Islamic Iran is growing to the amazement of the world
ஈரான் அதன் இஸ்லாமிய புரட்சி வெற்றியின் 45 ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகிறது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொங்கிக்கிடந்த உலக முஸ்லிம்களின் தலைகளை
நிமிரச்செய்தது இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களால் வழிநடத்தப்பட்டு, இப்போது இமாம் கமனேயி அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும்
இஸ்லாமிய புரட்சியாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 45 ஆண்டுகளைக் கடந்த நிலையில் எல்லாத் தடைகளையும் தாண்டி வெற்றிப்பாதையில் அது
வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
உலகின் பல நாடுகளில் புரட்சிகள் வெடித்து ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இதன்போதெல்லாம் அதிகாரம் கைமாறியதே அன்றி, அந்நாடுகளில் உண்மையான மாற்றங்கள் ஏற்பட்டனவா என்பது
கேள்விக்குறியே. இதுபோன்ற விளைவொன்றையே மேற்கின் வல்லாதிக்க சக்திகள் ஈரானிலும்
எதிர்பார்த்தன. பயங்கரவாதம், யுத்த திணிப்பு, ஆட்சி கவிழ்ப்புக்கான சதிமுயற்சிகள், மிகவும் கடுமையான
பொருளாதாரத் தடைகள் போன்ற அனைத்தும் இன்றுவரை தொடர்கின்றன. இருந்தும் உலகமே
வியக்கும் அளவுக்கு இஸ்லாமிய குடியரசு சகல துறைகளிலும் முன்னேறி வருகின்றது என்பது
மகிழ்ச்சியான செய்தியாகும்.
புரட்சியின் எதிரிகள், கடந்த காலத்தில் செய்து வந்தது போல், இன்றும் கூட பணம் மற்றும் தங்கள் வசம் உள்ள அனைத்து
கருவிகளையும் பயன்படுத்தி, இஸ்லாமிய ஈரானுக்கு எதிராக பொய்களை பரப்பும்
அவர்களது முயற்சிகளில் உத்வேகம் கொண்டுள்ளனர் என்பது கண்கூடு.
ஆட்சி மாற்றம், யுத்தம், பொருளாதார பயங்கரவாதம் போன்ற எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத தலைமைத்துவமும், அந்த தலைமைத்துவத்துக்கு கட்டுப்படும் மக்கள் கூட்டமும்
இருக்கும்வரை எந்த உலக சக்தியாலும் இஸ்லாமிய அரசை அசைக்க முடியாது.
சவுதி அரேபியா, எமிரேட்ஸ், எகிப்து மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளை அச்சுறுத்தி காரியம் சாதிப்பது போல்
ஈரானிலும் செய்ய விரும்புகின்றது அமெரிக்கா. இந்த பிளாக் மெயிலுக்கு ஈரான்
ஒருபோதும் அடிபணியாது;
அதன் இலக்கை நோக்கிய பயணத்தை தடுநிறுத்தவும்
முடியாது.
இஸ்லாமிய சிந்தனைகளுக்கு புத்துயிர் அளித்த இந்தப் புரட்சி, பல்வேறு சமூகத் தளங்களில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின்
பங்கை முக்கியப்படுத்தியதுடன், இஸ்லாமிய அடையாளத்தின் கூறுகளை மேற்கத்திய
அடையாளத்திற்கு எதிராக ஏற்றுக்கொள்ளப்பட்ட யதார்த்தமாக நிலைநிறுத்தியுள்ளது.
நேர்மையான, எதற்கும் சளைக்காத, உறுதியான தலைமைத்துவம், சரியான திட்டமிடல், அர்ப்பணமிக்க மக்கள் ஆகியனவே இந்த வெற்றியின் சூட்சுமங்களாகும்.
பிராந்தியத்தில் மிகவும் உறுதியான அரசியல் ஸ்திரத்தன்மை கொண்ட ஒரு நாடு
இருக்குமாயின் நிச்சயமாக ஈரான் இஸ்லாமிய குடியரசு மட்டுமே என்றால் மிகையாகாது.
(அமெரிக்க ராணுவ உதவியின்றி சவூதி அரசினால் இரண்டு வாரங்கள் கூட தாக்குப்பிடிக்க
முடியாது என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்ததை மறந்திருக்க
மாட்டீர்கள்).
