"Mab’ath”, The Day that Changed Mankind’s Destiny
By: Seyyed Ali Shahbaz
-
சையத் அலி ஷஹ்பாஸ்
(எனவே இன்று) அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் ‘உம்மீ’ நபியாகிய
இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்; இவரைக் குறித்து அவர்களிடமுள்ள
தவ்ராத்திலும், இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக்
காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றை
அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத்
தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள
சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த
விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக்
கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட
ஒளி யினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர். 7:157.
மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய நாட்களில் ஒன்றை அண்மித்தவர்களாக
நாம் இருக்கிறோம். சர்வவல்லமையுள்ள இறைவன் தனது கடைசி மற்றும் மகோன்னத தூதருக்கு இஸ்லாத்தின்
உலகளாவிய செய்தியை முறையாக ஒப்படைத்த நாள் இது.
இந்த நாளுக்கு "மப்'அத்" என்று
பெயர், இதற்கு மீட்சி என்று
பொருள். இது ராஜாப் மாதத்தின் 27 ஆம் தேதி அதிகாலை மக்காவிற்கு வெளியே நூர் மலையில்
உள்ள ஹிரா குகையில் நடந்தது, வானவர் தலைவர் ஜிப்ரீல்
(அலை) அவர்கள் தெய்வீகத்தின் முதல் கதிர்களுடன் இறங்கியபோது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலி வ ஸல்லம் அவர்களுக்கு வயது
40.
அனைத்து மனிதர்களின் வழிகாட்டுதலுக்கும் இரட்சிப்பிற்கும் இறுதியானதும்
மற்றும் மிக விரிவான இறை வேதமுமாகிய புனித குர்ஆனின் ஆரம்ப வசனங்கள் சூரா அலக்கின்
1 முதல் 7 வரையிலான வசனங்கள் அருளப்பட்டன. அடுத்த 23 ஆண்டுகளில் முழுமை பெற்றது:
ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு!
(உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! மேலும், உம் இறைவன் எத்தகைய
மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம்
கற்றுக் கொடுத்தான். அவ்வாறன்று! மனிதன் வரம்பு மீறி நடக்கின்றான்; அவன் தன்னைத் தன்னிறைவுடையவன்
என்று கருதிக் கொண்டதால்! 96:1-7
கடந்த காலத்தின் அனைத்து தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்தபடி, முழு பிரபஞ்சத்தையும்
படைத்த ஒரே ஒரு இறைவன், ஏகத்துவத்தின் உலகளாவிய
பணியை இப்ராஹீம் (அலை) அவர்களின் தூய சந்ததியான முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களிடம்
ஒப்படைத்தான், சமாதானம், நல்லொழுக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை
சர்வவல்லமையுள்ள இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியாமை, ஆகியவற்றின்பால் அழைக்கும் பணியை ஒப்படைத்தான். இந்த தூதுக்கு
அரபியில் "இஸ்லாம்" என்று பொருள்.
பல்வேறு காலங்களிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும்
அல்லாஹ் தூதர்களை அனுப்பிவைத்தான்; ஈஸா (அலை), மூஸா (அலை), இப்ராஹீம் (அலை), நூஹ் (அலை) மற்றும் எண்ணற்ற தூதர்களை, சமூக நீதியை ஊக்குவிப்பதற்கும், மறுக்கப்படும் அனைத்து
மனிதாபிமான விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவ வழிபாடு, நாத்திகம், அடக்குமுறை, தீமைகள் மற்றும் மற்ற
எல்லா பாவங்களிலும் ஈடுபடுவதிலிருந்து மக்களை தடுப்பதற்காகவே நியமித்தான்.
ஆயினும் கடந்த கால தீர்க்கதரிசிகளின் நியமனம் போலல்லாமல், சர்வவல்லமையுள்ள இறைவன்
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முறையான நியமனம் வழங்கி இவ்வாறு கூறுகிறான்: "(நபியே!)
உங்களை உலகத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை." (புனித குர்ஆன்
21: 107).
றஸூலுல்லாஹ்வின் வருகைப்பற்றி முன்வந்த அனைத்து மதங்களிலும்
முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் இந்த வேத நூல்களை இடைத்தரகர்கள்
சேதப்படுத்திய போதிலும், இந்த மத நூல்களில்
றஸூலுல்லாஹ்வின் வருகை தொடர்பான இந்த பத்திகள்
இன்னும் பாதுகாக்கப்பட்டுள்ளதானது இஸ்லாத்தின்
உண்மைத்தன்மையையும், நபிகள் நாயகத்தின்
(SAWA) ஒப்பற்ற ஆளுமையையும்
உறுதிப்படுத்துகிறது என்பது சுவாரஸ்யமானது. இறைவன் இவரைப்பற்றி கூறுகையில்:
எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான
உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து)
அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்துகொண்டிருப்பார்கள். (புனித குர்ஆன் 33:21)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த வசனத்தின் முழுமையான அர்த்தத்திலும்
ஓர் உன்னதமான சிறந்த எடுத்துக்காட்டு. அவர் நல்லொழுக்கத்தின் சிகரம் மற்றும் மனித இனத்திற்கு
மிகச் சிறந்த முன்மாதிரியாக இருந்தார்.
அடக்கம், உண்மைத்தன்மை, கருணை, பொறுமை, விசுவாசம், நேர்மை, தைரியம், துணிச்சல், தாராளம், பெருந்தன்மை, ஞானம் போன்ற சிறந்த
குணங்களை தன்னுடைய உயர்ந்த ஆளுமையில் வெளிப்படுத்தியதன் மூலம் சர்வவல்லமையுள்ள இறைவன் அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டினான்.
அவரது உயர்ந்த பண்புகள் மற்றும் அவரது குடும்பத்தினர், தோழர்கள், மனைவிகள் மற்றும்
பிறருடன் அவர் வழிநடத்திய அதிசயமான எளிமையான வாழ்க்கையைப் படிப்பதன் மூலம், அவருடைய நடத்தையிலிருந்து
மதிப்புமிக்க படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள முடிகிறது, அதன்படி நமது சொந்த வாழ்க்கை முறையை நாம் வடிவமைக்க வேண்டும்.
அல்லாஹ்வின் இறுதி தூதரின் காலடிகளை சுவட்டை பின்பற்றி, அவருடைய போதனைகளுக்கு
செவிசாய்த்து, அவருடைய உன்னத தோழர்களைப்
போலவே அவருடைய நடைமுறையையும் வாழக்கை உதாரணங்களையும் (சுன்னா மற்றும் சீரா) பின்பற்றினால் ஒழிய நமது
சமூகம் ஒருபோதும் இஸ்லாமிய சமூகமாக இருக்க முடியாது. இதன் பொருள் என்னவென்றால், அவர் தடைசெய்தவற்றிலிருந்து விலகி,
அவர் நமக்குக்
போதித்த வற்றுக்கு கீழ்ப்படிந்து நடத்தலாகும்.
கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், "மப்'அஸ்" நிகழ்வு
ஒரு சாட்சியின் முன்னிலையில் நடந்தது, அவர் தனது சொற்பொழிவு ஒன்றில் மிகத் துல்லியமாக அதை மிகச் சரியான
முறையில் தொடர்புபடுத்தியுள்ளார், அந்த சொற்பொழிவு சாத்தானின்
உரத்த புலம்பல் பற்றியும் நமக்குத் தெரிவிக்கிறது. தனது வஞ்சகத்தின் தோல்வி பற்றி திகைத்த
சாத்தானின் புலம்பல் அது.
அந்த சொற்பொழிவை நிகழ்த்திய அவர் வேறு யாருமல்ல, விசுவாசிகளின் தளபதி
இமாம் அலி இப்னு அபி தாலிப் (அலை) அவர்களே
ஆகும், அவர் 10 வயது சிறுவனாக நூர் மலையில் ஹிரா குகையில் இறை
தியானத்தில் இருந்த தனது 40 வயது உறவினருக்கு உணவு மற்றும் ஆடைகளை எடுத்துச் செல்வார்.
இறைவனின் வெளிப்படையான கட்டளைப்படி நபி (ஸல்) அவர்கள், ஹிஜ்ரி 10ஆம் வருடம்
துல்ஹஜ் மாதம் 18 ஆம் தேதி மப்'ஆதுக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு, கதீர்-கும் சமவெளியில்
அவரை தனது கலீபாவாக அறிவித்தார், பின்வருவது நஹ்ஜ் அல்-பாலாகாவின் 191 பிரசங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"நான் ஒரு குழந்தையாக இருந்தபோது அவர் என்னைப் பொறுப்பேற்றார்
... தாயின் கால்தடங்களில் பிடிபற்றிச் செல்லும் ஒரு இளம் ஒட்டகத்தைப் போல நான் அவரைப்
பின்தொடர்ந்தேன். ஒவ்வொரு நாளும்
அவர் தனது சில உயர்ந்த பண்புகளை எனக்குக் காண்பிப்பார்,
அதைப் பின்பற்றும்படி
எனக்குக் கட்டளையிட்டார். ஒவ்வொரு ஆண்டும்
அவர் ஹிரா மலை குகைக்கு தனிமையில் செல்வார், அங்கு நான் அவரைப்
பார்த்தேன், ஆனால் வேறு யாரும்
அவரைப் பார்க்கவில்லை ... தெய்வீக வெளிப்பாடு மற்றும் இறை செய்தி அருளப்படுவதை நான்
பார்த்துக் கொண்டிருந்தேன், நபித்துவத்தின் நறுமணத்தையும் சுவாசித்தேன்.
"அல்லாஹ்வின் நபி மீது இறை வெளிப்பாடு இறங்கியபோது, சாத்தானின் புலம்பலைக்
கேட்டேன். அல்லாஹ்வின்
தூதரே இது என்ன புலம்பல்? என்று நான் வினவினேன்:
அதற்கு அவர் 'தான் வணங்கப்படுவேன் என்ற நம்பிக்கையை இழந்த சாத்தானின்
புலம்பல் அது' என்று அவர் பதிலளித்தார்: ஓ அலி! நான் காணும்
அனைத்தையும் நீங்கள் காண்கிறீர்கள், நான் கேட்கும் அனைத்தையும்
நீங்கள் கேட்கிறீர்கள், எனினும் நீங்கள் ஒரு
பிரதிநிதியே அன்றி ஒரு நபி அல்ல", என்றார்கள்.
http://kayhan.ir/en/news/88432/the-day-that-changed-mankind%E2%80%99s-destiny
No comments:
Post a Comment