Friday, July 5, 2024

ஐ.நா தோல்விக்கான காரணம் வீட்டோ அதிகாரம். ஐ.நா.விலும், இஸ்லாமிய மாநாட்டு அமைப்பிலும் (OIC) சீர்திருத்தங்கள் தேவை - மகாதீர்

Mahathir Mohamad Underlines Palestinians’ Right to Take Action against Israel

The reason for the failure of the UN is the veto power. Reforms needed at UN, Organization of Islamic Conference (OIC) - Mahathir

IQNA (ஈரான் இஸ்லாமிய குடியரசின் குர்ஆன் செய்தி நிறுவனம்) - முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது அல்-அக்ஸா வெள்ள நடவடிக்கையை பாலஸ்தீனியர்களுக்கு உள்ள  உரிமை என்று விவரித்தார்.

பல தசாப்தங்களாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஆட்சி பாலஸ்தீனியர்களை ஒடுக்கி வருகிறது மற்றும் அவர்களின் உரிமைகளை மீறுகிறது என்று அவர் கூறினார்.

அனடோலு ஏஜென்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய மகாதீர், காஸா பகுதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் (பலஸ்தீனர்களின்) வாழ்க்கைக்கான உரிமை மற்றும் புனிதம் உள்ளிட்ட "முக்கிய மதிப்புகள்" மறுக்கப்பட்டுள்ளன என்றார்.

உலகின் நீண்ட காலம் பிரதமராக ஆட்சிசெய்தோரில் ஒருவராக மலேசியாவை மூன்று முறை வழிநடத்தியவர் மகாதீர் முஹம்மத். பாலஸ்தீனம் உட்பட உலகை பாதிக்கும் பொதுவான பிரச்சனைகளை சமாளிக்க ஐ.நா.விலும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிலும் (OIC) சீர்திருத்தங்கள் தேவை என்று கூறினார்.

காஸா மீதான இஸ்ரேலியப் போரை அடுத்து, 98 வயதான மகாதீர், "நாகரிகம் செத்துவிட்டது " என்று கூறினார்.

"காஸாவில் பாலஸ்தீன மக்களுக்கு நடந்துவரும் அநீதி யாரும் எதிர்பார்க்காத ஒன்று; இஸ்ரேலின் தொடர்ச்சியான அடக்குமுறைக்கு பாலஸ்தீனியர்கள் ஆற்றியது எதிர்வினையே என்று மகாதீர் வாதிட்டார்.

“70 ஆண்டுகளாக இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களை ஒடுக்கி வருகிறார்கள். அவர்கள் உண்மையில் பாலஸ்தீனர்களின் நிலத்தில் குடியேற்றங்களை அமைத்துள்ளார்கள். பாலஸ்தீன நிலத்தில் சுவர்களைக் கட்டியுள்ளனர். ஜெருசலேம் அல்-குத்ஸைத் தலைநகராக ஆக்கிக் கொண்டுள்ளனர். இவை அனைத்தும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரானது" என்று அவர் கூறினார்.

"இஸ்ரேல் பாலஸ்தீனிய மக்களை ஒடுக்கினால், பாலஸ்தீனிய மக்களுக்கு இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு, அதைத்தான் அவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி (அல்-அக்ஸா வெள்ள நடவடிக்கை) செய்தார்கள் என்று நான் நினைக்கிறேன்.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் காஸா மீதான அதன் தொடர்ச்சியான மிருகத்தனமான தாக்குதலுக்கு மத்தியில், உடனடி போர்நிறுத்தம் கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறிய இஸ்ரேல் சர்வதேச கண்டனத்தை எதிர்கொண்டது.

உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 37,900 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சுமார் 87,000 பேர் காயமடைந்துள்ளனர்.

 "தமது பாதுகாப்பில் கவனம் செலுத்த இஸ்ரேலுக்கு உரிமை இருக்குமாயின், அதே உரிமை பாலஸ்தீனியர்களுக்கும் இருக்கிறது" என்று மகாதீர் வலியுறுத்தினார்.

இஸ்ரேலுக்க்கான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவு, மனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் அவர்கள் மதிப்பதில்லை என்பதையே காட்டுகிறது,

"மனிதகுலம் மதிப்புகள், அடிப்படை மதிப்புகளை உருவாக்கியுள்ளது, அதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம்" மேலும் அவை மனித உரிமை, வாழ்வதற்கான உரிமை, வாழ்க்கையின் புனிதம் மற்றும் ஒடுக்குமுறை ஒழிப்பு மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

"இவை நாங்கள் ஏற்றுக்கொண்டு மதிக்கும் விழுமியங்கள். ஆனால், காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் மேற்கொண்ட இனப்படுகொல, ​​அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதற்கு அளித்த ஆதரவு, நாங்கள் பேசும் முக்கிய விழுமியங்களை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது” என்று கூறினார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் "மனித உரிமைகள் பற்றி சிந்திக்கவில்லை, வாழ்வின் புனிதத்தைப் பற்றி சிந்திக்கவில்லை, மேலும் பாலஸ்தீனியர்களைக் கொல்ல குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை இஸ்ரேலுக்கு வழங்கி இனப்படுகொலை செய்ய இஸ்ரேலியர்களுக்கு உதவுகின்றன. மேற்கத்திய நாடுகள் "கடந்த காலத்தில் தாங்கள் முன்னெடுத்துச் சென்ற விழுமியங்களை கைவிட்டுவிட்டன,

மனிதகுலம் ஒரு குறிப்பிட்ட நாகரீகத்தை அடைந்துள்ளது என்பதைக் காட்டும் மதிப்புகள், மக்கள் மற்றும் மனித வாழ்வின் உரிமைகள் குறித்து நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம்" என்று மகாதீர் கூறினார்.

"அதாவது, நியாயமான, சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றும் ஒரு நாகரீகம், துன்புறுத்தல், சுதந்திரம் போன்றவை, இந்த விழுமியங்களைக் கருத்தரித்த மேற்குலகோரால் அவை அனைத்தும் தூக்கி எறியப்பட்டுள்ளன. … அவர்கள் தங்கள் சொந்த மதிப்புகளை விட்டுவிட்டார்கள்."

ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும்

போரின் கடந்த எட்டு மாதங்களாக காஸாவில் ஐ.நா. தனது முடிவுகளை அமுல்படுத்தத் தவறியமை குறித்து குறிப்பிடுகையில் "உலக அமைப்பு ஒன்றை கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் நல்லதே, ஆனாலும் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நாடுகளாலேயே அது உருவாக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று மகாதீர் கூறினார்.

ஐ.நா.வை அமைப்பதில் தலைமை தாங்கியவர்கள் "தங்களுக்கு சில சலுகைகள், வீட்டோ அதிகாரங்களை வழங்கினர்" என்று அவர் கூறினார்.

அதாவது, எத்தனை பேர், எத்தனை நாடுகள் ஒரு தீர்மானத்தை ஆதரித்தாலும், அவர்களால் அத்தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தைக்கொண்டு செல்லுபடியற்றதாக ஆக்க முடியும்.  .. அங்குதான் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைகிறது,” என்று அவர் விளக்கினார், போரை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட காஸா தொடர்பான பல ஐ.நா தீர்மானங்களில் அமெரிக்காவின் வீட்டோவைக் அவர் இங்கே குறிப்பிடுகிறார்.

வீட்டோ அதிகாரம் இல்லாத ஐ.நா.வே சிறந்தது, மருத்துவம் மற்றும் உணவு விநியோகத்திற்கு உதவுதல் உள்ளிட்ட சில பகுதிகளில் உலக அமைப்பு "நல்ல வேலையைச் செய்துள்ளது" என்பது மறுப்பதற்கில்லை "ஆனால் போர்கள் இருக்காது, கொலைகள் இருக்காது என்பதை உறுதி செய்வதன் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்துள்ளது, ஏனெனில் வீட்டோ அதிகாரம் உள்ள ஐந்து நாடுகளும் பொதுவாக தங்கள் சொந்த நலனுக்காக இல்லாத எதையும் நிராகரிக்கும்,” என்று அவர் கூறினார்.

OIC இல் சீர்திருத்தங்கள்

பல இஸ்லாமிய நாடுகள் "தங்கள் நாடுகளின் ஆளுகையின் அடிப்படையில் வலுவாக இல்லை என்பது வெளிப்படை. இதன் காரணமாக, இஸ்லாமிய நாடுகளில் ஏராளமான வன்முறைகள், உள்நாட்டுப் போர்கள் கூட உள்ளன, இதன் காரணமாக, இஸ்லாமிய நாடுகளால் தங்கள் விவகாரங்களை சரியாக நிர்வகிக்க முடியாதுள்ளது." என்று அவர் கூறினார். "

இஸ்லாமிய நாடுகளிடம் "நிறைய பணம் உள்ளது, ... ஏனெனில் அவர்களிடம் எண்ணெய் உள்ளது மற்றும் அவர்கள் கணிசமாக சம்பாதிக்கிறார்கள், ஆனால், நாட்டை வலுப்படுத்த முதலீடு செய்வதில்லை என்று அவர் வருந்தினார்.  "உண்மையில், பெரும்பாலான பணம் டாலர் முறிகளை வாங்க பயன்படுத்தப்படுகிறது. டாலர் முறிகளை வாங்குவது அமெரிக்காவிற்கு கடன் கொடுப்பது போன்றது. அந்த பணத்தை வைத்து அமெரிக்கா முஸ்லிம் நாடுகளுக்கு நல்லது செய்வதில்லை” என்று அவர் கூறினார்.

OIC இல் சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய மகாதீர், இஸ்லாமிய மாநாட்டு அமைப்பில் முஸ்லிம் நாடுகளால் எடுக்கப்படும் தீர்மானங்கள் "ஒருமித்த கருத்து இருந்தால் மட்டுமே நிறைவேற்றப்படும்" என்றார். "அதாவது OIC எடுக்கும் எந்த தீர்மானமும் 57 உறுப்பு நாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்.  ஒரு நாடு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது. எனவே, இந்த ஒருமித்த கருத்து சாத்தியம் அற்றது என்பதால் பெரும்பான்மை தீர்மானத்திற்கு நாங்கள் திரும்ப வேண்டிய அவசியம் உள்ளது," என்று அவர் பரிந்துரைத்தார்.

"அதைச் செய்தால், சில விஷயங்களில் நாங்கள் சில உடன்பாட்டை எட்டலாம், எடுத்துக்காட்டாக, முஸ்லிம் உம்மாவைப் பாதுகாப்பது" என்று அவர் குறிப்பிட்டார். "சந்தேகமின்றி, எங்களிடம் பணம் உள்ளது, எங்களிடம் ஆள்பலம் உள்ளது, ஆனால் முஸ்லிம்களைப் பாதுகாக்க நாங்கள் ஒழுங்கமைக்கப்படவில்லை. என்பது கவலைக்குரிய விடயமாகும்; இந்த நிலை மாறவேண்டும்."

அமெரிக்கத் தடைகள் பற்றிய பயம்

"சர்வதேச கடல் சட்டத்திற்கு முரணாக" சர்வதேச கடலில் கப்பல்களை கைப்பற்றுவது போன்ற சர்வதேச குற்றங்களை இஸ்ரேல் செய்து வருகிறது. "நீங்கள் சர்வதேச கடற்பரப்பில் இருக்கிறீர்கள், நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள், அது உங்கள் சுதந்திரம். ஆனால் இஸ்ரேல் சர்வதேச கடற்பரப்பில் கப்பல்களை நிறுத்தி அவற்றின் சரக்குகளை கைப்பற்றியுள்ள செய்திகளை நீங்கள் பார்க்கிறீர்கள்,

"எங்களிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால், ஐரோப்பியர்கள் இஸ்ரேலை உருவாக்கினர், இப்போது அவர்கள் இஸ்ரேலை பாதுகாக்க விரும்புகிறார்கள், இஸ்ரேல் குற்றங்கள் செய்தாலும் கூட."

பொருளாதாரத் தடைகள் நாடுகளை கடுமையா பாதிக்கின்றன என்பதை ஒப்புக்கொண்ட மகாதீர், "அமெரிக்கா மிகவும் சக்திவாய்ந்த நாடு என்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாதுள்ளது, மேலும் நீங்கள் அமெரிக்காவிற்கு எதிராகச் செயல்பட்டால், அமெரிக்கா உங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைப் பிரயோகிக்கக்கூடும்" என்று கூறினார்.

இது இஸ்ரேல் மட்டும் என்றால், நாம் இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட முடியும். ஆனால் இப்போது அமெரிக்கா மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு துணை நிற்கின்றன, இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டால், அமெரிக்காவாலும் ஐரோப்பிய நாடுகளாலும் பொருளாதாரத் தடை விதிக்கப்பலாம், ”என்று அவர் கூறினார்.

"பெரும்பாலான நாடுகள் தங்கள் நாடு பொருளாத தடைக்கு உள்ளாவதை ஏற்கத் தயாராக இல்லை, ஏனெனில் அது அவர்களின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும்," என்று அவர் மேலும் கூறினார். 

இளைஞர்கள்  மீதான நம்பிக்கை, புதிய தலைமை

அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது நூற்றாண்டை  எட்டவுள்ள மகாதீர், வளர்ந்து வரும் இளம் தலைமுறை "விஷயங்களை உண்மையாகப் பார்க்கும்" நம்பிக்கையை தெரிவித்தார்.

உலகெங்கிலும் பரவியிருந்த இளைஞர் இயக்கங்களை மேற்கோள் காட்டி "அரசாங்கங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தபோதும் அது இளைஞர்களில் தாக்கம் செலுத்த வில்லை; வீதியில் இறங்கிப் போராடுகின்றனர்." அவர்கள் யூதர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் யூத விரோதிகள் அல்ல. காஸாவில் இஸ்ரேல் மக்களைக் கொன்று குவிக்கும் நடவடிக்கைக்கு அவர்கள் எதிரானவர்கள்,” என்றார்.

இளைஞர்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தின் கொள்கைகளை நிராகரிப்பார்கள் மற்றும் அவர்களின் சொந்த அரசாங்கத்தை மாற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மனித உரிமைகள், கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி போன்றவற்றின் அடிப்படை மதிப்புகளை கடைப்பிடிக்கும் இளைஞர்கள் மத்தியில் இருந்து புதிய தலைமை வருவதை நாம் பார்க்க வேண்டும் என்று மகாதீர் கூறினார்

"அரசாங்கம் இஸ்ரேலை ஆதரித்தால், இளைஞர்கள் அதற்கு முரணாக நல்ல மதிப்புகளைத் தக்க வைத்துக் கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், அதன் மூலம் அவர்களின் தலைவர்களால் இழந்த நமது நாகரீக மதிப்புகளை மீண்டும் கொண்டு வர முடியும்."

இளைஞர்கள் "எங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறார்கள், எதிர்காலத்தில், நாங்கள் முன்பு நிலைநிறுத்திக் கொண்டிருந்த நாகரீக விழுமியங்களை மீண்டும் கொண்டுவரும் இளம் தலைவர்களை நாம் காணலாம்." என்று மகாதீர் குறிப்பிட்டார்.

அவர்கள் அவர்களின் அரசாங்கம் தவறான பாதையில் இருக்கும்போது, ​​அது தவறு என்று அரசாங்கத்திற்கு உணர்த்த வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள், இவ்வாறு செய்கையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் காவல்துறையை அனுப்பினாலும் கூட. தைரியம் இழக்க கூடாது" என்று மகாதீர் கூறினார்.

​​​Source: Anadolu Agency

https://iqna.ir/en/news/3488958/mahathir-mohamad-underlines-palestinians%E2%80%99-right-to-take-action-against-israel

 

No comments:

Post a Comment