Afghan refugees cared with a sense of brotherhood in Iran
கடந்த நான்கு தசாப்தங்களாக, ஈரானிய மக்கள் அகதிகளுக்கு விருந்தோம்பல் மற்றும் தாராள மனப்பான்மையைக் காட்டியுள்ளனர், ஏனெனில் ஈரானிய நாடு இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ள 8 வது பெரிய
நாடு.
“நாங்கள் ஒன்றாக குணமடைகிறோம், கற்றுக்கொள்கிறோம், பிரகாசிக்கிறோம்” (Together we heal, learn and shine) என்பது
உலக அகதிகள் தினமான 2021 இன் கருப்பொருளாகும், இது
உலகெங்கிலும் உள்ள அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களை இலக்காகக் கொண்டது,
உலகில், வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சுமார் 82 மில்லியன் மக்கள் உள்ளனர், இவர்களில் 26 மில்லியன் மக்கள் தங்களுடையதல்லாத வேறு நாடுகளிலும் 74 சதவீத அகதிகள் வளரும் நாடுகளிலும் அடைக்கலம் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டுகளில், ஈரானில் மேலும் மேலும் அகதிகள் வந்து சேர்ந்தனர், எவ்வித ஆவணமும் அற்றோர், பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அனைவரும் தேசிய அமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளனர், இஸ்லாமிய குடியரசு ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகளை விருந்தாளிகளை போல் கவனித்து வருகிறது - அவர்களில் பெரும்பாலோர் ஆப்கானியர்கள்.
தொற்றுநோயின்
அபாய நிலையிலும் அனைத்து அகதிகளும்,
ஆவணப்படுத்தப்படாதவர்களும் கூட,
ஈரானிய நாட்டவர்களைப் போலவே இலவச ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் COVID-19 தொடர்பான இலவச சோதனை, சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் அனுமதிப்பதன் மூலம்
பயனடைந்தனர். கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி 75 வயதுக்கு மேற்பட்ட அனைத்து அகதிகளுக்கும்
எந்தக்கட்டுப்பாட்டும் இன்றி வழங்கப்படுகிறது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 3 மில்லியனுக்கும் அதிகமான ஆப்கானியர்கள் ஈரானில் வாழ்கின்றனர் - அவர்களில் சுமார் 780,000 பேர் அகதிகள், 2 மில்லியனுக்கும் அதிகமானோர் எவ்வித ஆவணத்தையும் கொண்டிராதோர் மற்றும் 600,000 ஆப்கானிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஈரானிய விசாக்களுடன் உள்நுழைந்தவர்கள் ஆகும்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானிய அரசாங்கமும் மக்களும் ஆப்கானியர்களுக்கு நம்பமுடியாத
படி விருந்தோம்பல் மற்றும் தாராள மனப்பான்மையைக் காட்டி வருகின்றனர். இது
போன்று இடம்பெறுவதுதை உலகில் அகதிகளைக் கொண்டுள்ள நாடுகளில் மிக சொற்ப நாடுகளிலேயே காணமுடியும்.
கடந்த
ஆண்டில்,
COVID-19 தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை வெகுவாகப்
பாதித்துள்ளது, இதனால் மில்லியன் கணக்கான இறப்புகள், பொருளாதார மந்தநிலை, கூட்டங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் பிற கடுமையான
வரம்புகள் இடப்பட்டன. இதற்கு அகதிகளும் விதிவிலக்கல்ல, அதனால்
ஏற்பட்ட விளைவுகளை அவர்களும் தாங்கினர்.
கோவிட் வைரஸ் பிரச்சினைக்கு முகம்கொடுத்து வரும் ஈரானும் அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டது. இந்த சமயத்தில், சர்வதேச உதவியை உரிய நேரத்தில் பெறுவது ஒரு பெரிய சவாலாகவும் இருந்தது, மேலும் மருத்துவம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இறக்குமதிக்கும் ஒரு பெரும் தடையாக இருந்தது. எனவே, ஈரானில் வாழும் ஆப்கன் அகதிகள் குறைந்துவரும் வாய்ப்புகளின் காரணத்தினாலும் மற்றும் ஆப்கானிஸ்தானில் இன்னும் தொடரும் நிச்சயமற்ற நிலை காரணமாகவும் சில கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
இருப்பினும், தொற்றுநோய்
தொடர்பில்,
அனைத்து அகதிகளும், ஆவணங்கள் எதையும் வைத்திராதோர் கூட, ஈரானிய நாட்டவர்களைப் போலவே இலவச ஆரம்ப சுகாதார சேவைகள்
மற்றும் இலவச COVID-19 தொடர்பான பரிசோதனை, சிகிச்சை மற்றும் மருத்துவமனை சேவைகளைப் பெற்று பயனடைந்தனர்.
ஈரான் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை 75 வயதிற்கு மேற்பட்ட அகதிகளுக்கும் தாராளமாகக் வழங்கியது. ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டி (ஐ.ஆர்.சி.எஸ்) ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு தடுப்பூசி போட 2 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்குமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை (ஐ.சி.ஆர்.சி) கேட்டுக் கொண்டது. எனினும், இது தொடர்பாக இதுவரை சர்வதேச சமூகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாம்
அனைவரும் ஒருவருக்கொருவர் இணைந்திருக்கிறோம் என்பதை COVID-19 நமக்குக் உணர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, உலகளாவிய
ரீதியில்,
அகதிகள், புகலிடம் கோருவோர் உள்ளிட்ட அனைவரையும் சுகாதாரக் கொள்கைகளில் சேர்க்காவிட்டால்
சமூகத்தில் உள்ள - தடுப்புக்காவலில் உள்ளோர் உட்பட - அனைவரையும் இணைக்காவிட்டால் இந்த தொற்றுநோயை ஒழிக்க முடியாது.
கொரோனா
வைரஸுக்கு மத்தியில் ஆப்கானிய அகதிகள் இலவச சிகிச்சையைப் பெறுகின்றனர்.
ஈரான் அதன் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களின் உற்பத்தியை அதிகரித்தது, மேலும் சுயாதீன தொழில்முனைவோர் - அகதிகள் உள்ளிட்டவர்கள் - தேசிய COVID-19 ஒழிப்புக்கு ஏற்றவிதத்தில் - தங்களது பங்களிப்பு முயற்சிகளை மாற்றினர்.
எவ்வாறாயினும், கொரோனா
வைரஸ் பாரிய அளவில் குறைந்து வருவதற்கான எந்த அறிகுறியையும் காணவில்லை, மேலும்
அதிகரித்த பொருளாதாரத் தடையினது அழுத்தத்தின் மத்தியில், இப்போதுள்ள சமூக-பொருளாதார சூழலுடன், அகதிகள்
உட்பட வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அதிகரித்த எண்ணிக்கையினரின் நலனை கவனிக்க ஈரானுக்கு
கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது.
நாட்டில்
வாழும் அகதிகளை கவனிப்பதற்காக, சுகாதார காப்பீட்டு அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின்
அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு
ஒப்பந்தத்தின் ஏழாவது ஷரத்து மூலம், பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்களாக கருதப்படும் 120,000 அகதிகள் பயனடைவர்.
ஈரானில், யு.என்.எச்.சி.ஆர் (UNHCR) COVID-19 அவசரநிலைக்கு 16.2 மில்லியன் டாலர்களைக் கோரியுள்ளது, அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கான தீர்வுகள் என்ற மூலோபாய (SSAR) குடையின் கீழ் ஈரானுக்கு அதன் அகதிகளுக்கான
கொள்கைகளை பராமரிப்பதற்கும் 98.7 மில்லியன் டாலர் தேவை என்பதை
சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரானில்
உள்ள ஆப்கானிய அகதிகளுக்கு ஆதரவு
15 முதல் 60 வயதிற்குட்பட்ட 970,000 வெளிநாட்டினரில் (ஆண்கள் மற்றும் பெண்கள்), சுமார் 36,000 பேர் நாட்டில் சமூக காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளன என்று சமூகப் பாதுகாப்பு அமைப்பின் வெளிநாட்டினருக்கான துறைத் தலைவர் அஹ்மத் ரீஸா கஸாயி 2018 ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.
ஈரான் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் கல்விக்காக சுமார் 20 டிரில்லியன் ரியால்களை செலவிடுகிறது. அதாவது 477 மில்லியன் டாலர்களை என்று கல்வி அமைச்சின் சர்வதேச விவகாரத் துறைத் தலைவர் குலாம்ரேசா கரீமி மார்ச் மாதம் தெரிவித்தார்.474,000 ஆப்கானிய பிள்ளைகள் ஈரானில் இலவசமாகப் கல்வியைப் பெறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரான், உலகளவில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான அகதிகளை நீண்டகாலமாக பராமரித்து வரும் நாடுகளில்
ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில்
அகதிகள்
உலகில்
ஒவ்வொரு நிமிடமும் 20 பேர் போர், துன்புறுத்தல் அல்லது பயங்கரவாதம் போன்றவற்றில் இருந்து
தப்பிப் பிழைப்பதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு தமது நாட்டையும் துறக்கின்றனர்.
இவர்களில் பலவந்தமாக நாட்டைவிட்டு துரத்தப்பட்டோர், அகதிகள், புகலிடம் கோருவோர், இடம்பெயர்ந்தவர்கள், நாடற்றோர் மற்றும் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாதவர்கள்
என பலர் அடங்குவர்.
உலகில்
மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களாகவே அகதிகள் உள்ளனர். 1951ல் இடம்பெற்ற அகதிகள் மாநாடும்
1967ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதன் நெறிமுறையும் அவர்களைப் பாதுகாக்க
உதவுகின்றன. இவையே
அகதிகளின் வாழ்க்கையின் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய ஒரே உலகளாவிய
சட்ட கருவிகள் ஆகும். அவற்றின்
விதிகள், அகதிகள் குறைந்தபட்சம், ஒரு குறிப்பிட்ட நாட்டில் அந்நாட்டவரினதும் மற்றும் அந்நாட்டில்
உள்ள வெளிநாட்டு பிரஜைகள் அனுபவிக்கும் அதே தரநிலைகளுக்கும் தகுதியானவர்கள் என்று அவை
குறிப்பிடுகின்றன.
1951 மாநாட்டில் அகதிகளுக்கான பல உரிமைகள்
குறிப்பிடப்பட்டு உள்ளன, மேலும்
அகதிகள் அடைக்கலம் புகுந்துள்ள நாடு மீதான கடமைகளையும் எடுத்துக்காட்டுகின்றன. 1951 மாநாட்டின் மூலக்கல்லானது
அகதிகளை பலவந்தமாக திருப்பியனுப்பக்கூடாது என்ற கொள்கையாகும். இந்த கொள்கையின்படி, ஓர்
அகதி அவன் அல்லது அவள் உயிருக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ கடுமையான அச்சுறுத்தல்களை
எதிர்கொள்ளும் நாட்டிற்கு திருப்பியப்பக்கூடாது. நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்து விளைவிக்கக்கூடியவர் என்று கருதப்படும் அகதிகள் அல்லது குறிப்பாக கடுமையான
குற்றத்திற்கு தண்டனை பெற்ற, சமூகத்திற்கு ஆபத்தாக கருதப்படுவோரால்
இந்த உரிமையைக் கோர கூறமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.tehrantimes.com/news/462166/Iranian-hospitality-for-refugees-impressive-despite-challenges
No comments:
Post a Comment