NY Times:
Iran-China Deal ‘Major Blow’ to U.S.
ஈரானும் சீனாவும் ஒரு பாரிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டணியை
உருவாக்கியுள்ளன, இது எரிசக்தி
மற்றும் பிற துறைகளில் பில்லியன் கணக்கான டாலர் சீன முதலீடுகளுக்கு வழிவகுக்கும்.
இஸ்லாமிய குடியரசை தனிமைப்படுத்த டிரம்ப் நிர்வாகத்திற்கு இது ஒரு பெரும் அடியாக
இருக்கும் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
வங்கி, தொலைத்தொடர்பு, துறைமுகங்கள், ரயில்வே மற்றும் இதுபோன்ற ஏராளமான
திட்டங்களில் சீனா பங்களிப்பை பெரிதும் விரிவுபடுத்தும் 18 பக்க உத்தேச ஒப்பந்தத்தின் விவரங்கள்
அடங்கிய பிரதி ஒன்றை கடந்த வாரம் இப்பத்திரிகை பெற்றுள்ளது. சீன பங்களிப்புக்கு
ஈடாக, அடுத்த 25 ஆண்டுகளில் கிராமமான முறையில்
சீனா ஈரானிய எண்ணெய் விநியோகத்தைப் பெறும் என்று அவ்வொப்பந்தத்தில்
கூறப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக அமெரிக்காவின் மூலோபாய
திட்டத்தின் முக்கிய பகுதியாக இருந்து வரும் ஒரு பிராந்தியத்தில், இவ்விரு நாடுகளும் இராணுவ ஒத்துழைப்பை
ஆழப்படுத்துவதையும் இந்த ஆவணம் விவரிக்கிறது. கூட்டு பயிற்சிகள், கூட்டு ஆராய்ச்சி மற்றும் ஆயுத
மேம்பாடு மற்றும் உளவுத்துறை பகிர்வு - இவை அனைத்தும் "பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் மனித கடத்தல்
மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களுடன் எதிர்த்துப் போராடும் நோக்கத்துக்காக"
என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டாண்மை - சீன தலைவர் ஜி ஜின்பிங்கினால், 2016 இல் அவர் ஈரானுக்கு விஜயம் செய்தபோது
முதலில் முன்மொழியப்பட்டது - கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் அமைச்சரவை
இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது என்று வெளியுறவு மந்திரி முஹம்மது ஜவாத்
ஸரீப் கடந்த வாரம் தெரிவித்தார்.
சீனாவுடன் இவ்வொப்பந்தம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இன்னும் ஈரான் பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவில்லை அல்லது பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்த ஒப்பந்தம் இறுதி ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கடந்த வாரம் ஸரீப் கூறினார்.
பெய்ஜிங்கில், அதிகாரிகள் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை வெளியிடவில்லை, மேலும் சீன அரசாங்கம் இதில் கையெழுத்திட்டதா அல்லது அவ்வாறு இருந்தால், அதை எப்போது அறிவிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது."ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
விடயங்கள் விரிவாக நடைமுறைக்கு வந்தால், இந்த ஈரான்-சீன கூட்டு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான
மோசமடைந்துவரும் உறவில் புதிய மற்றும் ஆபத்தான மோதல் புள்ளிகளை உருவாக்கும்"
என்று அந்த பத்திரிகை அறிக்கை மேலும் கூறியது.
"அதிபர் ஒபாமாவும் மற்ற ஆறு நாடுகளின் தலைவர்களும் இரண்டு வருடங்கள் கடுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 2015 ல் எட்டிய அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறிய டிரம்ப் நிர்வாகத்தின் ஈரான் மீதான ஆக்கிரோஷக் கொள்கைக்கு இது ஒரு பெரிய அடியைக் குறிக்கிறது”, என்று அப்பத்திரிகை மேலும் தெரிவித்தது.
ஈரானில் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நிறுவனத்துக்கும் சர்வதேச வங்கி
முறைக்கான அணுகலை துண்டிக்கும் அச்சுறுத்தல் உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட
அமெரிக்கத் தடைகள், ஈரானுக்குத் தேவையான
எண்ணெய்க்கான தொழில்நுட்பமும் எண்ணெய் பசியும் கொண்ட சீனாவின் பக்கம் திரும்ப
தெஹ்ரானைத் தூண்டின.
"பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா
வைரஸ் காரணமாக, சர்வதேச அளவில் அமெரிக்கா தனிமைப்பட்டிருக்கும்
நேரத்தில், பெய்ஜிங் தற்போதைய அமெரிக்க பலவீனத்தை
உணர்ந்துள்ளது. ஈரானுடனான உத்தேசிக்கப்பட்டுள்ள ஒப்பந்தம், பெரும்பாலான
நாடுகளைப் போலல்லாமல், அமெரிக்க பொருளாதார
தடையை மீறும் சக்திகொண்ட நிலையில் இருப்பதாக சீனா உணர்கிறது என்பதையே இது
காட்டுகிறது. ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவுடன் நடத்தி வரும் வர்த்தகப் போரில் உள்ளதைப்
போலவே, அமெரிக்க சவால்களை தாங்கும் அளவுக்கு
சக்தி வாய்ந்தது ”என்று டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
"இரண்டு பண்டைய ஆசிய நாகரிகங்கள் (ஈரானும்
சீனாவும்), வர்த்தக துறைகளில் இரண்டு பங்காளிகள் போன்று, பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் இருதரப்பு மற்றும்
பலதரப்பு நலன்கள் பேணுவதில் ஒன்றுக்கொன்று மூலோபாய பங்காளியாக கருத்தில் கொள்ளும்,” என்று அந்த ஆவணம் அதன் தொடக்க
வாக்கியத்தில் கூறுகிறது.
ஈரானில் 25 ஆண்டுகளில் மொத்தமாக 400 பில்லியன் டாலர் சீன முதலீடுகள், என்று ஒப்பந்தம், சீன நிறுவனங்களுக்கு எதிராக இன்னும்
கூடுதலான தண்டனை நடவடிக்கைகளைத் தூண்டக்கூடும், அவை சமீபத்திய மாதங்களில் ஏற்கனவே அமெரிக்க நிர்வாகத்தால்
குறிவைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க பத்திரிகையின் படி, இராணுவ உதவி விரிவாக்கம், இராணுவ பயிற்சி மற்றும் உளவுத்துறை தகவல்கள்
பகிர்வு ஆகியவை வாஷிங்டனால் எச்சரிக்கையுடன் மிகவும் உன்னிப்பாக பார்க்கப்படும். அமெரிக்க
போர்க்கப்பல்கள் ஏற்கனவே பாரசீக வளைகுடாவின் நெரிசலான நீர்ப்பகுதியில் ஈரானியப்
படைகளுடன் தொடர்ந்து உரசிக் கொள்கின்றன; மற்றும் தென் சீனக் கடலின்
பெரும்பகுதிக்கு சீனாவின் சொந்தம் கொடாடும் சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய கூற்றை
சவாலுக்கு உட்படுத்துகின்றன, மேலும் பென்டகனின் தேசிய பாதுகாப்பு
மூலோபாயம் சீனாவை ஒரு எதிரி நாடாகவும் அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பரில் ஈரானுடனான நீண்டகால
முதலீட்டு ஒப்பந்தத்தின் அறிக்கைகள் வெளிவந்தபோது, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் அதை ஏற்றுக்கொள்ளவுமில்லை
மறுக்கவுமில்லை. கடந்த வாரம் மீண்டும் இது குறித்து கேட்டபோது, சீன செய்தித் தொடர்பாளர் ஜாவோ லீஜியாங், ஒரு ஒப்பந்தம் செயல்படுவதற்கான
வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.
"சீனாவும் ஈரானும் பாரம்பரிய நட்பை
கொண்டுள்ள இரு நாடுகள், இரு நாடுகளும்
இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியைப் பற்றி தொடர்ந்தும் உரையாடி வருகின்றன," என்று அவர் கூறினார். "நடைமுறை
ஒத்துழைப்பை சீராக முன்னேற்ற ஈரானுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக
இருக்கிறோம், என்றும் அவர்
குறிப்பிட்டார்."
குறிப்பிட்ட திட்டங்கள் -
ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட 100 செயற்றிட்டங்கள்
குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளன - இது ஷியின் "பெல்ட் மற்றும் சாலை
முன்முயற்சி", அதாவது இது ஒரு
பரந்த உதவி மற்றும் முதலீட்டு திட்டத்துடன் பொருந்தக்கூடியது என்று அறிக்கை
கூறியுள்ளது.
இந்த செயற்றிட்டத்தின் அடிப்படையில்
விமான நிலையங்கள், அதிவேக ரயில்வே
மற்றும் சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட மில்லியன் கணக்கான ஈரானியர்களின் வாழ்க்கையுடன்
சம்பந்தப்படும் திட்டங்களாகும். மேலும் வடமேற்கு ஈரானில் உள்ள மாகுவிலும் அபாதானில், பாரசீக வளைகுடா தீவான கெஷ்மிலும் சீனா சுதந்திர வர்த்தக வலயங்களையும்
உருவாக்கும்.
இந்த ஒப்பந்தத்தில் 5 ஜி தொலைத்தொடர்பு வலையமைப்பிற்கான
உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், சீனாவின் நவீன உலகளாவிய
நிலைப்படுத்தல் GPS வழங்குவதற்கான பெய்டோ (Beidou) திட்டங்களும் அதில் அடங்கும்.
டைம்ஸின் கூற்றுப்படி, டிரம்ப் நிர்வாகம் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட்ட பின்னர் பெய்ஜிங்
ஈரானில் ஒரு பரந்த முதலீட்டுத் திட்டத்துடன் முன்னேறுவது, அமெரிக்கா மீதான பெருகிய
பொறுமையின்மையைக் வெளிக்காட்டுகின்றது. "சீனாவும் ஒரு தரப்பாக இருந்த
இந்த ஒப்பந்தத்தை பாதுகாக்க சீனா பலமுறை அமெரிக்க நிர்வாகத்திடம் அழைப்பு
விடுத்துள்ளது, மேலும் ஒருதலைப்பட்ச
பொருளாதார தடைகளை அமெரிக்கா பயன்படுத்துவதை கடுமையாக கண்டித்துள்ளது" என்று
அது கூறியது.
பத்திரிகையின் படி, ஈரானிய அரசாங்கங்கள், பாரம்பரியமாக வர்த்தக மற்றும்
முதலீட்டு பங்காளிகளுக்காக ஐரோப்பாவை நோக்கி மேற்கு நோக்கிப் பார்வையை செலுத்தின.
ஆயினும் "அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான ட்ரம்பின் கொள்கையை ஐரோப்பிய நாடுகள் எதிர்த்த
போதிலும், அவை ஒப்பந்தத்தை மதிக்காத காரணத்தினால், ஈரான் கடும்
விரக்தியடைந்துள்ளது".
ஒர் உயர் பொருளாதார ஆலோசகர் அலி அகா
முஹம்மதி சமீபத்தில் தேசிய தொலைக்காட்சியில் ஒரு பொருளாதார உயிர்நாடியின்
அவசியத்தைப் பற்றி விவாதித்தார். எரிசக்தி சந்தையில் ஒரு முக்கிய இடத்தை வகிக்க
ஈரான் தனது எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு குறைந்தது 8.5 மில்லியன் பீப்பாய்களாக உயர்த்த
வேண்டும் என்றும், அதற்கு சீனா அவசியம்
என்றும் அவர் கூறினார்.
சீனாவின் அரசுக்கு சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம், ஈரானின் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஹுசைன் கன்சாடியை மேற்கோள் காட்டி "இப்பகுதியில் அமெரிக்க படைகளின் ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது என்பதையே இந்த பயிற்சி காட்டுகிறது" என்று தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
http://kayhan.ir/en/news/80566/ny-times-iranchina-deal-%E2%80%98major-blow%E2%80%99-to-us
No comments:
Post a Comment