Golistan Palace is a wonderful creation of Persian architects
குலிஸ்தான் அரண்மனை சில சமயங்களில் பாரசீக மொழியில் ரோஸ் கார்டன் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது தெஹ்ரானில் உள்ள முன்னாள் அதிகாரப்பூர்வ கஜார் அரச வளாகமாகும்.
தெஹ்ரான் நகரில் உள்ள பழமையான வரலாற்று நினைவுச்சின்னங்களில் இதுவும் ஒன்று, மற்றும் உலக பாரம்பரிய அந்தஸ்து கொண்ட, குலிஸ்தான் அரண்மனை, ஒரு காலத்தில் தெஹ்ரானின் ஆர்க் ("சிட்டாடல்") அரச கட்டிடங்களின் குழுவிற்குள் ஒன்றாகும். இது கண்கவர் தோட்டங்கள், அரச கட்டிடங்கள் மற்றும் 18-19 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து ஈரானிய கைவினைப்பொருட்கள் மற்றும் ஐரோப்பிய பரிசுகளின் தொகுப்புகளைக் கொண்டுள்ளது.
வரலாறு
தெஹ்ரானின் ஆர்க்
("சிட்டாடல்") ஸஃபாவிட் வம்சத்தின் (1502-1736) தஹ்மாஸ்ப் I (1524-1576) ஆட்சியின் போது கட்டப்பட்டது. பின்னர் ஸாண்ட் வம்சத்தின் கரீம் கான்
என்பவரால் புதுப்பிக்கப்பட்டது (ஆர். 1750–1779). கஜார் வம்சத்தின் அகா முகமது கான் (1742-1797) தெஹ்ரானை தனது தலைநகராகத் தேர்ந்தெடுத்தார்.
அன்றிலிருந்து ஆர்க் கஜர்களின் இடமாக மாறியது (1794-1925). குலிஸ்தானின் அரச சபை மற்றும் அரண்மனை கஜர்
வம்சத்தின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாறியது. அரண்மனை 1865 ஆம் ஆண்டில் ஹாஜி அபுல் ஹசன் மிமர் நவாய்
என்பவரால் அதன் தற்போதைய வடிவத்தில் மீண்டும் கட்டப்பட்டது.
பஹ்லவி சகாப்தத்தில் (1925-1979), குலிஸ்தான் முறையான உத்தியோகபூர்வ அரச வரவேற்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டது, பஹ்லவி சகாப்தத்தில் அரண்மனையில் நடைபெற்ற மிக முக்கியமான விழாக்கள் மார்பிள் சிம்மாசனத்தில் ரீஸா ஷாவின் முடிசூட்டு விழாவும் (1925-1941) மற்றும் அரண்மனை அருங்காட்சியக மண்டபத்தில் முகமது ரீஸா பஹ்லவியின் (1941 - 1979) முடிசூட்டு விழா நடைபெற்றது.
1925 மற்றும் 1945
க்கு இடையில், ரீஸா ஷாவின் உத்தரவின் பேரில், வளாகத்தின் கட்டிடங்களின் பெரும் பகுதி
அழிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகள் பழமையான கஜர் அரண்மனை ஒரு நவீன நகரத்தின்
வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூடாது என்று அவர் நம்பினார். பழைய கட்டிடங்களின்
இடத்தில்,
1950 மற்றும் 1960 களின் நவீன பாணியில் வணிக கட்டிடங்கள்
அமைக்கப்பட்டன.
தளங்கள்
குலிஸ்தான் வளாகம்
அரண்மனைகள்,
அருங்காட்சியகங்கள்
மற்றும் அரங்குகள் உட்பட 17 கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த வளாகம் அனைத்தும் கஜர் மன்னர்களின் 131 ஆண்டுகால ஆட்சியின் போது கட்டப்பட்டது. இந்த அரண்மனைகள் முடிசூட்டு விழாக்கள் மற்றும்
பிற முக்கிய கொண்டாட்டங்கள் போன்ற பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டன. புகைப்படக் காப்பகம், கையெழுத்துப் பிரதிகளின் நூலகம் மற்றும்
ஆவணங்களின் காப்பகம் உள்ளிட்ட மூன்று முக்கிய காப்பகங்களையும் இது கொண்டுள்ளது.
பளிங்கு சிம்மாசனம் (Takht
e Marmar)
The Marble Throne |
பளிங்கு சிம்மாசனம் என்று அழைக்கப்படும் இந்த கண்கவர் தளம், 1806 ஆம் ஆண்டில் கஜார் வம்சத்தின் (1797-1834) ஃபத் அலி ஷாவின் உத்தரவின்படி கட்டப்பட்டது. ஓவியங்கள், பளிங்கு-செதுக்கல்கள், ஓடு வேலை, கண்ணாடிகள், மர வேலைப்பாடுகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட இந்த அரண்மனை வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களில் ஒன்றாகவும் ஈரானிய கட்டிடக்கலையின் மிகச்சிறந்ததாகவும் திகழ்கிறது. பளிங்கு சிம்மாசனம் தளத்தின் நடுவில் அமைந்துள்ளது மற்றும் யாஸ்த் மாகாணத்தின் புகழ்பெற்ற மஞ்சள் பளிங்குக் கல்லால் ஆனது.
சிம்மாசனம் அறுபத்தைந்து பளிங்குக் கற்களால்
ஆனது, மேலும் கஜார் சமஸ்தான ஆஸ்தான ஓவியர் மிர்ஸா
பாபா நகாஷ் பாஷி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அந்தக் காலத்தின் பல புகழ்பெற்ற கட்டிட
நிபுணர்கள் இந்த தலைசிறந்த படைப்பை நிறைவேற்றுவதில் பணியாற்றினர்.
காஜர் மன்னர்களின் முடிசூட்டு விழாக்கள்
மற்றும் உத்தியோகபூர்வ விழாக்கள் இந்த மாடியியே நடைபெற்றன. மார்பிள்
சிம்மாசனத்தில் நடைபெற்ற கடைசி முடிசூட்டு விழா 1925 இல் பஹ்லவி வம்சத்தின் ரீஸா ஷாவின் முடிசூட்டு
விழாவாகும்.
கரீம்
கானி மூலை (Khalvat e Karim Khani)
இந்த கட்டிடம் ஜாண்ட் வம்சத்தின் கரீம் கானின் உட்புற குடியிருப்பின் ஒரு பகுதியாக இருந்தது. இது 1759 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது. கரீம் கானி மூலை அடிப்படை அமைப்பு பளிங்கு சிம்மாசனத்தைப் போன்றது. பிந்தையதைப் போலவே, இது ஒரு மாடியின் உள்ளே ஒரு சிறிய பளிங்கு சிம்மாசனம் உள்ளது. இந்த அமைப்பு முன்கூறப்பட்ட பளிங்கு சிம்மாசனத்தை விட மிகவும் சிறியது மற்றும் இது மிகவும் குறைவான அலங்காரத்தைக் கொண்டுள்ளது. இந்த மாடியின் நடுவில் ஒரு நீரூற்றுடன் ஒரு சிறிய குளம் ஒரு காலத்தில் இருந்தது. கனாட் எனப்படும் ஒரு நிலத்தடி நீர் நீரூற்றில் இருந்து நீரைப் பெற்றது.
Panoramic view of the Karim Khani Nook |
கஜார் வம்சத்தின் நஸீருத்தீன் ஷா குலிஸ்தான்
அரண்மனையின் இந்த மூலையை மிகவும் விரும்பினார். அமைதியான பிரதிபலிப்பில் அவர்
இங்கு அதிக நேரம் ஓய்வில் கழித்ததாகக் கூறப்படுகிறது. உண்மையில், நஸீருத்தீன் தான் இந்த அமைப்பை கல்வத் (முலை)
என்று அழைத்தார் என்று சிலர் நம்புகிறார்கள். நஸீருத்தீன் ஷாவின் கல்லறை, அரண்மனையின் அமைதியான இந்த மூலையில் உள்ளது.
நஸீருத்தீன் ஷாவின் உருவம் பொறிக்கப்பட்ட பளிங்குக் கல், இன்னும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
Pond House (Howz Khaneh)
கஜார் காலத்தில், குளத்துடன் அமைந்த பகுதி கோடைகால அறையாக பயன்படுத்தப்பட்டது. ஒரு சிறப்பு
குளிரூட்டும் நீரோடைகளின் நிலத்தடி அமைப்பிலிருந்து தண்ணீரை அறைகளுக்குள்
உள்ள சிறிய குளங்களுக்குள் செலுத்தியது. தேவையான அளவு நீர் அறைகள் வழியாக செல்லும்
வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னர் அரச தோட்டங்களுக்கு பாசனம்
செய்வதற்காக தண்ணீர் பயன்பட்டது. ஈரப்பதத்தினால் கட்டிடத்துக்கு ஏற்படக்கூடிய தீங்கான விளைவு காரணமாக,
இந்த அமைப்பு இன்று
பயன்பாட்டில் இல்லை.
பிரிலியண்ட் (மதிநுட்ப மண்டபம்) மண்டபம் (Talar e Brelian)
ஈரானிய கைவினைஞர்களின்
அற்புதமான கண்கவர் கண்ணாடி வேலைகளால் அலங்கரிக்கப்பட்டதால், மதிநுட்ப மண்டபம் என்று பெயரிடப்பட்டது. நஸீருத்தீன் ஷாவின் உத்தரவின்படி, தலர் இ போலூர் ("கிரிஸ்டல் ஹால்")
என்று அழைக்கப்படும் மற்றொரு மண்டபத்திற்குப் பதிலாக இந்த மண்டபம்
கட்டப்பட்டது.
காட்சியகம் (Talar e Zoruf)
இந்த கட்டிடம் ஐவரி ஹாலின் (தலர் இ அட்ஜ்)
வடக்கே உள்ள நரென்ஜெஸ்தானின் கட்டிடத்திற்கு பதிலாக கட்டப்பட்டது. ஐரோப்பிய
மன்னர்களால் கஜர் மன்னர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து சீனப் பொருட்களும் இந்த
அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இதற்காக
கட்டப்பட்ட பெட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மியூசியம் ஹால் Museum Hall
நஸீருத்தீன் ஷா 1872 ஆம் ஆண்டில் தனது இரண்டாவது ஐரோப்பிய
சுற்றுப்பயணத்தின் போது ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் கலைப்பொருட்கள் மற்றும்
மதிப்புமிக்க பொருட்களின் கண்காட்சியால் மிகவும் ஈர்க்கப்பட்டார். ஓவியங்கள், அரச நகைகள் மற்றும் பிற அரச கலைப்பொருட்களை
காட்சிப்படுத்த ஒரு அருங்காட்சியக மண்டபத்தை கட்டினார்.
அருங்காட்சியக மண்டபத்தின் அசல் சேகரிப்பு
இப்போது தெஹ்ரானின் பல அருங்காட்சியகங்களில் சிதறிக்கிடக்கிறது. இருப்பினும், அரசவையின் ஓவியங்கள் இப்போது குலிஸ்தான்
அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளன,
ஐவரி
ஹால் (Talar e Adj)
ஐவரி ஹால் என்பது உணவு உட்கொள்ளும் அறையாகப்
பயன்படுத்தப்படும் ஒரு பெரிய மண்டபம். ஐரோப்பிய மன்னர்களால் நஸீருத்தீன் ஷாவுக்கு
வழங்கப்பட்ட சில பரிசுகளால் இது அலங்கரிக்கப்பட்டது.
கண்ணாடி மண்டபம் (Talar e Aineh)
குலிஸ்தான் அரண்மனையின்
அரங்குகளில் மிரர் ஹால் மிகவும் பிரபலமானது. ஒப்பீட்டளவில் இந்த மண்டபம் சிறிதாயினும்
அதன் அசாதாரண கண்ணாடி வேலைக்கு பிரபலமானது. இந்த மண்டபத்தை ஹஜ் அப்துல் ஹொசைன்
மெமர் பாஷி (சானி உல் முல்க்) வடிவமைத்தார். கட்டிடக்கலை அமைச்சராக இருந்த யாஹ்யா
கான் (மௌடமேட் உல் முல்க்),
வடிவமைப்பாளரின்
ஆலோசகராக இருந்தார்.
சலாம் மண்டபம் (Talar e Salam)
சலாம்
("வரவேற்பு") மண்டபம் முதலில் ஒரு அருங்காட்சியகமாக வடிவமைக்கப்பட்டது.
சூரிய சிம்மாசனம் (தக்த் இ கோர்ஷித்) ஈரானின் மத்திய வங்கியில் உள்ள ராயல் ஜூவல்ஸ்
அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, இந்த மண்டபம் மன்னர் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்பதற்காக
ஒதுக்கப்பட்டது,
எனவே சலாம் மண்டபம் என்று
அழைக்கப்படுகிறது.
இந்த மண்டபத்தில் நேர்த்தியான கண்ணாடி
வேலைப்பாடுகள் உள்ளன. சீலிங் மற்றும் சுவர்கள் பிளாஸ்டர் மோல்டிங்கால்
அலங்கரிக்கப்பட்டுள்ளன,
மேலும் தரை மொசைக்
டைல்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நஸீருத்தீன் ஷாவின் ஆட்சியின் போது, இந்த மண்டபம் ஈரானிய மற்றும் ஐரோப்பிய
ஓவியங்கள் மற்றும் ஈரானிய அரசுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை காட்சிப்படுத்த
பயன்படுத்தப்பட்டது. கண்ணாடி பெட்டிகளுக்குள் அரச நகைகளும் காட்சிக்கு
வைக்கப்பட்டன. இந்த நகைகள் இப்போது ஈரான் மத்திய வங்கியின் ராயல் ஜூவல்ஸ் அருங்காட்சியகத்தில்
வைக்கப்பட்டுள்ளன.
டயமண்ட் மண்டபம் (Talar e Almas)
டயமண்ட் ஹால் குலிஸ்தான் அரண்மனையின் தெற்குப் பகுதியில், காற்றை உள்வாங்கும் விண்ட்கேட்சர்ஸ் கட்டிடத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. கட்டிடத்தின் உள்ளே விதிவிலக்கான கண்ணாடி வேலைகள் இருப்பதால் இது தலர் இ அல்மாஸ் ("டயமண்ட் ஹால்") என்று அழைக்கப்படுகிறது.
குலிஸ்தான் அரண்மனை 23 ஜூன் 2013 அன்று, Phnom Penh னில் நடந்த யுனெஸ்கோ கூட்டத்தில் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.
குலிஸ்தான் அரண்மனை பாரசீக கட்டிட கலைஞர்களின் படைப்பாற்றலில் தேர்ந்த கைவண்ணத்தை காட்டும் அதேவேளை, இஸ்லாமிய புரட்சிக்கு முன்னர் ஆட்சிசெய்த ஈரானிய மன்னர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கும் எடுத்துக்காட்டாய் உள்ளது.
- தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment