Tuesday, June 7, 2022

இமாம் காமனெய் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கிய அறிவுரை

 Advice given by Imam Khamanei to the people's representatives

Religious democracy is a new idea that has provoked the animosity of world powers


இஸ்லாமியப் புரட்சியின் தலைவரான இமாம் காமனெய், மதத்தின் அடிப்படையிலான ஜனநாயகம் என்பது இஸ்லாமியப் புரட்சியால் உலக அரசியல் இலக்கியங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய யோசனை என்றும் து உலகின் வல்லரசு நாடுகளின் பகைமையையும், குரோதத்தையும் தூண்டும் ஒரு யோசனையாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் ஈரானிய நாடாளுமன்றத்தின் இஸ்லாமிய ஆலோசனைச் சபையின் சபாநாயகர் மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே புரட்சியின் தலைவர் இமாம் காமனெய்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இஸ்லாமியப் புரட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட மதத்தின் அடிப்படையிலான ஜனநாயகம் ஆதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலை சீர்குலைத்துள்ளது என்றும் வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஈரான் இஸ்லாமியக் குடியரசினால், "ஆதிக்கவாதிகள்" மற்றும் "ஆதிக்கம் செலுத்தபடுபவர்கள்" என்ற இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட முறையை பெரும்பாலும் மாற்ற முடிந்தது என்றார்.

"மத ஜனநாயகம் என்ற இந்த சொல், இந்த உண்மை மற்றும் இந்த நிகழ்வு உலகின் வல்லரசுகளின் பகையையும் விரோதத்தையும் தூண்டியுள்ளது" இஸ்லாமியக் குடியரசு மீதும் அது நிறுவியுள்ள  ஜனநாயகத்தின் மீதுமான உலகளாவிய சக்திகளின் பகைமைக்கான காரணம் அதுவே என்று இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் தெளிவுபடுத்தினார்.

(சதாமினால் திணிக்கப்பட்ட போரில்) கொரம்ஷாஹ்ரின் விடுதலையின் ஆண்டு விழாவைப் பற்றி பேசுகையில், இஸ்லாமியப் புரட்சியின் தலைவர், இந்த நிகழ்வை ஒரு நகரத்தை மீண்டும் கைப்பற்றுவதை விட மிக பெறுமதியான ஒன்று என்றும் "கொரம்ஷாஹ்ரின் விடுதலை உண்மையில் ஒரு கசப்பான சூழ்நிலையை இனிமையானதாக மாற்றியது, இது இஸ்லாமிய வீரர்களுக்கு சாதகமாக அமைந்தது என்றும் கொரம்ஷாஹ்ரை விடுவிப்பதற்கு உதவிய காரணிகள், மக்களின் ஜிஹாத், சுய தியாகம், தளரா உறுதி, முன்முயற்சி, இலக்குகள் மற்றும் இலட்சியங்களை நோக்கிய தூர பார்வை மற்றும் மிக முக்கியமாக, நேர்மை மற்றும் இறை நம்பிக்கை என்பதை நாம் மறந்துவிடலாகாது” என்றார்.

இந்த காரணிகள் எல்லா விவகாரங்களிலும் எல்லா நேரங்களிலும் வெற்றிக்கு ஆதாரமாக இருக்கின்றன.  "இந்த விடுதலைக் காரணிகள் குர்ஆனில் இறைவனின் மாற்ற முடியாத வாக்குறுதியை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் இவற்றில் உறுதியாக உள்ள அனைத்து நபர்களும் வெற்றி பெறுவார்கள், ஏனெனில் இந்த நபர்களின் முயற்சிகள் தொடர்பாக இறைவன் பாராமுகமாக இருக்கமாட்டான்" என்று அவர் வலியுறுத்தினார்.

சுய தியாகம் என்பது கீழ்மட்ட ஆசைகளின் பிடியில் சிக்கிக் கொள்ள மறுப்பது. இந்த கீழ்மட்ட ஆசைகளுக்கு மக்கள் அடிபணியும்போது தான் பல தனிநபர்கள் மற்றும் சமூகங்களில் பிரச்சினைகள் தொடங்குகின்றன.

இஸ்லாமிய ஆலோசனைப் பேரவை ஒரு முக்கிய பதவியை வகிக்கும் நிர்வாகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும் என்று இமாம் காமனெய் கூறினார். “வெவ்வேறு நகரங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் - குறைந்த மக்கள்தொகை கொண்ட நகரங்கள் கூட - நாடாளுமன்றத்தை நோக்கிய இத்தகைய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் நாட்டை நிர்வகிப்பதில் உள்ள சிரமம் மற்றும் சிக்கலான தன்மையை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். ஈரானின் புவியியல் சூழ்நிலையுடன் ஒரு நாட்டை நிர்வகிப்பது ஒரு முக்கியமான பணியாகும். இன்றைய உலகில் உள்ள விசேஷ சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் , இயற்கையாகவே இது கடினமான பணியாகும்.

"நிச்சயமாக இன்றைய சூழ்நிலையில், நிர்வாகம் செய்வது என்பது அனைத்து நாடுகளுக்கும் கடினமான ஒன்றாக மாறியுள்ளது.. வல்லாதிக்க சக்திகளுக்கிடையேயான விரோதப் போக்குகள், போட்டிகள், அணுசக்தி வல்லமைக் கொண்ட நாடுகளுக்கு இடையே அச்சுறுத்தல் பரிமாற்றம், அதிகரித்து வரும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஐரோப்பாவில் போர் சூழல்  கவலையளிப்பதாக உள்ளது. இது உலகின் மிகவும் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும், மேலும் ஒரு புதிய தொற்று நோயின் பரவல் மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்ற  அனைத்து காரணிகளும் உலகில் இந்த சிறப்பு சூழ்நிலைகளை கொண்டு வந்துள்ளன. இத்தகைய நிலைமைகளின் கீழ், நிர்வாகம் செய்வதில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. நிலைமையை சமாளிப்பது பல நாடுகளுக்கு கடினமாகவும் மாறியுள்ளது.

ஈரானைப் பொறுத்தமட்டில், எல்லா நாடுகளுக்கும் இருக்கும் இந்தப் பிரச்சனை எமக்கும் உண்டு; அதன் காரணமாக ஒரு புதிய மாதிரியை முன்வைக்கிறது என்பதால் நமது நாடு பல்வேறு பகுதிகளில் ஆதிக்க சக்திகளுடன் தொடர்ச்சியான சவால் மற்றும் மோதலில் ஈடுபட்டுள்ளது, ஏனெனில் இது ஆதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலை சீர்குலைத்த ஒரு மத அடிப்படையிலான ஜனநாயகமாக இருப்பதே அதற்கு காரணம்.

இஸ்லாமியக் குடியரசு குறிப்பிட்ட அனைத்து விரோதங்களையும் பகைமைகளையும் தாங்கி தொடர்ந்து முன்னேறி வருகிறது என்பதை வலியுறுத்திய தலைவர், “மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.க்கள், நிர்வாகம், நீதித்துறை கிளைகள் மற்றும் அனைத்து அரசாங்க அமைப்புகளும் தாங்கள் எவ்வளவு மகத்தான நிர்வாக பொறுப்பை சுமந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த பதவியின் மகத்துவத்திற்கு ஏற்ப செயல் திட்டங்களை  கண்காணிப்பதில் அவர்கள் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். திறன்கள் மற்றும் குறைபாடுகளை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் எந்த தவறும் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும், ஏனென்றால் எதிரிகள் அவர்களது சொந்த திறன்களை நம்புவதை விட நாம் விடக்கூடிய தவறுகளில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

"புரட்சியின் இலட்சியங்களை நோக்கி நகர்வது நாட்டிற்கு நன்மை பயக்கும் மற்றும் நாடு அனுபவிக்கும் வலிகளுக்கு இது ஒரு தீர்வாக இருக்கும்."

"புரட்சிக்குப் பிந்திய முதல் ஆண்டுகளில், சிலர் மிகவும் உற்சாகமாகவும், மிகவும் புரட்சிகரமாகவும் இருந்தனர், ஆனால் இந்தப் பாதையில் தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கு அவர்களுக்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லை என்று தெரிகிறது. எனவே, பாராளுமன்றம் ஒரு தனிப்பட்ட மற்றும் கூட்டு மட்டத்தில் புரட்சிகரமாக இருக்க வேண்டும், மேலும் இது புரட்சிகரமாக மாறுவதை விட அதில் (புரட்சியில்) நிலைத்திருப்பது மிகவும் கடினமான ஒன்று.."

இமாம் காமனெய், புரட்சிகர எம்.பி.க்களின் பண்புகளை விவரிக்கையில், “முதல் பண்பு எளிமையான வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பதும், உலக செல்வங்களின்பால் வசப்பட மறுப்பதும், உயர்குடி வாழ்க்கை முறையைத் துறப்பது ஆகும். மேலும் எம்.பி.க்களின் வாழ்க்கை வசதி அவர்கள் பாராளுமன்றத்திற்குள் நுழையும் முன்பு இருந்ததை விட வித்தியாசமாக இருக்கக்கூடாது.

மக்களுடன் தொடர்பில் இருப்பது என்பது மக்களைச் சந்திப்பது மட்டுமல்லாமல், அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதுமாகும். மேலும் அவர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முடியாத போது, அதற்கான நான் முன்னர் தெளிவுபடுத்திய குறிப்பிட்ட போராட்டத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.."

"ஒரு புரட்சிகர மக்கள் பிரதிநிதியின் மற்றொரு குணாதிசயம் என்னவென்றால், நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகும்.  மற்றது பாகுபாடு மற்றும் ஊழல் போன்றவற்றை கவனமாகத் தவிர்ப்பதும், தடுப்பதும் ஆகும், ஏனையோரின் ஊழல்களில் மிகவும் அவதானமாக இருப்பதோடு இதுபோன்ற சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளும் போது குறிப்பிட்ட தீய செயலில் இருந்து தம்மையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்."

ஏனைய கிளைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த நிறுவனங்களுடன் உண்மையான ஒத்துழைப்பு இருக்கவேண்டியது ஒரு புரட்சிகர பாராளுமன்றத்தின் தேவை என குறிப்பிட்ட அவர் சுயநலன்களை மற்றும் உள் மோதலைத் தவிர்ப்பது கட்டாயம் என்றும் குறிப்பிட்டார்.ஒரு சட்டத்தை இயற்றும்போது, அதற்கு நியாயமான ஆட்சேபனை இருந்தால், அந்த ஆட்சேபனையை ஏற்க வேண்டும். மறுபுறம், இதற்கு மாற்றமான கருத்து மற்றும் எதிர்ப்பு உங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்றுவதைத் தடுக்கக்கூடாது.

அரசியலமைப்பு மற்றும் அதன் ஆணைகளுக்கு முழுமையான அர்ப்பணிப்பு ஒரு புரட்சிகர எம்.பி.யின் மற்றொரு பண்பாகும் என்று அவர் வலியுறுத்தினார். "நிச்சயமாக, புரட்சிகரமாக இருப்பதற்கான அறிகுறி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசப்படும், காரசாரமான, கசப்பான பேச்சு அல்ல" என்றும் அவர் கூறினார்,

நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு ஊடகங்கள் மூலம் விளக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், “தவறான விளக்கங்களை வழங்குவது கொந்தளிப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பை உருவாக்கி விடுகிறது. அது உங்களை அங்கீகரிப்பதற்கு பதிலாக உங்கள் ஊக்கத்தை குறைத்துவிடும் என்றும் குறிப்பிட்டார்.

https://english.khamenei.ir/news/9002/Religious-democracy-is-a-new-idea-that-has-provoked-the-animosity

No comments:

Post a Comment