The election of Yahya Sinwar contradicts Western media's perception
செவ்வாயன்று, ஹமாஸ் போராட்ட இயக்கம், மறைந்த இஸ்மாயில்
ஹனியேவுக்குப் பிறகு யாஹ்யா சின்வார் ஹமாஸின் அரசியல் பணியகத்தின் புதிய தலைவராக
ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தது.
கடந்த செவ்வாயன்று, ஹமாஸ் போராட்ட இயக்கம், தியாகி இஸ்மாயில்
ஹனியேவுக்குப் பிறகு குழுவின் அரசியல் அலுவலகத்தின் தலைவராக இருக்கும் தலைவர் யஹ்யா
சின்வாரை ஹமாஸ் அமைப்பின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்ததாக அறிவித்தது.
இந்த அறிவிப்பு வந்த சிறிது
நேரத்தில்,
The New York Times, The Wall Street Journal, மற்றும் The Economist,போன்ற மேற்கத்திய
ஊடகங்கள்,
யஹ்யா சின்வார் தனது
புதிய தலைமைத்துவ பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதால், ஹமாஸை விரிவாக பகுப்பாய்வு செய்யும் கட்டுரைகளை வெளியிட்டன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில்
இஸ்ரேலிய பயங்கரவாதத்தால் படுகொலை
செய்யப்பட்ட இஸ்மாயில் ஹனியே, போர்நிறுத்தத்திற்காக தொடர்ந்து முயற்சித்த ஒருவராகும். இப்போது அவருக்கு
பதிலாக ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளத்தின் சூத்திரதாரியாக செயல்பட்ட யாஹ்யா சின்வார்
தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஹமாசுக்குள்ளும் அதன் கூட்டாளிகள் மற்றும்
"இராஜதந்திரத்தில் அதிக ஆர்வமுள்ள உள் தலைவர்களுக்கு இடையே பிளவை
ஏற்படுத்தக்கூடிய ஒரு கடும் போக்குடையவராக நீண்டகாலமாகவே [மேற்கத்திய ஊடகங்கள்
மற்றும் அரசாங்கங்களால்] சித்தரிக்கப்பட்டவர் இப்போது தலைமை ஏற்றுள்ளார் என்று தி
எகனாமிஸ்ட் தெரிவித்துள்ளது.
இருப்பினும், மேற்குலக ஊடகங்களின்
கணிப்பு தவறானது என்பதற்கு ஆதாரமாக இயக்கத்தின் தலைவர் தேர்வில் ஒருமனதாக சின்வாரை
கட்டமைப்பின் அதி உயர் பதவியில் அமர்த்தியதாய் குறிப்பிடலாம். இது போராட்ட
இயக்கத்தின் உறுப்பினர்களின் எந்த பிரிவினையுமற்ற முழு ஆதரவையும் யஹ்யா சின்வார்
பெற்றுள்ளதைக் காட்டுகிறது.
ஹமாஸ் தலைவர்களின் படுகொலைகள்
எதிர்ப்பு இயக்கத்தை ஒருபோதும் பலவீனப்படுத்தவில்லை என்பதையே மேற்கத்திய ஊடக
அறிக்கைகள் காட்டுகின்றன; இன்னும், பாலஸ்தீனத் தலைவர்களை
குறிவைத்த இஸ்ரேலின் வரலாறு சுதந்திரத்திற்கான விருப்பத்தை மென்மேலும் தூண்டுவதால், பலஸ்தீன் விடுதலைக்கான
அதன் உறுதியை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது நிதர்சனம்.
பேச்சுவார்த்தைகள்
என்னவாகப் போகிறது?
சின்வார் தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது யுத்தநிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறாக
அமையலாம் என்றும், காஸாவில் போர் நிறுத்த
ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் எகனாமிஸ்ட் கூறியது. மேலும் யஹ்யா
சின்வார் "போர் நிறுத்த பேச்சுவார்த்தையை முறியடிப்பதில் முதன்மையானவர்"
என்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் குற்றச்சாட்டுகளை மீண்டும்
அது வலியுறுத்தி கூறியது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஹமாஸ் இயக்கத்தின் முடிவெடுத்தல்
அனைத்தும் சின்வாரின் விருப்பத்தின் பேரிலேயே இடம்பெறுகிறது என்ற தவறான கருத்தை
மையமாகக் கொண்டிருந்தது. இதற்கிடையில், “ஹமாஸின் முடிவுகளின் மையப் புள்ளியாக யாஹ்யா சின்வாரே இருந்தார்” என்று ஒரு முன்னாள்
இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரியை நியூயார்க் டைம்ஸ் அதன் கட்டுரையில்
மேற்கோளிட்டுள்ளது.
ஹமாஸின் இறுதி முடிவுகள் புதிதாக
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பணியகத் தலைவர் யஹ்யா சின்வாரால் மட்டும்
தீர்மானிக்கப்படுவதில்லை என்ற உண்மை இந்த ஊடகங்களுக்கு தெரிவதில்லை. போர்நிறுத்தம்
மற்றும் ‘கைதிகள் பரிமாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் உறுதிபூண்டுள்ளது
என்பது போன்ற பொய்களை செய்திகளை பரப்புவதில் அவை பின்நிற்பதில்லை. காஸாவில் மோதலை
நிறுத்துவதில் சின்வார் பெரும் தடையாக இருப்பார் என்றும் இவை கதையளக்கின்றன.
தியாகி இஸ்மாயில் ஹனியே அக்டோபர்
முதல் மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளில் முன்னணியில் இருந்தார், மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடைவதில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின்
அடாவடித்தனம் மற்றும் அலட்சியத்தை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தார். நவம்பர்
மாதம் காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டபோதும், "இஸ்ரேல்" தனது உடன்படிக்கையை மீறியிருந்தது
என்பது குறிப்பிடத்தக்கது. கத்தார் மற்றும் எகிப்திய
மத்தியஸ்தர்கள் பேச்சுக்களுக்கு இஸ்ரேலிய தரப்பு அடிக்கடி ஏற்படுத்தும்
முட்டுக்கட்டையை எடுத்துக்காட்டினர் மற்றும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட கோரிக்கைகளுக்கு
முரணாக அல்லது முன்னர் நிறுவப்பட்ட இணக்கப்பாட்டிற்கு முரணான இஸ்ரேல் புதிய
கோரிக்கைகளை அறிமுகப்படுத்துவது எப்படி என்பதை விரிவாக எடுத்துக்கூறினர். மொத்தத்தில்
பேச்சுவார்த்தைகள் முறிந்ததற்கான காரணம் இஸ்ரேல் தான் என்பதை நினைவூட்டினார்.
பின்னர், ஈரானின் ஜனாதிபதியாக
புதிதாக தேர்வுசெய்யப்பட்ட பேசேஷ்க்கியானின் பதவியேற்பு வைபவத்தில்
கலந்துகொள்வதற்காக தெஹ்ரானுக்குச் சென்று பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கேற்ற
இஸ்மாயில் ஹனியே இஸ்ரேல் பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்டார், இந்த அத்துமீறல்
சம்பவம் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் இஸ்ரேலின் முதன்மையான நோக்கம் அல்ல
என்பதைக் காட்டுகிறது.
மேற்குலகில் இவ்வாறு முக்கிய பேசுபொருளாக ஆகியுள்ள யஹ்யா சின்வார் யார்?
1948 நக்பாவின் போது இடம்பெயர்ந்த பெற்றோருக்கு காஸாவில்
உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்த யாஹ்யா, இளம் வயதிலேயே
அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். காஸாவின் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்
பட்டதாரியாக, அவர் இஸ்லாமியத் தொகுதியை
வழிநடத்தி அரபுக் கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
சியோனிச எதிர்ப்பு புரட்சிகர நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக 19 வயதில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்த பல மாதங்களில் பாலஸ்தீனிய பிரச்சனையில் அதிக ஈடுபாடு கொண்டவராக, மற்ற பாலஸ்தீனிய புரட்சியாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.
1985 இல் மீண்டும் கைது செய்யப்பட்ட அவர் ஹமாஸின்
நிறுவனரும் தலைவருமான ஷேக் அஹ்மத் யாசினுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார், இந்த தொடர்பு பின்னர் ஹமாஸுக்குள் அவர் பூரணமாக இணைவதற்கு வழி வகுத்தது.
1985 இல் விடுவிக்கப்பட்ட பிறகு அவர் அரசியல் அமைப்பில் அதிக கவனம் செலுத்தினார் மற்றும் அவரது செயல்பாட்டை
ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுத முயற்சிகளாக மாற்றினார், அல்-மஜ்த் அமைப்பை
நிறுவினார்; இதுவே பின்னர் ஹமாஸாக மாறியது.
அல்-மஜ்த் காஸாவில் உள்ள துரோகிகளை ஒழிப்பதில் உறுதியாக இருந்தது, அல்-சின்வார் உள்ளூர் ஒத்துழைப்பாளர்கள் மற்றும் உளவாளிகளை அடையாளம் கண்டு
களையெடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
அல்-சின்வாரின் பாதுகாப்புப்
பணியானது காஸாவை ஒரு முக்கிய எதிர்ப்பின் மையமாகவும் பாலஸ்தீனிய விடுதலைக்கான
போராட்டத்தில் ஒரு முக்கிய புள்ளியாகவும் நிறுவுவதற்கான பரந்த மூலோபாயத்தின் ஒரு
முக்கிய பகுதியாகும்.
1988 ஆம் ஆண்டில், 25 வயதில், அல்-சின்வார் மூன்றாவது முறையாக
கைது செய்யப்பட்டார் மற்றும் காஸாவில் இஸ்ரேலிய உளவு மற்றும் நாசகார நடவடிக்கைகளை
முறியடித்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
2011 இல், பாலஸ்தீனிய போராட்டக்
குழு மற்றும் இஸ்ரேல் இடையே 1,027 கைதிகள்
பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக அல்-சின்வார் விடுவிக்கப்பட்டார்.
இன்று அவர் காஸாவில்
சிறைபிடிக்கப்பட்ட ஏராளமான இஸ்ரேலிய படையினர் மற்றும் குடியேறியவர்களை
மேற்பார்வையிடுகிறார்.
2018 ஆம் ஆண்டில், காஸா மீதான முற்றுகையை
அமைதியான முறையில் முறியடிக்கும் முயற்சியில் அல்-சின்வார் 'கிரேட் மார்ச் ஆஃப் ரிட்டர்ன்'
(Great March of Return) பேரணியை நடத்தினார். இந்த அமைதி பேரணியில் கலந்துகொண்ட எதிர்ப்பாளர்கள் பலரை
இஸ்ரேலிய பயங்கரவாத ராணுவம் மிருகத்தனமான முறையில் கொன்று குவித்தது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அல்-சின்வார் ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளத்திற்கு தலைமை தாங்கி முற்றுகையை
வெற்றிகரமாக முறியடித்தார்.
யஹ்யா சின்வார் ஒரு திறமையான மற்றும்
துணிச்சல் மிக்க பாலஸ்தீனிய அரசியல்வாதி, அவர் ஆகஸ்ட் 2022 முதல் ஹமாஸ் அரசியல் பணியகத்தின் முக்கிய தலைவர்களில்
ஒருவராக அறியப்படுகிறார். மேலும் இஸ்மாயில் ஹனியேஹ் படுகொலை செய்யப்பட்டதைத்
தொடர்ந்து இன்று அவர் அதன் தலைமைத்துவ பொறுப்பை ஏற்றுள்ளார்.
“ஆபரேஷன் அல்-அக்ஸா
வெள்ளத்தின் பின்னணியில் இருந்த செயல்படுத்தியவர் யாஹ்யா அல்-சின்வார்.
இஸ்லாத்தில் ஆழ்ந்த அறிவு கொண்ட அவர்,
யாருக்காக அல்லாஹ்
சொர்க்கத்தின் வாயில் கதவுகளை திறந்து வைக்க நாடினானோ, அந்த ஷஹீத் என்ற
உயர்ந்த அந்தஸ்தை விரும்பி எதிர்பார்த்திருக்கும் ஒரு தியாகி" என்று அல்-ஹய்யா
குறிப்பிடுகிறது.
- தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment