Thursday, March 30, 2023

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஆண்-பெண் உறவு...!

Male-Female relationship from the view point of Islam

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை குறிக்குமுகமாக கடந்த மார்ச் 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட "பெண்களின் உரிமைகள் - கிழக்கிலும் மேற்கிலும்" என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசில் இருந்து வருகை தந்த டாக்டர் ஸாஹிரே மிர்ஜாபரி அவர்களின் உரையின் ஒரு பகுதியை இங்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

Dr. Zahere Mirjafari

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில், கணவன்-மனைவி இடையே உண்மையான ஒற்றுமை மற்றும் நெருக்கத்தை உருவாக்க, அவர்களின் உள்ளுணர்வு மற்றும் இயற்கை வேறுபாடுகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது, மேலும் இந்த வேறுபாடுகளின் அடிப்படையில், கணவன்-மனைவிக்கான உரிமைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பு ஆண் மீது சுமத்தப்படுவதன் காரணமாக குடும்பத்தின் முக்கிய அந்தஸ்து அவருக்கு வழங்கப்பட்டு, குடும்பத்திற்காக செலவுசெய்யும் கடமை அவன் மீதே சுமத்தப்பட்டுள்ளதால் நியாயத்தையும் மதிக்கும் வகையில் குடும்பத்தலைவன் என்ற அந்தஸ்தும் கணவனுக்கு வழங்கப்படுகிறது.

ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தில் இந்த வேறுபாடுகள் புறக்கணிக்கப்பட்டு ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் உள்ளது என்ற மாயை உலவுகிறது. இந்த எண்ணக்கருவானது, சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளில், பெண்களின் உரிமைகளை ஆதரிப்பதற்காக என்று கூறப்பட்டாலும், அது பெண்களின் உளவியல் தேவைகளுக்கு பதிலளிக்கவில்லை என்பது யதார்த்தமாகும்; குறிப்பாக நோய், கர்ப்பம், பிரசவம் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் போது நிலையான மற்றும் நம்பகமான ஆதரவைப் பெறுவது போன்றவை. ஆண்கள் துணையின்றி இவற்றை அடைவது கடினமாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தனது வாழ்க்கைத்துணை தன்னுடன் இருப்பதை பெரும் பலமாக பெண்கள் கருதுகின்றார்கள். அதுமட்டுமல்லாமல், தன்னை பராமரிக்க பக்கத்தில் நம்பிக்கைக்குறிய ஒருவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை, பெண்களை மன அழுத்தத்தில் இருந்து விடுபட செய்கிறது.

ஆனால், மேற்கை உதாரணமாக கொண்டியங்கும் பெண்ணியவாதிகளின் பார்வையில், பெண் சுதந்திரம் என்பது வரையறையற்ற ஒன்றாக இருக்கின்றது. ஆணோ அல்லது பெண்ணோ தனித்தியங்க முடியாது என்ற யதார்த்தம் இங்கு சவாலுக்கு உற்படுத்தப்படுகிறது. மேற்குலகில் பெண்கள் சட்டத்தின் அடிப்படையில் தாயாக, மனைவியாக இருப்பர், என்றாலும் அவர்களுக்கிடையில் வாஞ்சையுடனான குடும்ப பிணைப்பு இருப்பது அபூர்வம்.

திருமண பந்தத்திற்கு அப்பால் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் எந்த தப்பும் கிடையாது என்று மேற்கின் நவீன கலாசாரம் கருதுகிறது. இதன் விளைவாக கருக்கலைப்பு கூட பெண்களின் சுதந்திரம் என்று கருதப்படுகிறது, இது இறுதியில் உடல்ரீதியான, உளரீதியான சிக்கல்கள் மற்றும் தனிமை, அதிர்ச்சி மற்றும் பெண்களுக்கு எதிரான உளவியல் வன்முறைக்கு வழிவகுக்கிறது என்பதை அவர்கள் அறியாதிருக்கின்றனர். இதன் விளைவாக, குடும்பம் என்ற அமைப்பு ஆன்மா இல்லாத ஒரு நிறுவனமாகவும் மிகவும் வறண்ட மற்றும் இலகுவில் உடைந்து நொறுங்கக்கூடிய ஒன்றாக மாறுகிறது; மேலும் கணவன் மனைவிக்கிடையில் ஏற்படும் சிறிய பிணக்கு கூட குடும்பம் சிதைவதற்கு காரமாக அமைந்து விடுகிறது.

இஸ்லாத்தின் பார்வையில், கணவன் மனைவி ஆகிய இருவரினதும் அர்ப்பணிப்பு குடும்ப வாழ்க்கைக்கு  இன்றியமையாதது. குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் குழந்தைகளின் பாதுகாப்பில் உளவியல் ரீதியாக பெரும் தாக்கம் செலுத்துவது போல் அவர்களது கல்வியிலும் தாக்கம் செலுத்துகிறது. எனவே, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிந்துணர்வுடன் வாழ்வதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே கட்டுப்பாடற்ற கலப்பு மற்றும் தொடர்பு சுதந்திரம் பாலியல் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் அதிகரிக்க செய்யும் காரணிகளாகும். பாலியல் உணர்வு என்பது ஒரு உள்ளுணர்வு, அந்த உணர்வுக்கு மனித மனம் எவ்வளவு அதிகமாகக் கீழ்ப்படிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு கிளர்ச்சியாக மாறும், மேலும் அது ஓர் எரியும் நெருப்பாகும். அதற்கு தீனி போடப்போட அது கொழுந்துவிட்டு எரியும். இவ்வாறான ஆசைகள் நிறைவேறாத பட்சத்தில், சிலர் வன்முறையாளர்களாக மாறுவதும் உண்டு; சில சந்தர்ப்பங்களில் அது சிலரை மனநோயாளர்களாகவும் ஆக்கிவிடுகிறது. எனவே இவ்வாறான விளைவுகளைத் தடுப்பதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் சில கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதித்துள்ளது; இரு சாராரும் தம் கற்பைப் பாதுகாக்க இஸ்லாம் கட்டளை இடுகிறது. கற்பொழுக்கம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

எப்படியும் வாழலாம் என்ற மேற்குலக கலாசாரம் பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் வன்முறையை அதிகரிப்பதோடு குடும்ப உறவுகளில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்துகிறது; மாறாக, முறையான திருமணத்தின் பின்னணியில் பாலியல் இன்பங்களை அனுபவிப்பது கணவன்-மனைவி இடையேயான பிணைப்பை பலப்படுத்துகிறது மற்றும் இளம் ஜோடிகளை ஒன்றாக இணைக்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாலியல் தொடர்பான இஸ்லாமிய விதிமுறைகளை, நீதியின் அடிப்படையிலான தார்மீக மற்றும் சட்டப் பரிமாணங்களின் உண்மையான ஒரு முறையான மற்றும் பன்முகத் தன்மை கொண்ட தொகுப்பாகக் கருதப்பட வேண்டும், அதாவது மனிதனின் தனிப்பட்ட, சமூக மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிக்காக இஸ்லாம் பல்வேறு கோணங்களில் இருந்து நோக்குகிறது. மற்றும் பெண்களின் மகிழ்ச்சி மற்றும் முழுமை என்பது குடும்ப பந்தத்தில் இருந்து விடுபடுவதால் ஏற்படுவதல்ல. எனவே, தம்பதிகளின் குடும்ப உறவில், தார்மீக பரிந்துரைகளுடன் சட்ட விதிகள் வகுக்கப்பட்டு தீர்க்கமானவையாக கருதப்படுகின்றன.

உதாரணமாக, ஒரு ஜோடியின் உரிமைகளில் ஒன்று கீழ்ப்படிதல் என்பதாகும். இங்கு பொதுவான புரிதல் என்னவென்றால் குடும்பத்தின் மீது ஆணின் தலைமைத்துவத்தை பெண் ஏற்றுக்கொள்கிறாள், மேலும் விசேஷ சமர்ப்பணம் என்பது கணவனது நியாயமான திருப்திக்காக மனைவி எப்போதும் தன்னைத்தானே தயாராக வைத்துக்கொள்கிறாள், இன்னும் அதற்கு குறிப்பிட்ட நேரம் என்றோ, இடம் என்றோ மற்றும் தரம் என்றோ எதுவுமே கிடையாது. இந்த பாலியல் உரிமை திருமண ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும், இது திருமணத்தின் நோக்கத்தை நிறைவுசெய்கிறது, மேலும் மனைவி பாலியல் சமர்ப்பிப்பிலிருந்து தன்னை தடை செய்து கொள்வது திருமணத்தின் தன்மைக்கு எதிரானது என கருதப்படுகிறது.

உண்மையில், மனைவியின் உரிமைகள் மற்றும் கடமைகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கையின்படி, திருமண ஒப்பந்தத்தின் இந்த நிபந்தனையை அவள் ஏற்றுக்கொள்கிறாள், ஆனால் எந்தவொரு பாலியல் வன்முறையையும் பெண்ணின் உடல் மற்றும் உளரீதியான துன்புறுத்தலையும் செய்ய ஆணுக்கு அதிகாரம் இருப்பதாக இங்கு அர்த்தம் கொள்ளப்பட கூடாது. உண்மையில், இஸ்லாத்தின் பார்வையில், சமர்ப்பணம் என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல, தம்பதிகள் ஒருவருக்கொருவர் பாலியல் தேவைகளின் போது உளவியல், ஆன்மீகம் மற்றும் உடல் நிலைகளை கருத்தில் கொள்ள வேண்டும். உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், சமீபத்தில் மேற்கத்திய நாடுகளின் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைக் கையாள்வதற்காக இயற்றப்பட்டதாகக் கருதப்படும் திருமண வன்புணர்வு என்ற ஒன்று சட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது., உண்மையில் வரம்பற்ற தனிமனித சுதந்திரம் மற்றும் தனி மனித சொத்துக் கொள்கைகளில் இருந்து உருவானது. இதனால் குடும்பம் என்ற கட்டமைப்பு தகர்க்கப்படுகிறது. மேலும், இவ்வாறான சட்டங்கள் குடும்பம் என்ற கருத்தாக்கத்தின் புனிதத்தன்மையை கெடுத்து, அனைத்து வகையான சகவாழ்வையும் இல்லாதொழித்து பாலியல் வன்முறைக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது, மேலும் குடும்ப நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத போது மற்றும் குடும்பத்திற்குள் நிலையான மதிப்புகளிலிருந்து விலகி இருக்கும்போது, சட்ட விதிகள் மூலம் அவற்றைத் தடுக்க முடியாது.

Wednesday, March 22, 2023

புனித ரமலான் மாத ஆன்மீகத் தென்றல் அனைவரையும் அரவணைக்கிறது

The spiritual breeze of the holy month of Ramadan embraces everyone

இந்த ஆண்டு, இயற்கையின் வசந்தமும் ஆன்மீகத்தின் வசந்தமும் ஒன்றாக வருகிறது - ஈரானிய புத்தாண்டும் ரமலான் மாதமும். வசந்த காலத்தைப் பொறுத்தவரை, வசந்த காற்றிலிருந்து ஒருவர் தனதுடலை மறைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. இதேபோல், ரமழானின் ஆன்மீக வசந்தத்தைப் பொறுத்தவரை, இந்த வாக்கியத்தையும் நாம் கடைபிடிக்க வேண்டும். [நபி (ஸல்) அவர்கள்]: "உண்மையில், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மணம் வீசும் காற்றுகளை எதிர்கொள்கிறீர்கள், அவற்றுக்கு உங்களை வெளிப்படுத்துங்கள்" என்று கூறினார்கள். ஆகவே, புனித ரமலான் மாத ஆன்மீகத் தென்றல் அனைவரையும் அரவணைக்கிறது, அதற்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

புனித ரமலான் மாதத்தின் வருகை முஸ்லிம்களுக்கு ஒரு சிறந்த ஈத் ஆகும், மேலும் இந்த மாதத்தின் வருகையை இறை பக்தியுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துவதும், இந்த மாதத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு ஒருவருக்கொருவர் ஆலோசனை கூறுவதும் பொருத்தமானது.


பிரபல பாரசீக இறையியலாளர் ஷேக் சதூக் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொகுத்த "உயூன் அக்பர் அர்-ரெஸா" என்ற கிரந்தத்தில்இமாம் ரெஸா (அலை) தனது கண்ணியமிக்க மூதாதையர்களின் அதிகார சங்கிலி தொடருடன்  இமாம் அலி (அலை) அவர்களை ஆதாரம் காட்டிஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதம் தொடர்பாகநபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹீ வஸல்லம்) அவர்கள் மக்களை நோக்கி பின்வரும் பிரசங்கத்தை செய்தார் என்று விவரிக்கப்பட்டுள்ளது:

ரமழான் மாதம் தொடர்பாகநபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹீ வஸல்லம்):

"மக்களே! அல்லாஹ்வின் மாதம் அதன் கருணை, ஆசீர்வாதம் மற்றும் மன்னிப்புடன் வந்துள்ளது. அல்லாஹ் இந்த மாதத்தை எல்லா மாதங்களை விடவும் சிறந்தது என்று அறிவித்துள்ளான்; அதன் நாட்கள் எல்லா நாட்களை விடவும் சிறந்தது, அதன் இரவுகள் எல்லா இரவுகளை விடவும் சிறந்தது, அதன் நேரங்கள் எல்லா நேரங்களை விடவும் மிகச் சிறந்தது.

அவன் உங்களை இம்மாதத்தில் (நோன்பு நோற்கவும் மற்றும் இறைவணக்கத்தில் ஈடுபடவும்) அழைக்கின்றான்; அதில் அவன்  உங்களை கண்ணியப்படுத்துகிறான். அதில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு சுவாசத்திற்கும் தஸ்பீஹ் (அல்லாஹ்வைப் புகழ்வது) செய்யும் பலன் உண்டு; உங்கள் உறக்கமும் வழிபாடாகும், உங்கள் நல்ல செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, உங்கள் வேண்டுதல்களுக்கு பதிலளிக்கப்படுகின்றன.

ஆகையால், பாவத்திலிருந்தும் தீமையிலிருந்தும் விடுபட்ட இருதயங்களுடன் உங்கள் இறைவனை நீங்கள் சரியான முறையில் இறைஞ்சவேண்டும், மேலும் நோன்பை உரியமுறையில் கடைப்பிடிக்கவும், குர்ஆனை ஓதவும் அல்லாஹ் உங்களுக்கு உதவும்படி கேட்க வேண்டும்.

உண்மையில், இந்த மாபெரும் மாதத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை இழந்தவர் பரிதாபகரமானவர். நோன்பு இருக்கும்போது, நியாயத்தீர்ப்பு நாளின் பசியையும் தாகத்தையும் காட்சிப்படுத்துங்கள். ஏழைகளுக்கும் தேவை உடையோருக்கு தர்மம் செய்யுங்கள்; உங்கள் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள், உங்கள் இளையவர்களுக்கு பரிவு காட்டுங்கள், உங்கள் உற்றார் உறவினர்களிடம் அன்பு செலுத்துங்கள்.

தகுதியற்ற வார்த்தைகளில் இருந்து உங்கள் நாவைக் காத்துக்கொள்ளுங்கள்; காணக்கூடாத (தடைசெய்யப்பட்ட) காட்சிகளில் இருந்து உங்கள் கண்களை தடுத்துக் கொள்ளுங்கள்; மற்றும் கேட்கக்கூடாதவற்றில் இருந்து உங்கள் காதுகளையும் காத்துக்கொள்ளுங்கள்.

அனாதைகளிடம் கருணை காட்டுங்கள், இதனால் உங்கள் குழந்தைகள் அனாதைகளாக மாறினால் அவர்களும் கருணையுடன் நடத்தப்படுவார்கள்.

உங்கள் பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மனம் திருந்தி மன்னிப்பு கோருங்கள்., தொழுகை நேரங்களில் உங்கள் கைகளை உயர்த்தி  வேண்டிக்கொள்ளுங்கள், இவை மிகச் சிறந்த நேரங்கள், அந்த நேரத்தில் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் தன் அடியார்களை கருணையுடன் பார்க்கிறான்; அவர்களின் வேண்டுதலை ஏற்றுக்கொள்கிறான்; அவர்களின் அழைப்புக்கு பதிலளிக்கிறான்; அவர்கள் கேட்டால் தாராளமாக வழங்குகிறான்; அவர்களின் மன்றாட்டத்தை ஏற்றுக்கொள்கிறான்.”

"மக்களே! உங்கள் மனசாட்சியை உங்கள் ஆசைகளின் அடிமையாக ஆக்கியுள்ளீர்கள். மன்னிப்புக்காக அவனை அழைப்பதன் மூலம் அதை விடுவியுங்கள்.

உங்கள் பாவச்சுமை காரணமாக உங்கள் முதுகு உடைந்து போகிறதுஎனவே அவனுக்கு முன்பாக நீண்ட நேரத்துக்கு ஸஜ்தா செய்து, அதை இலகுவாக்குங்கள். தொழுகையையும்ஸஜ்தாவையும் செய்யும் அத்தகைய நபர்களை அவன் கஷ்டங்களுக்கு உள்ளாக்க மாட்டான் என்று அல்லாஹ் தனது மாட்சிமை மற்றும் கௌரவத்தின் பெயரில் வாக்குறுதி அளித்துள்ளான்.

நியாயத்தீர்ப்பு நாளில் அவன் அவர்களின் உடல்களை நரகத்தின் நெருப்பிலிருந்து பாதுகாப்பான் என்பதை  முழுமையாக புரிந்து கொள்ளுங்கள்.

"மக்களே! உங்களிடமிருந்து எவரேனும் எந்த விசுவாசிகளின் இப்தார் (சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நோன்பை முடிப்பதற்கான உணவு) ஏற்பாடு செய்தால்அல்லாஹ் அவன் / அவள் ஒரு அடிமையை விடுவித்ததைப் போன்றதொரு வெகுமதியைக் கொடுப்பான்முந்தைய பாவங்களை அவன் மன்னிப்பான்.

அவர்கள் மத்தியில் இருந்த ஒருவர்  "ஆனால் நம்மிடையே உள்ள அனைவருக்கும் அவ்வாறு செய்யும் வசதி இல்லையே" என்று சொன்னபோது: நபி (ஸல்) அவரை  நோக்கி: "நரகத்தின் நெருப்பிலிருந்து (இப்தாரை வழங்குவதன் மூலம்) உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்வேறு எதுவும் இல்லையென்றால் உங்களிடமுள்ள பேரீத்தம் பழத்தின் பாதியாகவோ அல்லது கொஞ்சம் தண்ணீராகக் கூட அது இருக்கலாம்” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தனது பிரசங்கத்தின் தொடர்ச்சியாக இவ்வாறு கூறினார்:

"மக்களே! இந்த மாதத்தில் நல்ல பழக்கவழக்கங்களை வளர்க்கும் எவரும்கால்கள் நழுவும் நாளில்சிராத் (நரகத்தின் விளிம்பு வழியாக சொர்க்கத்திற்கு செல்லும் பாலம்) மீது நடப்பார்கள். இந்த மாதத்தில் (கஷ்டப்படுத்தாமல்) தமது ஊழியர்களிடமிருந்து இலகுவான வேலையை எடுத்துக் கொள்ளும் எவருக்கும் அல்லாஹ் தனது கணக்கை எளிதாக்குவான். அம்மாதத்தில் மற்றவர்களைத் தொந்தரவு செய்யாத அவனை / அவளை நியாயத்தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவனது கோபத்திலிருந்து பாதுகாப்பான். எவரேனும் ஒரு அனாதையை மரியாதையுடன் மதித்து நடத்துகிறார்களோஅந்த நாளில் அல்லாஹ் அவனை / அவளை தயவுடன் பார்ப்பான்.

ரமலானில் உறவினர்களை நல்ல முறையில் கையாளும் எவரும்நியாயத்தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவனுடைய கருணையை அவனுக்கு / அவளுக்கு வழங்குவான்அதே சமயம் உறவினர்களைத் துன்புறுத்துபவர்களிடம் இருந்து அல்லாஹ் அவனது கருணையை பறித்துக் கொள்வான். அம்மாதத்தில் பரிந்துரைக்கப்பட்ட பிரார்த்தனைகளை செய்வோரை அல்லாஹ் நரகத்திலிருந்து காப்பாற்றுவான்கட்டாய வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவோருக்குமற்ற மாதங்களுடன் ஒப்பிடும்போது இதுபோன்ற செயல்களுக்கு வெகுமதி ஏழு மடங்காக இருக்கும். எவர் என் மீது சலாவத்தை (ஆசீர்வாதங்களை) மீண்டும் மீண்டும் ஓதினால்அல்லாஹ் நற்செயல்களின் தராசை (நியாயத்தீர்ப்பு நாளில்) கனமாக வைத்திருப்பான்அதே நேரத்தில் மற்றவர்களின் தராசு இலேசாக இருக்கும். இந்த மாதத்தில் குர்ஆனின் ஓர் ஆயத்தை யார் ஓதினாலும்மற்ற மாதங்களில் முழு குர்ஆனையும் ஓதியதற்கு சமமான வெகுமதி உண்டு.

"மக்களேஇந்த மாதத்தில் சொர்க்கத்தின் வாயில்கள் திறந்தே இருக்கின்றனஅவை உங்களுக்காக மூடப்படாமல் இருக்கும்படி உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டிருக்கும்போதுஅவை உங்களுக்காக ஒருபோதும் திறக்கப்படாமல் இருக்கும்படி உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இம்மாதத்தில் சாத்தான்கள் விலங்கிடப்பட்டிருக்கும்ஆகவேஅவை உங்களை ஆதிக்கம் செலுத்தும்படி ஆக்கிவிடாதே என்று உங்கள் இறைவனிடம் இறைஞ்சுங்கள்.
இமாம் அலி (அலை) அவர்கள் கூறுகிறார்: நான் றஸூலுல்லாஹ்விடம் "அல்லாஹ்வின் தூதரே, இந்த மாதத்தில் சிறந்த செயல்கள் யாவை?" என்று கேட்டேன்: ரசூலுல்லாஹ் அவர்கள் "ஓ அபாஅல்-ஹசன், இந்த மாதத்தில் மிகச் சிறந்த செயல் அல்லாஹ் தடைசெய்தவற்றில் இருந்து விலகி, வெகு தூரத்தில் இருப்பதாகும்," என்று கூறினார்கள்.

ரமழானை வரவேற்கும் முஸ்லிம்கள் அருள்மிகு இப்புனித மாதத்தில் தம்மிடையே நிலவும் நல்லிணக்கம், அவர்களின் இதயங்களையும் மனதையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவருகிறது.

ரமழான் கடந்த ஆண்டில் தான் செய்தவற்றை சிந்திக்கவும் சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வின் சக்தியின் அடையாளங்கள் நிறைந்த புனிதமான பாதையில் பரிணமிக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரதிபலிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. அல்லாஹ்வுக்காக தன்னை அர்ப்பணிக்கவும் ஒரு ஆன்மீக நேரமான இந்த புனித ரமழான் மாதத்தின் வாய்ப்பைப் பயன்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு உதவுவானாக.

http://kayhan.ir/en/news/77832/the-prophet%E2%80%99s-sermon-on-the-advent-of-ramadhan

 

Tuesday, March 21, 2023

மூவாயிரம் ஆண்டுகள் கடந்தும் கொண்டாடப்படும் பாரசீக புத்தாண்டு

The Persian New Year is a three thousand year old celebration.

நவ்ருஸ் என்பது ஈரானிய புத்தாண்டு ஆகும்இது பொதுவாக பாரசீக புத்தாண்டு என்றும் அழைக்கப்படுகிறது. பல்வேறு இன-மொழியியல் மக்கள் குழுக்களால் உலகளவில் இப்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. நவ்ரூஸ் எனும் பாரசீக புதுவருடம் இரவும் பகலும் சமமான நீளம் கொண்ட வசந்த உத்தராயணத்தைக் குறிக்கிறது. இது வழக்கமாக மார்ச் 20 அல்லது 21 அன்று நிகழும். வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் வசந்தமாக மாறும் நாள், அது ஒரு புதிய தொடக்கமாக உணரப்படுகிறது. ஈரானில் அதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் பொது விடுமுறைகள் மற்றும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்.

பாரசீகம் என்பது ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை கட்டியாண்டது என்பதை நாம் அறிவோம். அதற்கென சில பண்பாட்டு நாகரீக பழக்கவழக்கங்கள் இருந்தனஅதிலொன்றுதான் வசந்த காலத்தின் முதல் நாளைக் கொண்டாடும் நவ்ரூஸ் பண்டிகையாகும். பாரசீக சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டிருந்த அனைத்து பிரதேசங்களிலும் இன்றுவரை இந்தப் பண்டிகை அதன் தனித்துவமான ஈரானிய பாரம்பரியங்களுடன் குறைந்தது 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.


வசந்த காலத்தின் முதல் நாளை சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மிகத்துல்லியமாக கணிப்பிட்டு வைத்துள்ள ஈரானியர்களின் ஆற்றல்விண்ணியலாளர்களை இன்றளவிலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. இத்தினத்திற்காக மக்கள் தங்கள் வீடுகளில் ஒரு சிறப்பு அட்டவணையை தயார் செய்கிறார்கள், அங்கு அவர்கள் ஏழு அடையாள உணவுகள் மற்றும் மசாலாப் பொருட்களை வைத்திருக்கும் சிறிய உணவுகளை வைக்கிறார்கள். இந்த உணவுகளின் பெயர்கள் அனைத்தும் பாரசீக மொழியில் 'சீன்' என்ற எழுத்தில் தொடங்குகின்றன, எனவே அட்டவணை 'ஏழு சீன்கள்' (ஹஃப்ட்-சீன்) என்று அழைக்கப்படுகிறது. உணவுகளில் பொதுவாக கோதுமை அல்லது பீன்ஸ் முளைகள் (சப்ஸே), வினிகர் (செர்கே), ஆப்பிள்கள் (சிப்), பூண்டு (சர்), கோதுமை சார்ந்த புட்டு எனப்படும் சமனு, சுமாக் எனப்படும் சிவப்பு மசாலா மற்றும் சென்ஜெட், ஒரு வகையான காட்டு ஆலிவ் ஆகியவை அடங்கும். பிராந்தியத்தில் பொதுவாக கிடைக்கக்கூடியவை. மற்ற குறியீட்டு பொருட்களில் பொன் மீன்கள், வர்ணம் பூசப்பட்ட முட்டைகள், மெழுகுவர்த்திகள் மற்றும் கண்ணாடி ஆகியவை அடங்கும். ஏழு சீன்கள் வாழ்க்கை, அன்பு, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது.

இந்த பண்டிகையைக் கொண்டாடும் பல நாடுகளின் முன்முயற்சியின் பேரில்2010 ஆம் ஆண்டின் A / RES / 64/253 என்ற தீர்மானத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் இத்தினம் ‘சர்வதேச நவ்ருஸ் தினம்’ என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

சமாதான கலாச்சாரம்” என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ், ஆப்கானிஸ்தான், அஜர்பைஜான், அல்பேனியா, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசு, மாசிடோனியா, ஈரான் (இஸ்லாமிய குடியரசு), இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் எடுத்த முயற்சியின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் ‘சர்வதேச நவ்ருஸ் தினம்’ பிரகடனப்படுத்தப்பட்டது.

ஈரானியர்கள் தங்கள் குடும்பத்துடன் நவ்ரூஸ் இரவைக் கழிக்கிறார்கள். பாரம்பரிய புத்தாண்டு இரவு உணவு அரிசி மற்றும் மூலிகைகள் கொண்ட மற்றும் அதில் வெண்சதை கொண்ட மீனும் அடங்கியிருக்கும். பல குடும்பங்களில் புத்தாண்டைக் குறிக்க குழந்தைகளுக்கு பணப் பரிசு வழங்குவது வழக்கம். மக்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று பாரம்பரிய பரிசுகளை வழங்குவார்கள். இந்த பரந்த பிராந்தியத்தில் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களால் கொண்டாடப்படும் நவ்ருஸ் பண்டிகையின் ஆரம்பகால தோற்றங்கள் சில ஜோராஸ்ட்ரியனிசத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. இது பண்டைய ஜோராஸ்ட்ரியன் காலண்டரில் புனிதமான நாட்களில் ஒன்றாகும்.

ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அஜர்பைஜான், முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசு மாசிடோனியா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளும் இப்பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுகின்றன. இத்தினத்தில் பாரம்பரிய கவிதை, பாடல் மற்றும் நடனம் கொண்டாட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன, மேலும் நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் பங்கேற்கவும் மக்கள் தெருக்களில் நிரம்பி வழிகிறார்கள். குதிரை சவாரி, மல்யுத்தம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெறும்.

மனிதகுலத்தின் உள்ளார்ந்த கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ நாடுகளால் "நவ்ரூஸ்" வசந்த காலத்தின் முதல் நாளாக மற்றும் இயற்கையின் புதுப்பித்தலைக் குறிக்கும் நாளாக கொடாடப்படும் ஒரு புராதன பண்டிகை ஆகும். நவ்ரூஸ் உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் மக்களால் கொண்டாடப்படுகிறது.

"இது குடும்பங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் மற்றும் நாடுகளுக்கு இடையேயான சமாதானம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பல்வேறு சமூகங்களுக்கிடையேயான நட்புறவு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது" என்று ஐ.நா. குறிப்பிடுகிறது.

ஜோராஸ்ட்ரிய பாரம்பரியத்தின் படி வசந்தத்தின் வருகை மிகுந்த ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்ட ஒன்றாகும். இது தீமைக்கு எத்திரான போராட்டத்தில் நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது மற்றும் துக்கம் களைந்து மகிழ்ச்சி பொங்கச் செய்வதைக் குறிக்கிறது. குறிப்பாககுளிர்காலத்தில் நிலத்தடிக்கு விரட்டப்பட்டதாகக் கருதப்பட்ட 'ராபித்வினாஎன அழைக்கப்படும் நல் ஆவிநவ்ருஸ் நாளில் நண்பகலில் கொண்டாட்டங்களுடன் புத்துயிர் பெறுகிறது என்று அவர்களால் நம்பப்படுகிறது.

புராணக் கதைகள்

இக்கொண்டாட்டம் தொடர்பான பல புராணக் கதைகள் இன்றளவிலும் சமூகத்தில் பேசப்படும் ஒன்றாக இருக்கின்றது. பாரசீக மன்னரான ஜம்ஷித்தின் புராணக்கதை உட்பட பல்வேறு வகையான உள்ளூர் மரபுகளுடன் நவ்ருஸை தொடர்பு படுத்தி பேசப்படுகிறது. ஈரானில் இன்றுவரை, நவ்ருஸ் கொண்டாட்டங்கள் சில நேரங்களில் ‘நவ்ருஸ் ஜம்ஷிடி’ என்று அழைக்கப்படுகிறது. புராணத்தின் படி, ஜம்ஷித் ஒரு தேரில் காற்றில் பறந்து செல்கிறார், இது அவரது குடிமக்களை வியப்பில் ஆழ்த்தியது, அந்த நாளை அவர்கள் ஒரு திருவிழாவாக கொண்டாடினர். இதே போன்ற புராணக் கதைகள் இந்திய மற்றும் துருக்கிய மரபுகளிலும் உள்ளன, அதே நேரத்தில் 'நவ்ரூஸ்' தொடர்பான புராணக்கதைகள் மத்திய ஆசிய நாடுகளில் பிரபலமாக உள்ளன.

நவ்ருஸ் நாளில், பல்வகை உணவு தயாரித்து விருந்து படைத்தல், மூத்த குடும்ப உறுப்பினர்கள் வீடுகளுக்கும் நண்பர்கள் வீடுகளுக்கும் சென்று வாழ்த்துக்களையும் அன்பளிப்புகளையும் பரிமாறிக்கொள்ளல் போன்றன பொதுவாக இடம்பெறும் சம்பிரதாயமாகும். பரந்த அளவிலான கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் மரபு ரீதியான விளையாட்டுக்கள் போன்றனவும் இத்தினத்தையொட்டி இடம்பெறும். குழந்தைகளுக்கு பெரும்பாலும் விளைட்டுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன, மேலும் பல வர்ணம் பூசப்பட்ட முட்டைகளுடன் விளையாடுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. 

குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் தமக்குள் ஒரு குறியீட்டு உணவைப் பகிர்ந்து கொள்கின்றனபெரும்பாலும் பல உள்ளூர் பொருட்கலவையில் செய்யப்பட்ட சமைத்த அரிசி மற்றும் காய்கறிகளைக் அது கொண்டிருக்கும். கிர்கிஸ்தானில்இந்த உணவு சமைத்தல் ஒரு பொது விழாவாகும். முக்கியமாக நூருஸ் கெட்ஜே அல்லது சோன் கெட்ஜே என்று பெயர் கொண்ட இவ்விழாவில்காளைகளின் இறைச்சியிலிருந்து ஒரு வகை சூப் தயாரிப்பதற்காக நகரங்களில் விசேடமான பகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.

நவ்ரூஸ் உணவு மேசை (Sofreh-ye Haft Sin)

நவ்ரூஸ் உணவு மேசையைத் தயார்படுத்தல் ஒரு விசேடமான பாரம்பரியமாகும். அதில் பல குறியீட்டு பொருள்கள் வைக்கப்படுகின்றன. இங்கு வைக்கப்படும் பொருட்கள் பிராந்தியத்திலிருந்து பிராந்தியத்திற்கு சற்று வேறுபடுகின்றன என்றாலும்மிகவும் பொதுவான அம்சங்கள்: நீர்மெழுகுவர்த்திகள்பச்சை முளைகளினால் தயாரிக்கப்பட்ட உணவுகள் (அல்லது சப்ஸே)கோதுமை முளைகள்முகம்பார்க்கும் கண்ணாடிகள்முட்டை மற்றும் பல்வேறு பழங்களால் ஆன பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்டிருக்கும். 

இந்த பொருள்கள் புதிய ஆண்டிற்கான தூய்மைபிரகாசம்தாராளம்மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிக்கின்றன. ஈரானில்இந்த அட்டவணை “சோஃப்ரே-யே ஹாஃப்ட் சின்” என்று குறிப்பிடப்படுகிறதுஇவை ஒவ்வொன்றும் ‘’ எழுத்தில் தொடங்கும் ஏழு பொருள்களைக் கொண்டதாய் இருக்கும். இதேபோன்ற அட்டவணை இந்தியாவின் சில பகுதிகளிலும் தயாரிக்கப்படுகிறது.

ஈரானில் நவ்ருஸ் கொண்டாட்டங்கள் (Nowruz in Iran)

பாரசீக புத்தாண்டு நவ்ருஸைக் கொண்டாட உலகெங்கிலும் உள்ள ஈரானியர்கள் தங்கள் வீடுகளை முழுமையாக சுத்தம் செய்கிறார்கள். இது "தூசி துடைத்தல் வைபவம்" என்று அழைக்கப்படுகிறதுமேலும் பழையன கழிந்துபழைய வருடத்திற்கு விடை சொல்லிபுத்தாண்டை வரவேற்பதை இது குறிக்கிறது.

வசந்தத்தின் வருகை என்றால் குளிர் காலம் முடிந்துவெப்ப காலம் வருவதைக் குறிப்பதாகும். ஆனால் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் பல நாடுகளுக்குகுறிப்பாக ஈரானுக்குஇதை விட அதிகமான முக்கியத்துவமிக்க விஷயங்கள் உள்ளன. ஈரானிய மக்களைப் பொறுத்தவரைவசந்தத்தின் வருகை என்பது ஒரு நீண்ட கால பாரம்பரியம்வரலாற்றில் வேரூன்றிய ஒரு கொண்டாட்டம் மற்றும் இயற்கை அன்னையின் வளர்ச்சியையும் வீரியத்தையும் மகிமைப்படுத்துவதாகும்.

கானே தேகானி! (KHANEH TEKANI)

இவை அனைத்தும் மார்ச் மாத தொடக்கத்தில் ‘வசந்த சுத்தம்’ மூலம் தொடங்குகின்றன. ‘கானே தேகானி’ என்று அழைக்கப்படும் இந்த பாரம்பரியம், இதற்கு ‘வீட்டை அசைத்தல்’ என்ற அர்த்தம். கிட்டத்தட்ட ஒவ்வொரு ஈரானியர் வீட்டிலும் பொதுவாக இடம்பெறும் ஒன்றாகும். தரைவிரிப்புகள் கழுவப்படுகின்றன, ஜன்னல்கள் துடைக்கப்படுகின்றன, வெள்ளிப் பொருட்கள் மெருகூட்டப்படுகின்றன, திரைச்சீலைகள் உலர்த்துவதற்கா துப்புரவாளர்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் பழைய தளபாடங்கள் பழுதுபார்க்கப்படுகின்றன அல்லது புதியதாக மாற்றப்படுகின்றன.

வீடு முழுவதும் பிரகாசமாகவும் சுத்தமாகவும் இருக்கும் வரை ஒவ்வொரு மூலை முடுக்குகளெல்லாம் துடைக்கப்பட்டுமெருகூட்டப்படும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த சடங்கில் ஈடுபடுவர். இது ஒரு புதிய ஆண்டுக்கான ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. துடைக்கப்படும் தூசியுடன்துரதிர்ஷ்டமும் கழுவி நீக்கப்பட்டுசுபீட்சம் உண்டாகிறது என்பது மக்களின் நம்பிக்கை.

இதன் பின்னர் ஷாப்பிங் நேரம். சந்தைகள் மற்றும் ஷாப்பிங் மையங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து வழியும். புத்தாடையுடன் கனி வர்க்கங்கள்இனிப்பு வகைகள் மற்றும் மிட்டாய்கள்உளர் விதைகள்பூக்கள் மற்றும் ஹாஃப்ட் சீன் மேசைக்கு அவசியமான அனைத்தும் வாங்க மக்கள் முண்டியடிப்பர். ஹாஃப்ட் சீன் எனும் மேசை, புத்தாண்டில் ஒரு ‘கட்டாயம்’ இருக்கவேண்டிய ஒன்றாகும்.

புத்தாண்டு சடங்குகளில் ஏழு பொருட்கள் முக்கிய இடம் வகிக்கும். ஆப்பிள்பசும் புல்கோதுமை பண்டம்சிவப்பு வகை பெர்ரிபூண்டுவிணாகிரி மற்றும் நாணயம் ஆகியன அலங்காரங்கங்களுடன் வைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு மேலதிகமாக புனித குர்ஆன் மற்றும் ஹாபிஸின் கவிதைத் தொகுதி ஆகியனவும் சுப்ராவில் (விரிப்பில்) வைக்கப்பட்டிருக்கும். சிலர் ஈரானின் தேசிய நூலான பிர்தவ்ஸியின் ஷாஹ்-நாமேயினையும் வைப்பதுண்டு.

இப்பண்டிகை சொராஸ்திரிய வேரைக் கொண்டிருந்தபோதும், இஸ்லாத்தின் வருகையின் பின், பாரசீகர்கள் எவ்வாறு தம்மை இஸ்லாமியப்படுத்திக் கொண்டார்களோ, அதுபோல் இப்பண்டிகையின் இஸ்லாத்துக்கு முரணான அனைத்து அம்சங்களும் களையப்பட்டு, இஸ்லாமிய மனம் கமழும் ஒன்றாக மாறியது. (ஈரானிலுள்ள சொராஸ்திரியார்கள் அவர்களுக்கே உரிய முறையில் இதனைக் கொண்டாடுவர்.)

சஹார்ஷன்பே சூரி (CHAHARSHANBE SOORI)

நவ்ருஸுக்கான ஏற்பாடுகள் ‘சஹார்ஷன்பே சூரி’ என்ற தினத்தில் ஆரம்பித்துவிடுகிறது. ‘சஹார் ஷன்பே சூரி’ என்பது ஈரானிய ஆண்டின் கடைசி புதன்கிழமை ஆகும். இந்த தினம் விழாக்கோலம் பூண்டிருக்கும் மேலும் சிறப்பு பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளால் நிறைந்திருக்கும்குறிப்பாக நெருப்பின் மேலால் குதிப்பது அவற்றில் ஒன்று. சூரியன் மறையும் வேளைமக்கள் தீமூட்டிஅதன் மேலால் குதித்து குதூகலிப்பர். அவர்கள் இவ்வாறு செய்யும்போதுஸார்தி-யே மன் அஸ் தோசோர்கி-யே தோ ஆஸ் மன்அதாவது என் மஞ்சள் உன்னுடையதுஉனது சிவப்பு என்னுடையது என்று பாடுகிறார்கள். இந்த சடங்கில்அவர்கள் தங்கள் கவலைகளையும் சிக்கல்களையும் போக்கும்படி இறைவனிடம் கேட்கிறார்கள்அதற்கு பதிலாக அவர்களுக்கு ஆற்றலையும் சுகத்தையும் கோருகிறார்கள்.

ஆண்டின் கடைசி நாள் நிறைவு பெற்றுபுத்தாண்டு ஆரம்பிக்கையில் எல்லோரும் தங்கள் குடும்பத்தினருடனும் அன்பானவர்களுடனும் ஒன்றாக இருப்பதற்காக தத்தம் வீடுகளுக்கு விரைந்து செல்வர். புத்தாண்டு என்பது அந்த சிறப்பு தருணங்களை குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்துகொண்டாடுவது தானே.

- தாஹா முஸம்மில்