Thursday, December 28, 2023

பாலின சமத்துவம்' என்பது தவறானது, 'பாலின நீதி' என்பதே சரியானது

 West is illogical on the issue of women and flees from answering questions about its outlook

இஸ்லாமியப் புரட்சியின் தலைவரான இமாம் காமனேயி பெண்கள் குழுவுடனான சந்திப்பில், குடும்பத்தில் பெண்களின் இருப்பின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து இஸ்லாத்தின் தர்க்கரீதியான மற்றும் பகுத்தறிவுப் பார்வையையும் சமூகம், அரசியல் மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு நிலைகளில் அவர்களின் வரம்பற்ற செயல்பாடுகளையும் விளக்கினார்.

ஈரானிய நாட்காட்டியில் மகளிர் தினத்தைக் குறிக்கும் பாத்திமா ஸஹ்ரா (ஸலாமுன் அலைஹா) அவர்களின் பிறந்தநாளுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில், டிசம்பர் 27, 2023 புதன்கிழமை அன்று இமாம் கொமைனி (ரஹ்) அவர்களின் ஞாபகார்த்த ஹுசைனியாவில் குறிப்பிட்ட சந்திப்பு நிகழ்ந்தது.

ஒரு பெண்ணின் அடையாளம், அவளது மதிப்புகள், உரிமைகள், கடமைகள், சுதந்திரங்கள் மற்றும் வரம்புகள் ஆகியவை ஒரு முக்கிய மற்றும் மிக முக்கியமான விடயமாக கருதும் இமாம் அவர்கள், உலக பெண்கள் விடயங்களில் ஒருவருக்கொருவர் எதிர்க்கும் இரண்டு பொதுவான அணுகுமுறைகள் உள்ளன என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டினார் - ஒன்று மேற்கத்திய அணுகுமுறை. மற்றது இஸ்லாமிய அணுகுமுறை.

மேற்கத்திய நாகரிக மற்றும் கலாச்சார அமைப்பு பெரும்பாலும் பெண்களின் பிரச்சினைகளைச் சுற்றியுள்ள விவாதங்களைத் தவிர்க்கிறது என்று இமாம் காமனேயி விளக்கினார்.

மேற்கத்தியர்களுக்கு பெண்களைப் பற்றிய எந்த தர்க்கமும் இல்லாததால், அவர்கள் தங்கள் கருத்தை சர்ச்சைகள் மூலமாகவும், ரவுடித்தனத்தின் மூலமாகவும், அரசியல் மற்றும் அரசியல் அல்லாத பிரமுகர்களுக்கு பணம் கொடுத்து தங்களுக்கு வேண்டியதைச் சொல்ல முயற்சிக்கிறார்கள். இதற்காக அவர்கள் பெண்களுடன் தொடர்புடைய சர்வதேச மையங்களில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமும். கலை, இலக்கியம் மற்றும் சைபர்ஸ்பேஸை கருவிகளாகப் பயன்படுத்துவதன் மூலமும் அடைந்துகொள்ள முயற்சிக்கிறார்கள்.

மேற்குலகின் தார்மீக ஊழல் பற்றிய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் பயங்கரமானதாக இருப்பதைக் சுட்டிக்காட்டிய இஸ்லாமியப் புரட்சித் தலைவர் பெண்களிடம் மேற்குலகின் நடத்தை பற்றி ஒரு கேள்வியை எழுப்பினார்: "குடும்பங்களை அழிக்கும் ஒவ்வொரு விடயமும் மேற்கத்திய நாடுகளில் தினசரி அதிக வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவது ஏன்? அதேசமயம், இதற்கு மாறாக, (மேற்குலகில்) ஹிஜாப் அணிந்திருக்கும் பெண்களைத் தாக்கும் குற்றவாளிகளுக்கு எதிராக எந்தக் கண்டனமோ அல்லது கடுமையான நடவடிக்கையோ எடுக்கப்படுவதை நாங்கள் காணவில்லை ஏன்?"

பெண்களின் பிரச்சினையில் இஸ்லாத்தின் அணுகுமுறையானது தர்க்கம் மற்றும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது என்றும் மேற்கத்திய அணுகுமுறைக்கு நேர் எதிரானது என்றும் இமாம் காமனேயி வலியுறுத்தினார்.

பெண்கள் என்ற விடயம் இஸ்லாத்தின் பலங்களில் ஒன்றாகும் என்று கூறுவதால் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டியதில்லை என்று கருதிவிடக்கூடாது என்பதை அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஒரு நபரின் கண்ணியம் மற்றும் மதிப்புகள் தொடர்பான பாலின சமத்துவத்தை இஸ்லாத்தின் வலுவான பகுத்தறிவின் கூறுகளில் ஒன்றாக கருதும் இமாமவர்கள் "மனித விழுமியங்கள் மற்றும் ஆன்மீக உயர்வுகளைப் பொறுத்தவரை, எந்த பாலினமும் மற்றொன்றை விட உயர்வாகக் கருதப்படுவதில்லை," என்று குறிப்பிட்டார்.

இது தவிர, "ஆன்மிகத் துறைகளில், இறைவன் குர்ஆனில் சில சமயங்களில் ஆண்களை விட பெண்களை விரும்புகின்றான், மேலும் பிர்அவுனின் மனைவி [ஆசியா] மற்றும் [ஈஸா] (அலை) அவர்களின் தாய் மரியம் (அலை) போன்ற பெண்களை அனைத்து விசுவாசிகளுக்கும் முன்மாதிரியாக அறிமுகப்படுத்துகின்றான்.

சந்திப்பின் போது, இமாம் காமனேயி அவர்கள் சமூக விடயங்களில் இருப்பது மற்றும் சமூகப் பொறுப்புகளை மேற்கொள்வது ஆகியவை ஆண்களும் பெண்களும் சமமாக செயலில் பங்கு வகிக்கக்கூடிய சில துறைகளாகும். "இமாம் கொமைனி (ரஹ்) அவர்களின் கூற்றுப்படி, அரசியலிலும் நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளிலும் ஈடுபடுவது பெண்களின் உரிமையும் கடமையும் ஆகும் என்று குறிப்பிட்டார். மேலும், சில ஹதீஸ்களின்படி, சமூக விவகாரங்களைக் கையாள்வது அனைவருக்கும் கடமையாகும், மேலும் காஸாவில் நடக்கும் தற்போதைய பிரச்சினை போன்ற முஸ்லிம்களின் விவகாரங்களில் கவனம் செலுத்துவதும் இதில் அடங்கும்", என்றார்.

குடும்பக் கடமைகளை பொறுத்தவரை ஆண்களும் பெண்களும் தங்கள் உடல் மற்றும் மன திறன்களுக்கு ஏற்ப வெவ்வேறு கடமைகளைக் கொண்ட ஒரு பகுதி என்று கருதும் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர். "இதன் அடிப்படையில், சிலர் கூறும் 'பாலின சமத்துவம்' என்ற முழக்கம் தவறானது என்றும் 'பாலின நீதி' என்பதே சரியானது," என்ற உண்மையை தெளிவுபடுத்தினார்.

ஒரு பெண்ணின் குழந்தைகளை வளர்ப்பது போன்ற சிறப்புக் கடமைகள் ஒரு பெண்ணின் மன, உடல் மற்றும் உணர்ச்சி வடிவத்திற்கு ஏற்ப இருப்பதாக வலியுறுத்திய இமாம் காமனேயி "குடும்பத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடமைகள் வேறுபட்டாலும், புனித குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்களுக்கு இருக்கும் குடும்ப உரிமைகள் சமமானதாகும்," என்றார்.

இந்த பாத்திரம் வாழ்க்கை மற்றும் மனித இனத்தின் தொடர்ச்சிக்கு உத்தரவாதம் அளிப்பதால், மனித படைப்பில் ஒரு தாயின் பங்கு சிறந்த மற்றும் மிக முக்கியமான பங்காக அவர் கருதும் இமாம் காமனேயி வீட்டு வேலைகள் பற்றிய பிரச்சினையையும் குறிப்பிட்டார், "வீட்டு வேலை ஒரு பெண்ணின் கடமை என்ற கருத்து முற்றிலும் தவறானது மற்றும் ஒரு குடும்பத்தில் உள்ள பணிகள் இரு தரப்பிலிருந்தும் பரஸ்பர புரிதலுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்," என்றார்.

குடும்பத்தில் நடக்கும் சில வன்முறைகள், உடல் ரீதியான துஷ்பிரயோகம் போன்றவற்றைச் சமாளிப்பதற்கான வழி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற வீட்டுச் சூழலை உருவாக்கும் ஆண்களுக்குக் கடுமையான தண்டனைகளைக் கொண்ட சட்டங்களை இயற்றுவதே என்று இமாம் கமேனி அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானியப் பெண்கள் பல்வேறு துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றம், புரட்சிக்கு முந்தைய காலத்தை விட பத்து மடங்கு அதிகம் என்று குறிப்பிட்ட இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் "நாட்டை இன்னும் முழுமையாக இஸ்லாமியமாக்க முடியவில்லை - நாட்டில் ஒரு பகுதி மட்டுமே இஸ்லாமியம் - அதில் தான் இந்த சாதனைகள் அடையப்பட்டுள்ளன, இஸ்லாம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், இந்த சாதனைகள் பல மடங்கு அதிகரிக்கும்," என்றார்.

அமைச்சர் பதவிகள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகள் போன்ற பதவிகளில் சமூக மற்றும் அரசியல் பொறுப்புகளை ஒப்படைப்பதற்கான ஒரே அளவுகோல் தகுதி மட்டுமே என்று இமாம் கமேனி கூறினார்.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை சுட்டிக்காட்டிய தலைவர், இத்துறையில் பெண்கள் தங்கள் வீட்டுச் சூழலிலும் சமூகத்திலும் ஆற்றும் பங்கு முக்கியமானது என்பதை வலியுறுத்தினார்.

https://english.khamenei.ir/news/10407/West-is-illogical-on-the-issue-of-women-and-flees-from-answering

No comments:

Post a Comment