Iranians to Western nations: We will never do what you did to us in hard days!
இமாம் மஹ்தி (அலை)
அவர்கள்
நாம் எதிர்பாராத நேரத்தில் மீண்டும் தோன்றி, உலகில் நீதியையும் அமைதியையும் நிறுவுவார்
என்பது பொதுவாக முஸ்லிம்கள் அனைவரினதும் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையில் குறிப்பாக
ஜ'பரி ஷீஆ முஸ்லிம்கள் மிகவும்
உறுதியாய் உள்ளனர்.
ஈரான் மீதான அதிகபட்ச அழுத்தத்தில் திருப்தி அடையும் குறிப்பிட்ட
அந்த நாடுகள் ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிலைமை இன்னும் சிறந்ததாக நிச்சயம் மாறும்
என்பதையும், அது மீண்டும் மேலதிக பலம்பெற்று
தனது கௌரவத்தை காத்துக்கொள்ளும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், மேற்கத்திய அரசாங்கங்கள் எமது மக்களுக்கு செய்த அநீதியை, இழைத்து வரும் கொடுமையை நாங்கள் ஒருபோதும் அந்த நாட்டு மக்களுக்கு
செய்ய மாட்டோம் என்று உறுதிபட கூறுகின்றோம்.
கொரோனா
வைரஸ் தாக்கத்தால் எங்கள் மதிப்புமிக்க ஈரான் நாடும், ஏனைய 160 க்கும் மேற்பட்ட நாடுகளைப்
போலவே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயை எதிர்கொள்ள சமீபத்திய வாரங்களாக
நாட்டின் முழு திறனும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இயற்கையாகவே, வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள்
தங்கள் வசதிகள், திறன்கள்
மற்றும் ஆற்றல் அனைத்தையும் நோயை எதிர்கொள்ள பயன்படுத்தத் தொடங்கின. இருப்பினும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஈரானின் நிலை வேறுபட்டது.
தமக்கு
எதிரான எதிரிகளின் அதிகபட்ச அழுத்தக் கொள்கையை
எதிர்கொண்ட நிலையில் ஈரானிய மக்கள் மிகவும் கடினமான ஒரு பாரசீக ஆண்டை
(மார்ச் 21, 2019-மார்ச் 19, 2020) கடந்து புத்தாண்டை தொடங்கினர். எதிரிகள் எம்மை பலவீனப்படுத்த கடுமையான பொருளாதாரத் தடைகளை
விதித்துள்ளனர், இராணுவ ஆக்கிரமிப்பைத்
தொடங்கினர், ஈரானிய இராணுவத் தளபதியை
படுகொலை செய்தனர்.
கடந்த
டிசம்பரில் வுஹானில் தோன்றியதாகக் கருதப்படும் கோவிட்-19, வைரஸ் 162 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும்
பிரதேசங்களுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றின் காணமாக
உலகில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டும் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் உள்ளனர். ஈரானிலும் பல நூறு மக்கள் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவுவதைத்
தடுக்கும் பொருட்டு பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு கலாச்சார
மற்றும் மதக் ஒன்றுகூடல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பொது இடங்கள், பேருந்துகள் மற்றும் நிலத்தடி
ரயில்கள் தொடர்ந்து கிருமி நீக்கம் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றன.
ஈரானுக்கு
எதிரான அதிகபட்ச அழுத்தத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் இருந்து வரும் பேரழிவு
தரும் பொருளாதாரத் தடைகள் மற்றும் உளவியல் யுத்தங்களுக்கு முகம்கொடுத்த நிலையிலும் திட உறுதிகொண்ட ஈரானிய மக்கள் வைரஸ் தொற்றை எதிர்கொண்டுவருகின்றனர்.
இந்த
அதிகபட்ச அழுத்தம் ஈரானியர்களுக்கு எதிரான உளவியல் உளவியல் யுத்தம் என்பதைத் தவிர
வேறில்லை. ஈரானியர்களிடையே நம்பிக்கையற்ற உணர்வை உருவாக்கி, அவர்களை அமெரிக்காவின்
காலடியில் மண்டியிட்டு சரணடையச் செய்வதே அவர்களது முதன்மையான நோக்கம். அது நிச்சயமாக நடக்கப்போவதில்லை என்பதை கடந்த 4 சதாப்த வரலாறு பறைசாட்டிக்கிக்
கொண்டிருக்கிறது..
ஈரானுக்கு
எதிரான இவ்வாறான தொடர்ச்சியான அழுத்தங்கள் பயனளிக்காததைத் தொடர்ந்து எதிரிகள் இப்போது கொரோனா வைரஸ் பரம்பலை, ஈரானிய சமுதாயத்தில் கடைசி இழப்புகளை ஏற்படுத்துவதற்கு ஒரு நல்ல
வாய்ப்பாக எடுத்துக்கொண்டுள்ளது. இருப்பினும் சர்வ வல்லமையுள்ள
இறைவனின் சக்தி வேறு எந்த சக்திகளையும் விட வலிமையானது என்பதில் எமது எதிரிகள் நம்பிக்கை
அற்றவர்களாக இருக்கின்றனர்.
இவர்கள்
எந்தளவு மோசமான செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதை புரிந்துகொள்ள கடந்த சில
வாரங்களாக இவர்களது ஏவல் ஊடகங்கள் வெளியிட்டு வரும் சில மோசமான செய்திகளில் கவனம் செலுத்துவோம்:
ஈரானில்
அரச மட்டத்தில் சிலர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானதை ஈரானிய ஊடகங்கள்
வெளியிட்டதை அடுத்து எதிரிகளின் ஏவல் ஊடகங்கள் ஈரான் முகம்கொடுத்துள்ள இக்கட்டான நிலைபற்றி
கேலி செய்தன. பிறர் துயரத்தில்
குதூகலித்தன. பின்னர் பிரிட்டிஷ்
சுகாதார அமைச்சரும் 10 பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொற்றுநோயால்
பாதிக்கப்பட்டபோது வாயை மூடிக்கிக்கொண்டு இருந்தன.
வைரஸ்
பரம்பலைத் தொடர்ந்து திடீர் என ஏற்பட்ட கேள்வி அதிகரிப்பின் காரணமாக ஈரானில் முக கவசங்கள்
மற்றும் கிருமிநாசினி, தோற்று நீக்கி ஜெல் ஆகியவற்றின்
சாதாரண பற்றாக்குறையை அவர்கள் ஒரு பேரழிவாக பெரிதுபடுத்தினர், ஆனால் பின்னர் அதே நிலை, நாட்டில் வைரஸ் தொற்றுக்கு
முன்பே, அமெரிக்காவில் ஏற்பட்டதை
செய்தி ஊடகங்களில் எதுவும் பெரிதாக கவனம் செலுத்தவில்லை!
எதோ
ஈரான் தான் வைரஸை பரப்புவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பது போன்று குற்றம்
சாட்டி, ஈரான்
அதன் எல்லைகளை மூட வேண்டும், ஈரானை தனிமைப் படுத்த வேண்டும் என்று பிரச்சாரங்களை
மேற்கொண்டன. ஆனால் இப்போது நாம் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வைரஸ்
தொற்றுவதைத் தடுக்கும் பொருட்டு அவற்றின் எல்லைகளை மூடிக்கொண்டு இருக்கின்றன என்பதைக் காண்கிறோம்..
ஈரானிய
அரசியல் மற்றும் மத பிரமுகர்களின் வைரஸ் காரணமான மரணம் ஈரானில் ஒரு பெரிய
நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது, ஈரானிய தலைவர்கள் தனிமைப் பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டனர்,
இதனால்
ஈரானே முடங்கிவிட்டது போன்று செய்தி வெளியிட்டனர். எவ்வாறாயினும், சிறிது நேரத்திற்குப் பிறகு, கனேடிய பிரதமரின் மனைவி, அமெரிக்க பாதுகாப்பு செயலாளரும்
பதில் செயலரும் வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டனர்; இதை அவ்வூடகங்கள் பெரிதுபடுத்தவில்லை!
புனித
கும் நகரில் உள்ள ஆயத்துல்லாஹ்க்கள் சுகாதார அறிவுறுத்தல்களை நிறைவேற்ற பிரதான தடையாக
இருப்பதாக அவர்கள் பொய் பிரசாரத்தை மேற்கொண்டார்கள். பின்னர், சில அமெரிக்க கிறிஸ்தவ மத
குருக்கள் வைரஸ் பரம்பலை பொருட்படுத்தாமல் ஒருவருக்கொருவர் குலுக்குமாறு தொடர்ந்து
மக்களை ஊக்குவித்தனர். அது தொடர்பான படங்களும் வெளியிடப்பட்டன.
இமாம் ரெஸாவின்
சகோதரியான மசூமேவின் (அ.ஸ.) புனித பள்ளிவாசல் கதவை ஒருவர் முத்தமிடும் ஒரு வீடியோவை
வெளியிட்டு குற்றம்சாட்டினர். பின்னர் சுவிஸ் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு தெருவின்
நிலக்கீல்களை நக்குவதைக் காட்டும் வீடியோ வைரலாகியது; அந்த செயலை குற்றமாக அவர்கள் காணவில்லை.!.
ஈரானியர்கள்
மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ளதாக அவர்கள் கூறினர். இருப்பினும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்
ஒரு கிறிஸ்தவ பாதிரியார் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் சக்தியை
தாம் பெற்றுள்ளதாக கூறுகிறார். இது தொடர்பாக வீடியோவும் வெளியாகியது! இது அவர்களுக்கு மூட நம்பிக்கையாகத்
தெரியவில்லை.
அவர்கள்
ஈரானியர் பதற்றமடைந்துள்ளதாக, பீதியில் உறைந்து போயுள்ளதாக உலகுக்கு
கூறினார், ஆனால் மேற்கத்திய
நாடுகளில் பீதியில் கழிப்பறை திசுக்களை (Toilet
tissue) வாங்குவது
தொடர்பாக மக்கள் மத்தியில் சண்டை பற்றி நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகின. சில
நாடுகளின் அதிகாரிகள் கழிப்பறை திசுக்களைப் பயன்படுத்தும் அவர்களது சீர்கெட்ட கலாசாரத்துக்கு பதிலாக சுத்தம் செய்வதற்கு நீர் சொம்புகளை
பயன்படுத்தவும் முன்வந்தனர்!
ஈரானியர்களால்
கொரோனா வைரஸ் பரம்பலை எதிர்த்துப் போராட முடியவில்லை என்றும் அதனால் அவர்கள்
பிரார்த்தனை செய்துகொள்ளட்டும் என்றும் நக்கலடித்தனர், ஆனால் வெள்ளை மாளிகையில்
அரசாங்க அதிகாரிகளின் வெகுஜன ஜெபங்களில் ஈடுபட்ட புகைப்படம் வைரலாகியது; இப்போது இவர்களது நக்கலும் நையாண்டியும் எங்கு போனதோ தெரியவில்லை.!
ஈரானிய
சமுதாயத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற ஆதாரமற்ற
குற்றச்சாட்டுகள் பலவற்றை அவர்கள் தொடர்ச்சியாக பிரசாரம் செய்தனர்.
கடந்த 40 ஆண்டுகளில் ஈரானியர்கள் மீதான பரந்தளவிலான
மிருகத்தனமான பொருளாதாரத் தடைகளின் ஒரு
பகுதியையேனும் அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ அனுபவித்திருந்தால், சந்தேகத்திற்கு இடமின்றி, அவை எப்போதோ சரிந்திருக்கும் என்பது
திண்ணம்.
உலக
சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, முன்னேறிய நாடுகள் என்று அழைக்கப்படும் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய
நாடுகளால் இத்தகைய பேரழிவு தரும் பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தங்கள் ஏதும்
அற்ற நிலையில் செய்ய முடியாதவற்றை ஈரான் நாடு முழுவதும் பரவலான கொரோனா வைரஸ்
எதிர்ப்பு நடவடிக்கைகளைச் செய்து வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளத்தக்கது.
தன்னம்பிக்கை, மேம்பட்ட கலாச்சாரம், ஆழ்ந்த மனிதாபிமான உணர்வு மற்றும் உறுதியான மத நம்பிக்கைகள் கொண்ட வரலாற்றின் மூலம்
ஈரான், எந்த நிலைமையையும்
சமாளிக்கக்கூடிய ஒரு முன்னோடி தேசமாக மாற்றி யுள்ளது என்பதை யாரும் புறக்கணிக்க
முடியாது.
நாட்டின்
மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்தோரின் தியாகங்கள் தொற்றுநோயை
மேலும் சக்திவாய்ந்த முறையில் எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு உதவியுள்ளன. மனிதநேயமற்ற மேற்கத்தேய
பொருள்முதல்வாதத்தின் சித்தாந்தங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட சமூகங்களில்
இத்தகைய மதிப்புமிக்க பண்புகளை காண்பது அரிது.
ஈரானைத்
தவிர, இதுபோன்ற நெருக்கடி நிலைமைகளை
சமாளிப்பதற்காக தங்கள் அரசாங்கத்திற்கு உதவ தன்னிச்சையாக திரண்டு வரும் மக்கள்
கூட்டத்தை வேறு எந்த நாட்டையும் கண்டுபிடிப்பது கஷ்டமான காரியமாகும். அதேவேளை, கொரோனா வைரஸ் பரம்பல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், ஏற்படக்கூடிய குழப்பங்களிலிருந்தும் தம்மை பாதுகாத்துக்கொள்ள
அமெரிக்க மக்கள் துப்பாக்கிகளை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் என்பது
வேடிக்கையாய் இல்லையா...?
இந்தக்
கட்டுரை ஈரானுக்கு எதிரான போரை நாடும் எதிரிகளின் உண்மையான நோக்கங்களை அறிய
முயற்சிக்கிறது. எங்கள் சமுதாயத்தின் ஒற்றுமையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்
வகையில், இவர்கள் புனையப்பட்ட
புள்ளிவிவரங்கள், தரவுகள் மற்றும் விகடமானதும்
கீழ்த்தரமானதுமான போலி செய்திகளை நம்பும் மக்களாக ஈரானியர்களும் ஆகவேண்டும்
என்று அவர்கள் கனவு காண்கிறார்கள். நிச்சயமாக அது கனவாகவே போகும்.
இறுதியாக
நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது: கடினமான இந்த காலம் நிச்சயமாக கடந்து போகும், நாங்கள் மீண்டும் மேலதிக பலம்
பெற்று முன்னேறுவோம், அதேநேரம்
ஈரானியர்களான நாம் உலகளாவிய ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக
எழுந்து நிற்கிறோம்; எழுந்து நிற்போம் என்பதை உலக
நாடுகள் உணர வேண்டும்.
ஈரான்
மீதான அதிகபட்ச அழுத்தத்தில் திருப்தி அடையும் குறிப்பிட்ட அந்த நாடுகள் ஈரான்
இஸ்லாமிய குடியரசின் நிலைமை இன்னும் சிறந்ததாக நிச்சயம் மாறும் என்பதையும், அது மீண்டும் மேலதிக பலம்பெற்று தனது கௌரவத்தை காத்துக்கொள்ளும்
என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், மேற்கத்திய அரசாங்கங்கள் எமது
மக்களுக்கு செய்த அநீதியை, இழைத்து வரும் கொடுமையை நாங்கள்
ஒருபோதும் அந்த நாட்டு மக்களுக்கு செய்ய மாட்டோம் என்று உறுதிபட கூறுகின்றோம்.
https://www.tehrantimes.com/news/446249/Iranians-to-Western-nations-We-will-never-do-what-you-did-to
No comments:
Post a Comment