Saturday, February 17, 2024

துரோகத்தின் தாழ்வாரம் ஆக மாறிவிட்ட சவுதி அரேபியா...!

The corridor of betrayal

 By Mona Hojat Ansari

செங்கடலில் யெமன் முற்றுகையை சமாளிக்க அரபு நாடுகளின் உதவியை இஸ்ரேல் எவ்வாறு பயன்படுத்துகிறது

நவம்பர் 19 அன்று, காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலின் மிருகத்தனமான கொடூரத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் உலகம் இன்னும் போராடிக் கொண்டிருந்தபோது, இஸ்லாமிய புரட்சியின் தலைவர் அயதுல்லா செய்யத் அலி கமேனி, பாலஸ்தீனியர்களின் உயிர்களைக் காப்பாற்ற உதவுவதற்காக இஸ்லாமிய நாடுகள் குறைந்தபட்சம் "வரையறுக்கப்பட்ட காலத்திற்காவது" சியோனிச ஆட்சியாளர்களுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இதை அரசாங்கங்கள் செய்யு முன்பு, உலகெங்கிலும் உள்ள மக்கள் இன, மத பேதங்கள் மறந்து தங்களால் முடிந்த சகல வகையிலும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் இமாமின் இந்த ஆலோசனையைப் பின்பற்றுவதாகத் தோன்றியது. மேற்கு ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள கடை அலமாரிகள் இஸ்ரேலிய தயாரிப்புகளின் குவியலைக் காணத் தொடங்கின, ஏனெனில் குடிமக்கள் ஒரு இனப்படுகொலைக்கு நிதியளிக்க தங்கள் பணத்தை செலவிட தயராக இல்லை. பலர் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதைத் தவிர்த்தது மட்டுமல்லாமல், சியோனிச ஆட்சியுடன் தொடர்புடைய வியாபார அடையாளங்களையும் புறக்கணித்தனர், இதனால் ஸ்டார்பக்ஸ் மற்றும் மெக்டொனால்ட்ஸ் போன்ற மாபெரும் நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்தன.

அரபு நாடுகளில், சில நாடுகள் மற்றவர்களை விட இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிராக செயல்பட கடமைப்பட்டிருப்பதாக உணர்ந்தன. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான மிகப்பெரிய ஒற்றுமையை யெமன் வெளிப்படுத்தியது. வறிய நாட்டின் அன்ஸாருல்லாஹ் இயக்கம் செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்களை குறிவைக்கத் தொடங்கியது, இது இஸ்ரேலுக்கு மிகவும் முக்கியமான ஒரு உயிர்நாடியை - பரபரப்பான எலியட் துறைமுகத்தை - மூச்சுத் திணறடித்தது. எவ்வாறாயினும், காஸாவுக்கு ஆதரவான யெமனின் தைரியமான நிலைப்பாட்டின் காரணமாக அவர்கள் சந்தித்து வரும் சவால்களும் இழப்புகளும் கொஞ்சநஞ்சமல்ல.

இஸ்ரேலின் எல்லா குற்றச்செயல்களுக்கும் உடந்தையாக இருக்கும் அமெரிக்காவும் பிரிட்டனும் சாதாரண மக்களின் நலன்களை "பாதுகாக்க" செயல்படுவதாகக் கூறி யெமன் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கின. மேற்கத்திய ஊடகங்கள் ஏன் எதற்கு என்று கேள்வி எழுப்பாமல், செங்கடலில் அன்சருல்லாவின் தாக்குதல்கள் இறுதியில் மேற்கில் விலைவாசி உயர்வை ஏற்படுத்தும், எனவே அதை அடக்கி ஆக வேண்டும் என்று வாதிட்டன. இஸ்ரேலிய கப்பல்கள் மட்டுமே குறிவைக்கப்படுகின்றன என்ற உண்மை குறித்தும், பாலஸ்தீனியர்களை இனி கொல்வதில்லை என்று ஆட்சி ஒப்புக்கொண்டவுடன் இந்த தாக்குதல்களும் முடிவுக்கு வரும் என்பது பற்றியும் எதுவும் அவற்றில் குறிப்பிடப்படவில்லை.

ஜனவரி 12 அன்று மேற்கத்திய வான்வழித் தாக்குதல்கள் யெமன் மக்கள் மீது பல ஆண்டுகளாக இடைவிடாத சவூதி குண்டுவீச்சின் எதிரொலிகளைக் மீண்டும் கட்டவிழ்த்து விட்டன.

ஆனால், யெமன் மக்கள் தங்களுக்கு கிடைத்த கொடுமையின் மீட்டளைப்பற்றி பற்றி அதிகம் கவலைப்படவில்லை.  "நேர்மையாக, எனது பாதுகாப்பான வீட்டில் இரவைக் கழித்துக்கொண்டிருந்த வேளை காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் குண்டுவீச்சுக்கு ஆளானதை நினைத்து நான் வெட்கப்பட்டேன். இப்போது எனக்கு அந்த எண்ணம் குறைந்துவிட்டது. நாங்கள் தாக்கப்படுவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் விரும்புவதெல்லாம் காஸாவில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவ முடியும் என்பதுதான்" என்று மேற்கத்திய (அமெரிக்க + பிரித்தானிய) தாக்குதல்களுக்கு பிந்திய நாளில் பாலஸ்தீனியர்களுக்கு உறுதியான ஆதரவை வெளிப்படுத்த சனாவில் குவிந்த மில்லியன் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்த ஒருவர் கூறினார்.

இஸ்ரேலிய கப்பல்களுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளை நிறுத்த மறுத்த யெமன் இன்று அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர் விமானங்களால் தொடர்ந்து குண்டு வீசி தாக்கப்படுகிறது. என்றாலும் இஸ்ரேலுக்கு பொருளாதார அடிகளை கொடுப்பதன் மூலம் ஹமாஸ் சகோதரர்களுடனான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறோம், காலம் கடந்து போவதற்கு முன் காஸா மக்கள் மீதான அதன் தாக்குதல்களை சியோனிச ஆட்சி நிறுத்திவிட வேண்டும், இல்லையேல் அன்ஸாருல்லாஹ்வின் எதிர் நடவடிக்கைகள் நிச்சயமாக தொடரும்.

முஸ்லிம் உலகம் முழுவதும், அயதுல்லா கமேனியின் கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு துருக்கி தனது ஏற்றுமதிகளை அதிகரித்தது; சில அரபு நாடுகள் இஸ்ரேலின் மீட்புக்கு விரைந்தன, இந்த செயலானது காஸா மக்களது மீட்சிக்கான யெமனிய மக்களின் முயற்சிகள் அனைத்தையும் வீணடித்தன.

பிப்ரவரி தொடக்கத்தில் இஸ்ரேலின் ‘சேனல் 13’ இல் திடுக்கிடும் செய்திகள் வெளிவந்தன, ஜோர்டான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று அரபு நாடுகளின் உதவியுடன் செங்கடலில் யேமனின் முற்றுகையை இஸ்ரேல் எவ்வாறு கடந்து முறியடிக்கிறது என்பதற்கான காட்சிகளை அது வெளிப்படுத்தியது. நூற்றுக்கணக்கான டிரக்குகளில் பொருட்களும் புதிய உணவுகளும் சவுதி அரேபியா மற்றும் ஜோர்டானில் இருந்து பயணித்து இறுதியில் துபாய் வழியாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஹைபா துறைமுகத்தை வந்தடைகிறது என்று அது தெரிவித்தது.

மூன்று அரபு நாடுகளும் இஸ்ரேலிய அறிக்கையை இதுவரை நிராகரிக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை என்றாலும், அவற்றின் விளக்கங்கள் எப்படியும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பலஸ்தீனியர்களுக்கு உதவ பெரும்பாலான அரபு நாடுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த செய்தியை அவர்கள் மறுத்தாலும், அவர்கள் உண்மையில் காஸா மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்பதால், மக்கள் இன்னும் அவர்களை செயலற்றவர்கள் என்றே குற்றம் சாட்டுவார்கள்,” என்று ஜோர்டான் மற்றும் லெபனானுக்கான ஈரானின் முன்னாள் தூதர் அஹ்மத் தஸ்மால்சியன் தெஹ்ரான் டைம்ஸிடம் கூறினார்.

போர் முடிந்தவுடன் இஸ்ரேலிய ஆட்சியுடன் தங்கள் உறவுகளை தக்க வைத்துக்கொள்ள அல்லது விரிவுபடுத்திக் கொள்வதற்காக அரபு நாடுகள் இரண்டு தேசங்கள்முன்மொழிவுகளை புதுப்பிக்கும் அபிலாஷைகளையே கொண்டுள்ளன என்று முன்னாள் இராஜதந்திரி நம்புகிறார்.

"ஜோர்டான் வாஷிங்டனை நம்பியிருப்பதால் பாலஸ்தீனியர்களை ஆதரிப்பதில் தடைகள் உள்ளன. ஆனால் சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இங்கு மூலோபாய தவறுகளைச் செய்கின்றன, "என்று அவர் விளக்கினார், ஒரு பாலஸ்தீனிய அரசு உருவாக்கப்பட்டாலும், பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலங்களையும் அடையாளத்தையும் திருடிய மக்களுடன் வாழ்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

"இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் வரை எதிர்ப்பு இருக்கும். எனவே சியோனிச ஆட்சியுடன் உறவுகளை இயல்பாக்குவது ஒருபோதும் தீர்வாக அமைய போவதில்லை. அதற்கு பதிலாக அரேபியர்கள் பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமையை மதிக்க வேண்டும், மேலும் அவர்கள் தங்கள் மூதாதையர் நிலங்களை என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும் ".

இதற்கிடையில், இஸ்ரேலிய குற்றங்களை எதிர்கொள்ளும் செயலற்ற தன்மை பிராந்திய ஆட்சியாளர்களுக்கு ஏமாற்றத்தை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரபு உலகின் சில பிரமுகர்கள் அரசுகளை எச்சரித்துள்ளனர். காஸா இனப்படுகொலையில் அரபு நாடுகளின் கூட்டுச்சதிக்கு இந்த தாழ்வாரம் சமம் என்றும், இறுதியில் ஜோர்டான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பொதுமக்களை அதிர்வலைகளுக்கு உட்படுத்தக்கூடும் என்றும் பிரபல எகிப்திய பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார்.

"இந்த மூன்று நாடுகளும் யெமனியர்களைப் போன்ற அதே துணிச்சலான நிலைப்பாட்டை எடுக்கவும், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர்க்கப்பல்களை எதிர்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. ஆனால் இந்த கையாலாகாத்தனத்தால் கொதிப்படைந்துள்ள தங்கள் சொந்த மக்கள் சொல்வதைக் கேட்குமாறு நாங்கள் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று அப்துல் பாரி அத்வான் ஒரு கட்டுரையில் எச்சரித்துள்ளார்.

https://www.tehrantimes.com/news/494928/The-corridor-of-betrayal

 

 

No comments:

Post a Comment