Iranian
Vessels Sail From Persian Gulf to the Caribbean
World Watches in Awe as Iran Pushes Away U.S.
வெனிசூலாவுக்கு எரிபொருளை ஏற்றிச் செல்லும் ஐந்து ஈரானிய டேங்கர்களில் மூன்றாவது டேங்கரும் வெனிசுலா துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
வெனிசுலாவும் ஈரான் இஸ்லாமிய குடியரசும்
அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்ட நாடுகளாகும். ஈரான்
வெனிசுலாவுக்கு பல மில்லியன் பீப்பாய்கள் பெட்ரோல் மற்றும் சுத்திகரிப்பு கூறுகளை
வழங்கி வருகிறது. அமெரிக்காவின்
கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இவ்வர்த்தகம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெனிசூலா உலகிலேயே அதிக எண்ணெய்
வளத்தைக் கொண்ட நாடாய் இருந்தபோதும் அமெரிக்க பொருளாதாரத்தடை காரணமாக அதனால்
சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது தவித்தது. அமேரிக்கா மீது கொண்டுள்ள
அச்சம் காரணமாக, அதற்கு உதவுவதற்கு எந்தவொரு நாடும்
முன்வராத நிலையில் ஈரான் இஸ்லாமிய குடியரசு அதனை செய்திருப்பது உலகையே வியப்பில்
ஆழ்த்தியுள்ளது.
ஈரானின் முதலாவது எண்ணெய்த் தாங்கி கப்பலான போர்ச்சூன் (Fortune) கடந்த திங்கட்கிழமையும் இரண்டாவது கப்பலான பொரஸ்ட் (Forest) செய்வாயன்றும் மூன்றாவது கப்பலான பெட்டுனியா (Petunia) புதனன்றும் எல் பாலிட்டோ (El Palito) துறைமுகத்தை சென்றடைந்ததாக ரிஃபினிட்டிவ் எய்க்கொண் தரவு காட்டுகிறது.
முதல் டேங்கரின் வருகையின் பின்னர், வெனிசூலா
மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வீதிகளில் துள்ளிக்குதித்தனர். எண்ணெய் ஏற்றுமதி செய்ததற்காக
தெஹ்ரானுக்கு நன்றி தெரிவிக்க,
அவர்கள் ட்விட்டரை பயன்படுத்தியதோடு சமூக
வலைப்பின்னல் மேடையில் #GraciasIran
ஹேஷ்டேக் ஐ, லத்தீன் அமெரிக்க நாட்டின்
சிறந்த பிரபலமான ஹேஷ்டேக்காக மாற்றினர்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி
ஒருவர் இந்த மாத தொடக்கத்தில் வாஷிங்டன் இந்த வர்த்தக நடவடிக்கைக்கு பதில்
நடவடிக்கை எடுப்பதற்கு உத்தேசித்துள்ளதாக கூறினார், ஆனால் இந்த
மூன்று கப்பல்களும் எந்த சவாலையும் எதிர்கொள்ளாது துறைமுகத்தை சென்றடைந்துள்ளன. மீதமுள்ள ஈரானிய கப்பல்களான
ஃபாக்சன் (Faxon) மற்றும்
கிளவெல் (Clavel) - எதிர்வரும்
ஒருசில நாட்களில் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவி
கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் கீழ் வெனிசுலா அதன்
நாளொன்றுக்கு 1.3 மில்லியன் பீப்பாய் சுத்திகரிப்பு
வலையமைப்பின் முழுமையான முறிவின் காரணமாக பெட்ரோல் பற்றாக்குறையைத் தொடர்ந்து
வெனிசூலா மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர்.
ஈரானின் முதலாவது எண்ணெய்த்தாங்கி கப்பல்
வந்தடைந்ததைத் தொடர்ந்து அதனை ‘அமெரிக்க
பொருளாதாரத் தடைகளுக்கு எதிரான பெரு வெற்றி’ என்று வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஈரானுடனான "சுதந்திர வர்த்தகம்" செய்வதற்கான உரிமையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று அறிவித்த ஜனாதிபதி மதுரோ இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்; வெனிசுலாவுக்கு "நல்ல மற்றும் தைரியமான நண்பர்கள்" உலகில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய குடியரசுடனான உடன்படிக்கைகள்
பற்றி குறிப்பிடுகையில் மதுரோ "நாங்கள் - வெனிசுலா மற்றும் ஈரான் - அமைதியையே
விரும்புகிறோம், உலகின் கடல்கள் முழுவதும் பொருட்களை
சுதந்திரமாக வர்த்தகம் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது." என்று கூறினார்.
ஈரான் மற்றும் வெனிசுலா இடையேயான இந்த
வர்த்தக நடவடிக்கை அமெரிக்காவுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது, இவை இரண்டும் கடுமையான அமெரிக்க பொருளாதார தடைகளின் கீழ் உள்ள
நாடுகளாகும். இந்த
பொருளாதாரத் தடைகளுக்கு எந்த சட்ட அங்கீகாரமும் கிடையாது.
கியூப ஜனாதிபதி மிக்கேல் டயஸ்-கேனலும் ஈரானின் துணிச்சலான செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டினார், வெனிசுலா மீது அமெரிக்கா விதித்த "ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் சட்டவிரோத" முற்றுகையை அவர்கள் உடைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். அவரது ட்விட்டர் செய்தியில் "உலக மக்களிடையே ஒற்றுமை ஓங்கட்டும்" என்று வேண்டிக்கொண்டார்.
வெனிசூலா ஜனாதிபதி மதுரோவுக்கு ஈரான்
வழங்கிவரும் ஆதரவைத் தடுப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் பல தெரிவுகளை ஆராய்ந்து
வருகிறது என்று உயர்மட்டத்துடன் தொடர்புடைய ஒருவர் கூறுகிறார் என்று ப்ளூம்பெர்க்
தெரிவித்தது. ஜனாதிபதியின் ஆலோசகர்கள் ஒரு
சிறிய அளவிலான எரிபொருள் வழங்கல் ஒரு பெரியளவிலான அமெரிக்க-ஈரான் பதட்டங்களைத்
தூண்டிவிடாத, மட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறையை
வலியுறுத்துகின்றனர், என்றும் அந்த
நபர் கூறினார் என்றும் ப்ளூம்பெர்க் தெரிவித்தது.
ஈரானின் வெளியுறவு அமைச்சகம், இந்த (ஈரான் மற்றும் வெனிசூலா) வர்த்தகத்தைத் தடுக்கும்
எந்தவொரு முயற்சியும் "விரைவான மற்றும் தீர்க்கமான பதிலை" சந்திக்கும்
என்று கூறியது.
எரிபொருளின்றி வாடும் வெனிசுலாவுக்கு
எரிபொருளை எடுத்துச் செல்லும் ஈரானிய டேங்கர்களுக்கு வாஷிங்டன்
"சிக்கலை" ஏற்படுத்தினால் அமெரிக்காவிற்கு எதிரான பதிலடி நடவடிக்கைகள்
குறித்து ஜனாதிபதி ரூஹானி எச்சரித்தார்.
"கரீபியனில் அல்லது உலகில் எங்கிருந்தும் எங்கள் டேங்கர்கள் அமெரிக்க ராணுவ சவால்களை எதிர்கொண்டால், அவர்களும் ஒருவித சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்" என்று கடந்த சனிக்கிழமை கத்தார் நாட்டின் எமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் தொலைபேசி உரையாடலில் ரூஹானி கூறினார்.
அமெரிக்காவுடன் ஈரான் ஒரு புதிய மோதலை ஏற்படுத்திக்கொள்ள
விரும்பவில்லை, என்றாலும் நலன்களைப் பாதுகாக்கும் உரிமையை
தனது நாடு வைத்திருக்கும் என்று ரூஹானி வலியுறுத்தினார்.
ஈரான் தனது தேசிய இறையாண்மையையும்
பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கும் அதன் சொந்த நலன்களைப்
பாதுகாப்பதற்கும் முறையான உரிமையைக் கொண்டுள்ளது, ரூஹானி
மேலும் கூறுகையில், "அமெரிக்கர்கள்
இவ்விடயத்தில் தவறிழைக்க மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றார்.
ஈரானிய முப்படைகளின் தலைவரான மேஜர் ஜெனரல் முஹம்மது பாக்கரி, பிராந்தியத்தில் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அமெரிக்காவின் இராணுவ நகர்வுகள் குறித்து ஈரான் முழு உளவுத்துறை தகவல்களைக் கொண்டுள்ளது என்றும் உலகின் எந்த இடத்திலும் ஈரானிய நலன்களுக்கு ஆபத்தான எந்த நடவடிக்கைக்கும் பதிலளிக்கும் வல்லமை எம்மிடம் உள்ளது என்றும் கூறினார்.
பரந்த உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக
ஈரானிய தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவொன்று ஏற்கனவே வெனிசூலா அரசுக்கு சொந்தமான பெட்ரோலியோஸ்
டி வெனிசுலாவின் கார்டன் மற்றும் அமுஆய் (Cardon and Amuay)
சுத்திகரிப்பு
நிலையங்களில் பணிபுரிந்து வருகிறது.
'மேலாதிக்கத்தை தகர்த்தெறிதல்'
தெஹ்ரான்
பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முஹம்மத் மராண்டி, இரு நாடுகள் தங்களுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை எவ்வாறு நடத்த
வேண்டும் என்பதை ஆணையிட அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் கிடையாது என்றார்.
"முக்கியமானது என்னவென்றால், இறையாண்மை கொண்ட நாடுகள், அவற்றுக்கிடையிலான வர்த்தக உறவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று சர்வதேச
சமூகத்திற்கு விதிமுறைகளை நிர்ணயிக்கும் நிலையில் வாஷிங்டனில் உள்ள ஆட்சி இல்லை"
என்று மராண்டி அல் ஜசீராவிடம் கூறினார்.
"வெறித்தனமான
அமெரிக்க ஆணைக்கு தலைவணங்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் போன்று பலவீனமான நாடு
அல்ல ஈரான் இஸ்லாமிய குடியரசு. ஒன்று இரண்டல்ல, அமெரிக்க அச்சுறுத்தலைத் தாண்டி, ஐந்து கப்பல்களை அனுப்புவது ஒரு பெரிய செய்தியாகும். ஈரானின் இந்த
நடவடிக்கையானது துன்பப்படும் வெனிசூலா மக்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல்
அமெரிக்க மேலாதிக்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் செயலுமாகும்" என்று அவர்
குறிப்பிட்டார்.
பல
ஆண்டுகளாக எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அவதியுற்ற வெனிசூலா மக்கள் கொரோனா வைரஸ்
தொற்றுநோய்களின் போது இன்னும் மோசமடைந்து வரும் நிலைமையில் ஈரானில் இருந்து எரிபொருள் வருகிறது என்பது அம்மக்களுக்கு
மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
மறைந்த
வெனிசூலா ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸ் அவர்களது காலத்தில் இருந்து இரண்டு
தசாப்தங்களுக்கு மேலாக, இரு
நாடுகளும் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment