வேகமாக
மாறிவரும் பிராந்தியத்தின் நிலைமையானது அமேரிக்காவினதும் மற்றும் அதனது இஸ்லாமிய
உம்மாவிற்கு எதிரான, குறிப்பாக
மேற்கு ஆசியாவின் முஸ்லிம்களுக்கும் எதிரான குற்றச்செயலின் பிராந்திய
கூட்டாளிகளினதும் விரைவான வீழ்ச்சியின் தெளிவான அறிகுறியாகும்.
முதலாவது, அமெரிக்கர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் சிரியா மற்றும் ஈராக்கில் ஸ்திரத்தன்மையை குலைக்க எடுத்த முயற்ச்சி தோல்வியுற்றது. அடுத்து அவர்கள் ஐசிஸ் எனும் தக்பீரிகளைக் கொண்டு பாரசீக வளைகுடாவின் தலைநகரில் இருந்து மத்தியதரைக் கடலின் லெவாண்டின் கரை வரை ஒரு பெரிய தக்ஃபிரிஸ்தானாக மாற்ற மேற்கொண்ட சதி, கனவாய் போனது.
டமாஸ்கஸ் மற்றும் பாக்தாத்தில் உள்ள முறையான அரசாங்கங்களை கவிழ்க்கவும், இரண்டு தலைநகரங்களில் அமெரிக்க கைப்பாவைகளை நிறுவவும் வஹாபி-சியோனிச கனவு, பயங்கர கனவாக மாறியது. ஈரானின் புத்திசாலித்தனமான கொள்கைகளுக்கும் இஸ்லாமிய புரட்சியின் தலைவரின் தொலைநோக்கு பார்வைகளுக்கும் நன்றி.
வாஷிங்டன் தாயெஷ் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து, அவர்களை எதிர்ப்பதாக நடித்து, ஈராக்கின் நண்பராக காட்ட முயன்றது.
ஹஷ்த் அஷ்-ஷ'பி என்ற மக்கள் அணிதிரட்டல்
அலகுகளின் உருவாக்கமும் ஈராக்கின்
ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் ஒருங்கிணைந்த
அதனது நடவடிக்கையும் அமெரிக்காவின் கணக்கீடுகளை பிழைக்கச் செய்தது.
இந்த
நிகழ்வுகள் ரியாத்தில் எச்சரிக்கை மணி ஒலிக்கச் செய்தன. அதனால் மருண்ட இஸ்லாம்
விரோத வஹாபி ஆட்சி பிரபலமான அன்ஸாருல்லாஹ் இயக்கத்தை துவம்சம் செய்துவிடலாம் என்ற
எண்ணத்தில், அமெரிக்காவின்
தூண்டுதலுக்கு இணங்க, பிராந்தியத்தின் வறிய நாடான யேமனுக்கு
எதிராக ஒரு போரை ஆரம்பித்தது.
எவ்வாறாயினும், அதிக காலம் செல்லுவதற்கு முன்பே இஸ்லாம் விரோத சவுதிகள் தாங்களே தோண்டிய புதைகுழியில் சிக்கிக் கொண்டனர்; மேலும் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட பில்லியன் கணக்கான டாலர் பெறுமதியான நவீன ஆயுதங்கள் இருந்தபோதிலும், அன்ஸாருல்லாஹ்வின் பதிலடியை அதனால் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை.
இதற்கிடையில், ஈரான் இஸ்லாமிய குடியரசில்
மட்டுமல்லாமல், மேற்கு ஆசியாவின் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களிலும்
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரனான இமாம் ஹுசைனின் (அலை) கர்பலாவில் நடந்த காவிய
சம்பவத்தால் உத்வேகம் கொண்டோரின் எழுச்சி ட்ரம்பை வெள்ளை மாளிகைக்குள் முடங்கச்
செய்தது.
அங்கிருந்து ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக பொருளாதார பயங்கரவாத பிரச்சாரத்தை துவக்கியது மட்டுமல்லாமல் சியோனிஸ்டுகளால் தூண்டப்பட்டு, பாலஸ்தீனிய இஸ்லாமிய குழுக்களான ஹமாஸ், யேமனின் அன்சரல்லா, மற்றும் லெபனானின் புகழ்பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு இயக்கமான ஹெஸ்பொல்லா போன்றவற்றுக்கு எதிராக தனது ஆத்திரத்தை கொட்டத் தொடங்கினார்.
ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களை ட்வீட் செய்வது மூலமும் மற்றும் பாரசீக வளைகுடாவிலும் அதைச் சுற்றியுள்ள அமெரிக்க இராணுவ தளங்களை பலமூட்டுவதன் மூலமும் இஸ்லாமிய குடியரசை முழங்காலிட செய்ய முடியும் என்று அவர் நினைத்தார்.
எப்போதும் விழிப்புடன் இருந்த ஈரானின் பாதுகாவலர்களால் உலகின்
அதிநவீன மற்றும் விலையுயர்ந்த ட்ரோன் உரிய நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட
சம்பவமானது, வழக்கமான பொய்யர் டிரம்புக்கு ஒரு
பேரதிர்ச்சியாக இருந்தது. ஈரானுடனோ அல்லது ஈராக், சிரியா,
லெபனான் மற்றும் யெமன் போன்ற அதன் நட்பு நாடுகளுடனோ நேரடி
சண்டையிலீடுபடுவது தற்கொலைக்கு சமம் என்பதை உணர்ந்ததாகத் தெரிகிறது.
அதே
நேரத்தில், ஈராக்கிற்கும்
ஈரானுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தும் அமெரிக்க பிரயத்தனமும் மோசமாக
தோல்வியடைந்தது. இரு நாடுகளும் அவற்றின் மக்களும் தொழிநுட்பம் மற்றும் கலாச்சாரம்
முதல் அரசியல் மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவம் வரையிலான துறைகளில் வளர்ந்து வரும்
நெருக்கம் வாஷிங்டனை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதற்கிடையில், யெமன் ஹவ்திக்கள் தங்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் வேகமாக அதிகரித்துவரும் சக்தியின் ஊடாக, சவூதி அரேபியாவின் அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்பின் பலவீனத்தை அப்பட்டமாக நிரூபித்துள்ளனர்.
இதிலிருந்து புரிவது என்னவென்றால் றியாத்தின் ஆட்சி இரவல் வாங்கிய
காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பஹ்ரைனில் ஆல்-இ கலீஃபா கொள்ளையர் ஆட்சியும்
அவ்வாறே. அதே போல், அபகரிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில்
சட்டவிரோத ஆட்சி நடத்தும் சியோனிஸ்டுகளும் அதே நிலையில்தான் உள்ளனர் என்பதாகும்.
மொத்தத்தில், ஈரானுக்கும் ஈராக்கிற்கும் சிரியாவிற்கும் மற்றும் லெபனானுக்கும் இடையில் வளர்ந்து வரும் ஒற்றுமை, அழியாத எதிர்ப்பு முன்னணியின் ஒருங்கிணைந்த பகுதிகளாக அவற்றை இறுக்கியுள்ளது. ஆகவே CENTCOM பயங்கரவாதிகளின் சட்டவிரோத இருப்பிலிருந்து முழுப் பிராந்தியத்தையும் தூய்மைப்படுத்தும் நேரம் வெகுதூரத்தில் இல்லையெனலாம்.
No comments:
Post a Comment