத்தை
எதிர்கொண்டிருக்கும் என்று கூறினார்.
ஈரான் இப்போது மற்ற நாடுகளுக்கும் கதிரியக்க மருந்துகளை ஏற்றுமதி செய்து
வருவதாக அணுசக்தி அதிகாரி கூறினார்.
பொருளாதாரத் தடைகள் காரணமாக கதிரியக்க மருந்து தயாரிப்பதற்கான அணுசக்தி பொருட்களை
இறக்குமதி செய்ய ஈரானின் முன்னேற்றத்தை விரும்பாத நாடுகள் ஈரானை ஒருபோதும் அனுமதிக்கவில்லை
என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"எனவே, இந்த விஷயத்தில் எங்களுக்கு உள்ளக திறன்கள் இல்லையென்றால், நாடு சுகாதாரப்
பராமரிப்பில் பல சவால்களை எதிர்கொண்டிருக்கும்."
உதாரணமாக, உணவு மற்றும் மருந்து மேற்கத்திய பொருளாதாரத் தடைகளுக்கு
உட்பட்டவை அல்ல என்ற கூற்றுக்கள் இருந்தபோதிலும், "யதார்த்தம்
என்னவென்றால், இந்த இரண்டு பொருட்களின் மீதான பொருளாதாரத் தடைகளின் விளைவுகளை
நாங்கள் கண்டுகொண்டுதான் இறுக்கின்றோம்" என்று அவர் கூறினார்.
கமல்வந்தி தனது உரையில் வேறொரு இடத்தில், "பொருளாதாரத்
தடைகள் நாட்டிற்கும் அணுசக்தித் துறைக்கும் ஒரு பலமாக மாறியுள்ளன. இந்த நிலைமைகளின்
கீழ், நாங்கள் எங்கள் சொந்தக் காலில் நிற்க முயற்சித்தோம், இப்போது நாட்டின்
தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டவர்களாக மாறியுள்ளோம், அதேசமயம் பல்வேறு
கதிரியக்க மருந்துகளை ஏற்றுமதி செய்வோராகவும் மாறியுள்ளோம்.
விவசாய பொருட்களை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் கதிர்வீச்சு தொழில்நுட்பத்தின்
முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார், பொருளாதாரத்
தடைகள் காரணமாக, தொழில்துறை முடுக்கிகள் (Industrial accelerators) ஈரானுக்கு விற்கப்படவில்லை என்றார்.
இருப்பினும், ஈரானால் இப்போது இந்த முடுக்கிகளை உலகளாவிய விலையை விட
குறைந்த விலையில் மற்றும் அதிக தரத்துடன் தயாரிக்க முடிகிறது என்று கமல்வந்தி கூறினார்.
இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயை மேற்கோள் காட்டி, "புரட்சியின் உச்சத் தலைவர் குறிப்பிட்டுள்ளபடி, இந்தத் தொழில் நாட்டிற்கு மரியாதைக்குரிய ஆதாரமாக
உள்ளது மற்றும் நாட்டின் சக்திக்கு பங்களிக்கிறது. இந்தத் தொழில் துறை அரசியல்
ரீதியாகவும் நாட்டிற்கு அதிகாரத்தையும் கௌரவத்தையும் தருகிறது”.
அணுசக்தி தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற நாடுகளுக்கு உலகில் சிறப்பு அந்தஸ்து
உள்ளது என்று அவர் கூறினார்.
இந்தக் காரணத்திற்காகவே, ஈரான் இந்தத்
தொழிலில் முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதை மேற்கு விரும்பவில்லை என்று கமல்வந்தி கூறினார்.
"தற்போதைய அரசியல் பிரச்சினைகள் இந்த பிரச்சினையில் இருந்தே உருவாகின்றன, மேலும் சர்வதேச ரீதியில் எங்கள் பணியின் ஒரு பகுதி
அவர்கள் (மேற்கு) உருவாக்கிய அரசியல் மற்றும் சட்ட தடைகளை அகற்றுவதாகும்," என்றும்
அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment