Wednesday, January 19, 2022

எதிர்கால சக்தியாக முஸ்லிம் உலகம் மிளிரும்

 Iran Redefining Regional Geopolitics

Muslim world will be future power

இஸ்லாமியப் புரட்சியின் தலைவரான ஆயதுல்லா செய்யத் அலி கமேனியின் உயர் இராணுவ ஆலோசகர், மேஜர் ஜெனரல் யஹ்யா ரஹீம் சஃபாவி ஈரானும் எதிர்ப்பு முன்னணியும் பிராந்தியத்தில் புவிசார் அரசியலை மறுவடிவமைப்பதாகக் கூறி, தற்போதைய மேற்குலக மேலாதிக்க மற்றும் கிழக்கு சக்திகளுடன் போட்டியிடக்கூடிய எதிர்கால சக்தியாக முஸ்லிம் உலகம் மிளிரும் என்று குறிப்பிட்டார்.

கடந்த வாரம் ஈரான் மற்றும் அண்டை நாடுகளுக்கான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மேஜர் ஜெனரல் யஹ்யா ரஹீம் சஃபாவி, தற்போதைய நூற்றாண்டு முஸ்லிம் உலகம் ஒரு புதிய சக்தி துருவமாக மாறும் எனவும் கலாச்சார, நாகரிக, பொருளாதார மற்றும் மக்கள்தொகை இயல்பைக் கொண்டு ஆணவ சக்திகளுக்கு பெரும் எதிர்ப்பு முன்னணியாக அமையும் என்றார்.

புவிசார் அரசியல் என்பது "இஸ்லாமிய உம்மாவின் சமூக, கலாச்சார, மத, பொருளாதார மற்றும் இராணுவ கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகளை மாற்றுவதன் மூலம் விடுதலை மற்றும் சுதந்திரத்தைப் பெறுவதற்கும், மேற்கு மற்றும் கிழக்கின் ஆதிக்க சக்திகளுக்குப் போட்டியாக பல்வேறு தேசிய, பிராந்திய மற்றும் உலக அளவில், இஸ்லாமிய சக்தியை உருவாக்குவது ஆகும்,” என்று ரஹீம் சஃபாவி கூறினார்.

"தீமை எதிர்ப்பு முன்னணியின் இந்தப் புதிய புவிசார் அரசியலில் முன்னிலை வகிப்பவர்கள் இஸ்லாமியப் புரட்சிப் படைகள், இஸ்லாமிய எழுச்சி இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய குடியரசின் மறைந்த நிறுவனருமான இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் அடிச்சுவட்டில் தீமை எதிர்ப்பு முன்னணியை வழிநடத்தும் இஸ்லாமியப் புரட்சியின் தலைவரும் ஆகும்" என்று அவர் மேலும் கூறினார்.

1979 இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து, பாலஸ்தீனம் மற்றும் சியோனிச ஆட்சியின் அத்துமீறல் மற்றும் ஆக்கிரமிப்பு, இஸ்லாமிய நாடுகளில் ஊழல்மிகு மற்றும் அடக்குமுறை அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் தீமை எதிர்ப்பு முன்னணி கவனம் செலுத்தியது என்றும் ரஹீம் சஃபாவி குறிப்பிட்டார்.

1980 களில் ஈரானுக்கு எதிராக முன்னாள் ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் ஹுசைனினால் திணிக்கப்பட்ட போருக்குப் பிறகு தீமை எதிர்ப்பு எனும் கருத்தை முன்வைத்து நிறுவனமயமாக்குவதில் ஈரானின் பங்கையும் அவர் வலியுறுத்தினார்.

லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இயக்கம், பாலஸ்தீனிய குழுக்கள், ஈராக் மற்றும் சிரியாவை ஒரு புதிய தீமை எதிர்ப்பு குழுவின் உறுப்பினர்களாக தளபதி மேற்கோள் காட்டினார், "யெமனில் அன்சாருல்லா இயக்கத்தின் தோற்றத்துடன், இந்த கூட்டணிக்கு இன்று மற்றொரு அதிகாரப்பூர்வ உறுப்பினர் இணைந்து உள்ளது".

IRGC குத்ஸ் படையை "போராட்டத்தின் இயந்திரம் என்றும் அதன் உந்துசக்தி" என்றும் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் முன்னாள் தலைமைத் தளபதியான ரஹீம் சஃபாவி, பாராட்டினார்.

உண்மையில், பிராந்திய அரசியலில் அதிகாரத்தை உருவாக்கும் ஈரானின் செயல்முறையே இஸ்லாமிய குடியரசின் மீது அமெரிக்காவை கோபமடைய செய்துள்ளது. குறிப்பிட்ட இந்த சக்தி மேற்கு ஆசியாவின் முதல் அடுக்கில் இஸ்லாமியப் புரட்சித் தலைவரின் சாதுரியமான மற்றும் தைரியமான தலைமைத்துவத்துடனும், தியாகி ஜெனரல் காசிம் சுலைமானியின் தலைமையில் குத்ஸ் படையின் பங்குடனும் உருவாக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்கும் பகிரப்பட்ட இலக்கை அடிப்படையாகக் கொண்டு மேற்கு ஆசியாவில் இஸ்லாமிய குடியரசின் தலைமையில் புதிய ஏற்பாடு அல்லது ஒழுங்கின் வருகைக்கு இணையாக, வெனிசுலா, கியூபா மற்றும் பெரு உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளும் தங்கள் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டனஎன்று அவர் மேலும் கூறினார்.

அமேரிக்கா பிராந்தியத்தை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படும்

ஜெனரல் சுலைமானியின் தியாகத்திற்குப் பிறகு, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து தமக்கு ஆதரவு வழங்கிய நண்பர்களையும் உளவாளிகளையும் கூட அழைத்துச் செல்ல முடியாத அளவுக்கு அவமானகரமான முறையில் தப்பி ஓடியதாக ஈரானின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் முஹம்மது பாக்கரி கூறியுள்ளார்.

ஜெனரல் பாக்கரி மேலும் கூறுகையில், அமெரிக்கா பிராந்தியத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும், மேலும் ஜெனரல் சுலைமானியின் தடயம் எங்கிருந்தாலும், சியோனிஸ்டுகள் மற்றும் அமெரிக்காவின் கால்கள் நடுங்குகின்றன.

ஜெனரல் சுலைமானியின் துணிச்சலான பாதையை இறுதிவரை தொடர்வதாகவும், இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் இமாம் கொமெய்னி (ரஹ்) மற்றும் தியாகிகளின் கொள்கைகளை கடைபிடிப்பதாகவும் பாக்கரி சபதம் செய்தார்.


காசிம் சுலைமானி மற்றும் ஈராக் உயர்மட்ட தளபதி அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோரை தனி நபர்களாக பார்க்கக்கூடாது, அவர்கள் ஒரு சிந்தனை பள்ளியாகவும் ஒரு வழிகாட்டியாகவும் பார்க்கப்பட வேண்டும் என்று ஜெனரல் சுலைமானி பற்றி ஈரான் தலைவர் கூறியதையும் அவர் எதிரொலித்தார்.

ஜெனரல் சுலைமானி ஒரு அனுபவமிக்க இராஜதந்திரி அதே நேரத்தில் போர்க்களத்தில் எதிரிகளை மிரளவைத்த துணிச்சலான தளபதியுமாகும் என்று பாக்கரி மேலும் விவரித்தார்,

ஈரானின் உலகப் புகழ்பெற்ற பயங்கரவாத எதிர்ப்புத் தளபதி ஜெனரல் சுலைமானி, ஈராக்கின் மக்கள் அணிதிரட்டல் பிரிவுகளின் (PMU) துணைத் தலைவரான அபு மஹ்தி அல்-முஹந்திஸுடன் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் ஜனவரி 3, 2020 இல் ஆளில்லா விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

பிராந்தியத்தில், குறிப்பாக ஈராக் மற்றும் சிரியாவில் தாயேஷ் பயங்கரவாதக் குழுவை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்ததால், இரு தளபதிகளும் பிராந்தியத்தில் மிகவும் பிரபலமாக இருந்தனர்.

https://kayhan.ir/en/news/98566/iran-redefining-regional-geopolitics

No comments:

Post a Comment