Wednesday, July 8, 2020

ஈரானில் இஸ்லாமிய ஆட்சி இருக்கும் வரை சியோனிச கனவு பலிக்காது.

Zionist dream will not come true as long as there is Islamic rule in Iran.

பலஸ்தீன் நிலங்களை அபகரிக்கும் சியோனிச, அமெரிக்க சதித்திட்டம் நிறைவேற ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்பதில் ஈரான் இஸ்லாமிய குடியரசு உறுதியாக இருக்கிறது.

இஸ்லாமிய புரட்சியின் தலைவரான இமாம் கமேனி ஹமாஸ் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே அவர்களுக்கு 2020 ஜூலை 4 அன்று எழுதிய கடிதத்தில் முன்பு போலவே, இஸ்லாமிய குடியரசு, அதன் மத மற்றும் மனிதாபிமான கடமையின் அடிப்படையிலும், இஸ்லாமிய புரட்சியின் கருத்தியல் கொள்கைகளின் அடிப்படையிலும், பாலஸ்தீனத்தின் ஒடுக்கப்பட்ட மக்களை ஆதரிப்பதற்கும், அவர்களின் உரிமைகளை பாதுகாத்து புதுப்பிப்பதற்கும், அதற்கு எதிரான தீய சக்திகளின் அச்சுறுத்தலை அகற்றுவதற்கும் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்வதற்கு பின் நிற்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்குக் கரையில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களின் பெரும்பகுதியை இணைப்பதற்கான சியோனிச திட்டத்தை உலகின் பல நாடுகள் வன்மையாக கண்டித்துள்ளன; குறிப்பாக துருக்கி மற்றும் அரபு நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன.

அமெரிக்க சார்ப்பு நாடென அறியப்பட்ட குவைத் கூட இந்த நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

குவைத் நாட்டின் தேசிய சட்டமன்ற சபாநாயகர் மர்ஸூக்  அல்-கானிம் ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்திக்குறிப்பில், மேற்குக் கரையையும் ஜோர்டான் பள்ளத்தாக்கையும் இணைப்பதற்கான இஸ்ரேலின் சூழ்ச்சியை கண்டித்த அதேவேளை, “இஸ்ரேலின் ஒருதலைப்பட்ச ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு” எதிராக தீர்க்கமான அரபு மற்றும் சர்வதேச எதிர்வினைகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேலின் தீய நடைமுறைகளை அம்பலப்படுத்தவும், அதற்கு எதிராக ஒரு சர்வதேச நிலைப்பாட்டை திரட்டவும் சர்வதேச நாடாளுமன்ற அமைப்புடன் இணைந்து பணியாற்ற கானிம் தனது தயார்நிலையை வெளிப்படுத்தினார்.

ஜோர்டானிய பிரதிநிதியும் அரபு இடைக்கால நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவருமான அதெஃப் தாரவ்னேவுடன் ஒரு தொலைபேசி உரையாடலின் போது, கானிம் இஸ்ரேலுக்கு எதிரான பல்வேறு சாத்தியமான நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்துள்ளார்.

கடந்த மாதம், குவைத் தலைமையிலான ஒரு அரபு குழு, செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச் சபையின் (யு.என்.ஜி.ஏ) அமர்வில் சட்டக் குழுவுக்கு இஸ்ரேல் பரிந்துரைக்கப்பட்டதை எதிர்த்தது. ஐ.நா. முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், குவைத் தூதர் மன்சூர் அல்-ஒதைபி, “ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக ஐ.நா. தீர்மானங்களையும் சர்வதேச சட்டத்தையும் தொடர்ச்சியாக மீறிவரும் இஸ்ரேலுக்கு அதில் அங்கத்துவம் பெறும் தகுதி இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் ஆலோசகர் இஸ்ரேல் தனது மிகவும் சர்ச்சைக்குரிய இணைப்புத் திட்டத்துடன் முன்னேறினால் மூன்றாவது இன்திபாதா (எழுச்சி)யை  சந்திக்க நேரும் என்று எச்சரித்தார்.

பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலின் ஆளும் கூட்டணி, ஜூலை 1 ஆம் தேதியை மேற்குக் கரையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான குடியேற்றங்கள் மற்றும் வளமான ஜோர்டான் பள்ளத்தாக்கு உட்பட்ட நிலப் பகுதியில் "இறையாண்மையை" திணிக்கும் தேதியாக அறிவித்திருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கு வரைபடத்தை மீண்டும் வரைவதற்கான நோக்கத்துடன் ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட "நூற்றாண்டின் ஒப்பந்தத்தில்" நில அபகரிப்புக்கு ஏற்கனவே பச்சை விளக்கு காட்டியிருந்தார்.

ஆனால், குறிப்பிட்ட இந்த இணைப்பு ஒப்பந்தத்திற்கு ட்ரம்பின் ஆதரவு குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் தேர்தலை சந்திக்கவுள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உள்நாட்டில் பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளார். இனவெறிக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அமெரிக்காவை கோரமாக தாக்கியுள்ள கோவிட்-19 தொற்றுநோய் போன்றவற்றை சமாளிக்க முடியாது திண்டாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், நெத்தன்யாகுவின் நில அபகரிப்பு திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நிலையில் இப்போது அமெரிக்க ஜனாதிபதி இல்லை என்று சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.

ஐம்பது முன்னாள் ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகள் மற்றும் தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த நூற்றாண்டின் ஒப்பந்தம் "நிறவெறிக்கு" ஒத்ததாகும் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை சட்டவிரோதமாக ஒருங்கிணைப்பதற்கான இஸ்ரேலின் திட்டமிட்டம், அதன் நெருங்கிய நட்பு நாடுகளின் கடுமையான கண்டனங்களை ஈர்த்துள்ளது.

ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முக்கிய அரபு நாடுகள் அனைத்தும் மேற்குக் கரையை இணைப்பது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், 1967 எல்லைகளில் ஒரு இறையாண்மை கொண்ட பாலஸ்தீனிய அரசை ஸ்தாபிப்பதற்கான வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் கூறியுள்ளன.

இந்த வாரம் ஒரு கூட்டு செய்தியாளர் மாநாட்டில், பாலஸ்தீனிய குழுக்கள் ஹமாஸ் மற்றும் ஃபத்தா குழுக்கள் பாலஸ்தீனிய பகுதிகளை இஸ்ரேல் இணைப்பதற்கு எதிராக தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியதுடன் ட்ரம்பின் மத்திய கிழக்கு திட்டத்தை " தோற்கடிக்க" உறுதி பூண்டன.

மேற்குக் கரையின் பெரும்பகுதியை இணைப்பதற்கான இஸ்ரேலிய சியோனிச திட்டங்களை எதிர்கொள்ள பாலஸ்தீனியர்களிடையே ஒற்றுமையையும் ஒன்றுபட்ட ‘எதிர்ப்பையும்’ ஹமாஸ் வலியுறுத்துகிறது.

ஐ.நா. தீர்மானங்கள் இஸ்ரேலை 1967 எல்லைகளுக்குப் பின்னால் விலகுமாறு கட்டாயப்படுத்தியுள்ள நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமாக 600,000 க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள், 230 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் குடியேற்றப்பட்டுள்ளனர்.


எதிர்காலத்தில் ஒரு சுயாதீன பாலஸ்தீனிய அரசின் தாயகமாக முழு மேற்குக் கரையையும் ஆக்கிரமிக்கப்பட்ட நகரமான ஜெருசலேம் அல்-குத்ஸின் கிழக்கு பகுதியையும் சர்வதேச சமூகம் கருதுகிறது.

பலஸ்தீனுக்கு எதிரான அமெரிக்க மற்றும் சியோனிச சூழ்ச்சியை தோற்கடிக்க முஸ்லிம் உலகின் ஒன்றுபட்ட செயற்பாடே அவசியமாகும்.

-      - தாஹா முஸம்மில்

 


No comments:

Post a Comment