பொருதாரத் தடைகளின் மூலம் ஈரான் இஸ்லாமிய குடியரசை அச்சுறுத்தி அடிபணியைச்
செய்யலாம் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் கனவு கண்டுக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக
அது கனவாகவே முடியும்.
'இஸ்லாத்தை இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக
எழுவதற்கு முடியாதவாறு முதுகெலும்பை
முறித்துவிட்டோம்' என்று எண்ணியிருந்த
காலனித்துவ சக்திகள் ஈரானில் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் தலைமையில்
வெற்றிபெற்ற இஸ்லாமிய புரட்சியின் விளைவாக உலகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில்
ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு கண்டு அச்சம் கொள்ளத் தொடங்கின.
புரட்சியின் குறிக்கோள்களான சுதந்திரம், அறநெறி, ஆன்மீகம், நீதி, கண்ணியம், பகுத்தறிதல் மற்றும் சகோதரத்துவம் ஆகிய பரிமாணங்கள் ஒருபோதும் காலாவதியாவது
கிடையாது. காலவோட்டத்தில் எழுச்சிப்பெற்ற அல்லது வீழ்ச்சியடைந்த சமூகத்துக்கோ
அல்லது தலைமுறைக்கோ அது மட்டுப்படுத்தப்பட்டதும் அல்ல. மக்கள் இந்தப்
பெறுமானங்களை அசட்டை செய்வர் என்று கற்பனை
செய்து பார்க்கவும் முடியாது.
எதிர்காலத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, கடந்த காலத்தைப் பற்றிய நல்ல அறிவை வளர்த்து, அதன் மூலம் படிப்பினைப் பெற வேண்டும். இந்த மூலோபாயம் புறக்கணிக்கப்பட்டால், சத்தியத்தின் இடத்தை பொய்மை ஆக்கிரமித்துவிடும் மேலும்
எதிர்காலத்தில் அடையாளம் காணமுடியா அச்சுறுத்தல்களினால் அவதியுற நேர்ந்திடும்.
இன்னும், அடிமைத்தளையில் இருந்து தம்மை மீட்க போராடும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
தன்னுடைய அனுபவங்களை கொண்டு வெற்றிக்கு வழிகாட்டுவதை இஸ்லாமிய குடியரசு தனது
கொள்கையில் ஒன்றாக ஆக்கிக்கொண்டுள்ளது என்பதை உலக நிகழ்வுகள் இன்று
பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.
மனித உரிமை மீறலில் மிக
மோசமான மீறல் என்னவென்றால் மக்களை அடிமைப்படுத்துவதாகும். இவ்வாறு
அடிமைப்படுத்தப்பட்டிருந்த ஈரானிய மக்களை கொடுங்கோலன் ஷாவிடம் இருந்து விடுவித்து, அவர்களுக்கு உண்மையான சுதந்திரம் என்னவென்று உணரச்செய்தார் மர்ஹூம் இமாம்
கொமெய்னி (ரஹ்) அவர்கள். இறைவன் அருளால் ஈரானிய மக்கள் இன்று சுதந்திரமாக, இஸ்லாமிய மனங்கமழும் உன்னத காற்றை
சுவாசிக்கின்றனர்.
இஸ்லாமியப் புரட்சி நாட்டினுடைய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உத்தரவாதம்
செய்துள்ளதுடன் பல முனைகளில் முன்னேற்றத்திற்கான "இயந்திரம்" என
செயல்பட்டதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் உதவியுள்ளது.
இனவெறி பிடித்த இஸ்ரேல், தலைக்கனம் பிடித்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலக வல்லாதிக்க சக்திகள், இவற்றின் தயவில்
அவர்களுக்காக இயங்கும் உள்நாட்டு, வெளிநாட்டு பயங்கரவாத சக்திகள் அனைத்திற்கும் முகம்கொடுத்து
ஒரு நாடு முன்னேற்றப்பாதையில் பயணிப்பது என்பது இலேசான காரியமல்ல.
இன்னும், மேற்குலகினது குறிப்பாக
அமெரிக்காவினது குற்றச் செயல்கள், பலஸ்தீன் விவகார பின்னணி, பாலஸ்தீனிய தேசத்தின் வரலாற்று அடக்குமுறை, யுத்தவெறி
நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள், பிற நாடுகளின் விவகாரங்களில் தலையீடு போன்ற அனைத்து
தீயவற்றையும் நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள்.
எதிர்காலத்தை உருவாக்கும் நபர்களால் கருத்தில்கொள்ளப்பட வேண்டிய இன்னும் ஒரு முக்கியமான அம்சம்
என்னவென்றால் நாம் இயற்கை மற்றும் மனித வளங்களின் அடிப்படையில் தனித்துவமான
நாடொன்றில் வாழ்கிறோம் என்பதாகும். ஆனாலும், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, இந்த வளங்களில்
பெரும்பாலானவை பயன்படுத்தப்படாது உள்ளன அல்லது சிறிதளவே பயன்படுத்தப்படுகின்றன.
துடிப்புள்ள இளைஞர்களின் புரட்சிகர முயற்சியினால் இவற்றை பயன்பாட்டுக்கு
கொண்டுவருவதன் மூலம் நாட்டின் பொருளாதார மற்றும் ஒழுக்க முன்னேற்றத்தை முன்னோக்கி
ஒரு உண்மையான பாய்ச்சலைக் ஏற்படுத்த முடியும்”.
இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், ஈரான் அறிவியல் துறையில் முன்னேற்றத்தைக்
கண்டதா அல்லது பின்னடைந்துள்ளதா? என்பது இன்று உலகில் பலரை ஆட்கொண்டுள்ள ஒரு கேள்வியாக
அமைந்துள்ளது. ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றிபெற்றதில் இருந்தே பல சர்வதேச
ஊடகங்கள், இஸ்லாமிய புரட்சியானது
ஈரானை வெவ்வேறு பரிமாணங்களில் பின்வாங்க வழிவகுத்தது என்றும் புரட்சியைத்
தொடர்ந்து ஈரானின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது என்றும் இன்றளவிலும் பிரச்சாரம்
செய்து வருகின்றன.
விஞ்ஞான துறை முன்னேற்றம் மற்றும் அறிவியல் உற்பத்தியின் பெருக்கம் ஒரு
நாட்டின் முன்னேற்றம் அல்லது பின்னடைவின் மிக முக்கியமான குறிகாட்டிகளில்
ஒன்றாகும். ஆகவே, ஒரு நாடு வீழ்ச்சியடைந்துவிட்டதா அல்லது முன்னேறியுள்ளதா என்பதை யாராவது
உண்மையில் புரிந்து கொள்ள விரும்பினால், இந்த இரண்டு குறிகாட்டிகளையும் ஆராய்வதன் மூலம்
அதற்குரிய பதிலைப் பெறலாம்.
ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு விஜயம் செய்யும் எவரும் அந்நாடு அடைந்துள்ள
முன்னேற்றம் கண்டு உண்மையிலேயே பிரமித்துப் போவர். ஓர் அபிவிருத்தி அடைந்த நாடு
எவ்வாறு இருக்குமோ, அந்த அங்கலட்சணங்கள் அனைத்தையும் அங்கு காணக்கூடியதாக
இருக்கிறது; இஸ்லாத்துக்கு முரணான அம்சங்களைத் தவிர.
சகல துறைகளிலும் ஈரான் அடைந்துள்ள முன்னேற்றத்தை காண்கையில், அது பொருளாத
தடைகளுக்கு உட்பட்ட ஒரு நாடு என்பதற்கான எந்த அறிகுறியையும் அங்கு காண முடியாது.
ஒரு நாட்டில் சரியான தலைமைத்துவம் இருந்தால் எந்த சவாலையும் முறியடித்து, நாட்டை முன்னேற்றப்
பாதையில் இட்டுச் செல்லலாம் என்பதற்கு ஈரான் இஸ்லாமிய குடியரசு நல்லதோர்
உதாரணமாகும்.
ஈரான் இஸ்லாமிய குடியரசு இஸ்லாத்தை ஆட்சிமுறையாக கொண்டிருக்கும் காலம் வரை, எந்த ஒரு
சக்தியாலும் அதனை அழிக்க முடியாது; அல்லாஹ் அதனை பாதுகாப்பான்….. அல்ஹம்துலில்லாஹ்.
- தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment