Friday, August 3, 2018

சுன்னி-ஷீ'ஆ கூட்டே இஸ்லாமிய ஈரான்

Sunnis in Iran

ஈரானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் முதல்வராக (மேயராக) இருப்பவர் சமியாஹ் பாலுச்செஹி எனும் அஹ்லுஸ்ஸுன்னாஹ்வைச்சேர்ந்த 31 வயது பெண்மணியாகும். 2013ம் ஆண்டிலிருந்து இவர் இப்பதவியில் இருந்து வருகின்றார்.  இவர் மட்டுமே ஈரானில் ஒரேயொரு பெண் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் தற்போதைய 9வது பாராளுமன்றத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் ஜமாத்தை 18 பேர் அங்கம்வகின்றனர். இவர்கள் நாட்டின் பல மாகாணங்களில் இருந்தும் தெரிவுசெய்யப்பட்டோர் ஆவர்.

ஈரானின் அதி உயர் தலைவரைத் தெரிவுசெய்யும் நிபுணர்கள் குழுவில் அஹ்லுஸ்ஸுன்னாவை சேர்ந்த 3 உலமாக்கள், சுன்னி பெரும்பான்மை பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்டு, அங்கம்வகிக்கின்றனர்.

அரசாங்க அலுவலகங்களில் ஏராளமான அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்த்தோர் பணிபுரிகின்றனர். மத பிரிவுகளின் அடிப்படையில் ஈரானிய சுன்னிக்களுக்கு எந்தவிதமான வரையறைகளும் தடைகளும் கிடையாது; மதப்பிரிவுகள் ஒருபோதும்  பொருட்படுத்தப்படுவதில்லை.

தேசிய அடையாள அட்டையிலோ அல்லது அடையாளப்படுத்தக்கூடிய கடவுச்சீட்டு போன்ற வேறு எந்த ஆவணத்திலுமோ அவரவர் மத நம்பிக்கையை குறித்துக்காட்டும் எதுவுமே கிடையாது. ஈரானியர்கள் மத்தியில் பேதங்கள் இருக்கக்கூடாதது என்பதற்காகவே இவ்வாறு அமைத்துள்ளனர். ஒருவர் தாமாகவே விரும்பி, குறிப்பிட்ட கொள்கையில் இருக்கின்றேன் என்று கூறாதவை, அவர் எப்பிரிவைச் சேர்ந்தவர் என்பது எவருக்கும் தெரியாது.

சுன்னி பெரும்பான்மை பகுதிகளில் உள்ள பல நகர்ப்புற மற்றும் மாகாண அதிகாரிகள் ஈரானிய சுன்னி சமூகங்களை சேர்ந்தவர்களாகும்.

ஈரான் இஸ்லாமிய குடியரசில் இருந்து அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஈரானிய சுன்னி  இஸ்லாமிய அறிஞர் மௌலானா காலித் அப்ரா இப்ராஹிம் அவர்கள் கூறிய சில விடயங்களை குறிப்பிட விரும்புகிறேன்:

"ஈரானில் சுன்னி - ஷியா என்ற அடிப்படையில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. அதனை ஈரானியர் எவரும் விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதும் இல்லை. திருமண பந்தத்தால் இணைந்து வாழும் பல ஷியா - ஸுன்னா குடும்பங்களை ஈரானில் சர்வசாதாரணமாகக் காணலாம். அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நம்பிக்கையை விமர்சிக்கும் எவரும் ஷியாக்களாலேயே கண்டிக்கப்படுவர். அஹ்லுஸ்ஸுன்னாக்களால் மதிக்கப்படும் எந்த சஹாபாக்களையும் இழிவுபடுத்துவது, கன்னியக்குறைவாக பேசுவது ஹராம் என்று ஷியா உலாமாக்களால் பத்வா வழங்கப்பட்டுள்ளது. றஸூலுல்லாஹ்வின் குடும்பத்தவரை, மனைவியரை இழிவுபடுத்துவது இஸ்லாத்தை இழிவுபடுத்துவதற்கு, குர்'ஆனை இழிவுபடுத்துவதற்கு, றஸூலுல்லாஹ்வை இழிவுபடுத்துவதற்கு சமனாகும். 1400 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற சரித்திர சம்பவங்களை இன்று நாம் பிரிந்திருக்க காரணிகளாக அமைத்துக்கொள்ள அவசியமில்லை.


இஸ்லாத்துக்கு எதிராக, இஸ்லாமிய ஒற்றுமைக்கு எதிராக மாபெரும் பிரச்சாரம் இஸ்லாத்தின் எதிரிகளால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஷியாக்களுக்கு எதிராக சுன்னிகளை தூண்டிவிடுவதற்கு அமெரிக்காவும் சுன்னிகளுக்கு எதிராக ஷியாக்களை தூண்டிவிடுதற்கு பிரித்தானியாவும் கோடிக்கணக்கான நிதியினை ஒதுக்கி, செலவு செய்து வருகின்றன. இதற்கென்றே பல ஊடக நிறுவனங்கள் நிறுவப்பட்டு இன்றும் செயற்பட்டு வருகின்றன.என்று குறிப்பிட்டார்.

ஈரானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் முதல்வராக (மேயராக) இருப்பவர் சமியாஹ் பாலுச்செஹி எனும் அஹ்லுஸ்ஸுன்னாஹ்வைச்சேர்ந்த 31 வயது பெண்மணியாகும். 2013ம் ஆண்டிலிருந்து இவர் இப்பதவியில் இருந்து வருகின்றார்.  இவர் மட்டுமே ஈரானில் ஒரேயொரு பெண் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய இராணுவம், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு சேவைகளில் பல ஈரானிய சுன்னிகள் சேவை செய்கின்றனர். குர்திஸ்தானில் மட்டும் 5000 க்கும் அதிகமான ஈரானிய சுன்னி குர்திகள்  "செபாவில்" (இஸ்லாமிய குடியரசின் பாதுகாவலர்கள்) சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய உலகின் இரு பெரும் பிரிவினரான சுன்னிகளுக்கு ஷீ'ஆக்களுக்கும் இடையில் புரிந்துணர்வும் ஒற்றுமையும் ஏற்படவேண்டும் என்பதற்காக ஈரானில் பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் இஸ்லாமிய "சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை வாரம்". ரசூலுல்லாஹ் பிறந்த தினம் அஹ்லுஸ்ஸுன்னா ஆதாரங்களின் அடிப்படையில் ரபீயுல் அவ்வல் 12ம் நாள், அஹ்லுஸ் ஷீ'ஆ ஆதாரங்களின் அடிப்படையில் ரபீயுல் அவ்வல் 17ம் நாள். இவ்விரு தினங்களையும் உள்ளடக்கிய  12-17 வாரத்தை "சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை வாரம்" என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் இமாம் கொமைனி (ரஹ்), அவர்களால், 1979 ல் இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்டதைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தி, உலக முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக பல நிகழ்ச்சிகளை ஈரான் வருடாந்தம் ஏற்பாடுசெய்து நடத்தி வருகிறது.

ஈரானிய சனத்தொகையில் 99.4% இஸ்லாமியர்களாவர். இவர்களில் சுமார் 10 வீதமானோர் சுன்னிகள். நாட்டின் பல பாகங்களிலும் இவர்கள் பரந்து வாழ்ந்தபோதும் செறிந்து வாழ்வது நாட்டின் வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளிலாகும்.

ஈரானில் 1997ல் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரத்தின்போது மொத்தமாக 57,635 பள்ளிவாசல்கள் உள்ளன அதில் 10,344 சுன்னி பள்ளிவாசல்களாகும். இப்போது அவ்வெண்ணிக்கை 15,000 யும் தாண்டியுள்ளது என்று தற்போதைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தலைநகரான தெஹ்ரானில் மட்டும் சுன்னி பள்ளிவாசல்கள் 9 உள்ளன. இவ்வாறிருப்பினும் ஈரானில் ஷீ'ஆ பள்ளிவாசல்களில் சுன்னிகளும் சுன்னி பள்ளிவாசல்களில் ஷீ'ஆக்களும் இறை வழிபாடுகளில் ஈடுபடுவதை சர்வ சாதாரணமாகக் காணலாம்.

ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒருபோதும் சுன்னி-ஷீ'ஆ என்று பிரித்துப் பார்ப்பது கிடையாது. அவரவர் மத்ஹபுகளுக்கமைய மார்க்கக்கடமைகளை நிறைவேற்றுவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. 

உண்மை இவ்வாறிருக்க சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதற்கான அதிகளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய நிலையில், அதற்கு எதிமாறான திசையில் நம்மையெல்லாம் இட்டுச்செல்ல முயலும் தீயசக்திகளுக்கு இடமளிக்கும் செயற்பாடுகள் தீவிரமடைந்து வருவதையே அவதானிக்க முடிகிறது.

இதற்கிடையில் நம்மவர் சிலரும் மதசித்தாந்தங்களையும் இயக்கவாதங்களையும் இதற்குள் புகுத்தி குட்டையைக் குழப்பி தவறான புரிந்துணர்வுகளை மக்கள் மனதில் புகுத்திப் பூதாகரமாக்கி அதன் மூலம் அனுகூலம் பெறுவதற்கான சக்திகளுக்குத் தீனி போடுவதில் ஈடுபட்டு வருவதோடு நமது ஒற்றுமையைக் குலைத்து பிரிவினைக்கும் தூபமிடுகின்றனர். இயக்கங்களும் முஸ்லிம் அமைப்புகளும் முஸ்லிம் சமூக நிறுவனங்களும் சமூகத்துக்கு நன்மை செய்வதாகக் கூறிக்கொண்டு ஒன்றில் மௌனம் சாதிக்கின்றன அல்லது பகை உணர்வை வளர்க்கின்றன. இதன் பின்னணி என்ன? இவையெல்லாம் சர்வதேச நிகழ்ச்சிநிரலின் ஒரு அங்கம் எனக்கொள்வதா? இது தொடர்பான இவர்களது உண்மையான நிலைப்பாடு என்ன? என்பன போன்ற விளங்கிக் கொள்ள முடியாத பல்வேறு கேள்விகள் மக்களை மேலும் குழப்பி வருகின்றன.

இவ்விரு சமூகங்கள் மத்தியிலான சகவாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதும் பிளவுகளை ஊக்குவிப்பதுமான இந்த நியாயமற்ற விமரிசனங்களை முளையிலேயே கிள்ளி எறிய எமது இஸ்லாமிய இயக்கங்கள் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். உண்மையான புரிந்துணர்வை மக்களுக்கு ஊட்டி, யதார்த்த நிலையை உணர்த்த இவை முன்வரவேண்டும். நாம் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு அதற்கு வழுவூட்டி வாழ்வதே விவேகமான செயல் என்பது கூறித் தெரியவேண்டியதொன்றல்ல.

- தாஹா முஸம்மில் 

1 comment: