Sunday, August 16, 2020

எமிரேட்ஸ்-இஸ்ரேல் ஒப்பந்தம் முஸ்லிம்களின் 'முதுகில் குத்தும்' சதியாகும்

Iran: UAE-Israel deal a 'stab in the back' to Muslims


தெஹ்ரான் இந்த நடவடிக்கையை 'அபுதாபி மற்றும் டெல் அவிவ் ஆகியவற்றின் மூலோபாய முட்டாள்தனம், இது எதிர்ப்பை வலுப்படுத்தும்' செயல் என்று கூறுகிறது.

ஐக்கிய அரபு மற்றும் இஸ்ரேல் இடையே முழு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளது, இது அனைத்து முஸ்லிம்களுக்கும் முதுகில் குத்தும் செயல் என்று கூறுகிறது.

இந்த ஒப்பந்தம் "முஸ்லிம் உலகுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்" மற்றும் அதை மாற்றியமைக்க வேண்டும் என்று ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரின் ஆலோசகர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியான் கூறினார்.

"உறவுகளை இயல்பாக்குவதற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய அணுகுமுறை, அமைதியையும் பாதுகாப்பையும் ஒருபோது கொண்டுவராது, ஆனால் நடந்துகொண்டிருக்கும் சியோனிஸ்டுகளின் படுபாதக செயல்களுக்கு உதவுகிறது" என்று அவர் வெள்ளிக்கிழமை ட்வீட் செய்துள்ளார்.

ஈரான் வெளியுறவு அமைச்சக அதன் அறிக்கையில், இவ்விரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை இயல்பாக்குவது ஒரு ஆபத்தான, "வெட்கக்கேடான" நடவடிக்கை என்றும், வளைகுடா பிராந்தியத்தின் "அரசியல் சமன்பாடுகளில்" இஸ்ரேல் தலையிடும் நிலை ஏற்படுவது  தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை எச்சரித்தது.

"ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கமும் அதனுடன் இணைந்த பிற அரசாங்கங்களும் இந்த நடவடிக்கையின் அனைத்து பின் விளைவுகளுக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை "அபுதாபி மற்றும் டெல் அவிவ் ஆகியவற்றின் மூலோபாய முட்டாள்தனத்தின் செயலாகும், இது சந்தேகத்திற்கு இடமின்றி பிராந்தியத்தில் எதிர்ப்பு நிலையை வலுப்படுத்தும்" என்று அது மேலும் கூறியுள்ளது.


"பயங்கர குற்றமிழைக்கும் ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலிய ஆட்சியுடனான உறவுகளை இயல்பாக்குவதையும் அதன் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதையும் பாலஸ்தீனத்தின் ஒடுக்கப்பட்ட மக்களும் உலகின் அனைத்து சுதந்திர நாடுகளும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்."

முஸ்லிம் உலகின் முதுகில் குத்தல் 

அமெரிக்கா தரகு வேலை பார்த்த ஒப்பந்தத்தில், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இஸ்ரேல் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13, 2020) முழு அளவிலான  இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த ஒப்புக் கொண்டதாகவும், இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் தங்கள் எதிர்கால அரசிற்காக கோரிய ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை இணைப்பதற்கான திட்டங்களை தாமதப்படுத்தும் என்றும் அறிவித்தது.

பயங்கரவாத இஸ்ரேலுடன்  முழு இராஜதந்திர உறவுகளைக் ஒப்பந்தம் செய்த முதல் வளைகுடா அரபு நாடாகவும் - எகிப்து மற்றும் ஜோர்டானுக்கு அடுத்தபடியாக மூன்றாவது அரபு நாடாகவும் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளது. இதனைத் தொடர்ந்து சுற்றுலா, நேரடி விமான சேவைகள் மற்றும் பரஸ்பரம் தூதரகங்களை ஸ்தாபித்தல் போன்றவற்றுக்கான இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் வரும் வாரங்களில் தீர்மானிக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் ஒரு கூட்டு அறிக்கையில் அறிவித்துள்ளனர்.

ஈரான் வெளி உறவு அமைச்சின் அறிக்கை இந்த ஒப்பந்தத்தை "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாலஸ்தீனிய மக்கள் மற்றும் அனைத்து முஸ்லிம்களின் முதுகிலும் அநியாயமாக பாய்ச்சப்பட்ட கத்தி" என்று கூறியது.

இந்த ஒப்பந்தம் தேர்தல் ஒன்றை எதிபார்த்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு  ஆகியோருக்கு  ஒரு முக்கிய வெளியுறவுக் கொள்கை வெற்றியை வழங்கியது மற்றும் மாறிவரும் மத்திய கிழக்கைப் பிரதிபலித்தது மட்டுமல்லாமல் ஈரான் இஸ்லாமிய குடியரசின் உறுதியான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியது.

ஈரானின் சக்திவாய்ந்த புரட்சிகர காவல்படையின் முன்னாள் தலைவர் மொஹ்சென் ரெஸாய் தனது ட்விட்டரில் செய்தியில், கடந்த 10 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகம் தன்னை "இஸ்ரேலின் சொர்க்கமாக" உருவாக்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

"உள உறுதி கொண்ட எந்த முஸ்லிம் வீரர்களும் அரேபியர்களும் பாலஸ்தீனத்தை காட்டிக் கொடுக்கவில்லை, பின்னால் இருந்து பின்னால் இருந்து குத்துவது முதுகெலும்பற்றவர்கள் மட்டுமே," என்று அவர் கூறினார்.

பிராந்தியத்தில் "உளவு மற்றும் உளவுத்துறை வலையமைப்புகளை" உருவாக்க இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாட் உடன் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்து செயல்படுவதாக ரெஸாய் குற்றம் சாட்டினார்.

பாலஸ்தீனிய நிலங்களை இஸ்ரேல் இணைப்பதில் புதிதாக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் "இயக்கத்தை மாற்றும்" என்று ஐக்கிய அரபு எமிரேட் அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் இது ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கும் என்று வலியுறுத்தினர்.

"எதுவும் கல்லில் எழுதப்பட்டதாக நான் நினைக்கவில்லை, சட்டத்தில் எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் கூட காலத்தின் சோதனையை அவசியம் சந்திக்க வேண்டி இருக்கும். நாங்கள் அவர்களுக்காக ஒரு கதவைத் திறக்கிறோம், இந்த நடவடிக்கையின் நன்மைகளையும் பிராந்திய நாடுகளில் பின்பற்றக்கூடிய பல நடவடிக்கைகளையும் இஸ்ரேலியர்கள் காண்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரி உமர் கோபாஷ் கூறினார்.

'கண்ணாடி மாளிகைகள்'

எமிரேட்ஸின் நெருங்கிய நட்பு நாடான சவுதி அரேபியாவைப் பற்றிய ஒரு மறைமுகமான குறிப்பில், ஈரானின் வெளியுறவு அமைச்சகம் பாலஸ்தீனம் மற்றும் யேமன் மக்களுக்கு "தங்கள் கண்ணாடி மாளிகைகளில் இருந்து தீங்கிழைக்காதீர்கள்" என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியது.

ஈரானின் வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஜரீஃப் கடந்த வாரம் தனது எமிரேட்ஸ் பிரதிநிதியுடன் அரிய பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர், அவர்களது உறவுகளை சரிசெய்வதற்கான நம்பிக்கையை எழுப்பிய பின்னர் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் 2016 ஜனவரியில், சவூதி அரேபியாவிற்கும் இஸ்லாமிய குடியரசிற்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்திருந்த வேளையில், ஈரானுடனான தனது உறவை குறைத்துக் கொண்டது.

கடந்த ஆண்டு தெஹ்ரானுக்கும் ரியாத்துக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்தது, பாரசீக வளைகுடாவில் டேங்கர்கள் மீது இடம்பெற்ற தொடர்ச்சியான மர்மமான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் மீது வாஷிங்டன் குற்றம் சாட்டியது. குற்றச்சாட்டுகளை தெஹ்ரான் திட்டவட்டமாக மறுத்தது.

பிராந்தியத்தின் இரண்டு முன்னணி சக்திகளான சவுதி அரேபியா மற்றும் ஈரான், சிரியா மற்றும் யேமன் உள்ளிட்ட பல மோதல்களின்போது எதிரெதிர் பக்கங்களில் நின்றன.

ஆட்டத்தை மாற்றியமைப்பவன்?

எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா நாடுகள் உட்பட இஸ்ரேலுக்கும் வாஷிங்டனின் மத்திய கிழக்கு நட்பு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஈரானைக் கட்டுப்படுத்துவதற்கான பிராந்திய மூலோபாயத்தின் மையமாக உள்ளது.

ஐரோப்பிய வெளியுறவு கவுன்சிலின் ஆய்வாளர் எல்லி ஜெரன்மயே ட்விட்டரில் செய்தியில், இந்த செயல்பாடு ஈரானுக்கு ஒரு "விளையாட்டு மாற்றியாக" இருக்க வாய்ப்பில்லை என்று வாதிட்டார்.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக பல ஆண்டுகளாக இரகசியமாக ஒத்துழைத்து வருகின்றன என்ற அனுமானத்தில் இஸ்லாமிய குடியரசு நீண்ட காலமாக செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஈரானின் பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் அலி கத்கொத்தாயீ, இந்த நடவடிக்கை இஸ்ரேல் "ஐக்கிய அரபு எமிரேட்ஸை ஆக்கிரமித்து வருகிறது என்பதை காட்டுகிறது" என்று ட்வீட் செய்துள்ளார்.

ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு தலையங்கத்தில், இந்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் தனது மறுதேர்தல் நம்பிக்கையை உயர்த்துவதற்கான ஒரு சூழ்ச்சியே அன்றி மூலோபாய அல்லது வரலாற்று ரீதியான ஒன்றல்ல என்று நிராகரித்தது.

"டிரம்ப் அணியின் இந்த நடவடிக்கை பிராந்திய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தை ஆதரிப்பதற்கோ வைய்க்கப்பட்ட ஒரு படி அல்ல மேலும் அது பாலஸ்தீனியர்களுக்கோ அல்லது நெதன்யாகுக்கோ அது உதவப்போவதுமில்லை" என்று அது கூறியது.

ஈரானின் அரபு அண்டை நாடுகளில் பல ஏற்கனவே இஸ்ரேலுடன் உறவுகளைக் கொண்டிருப்பதாகக் கூறி, இந்த ஒப்பந்தம் "பிராந்திய நாடுகளுக்கு இழிவு ஏற்படுத்துவதையும், டிரம்பிற்கான உள்நாட்டுப் பிரசார பயன்பாட்டையும் தவிர்த்து" அதிக தாக்கம் எதையும் ஏற்படுத்தாது என்று அது குறிப்பிட்டது.

https://www.aljazeera.com/news/2020/08/iran-uae-israel-deal-stab-muslims-200814095249300.html?

No comments:

Post a Comment