The imposed war on Iran
ஈரான் மீது திணிக்கப்பட்ட யுத்தம்
ஆயத்துல்லாஹ் கொமைனி (ரஹ்) அவர்களின் தலைமையின் கீழ் ஈரானில் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்று, ஒன்றரை வருடங்கள் கூட பூர்த்தியாகாதிருந்த நிலையில், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ஈரானுக்கு எதிரான தங்கள் அச்சுறுத்தல்களை அதிகப்படுத்தியிருக்கும் சூழலில், சதாம் {ஹசைன் 1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் திகதி ஈரான் மீது திடுதிப் என்று யுத்தமொன்றைத் தொடுத்தார். 8 ஆண்டுகளாக தொடர்ந்த இந்த யுத்தத்தினால் இரு தரப்பினருக்கும் பாரிய சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்த யுத்தத்தினால் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 1988ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி இமாம் கொமெய்னி, ஐ.நா.வின் யுத்த நிறுத்த தீர்மானத்தை (UN Resolution 598) ஏற்றுக்கொள்ளும் வரை, ஈரான் மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட இந்த வேண்டாத யுத்தம், தொடர்ந்தது.
ஈரானின் அப்போதைய நிலை
புரட்சி வெற்றிபெற்று இஸ்லாமிய அரசு ஒன்றரை வருடங்களைக் கூட பூர்த்தியாக்கி இருக்கவில்லை; அமரிக்க சார்பு ஷாவினால் உருவாக்கப்பட்ட ராணுவ உயர் அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோடியிருந்தனர்; இடதுசாரி ஆயுதக்க குழுவான MKO மற்றும் இதர இடதுசாரி குழுக்களும் நாட்டில் ஆங்காங்கே பல பயங்கரவாத குடுவெடிடிப்பு சம்பவங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தன் இதன் காரணமாக இஸ்லாமிய புரட்சியை முன்னின்று நடத்திய பல உயர் தலைவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்; ஈரானின் புரட்சிகர மாணவர்களினால் அமெரிக்க தூதரகம் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த அமெரிக்க ராஜதந்திரிகள், இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்;. அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது மட்டுமல்லாது, போர் தொடுக்கும் அச்சுறுத்தலை தொடர்ச்சியாக விட்டுக்கொண்டிருந்தார்;. அமேரிக்க யுத்த கப்பல் பாரசீக வளைக்குடாவில் நிலைகொண்டது.
ஷாவின் காலத்தில் அமெரிக்க மயப்படுத்தப்பட்டிருந்த ஈரானிய ராணுவம் முற்றுமுழுதாக அமெரிக்க ராணுவ தளபாடங்களிலேயே தங்கியிருந்தது; சூழவிருந்த அரபு நாடுகளின் தலைவர்களோ இந்த புரட்சியின் தாக்கம் தமது நாடுகளில் தலைகாட்டிவிடக் கூடாது என்பதில் குறியாய் இருந்தது மட்டுமல்லாமல் இஸ்லாமிய புரட்சிக்கு எதிரான தீவிர துர்பிரசாரத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டனர். சதாமின் யுத்த முன்னெடுப்புகளுக்கு சவுதி அறேபியாவும் குவைத்தும் பகிரங்கமாகவே நிதியுதவி வழங்கின. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தியே சதாம் யுத்தத்தை ஆரம்பித்தார்.
ஆரம்ப இழப்புகள்
அபதான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் |
யுத்தத்தின் ஆரம்ப காலங்களில் ஈரான் பல பாரிய இழப்புகளை சந்தித்தது. ஈரானின் வடமேல் பகுதியில் பாரிய நிலப்பரப்புக்களை ஈராக்கிய ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டது, பல முக்கிய நகரங்கள் ஈராக்கிய குண்டுவீச்சினால் அழிக்கப்பட்டன, அபதானில் இருந்த உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நிர்மூலமாக்கப்பட்டது. கடல் மார்க்கமான ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி முற்றுமுழுதாக தடைப்பட்டது. இவ்வாறு சுமார் ஒருவருடகாலம் ஈராக்கின் கை ராணுவ ரீதியில் மேலோங்கியிருந்தது. அமேரிக்கா மற்றும் அனைத்து மேலைத்தேய நாடுகளும் ஈராக்குக்குத் தேவையான எல்லா ராணுவ உதவிகளையும் வழங்கின. அவற்றுடன் ரஷ்யாவும் இணைந்து கொண்டது. அரபு நாடுகள் சதாமுக்கு தாராளமாக நிதிகளை அள்ளி வழங்கின. ஈரானுக்கு ஆதரவாக பகிரங்கமாக குரல் எழுப்பிய முஸ்லிம் நாடுகள் சிரியாவும் லிபியாவும் மட்டுமே.
இக்காலகட்டத்திலேயே சதாம் {ஹசைன் காதிஸிய்யாவின் நவீன நாயகனாக உருவகப்படுத்தப்பட்டார், 'இஸ்லாமிய' இயக்கங்கள் விலைக்கு வாங்கப்பட்டன, இஸ்லாமிய புரட்சி, ஷீ'ஆ புரட்சியாக சாயம் பூசப்பட்டது.
சதாம் ஹுசைன் மட்டுமல்ல, உலகிலுகிலுள்ள அனைத்து இஸ்லாம் விரோத சக்திகளும் ஈரானின் சக்தியை தவறாக எடைபோட்டிருந்தன. ஈரானின் அப்போதைய பலவீனங்களை மட்டும் கருத்தில் கொண்டு, நிலைமையை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த அவர்கள், இஸ்லாமிய புரட்சியினால் உத்வேகம்கொண்டிருந்த ஈரானிய இளைஞர்கள், வீறுகொண்டு எழுவர் என்பதை கணக்கில் எடுத்திருக்கவில்லை.
ஈரானின் பதிலடி
யுத்தகளத்தில் ஆயத்துல்லாஹ் காமெனை |
இஸ்லாத்தையும் இஸ்லாமிய குடியரசையும் பாதுகாக்க உத்வேகம் கொண்ட இளைஞர்கள், ஷீ'ஆ - சுன்னி என்ற வேறுபாடின்றி, ஒன்று திரண்டனர். யுத்தத்தில் அனுபவமற்ற உலமாக்கள் இறைவனில் நம்பிக்கை வைத்து, யுத்தத்தை வழிநடத்தினர். பாரிய ஆயுதங்களுக்கு எதிராகப் போரிடும் புதுப் புது உத்திகளைக் கையாண்டனர். 1982ம் ஆண்டு மே மாதமளவில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அனைத்து பிரதேசங்களில் இருந்தும் ஈராக்கிய ராணுவம் அடித்துத் துரத்தப்பட்டது, ராணுவ ரீதியாக ஈராக் பாரிய இழப்புகளை சந்தித்தது. ஈரான் அன்று இருந்த நிலையில் ஈராக்கிய எல்லைக்குள் புகுந்து தாக்கும் வலிமையை அதன் இளம் ராணுவம் பெற்றுக்கொள்ளும் என்று எவரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
ஈரானிய புரட்சிப் படை வீரர்கள் |
சதாம் ஹுசைன் ஈரானிய ராணுவத்தை தம்மால் சமாளிக்க முடியாது என்பதையும் தனது ராணுவத்தின் நாடி தளர்வதை புரிந்துகொண்டார். சுமார் 120கி.மீ. ஈரானுக்குள் நுழைந்து எண்ணெய் வலமிக்க பாரிய நிலத்தை ஆக்கரமித்த ஈராக்கிய ராணுவம், ஈராக்கிய எல்லைக்குள் நிலங்களை பாதுகாக்க முடியாத நிலையில் தனது ராணுவம் திண்டாடுவதையும் ஈராக்கிய எல்லை உள்நோக்கி சுருங்குவதையும் உணர்ந்தார். எவ்வாறு தன்னிச்சையாக யுத்தத்தை ஆரம்பித்தாரோ, அவ்வாறே 1982ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் திகதி யுத்த நிறுத்தத்தையும் பிரகடனம் செய்தார். ஈரான் இந்த யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சதாம் வீழ வேண்டும், யுத்த சேதங்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும், அதுவரை யுத்தம் தொடரும் என்று உறுதியாய் இருந்தது.
எல்லையைத்தாண்டி ஈரானிய படை முன்னேற்றம் |
ஈரானின் தொடர்ச்சியான பதிலடியை ஈராக்கினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, சதாம் ஹுசைன் சட்டவிரோத ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலானார். குர்டிஸ்தான் ஹலப்ஜா பிரதேசத்தில், ஈ
ராக்கிய ராணுவம் மேற்கொண்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 5,000க்கும் அதிகமான சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். 10,000க்கும் அதிகமானோர் நிரந்தர பாதிப்புகளுக்கு உள்ளாயினர். சிவிலியன் பிரதேசமொன்றில் இந்தளவு ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டது சரிதத்தில் முன்னெப்போதும் நடந்திராத ஒன்று.
ரசாயன ஆயுத தாக்குதல் விளைவு |
இந்த யுத்தம் தமக்கு முன்னால் உள்ள சவால்களை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை ஈரானுக்கு வழங்கியது. உண்மையான நன்பர்கள் யார் என்பதையும் எதிரிகள் யார் என்பதையும் அறிந்துகொள்ளும் சந்தர்பத்தையும் வழங்கியது. மத்திய கிழக்கில் இராணுவ வல்லமைகொண்ட நாடாக ஈரான் தன்னை வளர்த்துக் கொண்டது. இமாம் கொமைனியின் தலைமையில் வெற்றிபெற்ற இஸ்லாமிய புரட்சியைத் தொடர்ந்து உலக முஸ்லிம்கள் மத்தியில் இராணுவ வல்லமை கொண்ட நாடாக ஈரான் மட்டுமே தென்பட்டது.
இந்த யுத்தத்தில் ஈரான் பெற்றுக்கொண்ட வெற்றியின் காரணமாக மத்திய கிழக்கில் அமெரிக்காவை எதிர்க்கக் கூடிய முதுகெலும்புள்ள இஸ்லாமிய தலைவராக இமாம் கொமைனி மட்டுமே காணப்பட்டார். இதனால் உலக முஸ்லிம்கள் மத்தியில் இமாம் கொமைனிக்கு வரவேற்பு அதிகரித்தது. இஸ்லாமிய உலகில் இமாம் கொமைனிக்கு கிடைத்த செல்வாக்கினால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, ஈரான் மீது சீயா முத்திரை குத்தப்பட்டு ஈரானை இஸ்லாமிய உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்த இந்த அரபு நாடுகள் சதிகளை மேற்கொண்டது.
ஈரானின்; இராணுவ பலத்தினையும், இஸ்லாமிய உலக அரங்கில் அதற்கு கிடைத்த செல்வாக்கினையும் பொறுத்துக்கொள்ள முடியாத அரபு உலகமும், அமெரிக்காவும் அதனை அழிக்க திட்டம் தீட்டியது. ஆனால் இஸ்லாமிய ஈரானின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இன்னும் சோதனை காலம் முடிவடையவில்லை... அமேரிக்காவும் இஸ்ரேலும் சவுதி அறேபியா போன்ற பிற்போக்கு சக்திகளும் இஸ்லாமிய ஆட்சியை வீழ்த்;தும் முயற்சியை இன்னும் கைவிடவில்லை. இந்த பிற்போக்கு சக்திகள் அனைத்தும் நல்ல பாடம் ஒன்றை வெகு சீக்கரமே கற்றுக்கொள்ளும்... இன் ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment