Tuesday, June 25, 2019

ஈரான் வான்பரப்பில் அத்துமீறி ஊடுருவும் எந்த எதிரி விமானமும் சுட்டு வீழ்த்தப்படும் - ஈரான் எச்சரிக்கை...!


Iran will not wage war against any nation but will do everything to defend itself.


ஈரான் இஸ்லாமிய குடியரசு யுத்தமொன்று ஏற்படுவதை ஒருபோதும் விரும்பவில்லை. யுத்தமொன்றை ஆரம்பிக்கும் நாடாக ஈரான் ஒருபோதும் இருக்காது ஆனால், தமது நாட்டையும் இஸ்லாமிய அரசையும் காப்பாற்றுவதற்கு ஈரானிய ராணுவம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது ஈரானிய தலைவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளனர்..
ஈரானின் வான்பரப்பில் அத்துமீறி ஊடுருவிய அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை சில தினங்களுக்கு முன் ஈரான் சுட்டு வீழ்த்தியதை யாவரும் அறிவர். 
இது தொடர்பாக ஈரானிய கடற்படையின் தளபதி கூறுகையில், ஊடுருவும் அமெரிக்க உளவு ட்ரோன் வீழ்த்தப்படுவது அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கையாகும். இந்த அத்துமீறல் தொடருமாயின் எமது பதிலும் இதுவாகவே இருக்கும் எச்சரித்தார்.
"எதிரி அதன் மிக சக்திவாய்ந்த, அதிநவீன உளவு விமானத்தை, தடைசெய்யப்பட்ட எமது வான்பரப்புக்குள் அனுப்பியது. இந்த ஆளில்லா விமானம் நொறுங்கி வீழ்வதை அனைவரும் கண்டனர்" என்று ரியர்-அட்மிரல் ஹொசைன் கன்ஸாதி திங்களன்று கூறினார்.
"இந்த பதிலடி மீண்டும் மீண்டும் தொடரும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், எதிரிக்கும் இது நன்றாகத் தெரியும்" என்று தளபதி கூறினார்.
"அமெரிக்க ட்ரோனுடன், 35 பேருடன் ஒரு அமெரிக்க பி -8 விமானமும் இருந்தது, அதை நாம் எதுவும் செய்யவில்லை" என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவலர் படையின் (ஐஆர்ஜிசி) விண்வெளி பிரிவின் தளபதி அமீர் அலி ஹாஜிசாதே வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த வியாழன் அன்று ஜூன் 20ம் திகதி, இஸ்லாமிய புரட்சி காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) ஈரானின் தெற்கு கடலோர மாகாணமான ஹார்மோஸ்கன் வான்பரப்பில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஊடுருவும் ஆர்.க்யூ -4 ஏ குளோபல் ஹாக் கண்காணிப்பு ட்ரோனை சுட்டு வீழ்த்தியது.
அடுத்த நாள், ஈரானிய இராணுவப் படை, ஈரானின் பிராந்திய கடற்பகுதியில் இருந்து அமெரிக்க உளவு ட்ரோனின் சிதைவுகளை சேகரித்து, காட்சி படுத்தியது.
ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அப்பாஸ் மூசவி, திங்களன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரான் ஊடுருவல்களைத் தடுக்க எப்போதும் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சிறிது நேரத்திலேயே ஈரானை தாக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கி, பிறகு சில நிமிடத்தில் வாபஸ் வாங்கினேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்: எமக்கு பிரச்சினை அவர்கள் சட்டவிரோதமாக எமது பிராந்தியத்துக்குள் அனுப்பிய விமானமே, அதுபோல் எதுவந்தாலும் பதிலடி கொடுக்கும் தயார் நிலையில் நாம் எப்போது இருக்கின்றோம் என்று கூறினார்.
மற்ற நாடுகளுக்கு எதிராக போரை நடத்தப்போவதில்லை என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது, ஆனால் "ஆக்கிரமிப்புகளுக்கு நாங்கள் பதிலளிக்கக்கூடாது என்பதல்ல இதன் அர்த்தம்" என்று அவர் கூறினார்.
எந்த ட்ரோன்களையும் இழக்கவில்லை என்று அமெரிக்கா முதலில் மறுத்தது. ட்ரோன் சுடப்பட்ட துல்லியமான இடத்தின் வரைபடத்தை பகிரங்கப்படுத்திய பின், அமெரிக்கா அதன் ட்ரோன்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டது. அதன் பிறகு ட்ரோன், சர்வதேச வான்வெளியில் குறிவைக்கப்பட்டதாக குற்றம் சாட்டியது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அதிகாரத்தின் கீழ் வாஷிங்டன் ஈரானுடனான பதட்டங்களை அதிகரித்து வருகிறது.
ஈரானுக்கும் ஆறு உலக நாடுகளுக்கும் இடையிலான, ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளித்த அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமேரிக்கா தன்னிச்சையாக விலகியது. அது மட்டுமல்லாமல், ட்ரம்ப் ஈரான் மீது தான்தோன்றித்தனமாக பொருளாதாரத் தடைகளை விதித்துவிட்டு, தன்னுடன் பேச வாருங்கள் என்று அழைத்த வண்ணம் இருக்கின்றார்.
சர்வதேச ஒப்பந்தங்களை மதிக்காத ஒருவருடன் பேசுவதற்கு தயாரில்லை என்று ஈரான் திட்டவட்டமாக கூறியுள்ளது.


No comments:

Post a Comment