Trump’s maximum pressure would be the maximum humiliation for him
Ayatollah Khamenei outlines strategy that could outlast Trump presidency
இஸ்லாமிய புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் அலி காமனெயி ஈரானின் மீதான அமெரிக்க அழுத்தத்தை எதிர்ப்பதற்கான ஈரானின் மூலோபாயத்தின் முக்கிய அம்சங்களை கோடிட்டுக் காட்டினார், அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து "கூச்சலிடுவதை" பொருட்படுத்தாது நாடு முன்னேறும் என்று கூறினார்.
திங்கள்கிழமை காலை
வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் இராணுவ பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட தொடக்க உரையில், ஈரானிய ஆயுதப்படைகளின் தளபதியாக
இருக்கும் அயதுல்லா காமனெயி, தெஹ்ரானுக்கும்
வாஷிங்டனுக்கும் இடையிலான தற்போதைய மோதல், அதனை திறம்பட கையாளும் வழிகள் உட்பட
உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான பல விடயங்கள் பற்றி
உரையாற்றினார்.
பாதுகாப்பை உறுதி
செய்வதன் முக்கியத்துவத்திற்கு தலைவர் ஒரு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்தார், பாதுகாப்பு என்பது ஒரு முக்கிய தேவை, இது இல்லாமல் மற்ற அனைத்தும்
பாதிக்கப்படும் என்பதைத் தெளிவு படுத்தினார்.
"எங்கள்
ஆயுதப்படைகளின் கல்விக்கூடங்களில் படிப்பது மிகவும் உன்னதமான மற்றும் மதிப்புமிக்க
செயல்களில் ஒன்றாகும். ஏனெனில் ஆயுதப்படைகள் நாட்டின் பாதுகாப்பை உறுதி
செய்கின்றன. ஒரு நாட்டின் விவகாரத்தில் பாதுகாப்பு ஒரு முக்கிய உறுப்பு. இது
இல்லாமல் கல்வி, நீதி, நலன்புரி சேவை
போன்ற அனைத்து முக்கிய அம்சங்களும் சீர்குலைந்துவிடும், ”என்று தலைவர்
கூறினார்.
ஈரான் மீதான
அமெரிக்க பொருளாதாரத் தடைகள் மற்றும் ஈரானின் தேசிய வலிமையின் மூன்று தூண்கள்
பற்றியும் அவர் பகர்ந்தார், வலுவான பாதுகாப்பு
இல்லாத நாடுகள், அமேரிக்கா போன்ற
பிற நாடுகளால் குறிவைக்கப்படும் அபாயத்தில் இருப்பதை நாம் கண்கூடாக
கண்டுக்கொண்டிருக்கிறோம் என்றும் தலைவர் கூறினார்.
“ஒரு நாட்டின் தேசிய
வலிமைக்கு மூன்று முக்கிய தூண்கள் இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம், அவை: 1. பொருளாதார வலிமை மற்றும் ஸ்திரத்தன்மை, 2. உறுதியான கலாசார பின்னணி மற்றும்
நல்லிணக்கம் மற்றும் 3. ஒரு வலுவான பாதுகாப்பு.
ஒவ்வொரு தேசத்தின்
வலிமைக்கும் ஒரு வலுவான பாதுகாப்பு மிக முக்கியமானது. நாடுகளுக்கு வலுவான
பாதுகாப்பு இல்லையென்றால், மற்ற நாடுகள் எளிதாக
மீறுவதற்கும்,
சாதகமாகப் பயன்படுத்துவதற்கும், தங்கள் விவகாரங்களில் தலையிட
விரும்புவோர் - அமேரிக்கா போன்ற நாடுகள் மற்றும் இதுபோன்ற பிற நாடுகள் - அவர்களைத்
நிம்மதியாக இருக்க விடாது. இந்த பலம் குன்றிய நாடுகள் வைத்திருக்கும் அனைத்தையும்
அவர்கள் கொள்ளையடிக்க முயற்சிப்பார்கள். உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு எதிராக
இவர்களால் செய்யப்படும் மீறல்கள் என்ன என்பதை இன்று நீங்கள் பார்த்துக்கொண்டு தான்
இருக்கிறீர்கள்,”
என்று அயதுல்லா காமனெயி
சுட்டிக்காட்டினார்.
ஈரானின் தற்காப்பு, பிராந்திய செல்வாக்கு மற்றும் ஏவுகணை திறன்களைப் பற்றி "கோபமாக கூச்சலிடுகிறார்" அமெரிக்க தலைர். அவர் அவ்வாறு செய்வதற்கான காரணம், அத்தகைய திறன்களை அடைவதில் இஸ்லாமிய குடியரசின் துல்லியமான, புத்திசாலித்தனமான செயல் திறன் ஆகும் என்பதை தலைவர் சுட்டிக்காட்டினார்.
தலைவர் மேலும்
கூறுகையில், “இந்தத் துறைகளில் எமது முன்னேற்றம் அவர்களை பொறாமை கொள்ளச்
செய்கிறது. இதன் காரணமாக அவர்கள் எம்மைப்பற்றி தீய எண்ணங்களை உருவாக்க
முயற்சிக்கிறார்கள். இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், நாங்கள் எமது
நியாயமான முன்னேற்ற முறையை நாம்பாதுகாக்க வேண்டும், இறைவனின் அருளால், இஸ்லாமிய குடியரசு
இந்த அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து
முன்னேறும்,” என்று கூறினார்.
இஸ்லாமிய
குடியரசின் பிராந்திய செல்வாக்கு மற்றும் ஏவுகணை திறன்களை முன்னெடுத்துச்
செல்வதற்கு ஆயத்துல்லாஹ் காமனெயி கொடுத்துவரும் வலுவான முக்கியத்துவம், ஈரான் தேசிய வலிமையின் தூணாக கருதும்
ஒன்றை கைவிடப்போவதில்லை என்ற சக்திவாய்ந்த செய்தியை அவர்களுக்கு வழங்கியுள்ளது. கடுமையான
பொருளாதாரத் தடைகள் விதிப்பதன் மூலம் அமேரிக்கா ஈரானை பேச்சுவார்த்தைக்கு
நிர்பந்தித்து, ஏவுகணை மற்றும்
அணுசக்தி திட்டங்கள் மற்றும் அதன் பிராந்திய செல்வாக்கு ஆகியவற்றை
இல்லாதொழிக்கவும் அதன் மூலம் ஈரானை
பின்னடையச் செய்யவும் முயன்றதற்கு தலைவரின் இந்த செய்தி சரியான சமிக்ஞையை
கொடுத்திருக்கும்.
ஈரானுக்கும் உலக
வல்லரசுகளுக்கும் இடையிலான 2015 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
ஒருதலைப்பட்சமாக தனது நாட்டை விலக்கிக் கொள்வதற்கான முக்கிய காரணம் ஈரானை இந்த
மூன்று துறைகளில் நலிவடையச் செய்வதாகும்.
கடந்த இரண்டு
ஆண்டுகளில்,
ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை
திட்டங்கள் மற்றும் அதன் பிராந்திய செல்வாக்கு தொடர்பாக ஒரு புதிய சுற்று
பேச்சுவார்த்தைக்குள் வருமாறு கட்டாயப்படுத்தும் முயற்சியில் டிரம்ப், ஈரான் மீதான
பொருளாதாரத் தடைகளை அதிகளவில் தீவிரப்படுத்தி வருகிறார். புதிய
பேச்சுவார்த்தைகளுக்கான ட்ரம்பின் தொடர்ச்சியான கோரிக்கையை ஈரான் கடுமையாக
நிராகரித்து வருகிறது. ஜே.சி.பி.ஓ.ஏ-வின் கீழ்
அனைத்து அமெரிக்க கடப்பாடுகளையும் நிராகரித்த ஒரு ஜனாதிபதியுடன் ஈரான்
பேச்சுவார்த்தை நடத்தாது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
எவ்வாறாயினும், நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால்
ஜே.சி.பி.ஓ.ஏ-வில் மீண்டும் இணைவதாக ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் பகிரங்கமாக
உறுதியளித்தார். ட்ரம்பின் ஜனாதிபதி பதவி
முடிவுக்கு வந்துவிட்டது. ஈரானிய பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையிலும்
பொருளாதாரத் தடைகளை விதிப்பது போன்ற டிரம்ப்பின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு
ஈரான் முகங்கொடுத்து, பொறுமைகாத்து
வருவதற்கு இதுவே காரணம் என்று மேற்கில் சில அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
செப்டம்பர் 13 அன்று சி.என்.என் வெளியிட்ட ஒரு
கருத்துத் தொகுப்பில், பிடென் நவம்பர்
தேர்தலில் வெற்றி பெற்றால் ஜே.சி.பி.ஓ.ஏவுக்குத் திரும்புவேன், ஆனால் அவர் திரும்புவது
நிபந்தனைக்குட்பட்டது என்று கூறியிருந்தார்.
"நான் தெஹ்ரானுக்கு ஒரு நம்பகமான
இராஜதந்திர பாதையை வழங்குவேன். ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துடன் உறுதியாக
இருப்பதற்கு இணங்கினால், பின்தொடர்
பேச்சுவார்த்தைகளுக்கான தொடக்க புள்ளியாக அமெரிக்கா மீண்டும் ஒப்பந்தத்தில்
சேரும். எங்கள் நட்பு நாடுகளுடன், அணுசக்தி
ஒப்பந்தத்தின் விதிகளை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் நாங்கள் செயல்படுவோம், அதே நேரத்தில் மற்ற சந்தேகங்களையும்
நிவர்த்தி செய்வோம்,” என்று பிடன்
உறுதியளித்தார்.
ஜோ பிடன் வெற்றி பெற்று JCPOA வுக்கு திரும்பும் பட்சத்தில் அவர்
நிச்சயமாக ஈரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டங்கள் குறித்து வலியுறுத்துவார்
என்ற கருத்து ஈரானில் உள்ளது.
ஆனால் ஈரான் அதன்
நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வரப்போவதில்லை என்பதையே இமாம் கமெனேயி "தேசிய
வலிமையின் தூண்கள்" என்று குறிப்பிட்டதன் மூலம் உணர்த்தினார்.
ஈரான் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடைகள் சர்வதேச சட்டங்களுக்கு முரணான ஒரு குற்றச்செயலாகும் என்று தலைவர் கூறினார். எவ்வாறாயினும், ஈரானின் பொருளாதார சவால்களுக்கான தீர்வு, நாட்டின் உற்பத்தி திறனை உயர்த்துவதிலேயே தங்கியுள்ளது என்று அவர் கோடிட்டுக் காட்டினார்.
மேலும் அவர்
அமெரிக்க அதிகாரிகளை நோக்கி, "உங்களைப் போன்ற
துஷ்டர்களால் மட்டுமே இத்தகைய குற்றங்களைச் செய்வதில் பெருமிதம் கொள்ள
முடியும்" என்று கூறினார்.
தேசிய வலிமையின்
மூன்றாவது தூணான பொருளாதார வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையைக் குறிப்பிடுகையில், உச்ச தலைவர் "எங்கள் பொருளாதார பிரச்சினைகளுக்கு
தீர்வு உற்பத்தியில் கவனம் செலுத்துவது, தேசிய நாணயத்தின்
தொடர்ச்சியான மதிப்பிழப்பைத் தடுப்பது மற்றும் கடத்தல், தேவையற்ற இறக்குமதி மற்றும் நிதி ஊழல்
ஆகியவற்றிற்கான வழியைத் தடுப்பது,” என்று கூறினார்,
தலைவர் மேலும்
கூறுகையில்,
“இன்று அமேரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறை பில்லியன் கணக்கான டாலர்கள்
மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே பல்லாயிரக்கணக்கான பசியுள்ள மக்கள் இருப்பதன்
காரணமாக ஒரு மோசமான சூழ்நிலையில் அமேரிக்கா உள்ளது. ஆனால், இறைவனின்
கிருபையால், ஈரானிய தேசம் தனது
நம்பிக்கையின் (ஈமானின்) சக்தி மூலம் உறுதியுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளும், மேலும்
அமெரிக்காவில் உள்ள கொடூரமான, துரோக, அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான குற்றவியல்
ஆசைகள் ஒருபோதும் நிறைவேறாது. அவர்கள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நாட்டின்
பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக ஈரானிய மக்கள்
பயன்படுத்துவார்கள்,” என்றார்.
“எங்கள்
பிரச்சினைகள் பல சர்வதேச பிரச்சினைகள் தொடர்பானவை என்றாலும், அவற்றின் தீர்வு நாட்டிற்குள்ளேயே உள்ளது.
சரியான திட்டமிடல் மற்றும் பிராந்தியத்தின் விவகாரங்கள் குறித்த சரியான கண்ணோட்டம்
மற்றும் தூரநோக்கு சிந்தனை, விடாமுயற்சி
மற்றும் உறுதியான கொள்கை ஊடாக பயனடையும் வழிமுறை ஆகியவை இதில் அடங்கும். அதற்கான பரிகாரத்தை
நாட்டிற்கு வெளியே தேடக்கூடாது, ஏனென்றால் நாங்கள்
வெளிநாட்டவர்களிடமிருந்து எதையும் பெற மாட்டோம். மேலும், அமெரிக்க தேசத்தில் ஆதிக்கம் செலுத்தும்
குண்டர்களால் உருவாக்கப்பட்டுள்ள குழப்பம் யாருடைய எண்ணங்களையும் ஆக்கிரமித்து
விடக்கூடாது,” என்றும் அவர்
சுட்டிக்காட்டினார்,
ஏவுகணைத் திட்டம்
மற்றும் ஈரானின் பிராந்திய செல்வாக்கு ஆகியவற்றை தேசிய வலிமையின் தூண்களாக தலைவர்
வலியுறுத்தியதோடு, ஈரானின் பொருளாதாரத்தை வெளிநாட்டினரின்
செல்வாக்கிலிருந்து விடுவிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டியது அவரது
முயற்சிகளும் கொள்கை உறுதியுடன் முன்னேறுவதற்கான நீண்டகால மூலோபாயத்தைக்
குறிக்கின்றன. இவற்றையே அமெரிக்கா மாற்ற விரும்புகிறது.
ஈரான் அதன்
தற்போதைய கொள்கைகளுடன் முன்னேறும்போது, ஈரானுக்கு எதிரான
“அதிகபட்ச அழுத்தம்” என்ற டிரம்ப் கொள்கை ஒரு பெரிய தோல்வியை தழுவிக்கொள்ளும் என்பது நிச்சயம். இதன் காரணமாகவே இந்த
கொள்கைகளை கைவிடுமாறு ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க வெள்ளை மாளிகை பாரிய முயற்சிகளை
மேற்கொண்டுள்ளது.
ஈரான் இஸ்லாமிய
குடியரசு அமெரிக்காவின் "அதிகபட்ச அழுத்தத்தை” தோல்வியடையச் செய்வதில், அதை அவர்களுக்கு
அதிகபட்ச அவமானமாக மாற்றுவதில் உறுதியாக உள்ளது" என்று தலைவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment