Monday, February 17, 2020

அறிவியல் துறையில் ஈரானின் துரித வேகம் - அச்சப்படும் மேற்குலகு


West fear Iran's rapid pace in the field of knowledge

இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், ஈரான் அறிவியல் துறையில் முன்னேற்றத்தைக் கண்டதா அல்லது பின்னடைந்துள்ளதா? என்பது இன்று உலகில் பலரை ஆட்கொண்டுள்ள ஒரு கேள்வியாக அமைந்துள்ளது. ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றிபெற்றதில் இருந்தே நன்கு அறியப்பட்ட பல சர்வதேச ஊடகங்கள், இஸ்லாமிய புரட்சி ஈரானை வெவ்வேறு பரிமாணங்களில் பின்வாங்க வழிவகுத்தது என்றும் புரட்சியைத் தொடர்ந்து ஈரானின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றன.


குறிப்பிட்ட ஊடகங்களால் எப்போதும் வலியுறுத்தப்படும் விடயங்களில் ஒன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஈரான் பின்னடைந்துள்ளது என்பதாகும்.

விஞ்ஞான துறை முன்னேற்றம் மற்றும் அறிவியல் உற்பத்தியின் பெருக்கம் ஒரு நாட்டின் முன்னேற்றம் அல்லது பின்னடைவின் மிக முக்கியமான குறிகாட்டிகளில் ஒன்றாகும். ஆகவே, ஒரு நாடு வீழ்ச்சியடைந்துவிட்டதா அல்லது முன்னேறியுள்ளதா என்பதை யாராவது உண்மையில் புரிந்து கொள்ள விரும்பினால், இந்த இரண்டு குறிகாட்டிகளையும் ஆராய்வதன் மூலம் அதற்குரிய பதிலைப் பெறலாம்.

விஞ்ஞான துறைகளில் ஈரானின் முன்னேற்றங்களை சுட்டிக்காட்டும் சில அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, மேற்கத்திய ஊடகங்கள் இரண்டு முக்கிய சந்தேகங்களை முன்வைத்து வருகின்றன. இத்தகைய சந்தேகங்களின் முதல் வகை இந்த அறிக்கைகளின் ஆதாரங்கள் மற்றும் அவற்றைக் கேள்வி கேட்பதற்கான முயற்சிகள் தொடர்பானது. அறிக்கைகள் ஈரானிய ஆதாரங்களால் தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை நம்பமுடியாதவை என்று இந்த பிரதான ஊடகங்கள் கூறிவிவருகின்றன. இரண்டாவது வகை சந்தேகங்கமானது முன்னேற்றம் என்பது ஒரு பொதுவான மற்றும் தவிர்க்க முடியாத அம்சம் எனவும், புரட்சி ஏற்படாது பஹ்லவி அரச குடும்பமே ஈரானில் ஆட்சியில் இருந்திருந்தாலும் இந்த முன்னேற்றங்கள் அல்லது இதைவிட சிறப்பான முன்னேற்றம் அங்கு ஏற்பட்டிருக்கும் என்றும் கூறுகின்றன.

வெளியிடப்பட்டுள்ள தற்போதைய அறிக்கை தொடர்பாக இந்த அடிப்படையில் சந்தேகம் எழுப்புவது நியாயம் தானா என்று ஆராய்வோம்.

முதலாவதாக, இந்த அறிக்கை உலகளவில் பக்கச்சார்பற்றதாகவும் நம்பகமானதாகவும் கருதப்படும் மேற்கத்திய ஆதாரங்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளது. இரண்டாவதாக, புரட்சிக்குப் பிறகான விஞ்ஞான முன்னேற்றங்களை மட்டும் கவனத்தில் கொள்வதற்கு பதிலாக, இந்த அறிக்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஈரான் தற்போது அடைந்துள்ள நிலையை மட்டுமல்லாது, வளர்ச்சியடைந்துள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், புரட்சிக்கு முன்னும் பின்னும் ஆய்வு செய்கிறது.

இந்த அறிக்கை முதலில் ஈரானின் விஞ்ஞான நிலை குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது, பின்னர் சில முக்கிய தொழில்நுட்ப அறிவியல்களில் ஈரானின் நிலையை ஆராய்கிறது:

உலகளவில் நம்பகமான தரவு தளங்களில் ஒன்றான நொய்மா (Knoema)வின் கூற்றுப்படி, காப்புரிமை (Patent right) விண்ணப்பங்களின் பரப்பளவில், 1970 ல் புரட்சிக்கு முன்னர் ஈரான் 38 வது இடத்தைப் பிடித்தது; அதேசமயம், 2018 இல், ஈரான் 10 வது இடமாக அறிவிக்கப்பட்டது. [1]

நாடுகளின் விஞ்ஞான நிலையை பகுப்பாய்வு செய்யும் சயன்ஸ்-மெட்ரிக்ஸ்(Science-Metrix), ஈரானின் அறிவியல் வளர்ச்சி விகிதத்தை விஞ்ஞான உற்பத்தியின் உலகளாவிய வேகத்தை விட 11 மடங்கு அதிகமாக உள்ளது என அறிவித்துள்ளது. இந்த உண்மை, உலக அளவில், ஈரான் இஸ்லாமிய குடியரசை அறிவியலில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக மாறியுள்ளதை காட்டுகிறது. [2]

நாடுகளின் விஞ்ஞான நிலையைப் பற்றிய அதன் புள்ளிவிவர ஆய்வில், மதிப்புமிக்க பகுப்பாய்வு வலைத்தளம் மற்றும் ஆராய்ச்சி நுண்ணறிவு தளமான (Web of Knowledge) ஈரான் பற்றிய சுவாரஸ்யமான முடிவுகளை வழங்கியுள்ளது. வெளியிடப்பட்ட விஞ்ஞான கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1978 ஆம் ஆண்டில் ஈரான் 669 கட்டுரைகளை வெளியிட்டுள்ளதாக அந்த வலைத்தளம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை உலகின் அறிவியல் உற்பத்தியில் ஈரானின் பங்கு 0.01 சதவீதத்திற்கும் குறைவாகவே காட்டுகிறது. இருப்பினும், அதே மாறிகள் குறித்து, புரட்சிக்கு பிந்தைய ஈரான் ஒரு ஏற்றம் கண்டது. 2018 ஆம் ஆண்டில், ஈரானிய விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 55.509 ஆக துரிதமாக வளர்ந்தது, இது மிகவும் கணிசமான 82 மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த திடீர் வளர்ச்சியானது விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடுகளில் இஸ்லாமிய குடியரசு ஈரான் 16 வது இடத்தைப் பிடித்துள்ளது.

மத்திய கிழக்கில், எஸ்சிஐமகோ ஜர்னல் (Scimago Journal) தரவரிசைப்படி, ஈரான் 1996 இல் 5 வது இடத்தைப் பிடித்தது. இருப்பினும், 2017 ஆம் ஆண்டில், ஈரான் சவூதி அரேபியாவை, எகிப்தை, துருக்கியை மற்றும் இஸ்ரேலை விஞ்சி மத்திய கிழக்கில் முதலிடத்தைப் பிடித்தது.

மருத்துவ துறை
விஞ்ஞான சாதனைகள் மற்றும் அறிவியல் உற்பத்தி ஒரு முக்கிய பகுதி மக்கள் சேவைக்கு பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, உலக வங்கி அறிவித்தபடி, சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில், ஈரான் வியக்கத்தக்க வளர்ச்சியையும் பெரிய முன்னேற்றங்களையும் அடைந்துள்ளது. சராசரி மனித ஆயுட்காலம் 50 முதல் 75 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. புரட்சிக்கு முன்பு, 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளில், 185 பேர் இறந்தனர்; இருப்பினும், ஈரானில் மருத்துவ முன்னேற்றங்களுக்கு நன்றி, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு 14.9 ஆக குறைந்தது. [3]

மேலும், ஈரான் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு கண்டுள்ளது. புரட்சிக்கு முன்னர், பொது மக்கள் உயர் கல்வியைத் தொடர இயலாது; குறிப்பாக மருத்துவத்தில் பிரபுக்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் நாடு முழுவதும் 5890 நிபுணர்கள் மட்டுமே இருந்தனர். எவ்வாறாயினும், புரட்சிக்குப் பின்னர், மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை, குறிப்பாக, பெண் மருத்துவர்கள், ராக்கெட் வேகத்தில் அதிகரித்து 36000 ஐ எட்டியது.

உலக வங்கி அறிக்கைகளின் அடிப்படையில், 2009 ஆம் ஆண்டில், மருத்துவமனைகளின் தரம் மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் ஈரான் 21 வது இடத்தைப் பிடித்தது. 2017 ஆம் ஆண்டில், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதில் உலகின் இரண்டாவது நாடாக ஈரான் அங்கீகரிக்கப்பட்டது. ஈரானின் சுத்தம், சுகாதாரம் மற்றும் மருத்துவ முன்னேற்றங்களின் நிலை மிகவும் பாராட்டத்தக்கது, யுனிசெஃப் ஈரானுக்கு அதன் சாதனைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது. [4]

நெனோ தொழில்நுட்பம்
சிமாகோ ஜர்னலின் கூற்றுப்படி, ஈரானின் நேனோ அறிவியலில் விரைவான வளர்ச்சியும், நெனோ தொழில்நுட்பமும் பிரமிக்க வைக்கிறது. 1996 ஆம் ஆண்டில், ஒரு சில நாடுகள் மட்டுமே இந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டிருந்தன, அந்த 66 நாடுகளில் ஈரான் 58 வது இடத்தில் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, 96 க்கு முந்தைய ஆண்டுகளின் தரவரிசை இந்த தளத்தில் இருந்து பெற முடியவில்லை.

இஸ்லாமியப் புரட்சியின் ஆளுகையின் கீழ், இந்த அறிவியலைக் கொண்ட 117 நாடுகளில், 2017 ஆம் ஆண்டில், ஈரான் - துரிதமான   மற்றும் வியக்கத்தக்க வளர்ச்சியுடன் 42 நிலைகளைத் தாண்டி 16 வது இடத்தைப் பிடித்தது.

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் 1996 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த அறிவியலை உருவாக்கிய நாடுகளில் ஈரான் கடைசி இடத்தைப் பிடித்தது. 2017 இல், நெனோ அறிவியல் மற்றும் நெனோ தொழில்நுட்பத்தை அணுகக்கூடிய நாடுகளை நாடுகளில் ஈரான் முன்னிலை வகித்தது.

கூடுதலாக, நெனோவில் வெளியிடப்பட்ட ஐ.எஸ்.ஐ கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, சீனா மற்றும் அமேரிக்கா போன்ற நாடுகளைத் தொடர்ந்து ஈரான் நான்காவது நாடாக உள்ளது; ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஈரானுக்குப் பின் வருகின்றன.

விண்வெளி துறை
ஈரானும் விண்வெளி பொறியியலில் வளர்ச்சியை அதிகரித்துள்ளது. 1996 ஆம் ஆண்டில், விண்வெளி தொடர்பான பாடங்களில் அறிவியல் கட்டுரைகளைத் தயாரிப்பதில் உலகின் 45 வது நாடாக ஈரான் இருந்தது என்று புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. இருப்பினும், இத்துறையில் அபார வளர்ச்சியைக் கண்டு, 2017 ஆம் ஆண்டில் ஈரான் விண்வெளி அறிவியல் உற்பத்தி துறையில் உலகில் 11 வது இடத்தைப் பிடித்தது.

மேற்காசிய பிராந்தியத்தில், ஈரான் 1996 இல் விண்வெளி பற்றிய விஞ்ஞான கட்டுரைகளை உருவாக்கும் பகுதியில் 6 வது இடத்தைப் பிடித்தது. எவ்வாறாயினும், விஞ்ஞான உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் தேவையான கருவிகள் மற்றும் சூழ்நிலையை வழங்குவதற்காக இஸ்லாமிய குடியரசின் தீவிர முயற்சிகளுடன், ஈரானிய விஞ்ஞானிகளின் திறன்கள் மற்றும் முயற்சிகள் காரணமாகவும் 2017 ஆம் ஆண்டில், ஈரான் பிராந்தியத்தில் முதல் இடத்தைப் பிடித்தது. விண்வெளி அறிவியல் வெளியீட்டில்; பிராந்தியத்தின் பிற நாடுகள் ஈரானை விட மிகவும் பின்தங்கியுள்ளன.

சியோனிச ஆட்சி, 1985 முதல் உத்தியோகபூர்வ அறிவிப்புகளின் அடிப்படையில் அமெரிக்காவில் இருந்து 121 பில்லியன் டாலர் பங்களிப்பைப் பெற்றிருந்தாலும், விஞ்ஞான உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் எந்த அதிகரிப்பும் ஏற்படவில்லை; உண்மையில், உற்பத்தி தரத்தின் சரிவை சந்தித்துள்ளது.

 அணு தொழில்நுட்பம்
இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஈரான் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்த அறிவியல் துறைகளில் அணு பொறியியல் மற்றும் அறிவியல் ஆகும். சிமகோ ஜர்னல் வழங்கிய தகவல்களின்படி, 1996 இல், விஞ்ஞான வெளியீடு மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் ஈரான் உலகில் 70 வது இடத்தைப் பிடித்தது.

ஆனால் ஈரானிய அறிஞர்கள் மற்றும் தியாகி அஹ்மதி ரோஷன் (சியோனிச ஆட்சியின் உத்தரவின் பேரில், MEK பயங்கரவாதிகளினால் 2011 டிசம்பரில் படுகொலை செய்யப்பட்டார்), போன்ற நிபுணர்களின் முயற்சியால் 2017 இல், ஈரான் இந்த துறையில் 354 அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டது. இதனால் உலகளவில் 12 வது இடத்திற்கு உயர்ந்தது. 1996 இல் இத்துறையில் 13 வது இடத்தில் இருந்த ஈரான் 2017ல் மேற்காசிய பிராந்தியத்தில் முன்னிலை வகிக்கிறது.

இன்று, ஈரான் இஸ்லாமிய குடியரசு அணுசக்தி பொறியியல் மற்றும் எரிசக்தி பற்றிய விஞ்ஞான கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை மேற்கு ஆசியாவின் முன்னணி நாடாக விளங்குகிறது.

இத்தகைய உண்மைகள் சில துறைகளுக்கு மட்டுமல்ல; மாறாக, விஞ்ஞான வளர்ச்சியின் வேகம் எல்லா துறைகளிலும் காணக்கூடியதாக உள்ளது, மேலும் சயன்ஸ்-மெட்ரிக்ஸ் 2018 ஆம் ஆண்டில் ஈரானின் அறிவியல் வளர்ச்சி விகிதத்தை உலகளாவிய அறிவியல் உற்பத்தியை விட 11 மடங்கு வேகமாக உள்ளது என்று அறிவித்தது.

இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரான் எவ்வாறு அறிவியலில் ஒரு பாரிய முன்னேற்றத்தைக் கண்டது?

மேற்கத்திய ஊடகங்களின் கூற்றுகளின் அடிப்படையில் ஷாவின் ஆட்சி - அமெரிக்காவால் முழுமையாக ஆதரிக்கப்பட்ட — ‘ஒரு முற்போக்கான அரசுஅல்லவா?
இஸ்லாமும் இஸ்லாமிய புரட்சியும் ஈரானை முன்னேற்றப் பாதையில் இருந்து தடுத்துவிட்டன என்று மேற்கத்திய ஊடகங்கள் வலியுறுத்தவில்லையா?
சர்வதேச நிறுவனங்களின் புள்ளிவிவரங்கள் மற்றும் விஞ்ஞான குறிப்புகள் ஈரானில் குறிப்பிடத்தக்க அறிவியல் முன்னேற்றத்தைப் பற்றி ஏன் பேசுகின்றன?
அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ஈரானைத் தாக்க சதாமைத் தூண்டி ஈரான் தேசத்தின் மீது எட்டு ஆண்டுகால யுத்தம் ஒன்றை திணித்த நிலையிலும், 40 ஆண்டுகளாக ஈரான் மிக மோசமான பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டிருந்த நிலையிலும் ஈரான் இஸ்லாமிய குடியரசு இந்த சாதனைகளை புரிந்துள்ளது எவ்வாறு…?

இந்த கேள்விக்கான பதிலை சில விடயங்களைக்கொண்டு விளக்கலாம்:

1.   இஸ்லாம் அறிவியலை வரவேற்கும் ஒரு மார்க்கமாகும். அறிவியலையும் அறிவையும் கற்றுக்கொள்வது நல்ல செயல்களின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான எடுத்துக்காட்டுகளாக இஸ்லாம் கருதுகிறது. அறிவியலையும் அறிவையும் கற்க இஸ்லாம் வலியுறுத்தியதன் காரணமாக, ஐரோப்பாவில் இடைக்காலத்துடன் ஒத்துப்போன முஸ்லிம் உலகில் ஒரு அற்புதமான விஞ்ஞான காலத்தில் அலி இப்னு சினா, ஃபராபி, அர்-ராஸி, குவாரிஸ்மி, பிரூனி மற்றும் பல முஸ்லிம் அறிஞர்கள் தோன்றியதை நாங்கள் கண்டோம். இந்த முஸ்லிம் அறிஞர்கள் வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தனர், மேலும் அவர்கள் வழங்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகம் இன்னும் பயன்படுத்துகிறது. இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், இஸ்லாமிய குடியரசு எப்போதும் அறிவியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது, அறிவை கற்றல் மற்றும் முஸ்லிம் அறிஞர்களின் அறிவுப் பாதையைப் பின்தொடர்தல் மற்றும் இஸ்லாமிய உலகின் அற்புதமான அறிவியல் சகாப்தத்தின் மறுமலர்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கியது. இஸ்லாமிய புரட்சியின் 40 ஆண்டுகால அடைவுகள் அறிவியல் எழுச்சியின் வரலாற்று அற்புதமான அந்த சகாப்தம் பின்பற்றப்பட்டு வருவதாகவும், ஆரம்ப நடவடிக்கைகள் சரியான முறையில் எடுக்கப்பட்டுள்ளதையும் காட்டுகின்றன.

2.   ஷாவின் ஆட்சி சன்மார்க்கத்துக்கு முரணான அரசாங்கமாக இருந்தது. விஞ்ஞான விஷயத்தில் கவனம் செலுத்துவதற்கும், இளைஞர்களுக்கு கல்வியை வழங்குவதற்கும் பதிலாக, இளைஞர்கள் இஸ்லாத்தின் கட்டுக்கோப்பை மீறுவதற்கும், காம களியாட்டங்கள் மீது கவனம் செலுத்துவதற்கும்பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபடத் தூண்டும் சினிமா மூலமும், இளைஞர்களிடையே போதைப்பொருளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் பெரும் நிதியை செலவிட்டது. முகமது ரிஸா  பஹ்லவியின் சகோதரி அஷ்ரப், நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக இருந்தார், மேலும் இளைஞர்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக போதைப்பொருட்கள் நாட்டிற்குள் தாராளமாக இறக்குமதி செய்யப்பட்டன.

3. ரிஸா கான் பஹ்லவி ஆங்கிலேயர்களால் ஈரானின் ஷாவாக நியமிக்கப்பட்டவர். மிக முக்கியமான புவிசார் அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட ஈரானை, ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய நாடான ஈரானை அழிக்க பிரிட்டன் எப்போதுமே முயன்று வந்தது, மேலும் நாட்டில் உள்ள இளம் தலைமுறையினரை காமக்களியாட்டங்கள், போதைப்பொருள் போன்றவற்றில் திளைக்கச் செய்து கட்டுப்படுத்தவும் முயன்றதுடன், அவர்களை தங்கள் சொந்த தேச விடயங்களில் அலட்சியமான ஒரு தலைமுறையாக மாற்றவும் முயன்றது. மற்றும் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கடிக்கவும்; இதனூடாக இந்த செல்வந்த நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க முடியும் என்பதே பிரிட்டனின் திட்டமாகும்.
ரிஸாவின் மகன் முகமது ரிஸா பஹ்லவி, ஈரானின் ஷாவைப் போலவே அமெரிக்காவால் நியமிக்கப்பட்டார். ஈரானை முன்னேற்றத்திலிருந்து விலக்கி ஒரு பிற்போக்கு நாடாக, ஈரானை பிராந்தியத்தில் தனது இராணுவ கூலிப்படையாக மாற்ற அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. அதன் காரணமாக, ஈரான் விஞ்ஞானத் துறையில் பின்தங்கிய நிலையில் வைக்கப்பட்டது, எனினும், இராணுவத் துறையில், கச்சா எண்ணெய் விற்பனையுடன், அமெரிக்காவின் குறிக்கோள்களையும் நலன்களையும் பூர்த்தி செய்வதற்காக பிராந்தியத்தில் ஒரு அமெரிக்க கூலியாக, உலகின் மிகப்பெரிய ஆயுத வாங்கும் நாடுகளில் ஒன்றாக ஈரான் மாற்றப்பட்டது. இதே திட்டத்தின் அடிப்படையிலேயே அமெரிக்கா இன்று சவுதி அரேபியாவிற்கும் அதன் மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.






No comments:

Post a Comment