Who is Yahya Sinwar, the artist behind Operation Al-Aqsa Flood?
By Sammy Ismail
அறிமுகம்
பாலஸ்தீனத்தின் அண்மைக்கால அரசியல் நிகழ்வுகளையும் ஆளுமைகளையும் அணுகுவதற்கான ‘அழகியல்’
ஒரு பொருத்தமற்ற கோட்பாட்டுச் சட்டகமாகக் கருதப்படுவது நியாயமானதே. இருப்பினும், யஹ்யா சின்வார் குறித்து எழுத முடிவு செய்தபோது, இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய ஊடகங்களால் அவர் எதிர்கொள்ளும் அவதூறு பிரச்சாரத்தின் பின்னணியில் சின்வாரின் போற்றத்தக்க மற்றும் பிரமிப்பூட்டும் தன்மையை கவனத்திற்குக் கொண்டுவர அழகியலைத் தேர்ந்தெடுத்தேன்.
பல பாலஸ்தீனிய கலைஞர்களைப் போலவே சின்வார் தனது மக்களின் விடுதலையை ஒரு அழகான சட்டகத்தில் போற்றத்தக்க வகையில் வென்றெடுக்கிறார். இருப்பினும், மற்றவர்களுக்கு மாறாக, சின்வார் மிகவும் நடைமுறை மற்றும் பொருள்முதல்வாத விளைவு கொண்ட கலைஞர். அவரது தலைசிறந்த படைப்பு ஒரு கவிதை அல்லது ஓவியம் அல்ல, ஆனால் நிகழ்நேரத்தில் ஒரு புரட்சி. யஹ்யா சின்வாரை ஒரு கலைஞராகவும், அல்-அக்ஸா வெள்ளத்தை அவரது தலைசிறந்த படைப்பாகவும் நான் நினைக்கிறேன்.
யஹ்யா அல்-சின்வார் அல்-அக்ஸா வெள்ளம்
காஸா மீது திணிக்கப்பட்ட சியோனிச முற்றுகையை உடைத்தெறிந்து, அவற்றின் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த உயர் தொழில்நுட்ப இஸ்ரேலிய பாதுகாப்பு நடவடிக்கைகளை இளம் போராளிகள் மீறிய காலனித்துவ அரசின் வரலாற்றில் அக்டோபர் 7 என்றென்றும் ஒரு திருப்புமுனை
தருணமாக குறிக்கப்படும்.
பிரெஞ்சு செய்தி வலைத் தளமான மீடியா பார்ட்(Media Part)டின் மதிப்பீடுகளின்படி, வெறும் 6 மணி நேர இடைவெளியில், எதிர்ப்புப் போராளிகள் காலனித்துவ அரசின் மீது பேரழிவு தரும் அழிவை ஏற்படுத்த முடிந்தது, 1000 பேரை செயலிழக்கச் செய்து, 2,000 க்கும் அதிகமானோர் காயத்துக்கொள்ளாக்கி, நூற்றுக்கணக்கானவர்களை சிறைப்பிடித்தனர்.
"இந்த அருவருக்கத்தக்க தாக்குதலை யஹ்யா சின்வார் திட்டமிட்டார்" என்று இஸ்ரேலிய ராணுவ தலைமை அதிகாரி ஹெர்ஸி ஹலேவி இந்த நடவடிக்கைக்கு சிறிது நேரத்திற்கு பிறகு கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில்
ராய்ட்டர்ஸ் எழுதிய ஒரு அறிக்கை, 2022
ஆம் ஆண்டில் சின்வார் ஆற்றிய உரையை நினைவுபடுத்துகிறது, இது அவரது வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளத்தின் நிகழ்வுகளை வினோதமாக முன்னறிவிக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 14 அன்று, ஹமாஸ் ஸ்தாபிக்கப்பட்ட 35 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஒரு பிரபலமான விழாவின் போது, காஸாவில் உரையாற்றிய சின்வார், வரவிருக்கும்
"வெள்ளம்"
குறித்து இஸ்ரேலியர்களை குறிப்பாக அச்சுறுத்தினார்.
இந்த உரை நிகழ்த்தப்பட்ட நேரத்தில், சின்வார் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளின் தளபதி முகமது அல்-தயிபுடன் இணைந்து அக்டோபர் 7 ஒப்பரேஷனுக்கான இரகசிய திட்டங்களை ஏற்கனவே தீட்டியிருந்ததாக ராய்ட்டர்ஸ் குறிப்பிடுகிறது.
பின்னோக்கிப் பார்க்கையில், வெற்று அச்சுறுத்தல்கள் மற்றும் மிகைப்படுத்தல்கள் என்று விளங்கிக்கொள்ளப்பட்ட
சின்வாரின் உரை, உடனடி நடவடிக்கை
குறித்த ஒரு எச்சரிக்கையாக மாறியது. இஸ்ரேலிய ஸ்தாபனம் அதை ஒரு மிகைப்படுத்தல்
என்று தவறாக விளக்கியது.
யஹ்யா சின்வார்:
புரட்சியும் ஆயுதப் போரும்
ஒரு இளம் புரட்சியாளராக ஆரம்ப நாட்கள்
சின்வார் கடலோர நகரமான அஸ்கலானைச் சேர்ந்தவர், அதன் பூர்வீக பாலஸ்தீனிய மக்கள் ஸியோனிஸ்ட்டுகளால் வெளியேற்றப்படுவதற்கு
முன்னர் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டவர்களாக இருந்தனர்.
1948 ஆம் ஆண்டு நக்பாவில் வலுக்கட்டாயமாக
இடம்பெயர்ந்த அகதிகளாக தஞ்சமடைந்த பெற்றோருக்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ்
முகாமில் யஹ்யா சின்வார் பிறந்தார். யஹ்யா தனது ஆரம்ப ஆண்டுகளிலிருந்தே அரசியல்
நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு இளங்கலை பட்டதாரியாக, அவர் காஸா இஸ்லாமிய
பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய முகாமை வழிநடத்தினார், அங்கு அவர் அரபு ஆய்வுகளில் இளங்கலை பட்டம்
பெற்றார்.
1982 ஆம் ஆண்டில், சின்வார், தனது 19 வயதில், புரட்சிகர சியோனிச எதிர்ப்பு நடவடிக்கையில்
ஈடுபட்டதற்காக முதல் முறையாக கைது செய்யப்பட்டார். அவர் இஸ்ரேலிய சிறைகளில் சில
மாதங்கள் இருப்பார், அங்கு அவர் பாலஸ்தீனிய புரட்சிக்கு இன்னும் அதிகமாக
அர்ப்பணிப்புடன் இருப்பார். சக கைதிகளுக்கு புரட்சிகர சிந்தனையை ஊட்டிக் கொண்டும்
இருப்பார்.
இஸ்ரேலிய சிறைகளில் சில மாதங்கள் கழித்த பின்னர், சின்வார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்ற பாலஸ்தீனிய புரட்சியாளர்களை சந்தித்த பின்னர் மிகவும் அர்ப்பணிப்புடனும் சிறந்த தொடர்புடனும் சிறையை விட்டு வெளியேறினார்.
1985ல் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இஸ்ரேலிய சிறைகளில் அவரது இரண்டாவது தண்டனை காலத்தின் போது, ஹமாஸ் அமைப்பின்
நிறுவனரும் தலைவருமான ஷேக் அஹ்மத் யாசினை அவர் சந்தித்தார். - இந்த சண்டதிப்பிற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு
ஹமாஸ் நிறுவப்படுகிறது. - அதனைத் தொடர்ந்து யாசினுடனான அவரது நெருக்கம்
அவருக்கு ஒரு கௌரவ ஒளிவட்டத்தை வழங்கியது மற்றும் ஹமாஸின் அணிகளுக்குள் அவர்
உயர்வதற்கு வழிவகுப்பதாயும் அமைந்தது.
1985 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விடுவிக்கப்பட்டவுடன், சின்வார் அரசியல் ஒழுங்கமைப்பில் விரிவாக பணியாற்றினார்: தனது செயல்பாட்டை ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுத நடவடிக்கையாக
உயர்த்தினார். அந்த ஆண்டு சின்வார் அல்-மஜ்த் அமைப்பை நிறுவினார். பின்னர் ஹமாஸுடன் இணைந்த இந்த ஆயுதக் குழு, காஸாவை துரோகிகளிடமிருந்து விடுவிக்க அர்ப்பணிக்கப்பட்டது. சின்வார் தலைமையில் அல்-மஜ்த் குழு
எதிரியினால் அமர்த்தப்பட்டுள்ள உள்ளூர் உளவாளிகளைப் கண்டு பிடித்து உரிய தண்டனை
வழங்கும்.
காஸாவை எதிர்ப்பின் கோட்டையாகவும், பாலஸ்தீன விடுதலைக்கான புள்ளியாக பலப்படுத்தும் வியூகத்தின் தி ஒருங்கமைக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக சின்வாரின் பாதுகாப்புப் பணிகள் இருந்தன.
1988 ஆம் ஆண்டில், 25
வயதில், சின்வார் காஸாவில் இஸ்ரேலிய உளவு மற்றும் நாசகார நடவடிக்கைகளை
முறியடித்ததற்காக மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
இஸ்ரேலிய சிறைகளில் சின்வாருக்கு 23 ஆண்டு சிறை
விடுதலை இயக்கத்தின் நடைமுறையில் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்ட யஹ்யா சின்வார் தனது இளமைப் பருவத்தின் முக்கிய நாட்களை இஸ்ரேலிய சிறைகளில் கழித்தார்.
\வரலாற்றின் விரைவான கட்டவிழ்வு, 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் சிதைவு, அமெரிக்க மேலாதிக்கத்தின் மெதுவான ஒருங்கிணைப்பு, 2000 இல் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்பு, 2003 இல் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு, 1993 இல் PLO வை செயலிழக்கச் செய்த ஒஸ்லோ ஒப்பந்தங்கள் மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களின் அடுத்தடுத்த பெருக்கம் ஆகியவற்றை அவர் தொலைவிலிருந்து கண்டார்; இவை அனைத்தும் அவரது புரட்சியின் நடைமுறையை மீண்டும் தொடங்க அமைதியின்மையால் அவரை கோபப்படுத்தியிருக்க வேண்டும்..
அதற்கேற்ப, 2000 இல் தெற்கு லெபனானின் விடுதலை, 2005 இல் காஸா விடுதலை, 2006
இல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான லெபனான் எதிர்ப்பின் வெற்றி, பிராந்திய எதிர்ப்பு அச்சு கூட்டணி, முதலாவது இன்திபாதா மற்றும் இரண்டாவது இன்திபாதா ஆகியவற்றின் ஒருங்கிணைப்பையும் அவர் கண்டார், இது அவரது புரட்சியின் நடைமுறைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஆர்வத்துடன் அவரை உற்சாகப்படுத்தியிருக்க வேண்டும்.
கூடுதலாக, 2006 இல் காஸாவில் நிலைப்பாட்டை மாற்றிய ஹமாஸ் தேர்தல் வெற்றி, அவர் நீண்டகாலமாக உழைத்த ஒரு மூலோபாய முடிவு நிறைவேறுவதைக் காணும் ஒரு வெற்றியாளரின் திருப்தியால் அவர் நிரம்பியிருக்க வேண்டும்; அதாவது காஸாவை எதிர்ப்பின் கோட்டையாக பலப்படுத்தியதன் இடைப்பட்ட வெற்றி.
விடுவிக்கப்பட்ட கைதி முதல் கைதிகளை விடுவிப்பவர்
வரை
2011 ஆம் ஆண்டில், பாலஸ்தீனிய எதிர்ப்புக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் சின்வார் 1,027 பேர் கொண்ட ஒரு குழுவுடன் விடுவிக்கப்பட்டார்.
காஸா நகரில் தனது தாயகம் திரும்பும் கொண்டாட்டங்களின் போது, சின்வார் இஸ்ரேலிய சிறைகளில் மீதமுள்ள அனைத்து கைதிகளையும் கிளர்ச்சியாளர்கள் விடுவிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
ஹமாஸில் சேர்ந்த பிறகு, அவர் விரைவாக அணிகளில் உயர்ந்தார், 2017 இல் இஸ்மாயில் ஹனியேவுக்கு பதிலாக காஸாவின் அரசியல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இஸ்ரேலிய சிறைகளில் மிக நீண்ட காலம் சிறையில் இருந்த பாலஸ்தீனிய கைதிகளில் ஒருவரான யஹ்யா சின்வார்,
இன்று தனது புரட்சிகர சகோதர சகோதரிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை முன்னின்று நடத்தினார்.
2007ல் கடத்தப்பட்ட ஒரு இஸ்ரேலிய சிப்பாய்க்கு ஈடாக 1,027 ஏனைய பாலஸ்தீனியர்களுடன் சேர்ந்து விடுவிக்கப்பட்ட சின்வார், பின்னர் அவர் உயிர்த்தியாகம் செய்யும் வரை காஸாவில் சிறைபிடிக்கப்பட்ட பல இஸ்ரேலிய சிப்பாய்கள் மற்றும் குடியேற்றக்காரர்களுக்கு பொறுப்பாக இருந்தார்.
அப்போதைய நெத்தன்யாகுவின் 2017 அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்ட இஸ்ரேலிய சிறைகளை விட்டு வெளியேறிய ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், அனைத்து பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்க நெத்தன்யாகு மற்றும் அவரது போர் அமைச்சரவைக்கு எதிராக அவரால் அழுத்தம் கொடுக்க முடிந்தது.
இஸ்ரேலிய சிறைகளில் எஞ்சியிருந்த அனைத்து பாலஸ்தீனிய கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று விரும்பிய பின்னர், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், சின்வார் திட்டத்தை வரைந்து, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் சிறையில் அடைக்கப்பட்ட கடைசி பாலஸ்தீனியரையும் விடுவிப்பதற்கான நிபந்தனைகளை அமல்படுத்தினார்.
2018 ஆம் ஆண்டில், காஸா மீதான முற்றுகையை அமைதியாக உடைக்கும் முயற்சியில் சின்வார் கிரேட் மார்ச் ஆஃப் ரிட்டர்னுக்கு (Great March of Return) தலைமை தாங்கினார், மேலும் அமைதியான எதிர்ப்பாளர்களை படுகொலை செய்யும் மிருகத்தனமான இஸ்ரேலிய படையை சந்தித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சின்வார் அல்-அக்சா வெள்ள நடவடிக்கைக்கு தலைமை தாங்கி முற்றுகையை வெற்றிகரமாக உடைத்தார்.
2024 ஆம் ஆண்டில், ஜூலை 31 அன்று தெஹ்ரானில் இஸ்ரேலிய தாக்குதலில் இஸ்மாயில் ஹனியே தியாகியானதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக ஹமாஸின் அரசியல் பணியகத்தை வழிநடத்த சின்வார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தனது ஆயுதத்தைப் பயன்படுத்தி, காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளை தைரியமாக எதிர்கொண்டபோது, யஹ்யா சின்வார் அக்டோபர் 17, 2024 அன்று ஷஹீதாக்கப்பட்டார். நீதி மற்றும் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் பல ஆண்டுகளாக அவர் போராடிய எதிர்ப்பு உணர்வின் உருவகமாக அவர் சக போராளிகளுடன் வீழ்ந்தார். தனது கடைசி மூச்சு வரை ஆக்கிரமிப்புக்கு அடிபணிய உறுதியாக மறுத்து, சின்வார் ஒரு சுதந்திர மனிதனாக தியாகியானார்.
https://english.almayadeen.net/news/politics/who-is-yahya-al-sinwar-the-artist-behind-operation-al-aqsa-f
No comments:
Post a Comment