Israel plotting to partition Saudi Arabia: Iran
இஸ்ரேலுடனான உறவை முழுமையாக இயல்பாக்குவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் சமீபத்தில் அமெரிக்க தரகு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
கடந்த செப்டம்பர் 15 ம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் உயர்மட்ட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் முக்கிய அமெரிக்க அதிகாரிகளுடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயீத் மற்றும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாதீப் அல்-ஜயானி ஆகியோர் கலந்துகொண்டு, அதிகாரப்பூர்வமாக "ஆபிரகாம் ஒப்பந்தம்" என்று அழைக்கப்படும் இந்த இயல்பாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதைத் தொடர்ந்து பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு உடனடியாகவே இஸ்ரேலின் தேசிய புலனாய்வு அமைப்பின் (மொசாட்) இயக்குனர் யோசி கோஹன், மனாமாவுக்கு வருகை தந்து பஹ்ரைன் சகாக்களுடன் பேசிச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஈரான் தனது சில
அரபு அண்டை நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இயல்பாக்குதல் ஒப்பந்தங்களை
மிகக் கடுமையாக கண்டித்துள்ளது. அபுதாபிக்கும் டெல் அவிவிற்கும் இடையிலான உறவுகள்
இயல்பாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஹசன்
ரூஹானி ஐக்கிய அரபு எமிரேட்ஸை கடுமையாக எச்சரித்தார்.
"ஐக்கிய அரபு
எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள் இஸ்லாத்தினதும் ஈரானினதும் எதிரிகளுடன் நெருங்கி வருவதன்
மூலம் தங்களுக்கு பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்தால் அவர்கள்
தவறான திசையில் சென்றுவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்" என்று
ஜனாதிபதி எச்சரித்தார், "துரதிர்ஷ்டவசமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு பெரிய தவறு
செய்துள்ளது,
அது அதன் தவறான செயலை மாற்றிக்கொள்ளும் என்று
நாங்கள் நம்புகிறோம். பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கு காலூன்ற ஒரு களமமைத்து
கொடுப்பதை எதிர்த்து நாங்கள் அவர்களை எச்சரிக்கிறோம்”.
ஈரானுக்கு எதிராக
மொசாட் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும் இஸ்ரேலிய உளவுத்துறையின் எந்தவொரு
ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கும் ஈரானின் பதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை
உள்ளடக்கியதாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்தது.
"சட்டவிரோத இஸ்ரேலின் ஆட்சியுடனான அதன் உறவுகளை இயல்பாக்குவதை ஐக்கிய அரபு அமீரகம் வெளிப்படுத்தியதிலிருந்து, இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் அல்லது பிராந்தியத்தில் உள்ள அவர்களின் முகவர்கள் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக எடுக்கும் எந்தவொரு வெளிப்படையான அல்லது மறைமுகமான நடவடிக்கைக்கு ஈரானின் பதில், சியோனிச நிறுவனத்தை நோக்கியதாக மட்டுமே இருக்கமாட்டாது, ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பதிலின் ஒரு பகுதியாக இருக்கும்” என்று சர்வதேச விவகாரங்கள் குறித்து ஈரானிய நாடாளுமன்றத்தின் சபாநாயகரின் சிறப்பு உதவியாளரான ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் செப்டம்பர் தொடக்கத்தில் அல்-ஆலம் செய்தி வலையமைப்பிடம் தெரிவித்தார்.
அரபு நாடுகளுடனான உறவை இயல்பாக்குவதில் இஸ்ரேலின் முக்கிய குறிக்கோள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகளை சிதைப்பதற்கு அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்குள் பரந்த அணுகலைப் பெறுவதாகும் என்று அமீர்-அப்துல்லாஹியன் கூறினார்.
இஸ்ரேலியர்கள் தங்கள் "மகா சியோனிஸ்டுகள் சதி" திட்டத்தை முன்னெடுக்க விரும்புகிறார்கள், இது கூடிய விரைவில் பிராந்தியத்தை சிதைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"சவுதி அரேபியாவை சிதைப்பதற்கான அமெரிக்க-சியோனிச திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படும், இப்போதிருக்கும் சவுதி அரேபியா முடிவுக்கு வரும். மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைப் பற்றியும் இதேபோன்ற கருத்து அவர்களுக்கு உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு பெரிய நாடு அல்ல என்று நீங்கள் கூறலாம், ஆனால் சியோனிஸ்டுகள் தங்கள் இரகசியத் திட்டங்கள் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை ஏழு தனித்தனி மாநிலங்களாக அல்லது பிராந்தியங்களாகப் பிரிக்க விரும்புகிறார்கள், இதைத்தான் அவர்கள் ஈரான், ஈராக், சிரியா, எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் செய்ய முயற்சித்தனர்,” என்று சிறப்பு உதவியாளர் எச்சரித்தார்.
வியாழக்கிழமை, பஹ்ரைன் தலைநகர் மனாமாவிற்கு கோஹன் வருகையை
அறிவித்ததைத் தொடர்ந்து, அமீர்-அப்துல்லாஹியான் பிராந்தியத்தில் சில நாடுகளை சிதைப்பதற்கான இஸ்ரேலின் சதிகள் தொடர்பாக மீண்டும் எச்சரித்தார்.
"ஐக்கிய அரபு
எமிரேட்ஸ் சியோனிஸ்டுகளுடன் உறவுகளை இயல்பாக்குவது, அபுதாபியின் துரோகச் செயலே அன்றி எமிரேட்ஸில் அடங்கும் மற்ற
மாகாணங்கள் அல்ல. மொஸாடை பொறுத்தவரை பஹ்ரைன் அல்-கலீஃபா
மற்றும் சவுதி பின் சல்மான் ஆகியோர் வாஷிங்டனினதும் லண்டனினதும் கைப்பாவைகள் ஆகும்.
சவுதியைத் துண்டாடும் சதித்திட்டத்தை இஸ்ரேல் உருவாக்கி வருகிறது” என்று
அமீர்-அப்துல்லாஹியான் வியாழக்கிழமை தனது ட்வீட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பஹ்ரை மற்றும்
எமிரேட்ஸுடன் உறவு இயல்பாக்குதலைத் தொடர்ந்து கோஹனின் பஹ்ரைன் வருகை, வெறுமனே அரசியல் நோக்கம் மட்டும்
கொண்டதல்ல,
பாதுகாப்பு பரிமாணங்களும் கொண்டது
என்று தாம் நம்புவதாக மேற்கு ஆசிய விவகார நிபுணரான சையத் ரெஸா ஸத்ர் அல்-ஹுசைனி
கருத்துத் தெரிவித்துள்ளார்.
"கோஹனின் இந்த
விஜயம் தொடர்பாக முஸ்லிம் நாடுகள் மிகவும்
அவதானமாக இருக்க வேண்டும், ஏனென்றால் பஹ்ரைன்
ஆட்சிக்கும் சியோனிச ஆட்சிக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவது அரசியலுடன்
மட்டும் தொடர்புபட்டதல்ல, அது பாதுகாப்பு
இலக்குகளையும் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
பிராந்தியத்தை சீர்குலைப்பது நிச்சயமாக இவர்களது முக்கிய நோக்கங்களில்
ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை,” என்று சதர் அல்
ஹுசைனி தெஹ்ரான் டைம்ஸ் இடம் கூறினார். கோஹனின் வருகை நிச்சயமாக பஹ்ரைன் மற்றும்
இஸ்ரேலில் உள்ள ஆட்சிகளின் பாதுகாப்பு அதிகாரிகளால் திட்டமிடப்பட்டது என்பது
கவனிக்கப்பட வேண்டியது என்றும் அவர் தெரிவித்தார்.
கோஹனின் இந்த விஜயம்
பிராந்தியத்தில் உள்ள நாடுகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டிய ஒரு முக்கியமான
பிரச்சினை என்று நிபுணர் வலியுறுத்தினார்.
மொசாட் தலைவரின்
வருகை, பிராந்தியத்தில் பெரிய நாடுகளை
சிதைப்பதற்கான இஸ்ரேலின் சாத்தியமான சதித்திட்டங்கள் தொடர்பாக பிராந்தியத்தில்
அதிகரித்து வரும் பதட்டங்களின் பின்னணியில் அமைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க
அதிகாரிகள் தரகு செய்யும் உறவு இயல்பாக்க ஒப்பந்தங்கள் மேற்கு ஆசியா பிராந்தியத்தை மறுவடிவமைக்கும் அல்லது அவர்கள் நாடுவதை
நிறுவுவதற்கான பரந்த சூழலை உருவாக்கும் திட்டமாகும். மத்திய கிழக்கை
உருக்குலைக்கும் இந்த திட்டத்தை
அவர்கள் "புதிய மத்திய
கிழக்கு" என்று அழைக்கிறார்கள். இது அமெரிக்காவும் இஸ்ரேலும் 2000 களில் இருந்து பின்பற்றிய கொள்கையை
நினைவூட்டுகிறது.
“வரலாற்றின் போக்கை
மாற்ற நாங்கள் இன்று பிற்பகல் இங்கு கூடியுள்ளோம். பல தசாப்த பிளவு மற்றும்
மோதல்களுக்குப் பிறகு, ஒரு புதிய மத்திய
கிழக்கின் விடியலைக் நாம் குறிக்கிறோம். இந்த மூன்று நாடுகளின் தலைவர்களின்
மிகுந்த தைரியத்திற்கு நன்றி, அனைத்து
மதங்களையும் பின்னணியையும் கொண்ட மக்கள் அமைதியிலும் செழிப்பிலும் ஒன்றாக வாழும்
எதிர்காலத்தை நோக்கி நாங்கள் ஒரு பெரிய முன்னேற்றத்தை மேற்கொள்கிறோம்,” என்று டிரம்ப் செப்டம்பர் 15 அன்று வெள்ளை மாளிகையில்
கையெழுத்திட்ட விழாவில் கூறினார்.
இஸ்ரேலின்
பாதுகாப்பைப் பேணுவதற்கான முயற்சியில் பிராந்தியத்தின் பெரிய நாடுகளை பிரிப்பதன்
மூலம் இஸ்ரேல் மற்றும் அமேரிக்கா இதை "புதிய மத்திய கிழக்கு" என்று
நிறுவ முயல்கின்றன என்று சதர் அல் ஹுசைனி கூறினார்.
"பிராந்தியத்தில்
பெரிய நாடுகளை சிதைக்கும் திட்டம் அமெரிக்காவின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.
இது 2000 க்கு முன்னர் தொடங்கியது, ஆனால் 2006 ஆம் ஆண்டில் 'மகா மத்திய கிழக்கு' திட்டத்தை அவர்கள்
அறிமுகப்படுத்தியபோது அதன் உச்சக்கட்டத்தை எட்டியது. ரொனால்ட் ரீகனின்
நிர்வாகத்திலிருந்து இந்த திட்டம் பரிசீலனையில் இருந்தது. இது 2000 ஆம் ஆண்டில் தெளிவாகியது. 2006 ஆம் ஆண்டில், முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர்
கொண்டலீசா ரைஸ் பெய்ரூட்டுக்கான பயணத்தில் அதை தெளிவாக சுட்டிக்காட்டினார்,” என்று சதர் அல் ஹுசைனி சுட்டிக்காட்டினார்.
நிபுணரின்
கூற்றுப்படி,
'மகா மத்திய கிழக்கு'த் (Greater Middle East) திட்டத்தைப் பின்பற்றுவதன் மூலம், அமெரிக்கா பிராந்தியத்தின் பெரிய
நாடுகளை சிறிய காலனிகளாகப் பிபிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அவற்றை எளிதாகக்
கட்டுப்படுத்தவும், இந்த காலனிகளிடையே
கருத்து வேறுபாட்டை விதைப்பதன் மூலம் அமேரிக்கா அதன் நலன்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
"இந்த திட்டத்தின்
சில பகுதிகளை செயல்படுத்தும் பொறுப்பு சியோனிச ஆட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரபு
நாடுகளை சிதைக்கும் இத்திட்டம் சியோனிச ஆட்சியின் பாதுகாப்பை உறுதிசெய்வதை
நோக்கமாகக் கொண்டுள்ளது. பெரிய நாடுகள் அவற்றின் சுற்றுவட்டத்தில் இந்த சியோனிச
ஆட்சிக்கு இடமளிப்பது சிதைவு செயல்முறையை துரிதப்படுத்த உதவும்” என்று சதர் அல்
ஹுசைனி கூறினார்.
https://www.tehrantimes.com/news/453142/Israel-plotting-to-partition-Saudi-Arabia-Iran
No comments:
Post a Comment