Thursday, March 31, 2022

மனதை வசீகரிக்கும் கஷான்

 The mind-blowing Kashan

 

இஸ்பஹான் மாகாணத்தில் ஈரானின் மத்திய பாலைவனங்களின் விளிம்பில் அமைந்துள்ள கஷான், சுற்றுலாப் பயணிகளின் முக்கிய தளங்களில் ஒன்றாகும்.

கஷான் தரைவிரிப்புகள், பட்டு மற்றும் பிற ஜவுளிகள் தயாரிப்பதில் பெயர் பெற்ற பிரதேசமாகும். இன்று, கஷானில் ஈரானின் ஏனைய பிரதேசங்க போலவே இயந்திரமயமாக்கப்பட்ட கம்பள நெசவுத் தொழிற்சாலைகள் உள்ளன மற்றும் பளிங்கு மற்றும் தாமிரச் சுரங்கத் தொழிலைக் கொண்டுள்ளது. கஷான் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 400,000 மக்கள் வசிக்கின்றனர்.

Maranjab Desert மரஞ்சாப் பாலைவனம்

கஷானின் புவியமைப்பு

கஷான் நகரம் மலை மற்றும் பாலைவனம் என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்குப் பகுதியில், கஷானின் தென்மேற்கில் உள்ள கர்காஷ் மலை (ஈரான் தேசிய ஆய்வகத்தின் தாயகம், ஈரானின் மிகப்பெரிய வானியல் தொலைநோக்கி அமைந்துள்ள) மற்றும் மேற்கில் உள்ள ஆர்டெஹால் மலையின் கர்காஸ் மலைத்தொடரின் இரண்டு மிக உயரமான சிகரங்களின் சுற்றுப்புறத்தில் கஷான் அமைந்துள்ளது. கஷானின் டமாவந்த் என்றும் அழைக்கப்படும் கஷானின், அர்டெஹால் மலைகளின் மிக உயர்ந்த சிகரமாகும் (மத்திய ஈரானில் உள்ள கர்காஸ் மலைத்தொடரின் இறுதிப் பகுதி).

நகரின் கிழக்குப் பகுதியில், கஷான் ஈரானின் மத்திய பாலைவனத்திற்கான நுழைவாயிலாக அமைந்துள்ளது. நமக் ஏரிக்கு (உப்பு ஏரி) அருகில் அமைந்துள்ள மரஞ்சாப் பாலைவனம் மற்றும் கரவன்செராய் ஆகியவற்றிற்காக்கவும் கஷான் அறியப்படுகிறது. இன்று மரஞ்சாப் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஷிஃப்டிங் சாண்ட்ஸ் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு உவகைத்தரும் இடமாக உள்ளது.

சீதோஷ்ணநிலை

நாட்டின் ஏனைய மத்திய நகரங்களைப் போலவே கஷானின் காலநிலையும் வெப்பமாகவும் வறண்டதாகவும் இருக்கும், இரவுகள் குளிர்ச்சியாக இருக்கும்.



Kashan Rose Water Festival: கஷான் ரோஸ் வாட்டர் திருவிழா

ஈரான் ரோஸ் வாட்டர் பண்டிகை என்பது ஈரானில் சுற்றுலா பயணிகளை சுண்டியிழுக்கும் பருவகால மற்றும் பிரபலமான திருவிழாவாகும். கஷான் ரோஸ் வாட்டர் பண்டிகை ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் நடத்தப்படுகிறது, கம்சார் ரோஸ் வாட்டர் உலகில் புகழ்பெற்றது மற்றும் தரத்தின் அடிப்படையில், இது முற்றிலும் நிகரற்றது.

பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில் நடைபெறும், பொதுவாக மே நடுப்பகுதியிலிருந்து ஜூன் இறுதி வரை. மேலே குறிப்பிட்டுள்ளபடி, கஷான் ரோஸ் வாட்டர் திருவிழாவிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் முக்கிய நகரங்கள் காம்சார் மற்றும் நியாசர் பிரதேசங்கள் முக்கியமானவை. ரோஸ் வாட்டர் தயாரிப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காம்சர், கஷானிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஈரானின் பண்டைய தோட்டம் என்று அழைக்கப்படும் நியாசர், கஷானின் மேற்கில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ரோஸ் மற்றும் ரோஸ் வாட்டர் திருவிழாவில், அதன் பிரபலத்தைத் தவிர, நியாசர் அதன் வரலாற்று மற்றும் இயற்கை எழிலுக்கு பிரபலமானது.

ஒவ்வொரு மே மாதத்திலும், கஷானில் உள்ள நியாசர் மற்றும் கம்சார் ஆகியவை டமாஸ்க் ரோஜாக்களின் நறுமண வாசனையால் நிரப்பப்படுகின்றன, அங்கு ரோஸ் வாட்டர் தயாரிக்கும் பல்வேறு முறைகளையும் நீங்கள் காணலாம்.

ஞாபகார்த்த பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் 


கஷான் பக்லாவா: பல ஈரானிய நகரங்களில் தயாரிக்கப்படும் இனிப்புகளில் பக்லாவாவும் ஒன்று, ஆனால் கஷான் பக்லாவா பிரத்தியேகமான சுவை கொண்டது. இந்த கஷான் நினைவு பரிசுகளின் தனித்துவமான அம்சம்,. கஷான் பக்லாவா. ஐந்து விதைகள் கொண்டது; வால்நட், பாதாம், ஹேசல்நட்ஸ், பிஸ்தா மற்றும் முந்திரி பருப்பு, இவற்றுடன் ஜாதிக்காயும் இதில் பயன்படுத்தப்படுகின்றது மேலும் இதில் மிக அதிக ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது.

தரைவிரிப்புகள் மற்றும் ஜமக்காலங்கள்: ஈரானின் எல்லா முக்கிய நகரங்களிலும் கம்பள நெசவு பொதுவானது, ஆனால் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு தனித்துவமான வடிவமைப்பு உள்ளது. கஷான் கார்பெட் வடிவமும் மிகவும் அழகானது, அங்கு இயந்திர நெய்த தரைவிரிப்புகளும் உள்ளன.

மட்பாண்டங்கள்: கஷான் நினைவுப் பொருட்களில் மற்றொரு முக்கிய அம்சம் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மட்பாண்டக் கலை. பழமையான மட்பாண்டக் கடை கஷானில் பட்டு நாகரிகத்துடன் தொடர்புடையது என்பதற்கான சான்றுகள் காட்டுகின்றன.


சுற்றுலா மற்றும் வரலாற்று இடங்கள்

Silak Hill: சிலாக் மலை


சிலாக் மலை

கிமு 5000 இல், ஈரானிய பீடபூமியின் குகைவாசிகள் காலநிலை மாற்றம் மற்றும் வயல்வெளிகள் மற்றும் புல்வெளிகளின் உருவாக்கம் காரணமாக புதிய வாழ்க்கைக்காக சமவெளிகளுக்கு திரும்பத் தொடங்கினர். கஷான் மாவட்டத்தின் வரலாற்று பின்னணி ஈரானின் மத்திய பீடபூமியில் உள்ள பழமையான மனித குடியிருப்புகளுடன் தொடர்புடையது. சியால்க் மற்றும் கஷான் மனித நாகரிகத்தின் முதல் அடித்தளங்களில் ஒன்றாகும்.

கஷானின் சியால்க் மலையின் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் படி, அந்தப் பகுதியில் மனிதர்கள் இருந்த வரலாறு 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது.

உண்மையில், 5000 ஆண்டுகளுக்கு முன்பு சியால்க் மலைகளின் மக்கள், குதிரை மற்றும் சூரிய உருவங்கள் பாதிக்கப்பட்ட, இரும்பு கவசம் மற்றும் வாள்கள் மற்றும் ஈட்டிகள் கொண்ட நீண்ட தொட்டிகளை தயாரித்திருந்ததற்கான பல்வேறு காலகட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் ஆரியர்களால் அழித்தொழிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுகின்றன.

Niasar Waterfall: நியாசர் நீர்வீழ்ச்சி:

நியாசர் நீர்வீழ்ச்சி சசானிட் சகாப்தத்திற்கு முந்தைய அக்கினி கோவிலுக்கு அருகிலுள்ள நீர் ஊற்றிலிருந்து தொடங்குகிறது. இந்த பழங்கால நீரூற்றின் அனைத்து வரலாறு மற்றும் இயற்கை காட்சிகளை நியாசர் கொண்டுள்ளது. இந்த நீரூற்று நியாசரின் பரந்த பசுமையான நிலங்களுக்கும் தண்ணீர் பாய்ச்சுகிறது. நியாசர் நீர்வீழ்ச்சியின் நீர்வழித்தடத்தை உருவாக்கிய அடித்தளம் பொதுவாக சுண்ணாம்பு கற்களினால் ஆனது மற்றும் காலப்போக்கில் ஒரு அழகிய வடிவத்தை உருவாக்கியது. நியாசர் நீர்வீழ்ச்சி 25 மீட்டர் உயரம் கொண்டது; நியாசர் நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பகுதியின் சுவாரஸ்யமான சூழலின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சியை ரசிக்க தரமான நேரத்தை செலவழிக்க சிறந்த தேர்வாகும்.

Fin Garden:: Fin  நந்தவனம்

ஃபின் நந்தவனம் நகரத்திலிருந்து 6 கிமீ தொலைவில் கஷானின் தெற்கில் அமைந்துள்ளது. இது சஃபாவிட் காலத்திற்கு முந்தையது. இது கஷானின் மிகவும் மதிப்புமிக்க வரலாற்று இடங்களில் ஒன்றாகும். சில வரலாற்று ஆதாரங்கள் தோட்டத்தின் காலத்தை அல்-புயே ஆட்சிக்குக் குறிப்பிடுகின்றன. தோட்டத்தின் உள்ளே உள்ள கட்டிடங்களில் நுழைவாயில் மற்றும் கோபுரம், ஓஷ்டோர்-காலு, தோட்டத்தின் தெற்கில் உள்ள அல்கோவ், மேற்கில் அருங்காட்சியகம், சிறிய மற்றும் பெரிய குளியலறைகள் மற்றும் கிழக்கு தோட்டத்தில் உள்ள நூலகம் ஆகியவை அடங்கும்.

நஸீருத்தீன் ஷா தனது அதிபர் அமீர் கபீரைக் கொன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக நந்தவனத்தில் உள்ள ஃபின் குளியலறை உள்ளது. ஃபின் நந்தவனத்திற்கு தெற்குப் பகுதியில், சிறிய மற்றும் பெரிய குளியல் என்று அழைக்கப்படும் இரண்டு குளியல் இடங்கள் உள்ளன.

சிறிய குளியல் அறைகள் சஃபாவிட் சகாப்தத்திலும், பெரிய குளியல் அறைகள் கஜர் காகாலத்தில் ஃபத்-அலி-ஷாவால் கட்டப்பட்டதாக சரித்திரம். பெரிய குளியல் அறைகள் அரண்மனை வாசிகளுக்காக, சிறிய குளியல் அறைகள் சாதாரண மக்களுக்காக என இருந்தது. Fin நகரின் தெற்குப் பகுதியில், செஷ்மே-சுலைமானியா என்று அழைக்கப்படும் ஒரு நீரூற்றும் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான தோட்ட மரங்கள் 100 முதல் 470 ஆண்டுகள் பழமையானவை.

The Mosque & School of Agha Bozorg:: Agha பெரிய மசூதி மற்றும் கல்விக்கூடம்:

கஜர் காலத்தில் கட்டப்பட்ட மிக அழகான மற்றும் அற்புதமான மசூதிகளில் இதுவும் ஒன்றாகும். கட்டிடத்தின் குவிமாடம், அதன் அழகிய கட்டிடக்கலை மற்றும் அதன் வடிவமைப்பு, மிகவும் தனித்துவமானது மற்றும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

இந்த மசூதி 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாஸ்டர்-மி'மர் உஸ்தாத் ஹஜ் சபான்-அலி என்பவரால் கட்டப்பட்டது. மசூதியும் இறையியல் பள்ளியும் கஷான் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.

Boroujerdi House: போரூஜெர்டி இல்லம்:

போரூஜெர்டி இல்லம் கஜர் காலத்தில் கட்டப்பட்ட மற்றொரு மதிப்புமிக்க வரலாற்று நினைவுச்சின்னமாகும். இந்த இல்லத்தின் மிக முக்கியமான பகுதி அதன் கோடைகால மாளிகையாகும், இந்த இல்லம் ஒரு மணி மண்டபம், ஒரு அறை மற்றும் அற்புதமான வேலைப்பாடுகள் கொண்ட 5 கதவுகளைக் கொண்டுள்ளது. கோடைகால வீட்டின் குவிமாடத்தில் பூக்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் வரையப்பட்டுள்ளது. மேலும், சுவரில் காஜர் மன்னர்களின் படங்களையும் பார்க்கலாம். இந்த பழைய வீட்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்று அதன் அற்புதமான காற்று கோபுரம். நான்கு பக்கங்களிலும், உள் மற்றும் வெளிப்புற முற்றங்களால் சூழப்பட்டுள்ளது. போரோஜெர்டி மாளிகை அக்கால அரசர் மற்றும் அரசவையினர் தங்குவதற்கான முக்கிய மாளிகைகளில் ஒன்றாகும்.

The Historical Bazaar of Kashan: கஷானின் வரலாற்று பஜார்:

கஷானின் பஜார் ஈரானின் கஷான் நகரின் மையத்தில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் அமைந்துள்ளது. இது செல்ஜுக் காலத்தில் கட்டப்பட்டு, சஃபாவிட் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. பஜாரில் பிரமிக்கத்தக்க கட்டிடக்கலை உள்ளது.

நகரின் பிரதான வாயிலுக்கு அருகாமையில் இருந்ததாலும், நகரின் பொருளாதார நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றியதாலும், பஜாருக்குச் சென்ற வணிகர்கள் வழக்கமாக இந்த இடத்தில் இளைப்பாறி செல்வது வழக்கம்.

Tabatabaei House: தபதாபாய் வீடு:

தபதாபாய் வீடு அதன் சிறப்பு அழகு காரணமாக ஈரானிய வீடுகளின் மணமகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த வீடு பொருஜெர்டி வீட்டிற்கு அருகாமையில் அமைந்து உள்ளது. நான்கு முற்றங்களைக் கொண்டுள்ள இந்த வீடு, மத்திய முற்றம் வெளிப்புற முற்றம் மற்றும் இரண்டு உட்புற முற்றங்களை கொண்டதாகும். 

இந்த கட்டிடம் இயற்கை குளிரூட்டல் மற்றும் வெப்பநிலை சரிசெய்தல் ஆகியவற்றுடன் மற்றொரு முக்கிய நன்மை காணாட் எனப்படும் நிலத்தடி நீர் சுரங்கத்தை எளிதாக அணுகுவது மற்றும் பூகம்பத்திற்கு எதிராக தாக்குப்பிடித்து நிற்கும் அமைப்பு கொண்டது.

வீட்டின் உட்புறப் பகுதியானது மையத்தில் ஒரு எளிய ஐந்து- கதவுகள் கொண்ட அறை மற்றும் வீட்டின் இருபுறமும் இரண்டு முற்றங்களைக் கொண்டுள்ளது, காற்றை உள்ளே ஈர்க்கும் அடித்தளங்களைக் கொண்டுள்ளது. இது தபதாபாய் குடும்பத்தின் வசிப்பிடமாகவும் இருந்தது. வீட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள முற்றங்கள் பெரியதாகவும் அதிக அறைகளைக் கொண்டதாகவும் இருக்கும். உட்புறப் பகுதியின் கீழ், காற்றுப் உள்ளீர்ப்பு வசதிக்காக துளையிடப்பட்ட கூரை, இரு பக்க சுவர்கள் மற்றும் ஒரு குளம் இருப்பது போன்ற அதன் தனித்துவமான பண்புகளைக் கொண்ட ஒரு பெரிய அடித்தளத்தைக் கொண்டுள்ளது இந்தக் கட்டடம்.

https://en.mehrnews.com/news/185036/Kashan-historical-city-of-carpets-and-pottery

Friday, March 25, 2022

அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி செல்வதே வளர்ச்சியை அடைய ஒரே வழி - புரட்சித் தலைவர் காமனெய்

 Today is one of the most openly disgraceful periods in terms of oppression - Imam Khmane'i

பிறந்துள்ள பாரசீக புத்தாண்டில் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தேசிய உற்பத்தியின் முக்கியத்துவம் அறிந்து முன்னோக்கி செலவதாகும் என்று புரட்சித் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காமனெய் குறிப்பிட்டார் மேலும் அவர் சமகாலத்தை "நடப்பு வரலாற்றில் ஒடுக்குமுறையின் மிகவும் வெளிப்படையான அவமானகரமான காலகட்டங்களில் ஒன்று" என்று விவரித்தார்.

பாரசீக நவ்ருஸ் அல்லது புத்தாண்டை ஆன்மீக விஷயங்களுடன் கலப்பது ஈரானிய புத்தாண்டின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகும் என்றும் "வசந்தம் என்பது நம்பிக்கையின் வெளிப்பாடு, மேலும் இது புத்துணர்ச்சி மற்றும் புதிய வளர்ச்சியின் செய்தியைக் கொண்டுவருகிறது என்றும் அவர் கூறினார், இது மனிதகுல வரலாற்றில் நம்பிக்கையின் மிகப்பெரிய ஆதாரமான இமாமின் பிறந்த நாளான ஷா'பான் 15 ஆம் தேதியுடன் இவ்வாண்டு ஒத்துப் போவதால் அதன் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகியுள்ளது.

மக்களுக்காக குரல் எழுப்புபவர்கள் மற்றும் எழுதுபவர்கள் அல்லது வாழ்த்து செய்திகளை அனுப்புபவர்கள், மக்களின் நம்பிக்கையை தங்களால் இயன்றவரை அதிகரிக்க வேண்டும், ஏனெனில் நம்பிக்கை முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த தசாப்தத்திலும் மற்றும் 1401 ஹிஜ்ரி சூரிய ஆண்டிலும் பொருளாதார முழக்கங்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைப் பற்றி பேசுகையில், "இந்த ஆண்டுக்கான பொருளாதார தலைப்பு மற்றும் முழக்கம் "நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தேசிய உற்பத்தியின் முக்கியத்துவம்" என்று தெரிவுசெய்யப்பட்டதற்கான காரணம், பொருளாதார பிரச்சினையின் முக்கியத்துவம் மற்றும் 1390களில் எதிர்கொண்ட பொருளாதார  சவால்களாகும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் சவால்களைத் தீர்ப்பதற்குத் திட்டமிடுதல், செயல்படுதல் மற்றும் சரியான திசையில் நகர்த்துதல் ஆகியவை முக்கியமானவையாகும்.

நிர்வாகக் கிளையில் உள்ள அதிகாரிகளுக்கும், நாட்டை நடத்துவதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பொருளாதாரம்தான் முக்கியப் பிரச்சினை என்று அவர் வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், “நிச்சயமாக, புதிய அணுகுமுறைகள் மக்களால் பயன்படுத்தப்படுவதை நாம் இப்போதே காணலாம். இந்த அணுகுமுறைகள் சரியாக தொடர்ந்தால், ஊக்கமளிப்பதாய் இருக்கும்.

அறிவு சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி செல்வதே பொருளாதார வளர்ச்சியை அடைய ஒரே வழி என்று இமாம் கமேனி வலியுறுத்தினார்.  “அறிவு அடிப்படையிலான பொருளாதாரம் என்பதன் மூலம், எல்லாத் துறைகளிலும் அறிவியல், தொழில்நுட்ப அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இதன் விளைவாக, உற்பத்திச் செலவு குறைதல், செயல்திறன் அதிகரிப்பு, பொருட்கள் மற்றும் தயாரிப்புகளின் தரம் மேம்படுவது, உலகச் சந்தைகளில் போட்டித்தன்மையுடையதாக மாறுவது மற்றும் நாட்டிற்குள் பொருட்களின் விலையில் குறைப்பு ஆகியவை நிகழும்.”

பொருளாதாரத்தில் நியாயமான முன்னேற்றத்தை அடைவதற்கும்  வறுமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் அறிவு சார்ந்த உற்பத்தியை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்று இஸ்லாமியப் புரட்சித் தலைவர் வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில் "அறிவு சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், இதை செய்ய முடியும் மற்றும் எம்மால் சாத்தியமான ஒன்று" என்றார்.

நாட்டில் 6,700 அறிவு சார்ந்த நிறுவனங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “புத்தாண்டில், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அறிவு சார்ந்த நிறுவனங்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும். ஆனால் இது இந்த தலைப்பை மட்டுமே பயன்படுத்தும் நிறுவனங்களை சிலர் நிறுவுவதற்கு காரணமாக இருக்கக்கூடாது.

இமாம் காமனெய் அவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள பல உலகளாவிய முன்னேற்றங்களைக் குறிப்பிட்டு, "உலகின் தற்போதைய முன்னேற்றங்களை ஒருவர் பார்க்கும்போது, ஈரானிய தேசத்தின் உரிமை மற்றும் சரியான தன்மை முன்னெப்போதையும் விட தெளிவாகிறது," என்று குறிப்பிட்டார்.

எதிர்ப்பும், சரணடைய மறுப்பதும் மற்றும் அநீதி சாராது இருப்பதும், ஆணவத்தின் முன்னணியை எதிர்கொள்வதில் ஈரான் தேசம் கொண்டுள்ள உறுதியாகும். மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் மற்றும் இஸ்லாமிய குடியரசையும் நாட்டையும் உள்நாட்டில் வலுப்படுத்துவதும் எமது தீர்மானமாகும்; "இந்த முடிவுகள் தேசிய அளவில் எடுக்கப்பட்ட சரியான மற்றும் உறுதியான தீர்மானங்களாகும்" என்று இஸ்லாமியப் புரட்சித் தலைவர் விளக்கினார்.

ஒடுக்கப்பட்ட, முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழ்நிலையையும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டை விட்டு அமெரிக்கர்கள் வெளியேறிய விதத்தையும் அவர் குறிப்பிட்டார்.  “உக்ரைனில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் மற்றொரு உதாரணம். மேற்கத்திய நாடுகளால் அமர்த்தப்பட்ட அந்நாட்டின் ஜனாதிபதி, மேற்குலகின் போக்கை விமர்சிக்கையில் கடுமையான தொனியைப் பயன்படுத்துகிறார் என்றும் தலைவர் கூறினார்,

யெமன் பிரச்சினை குறித்தும், அந்நாட்டு மக்கள் மீது தினமும் நடக்கும் குண்டுவெடிப்பு குறித்தும் இமாம் காமனெய் கண்டித்தார். சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 80 இளைஞர்கள் மற்றும் வாலிபர்கள் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்தும் பேசிய அவர், “இந்தப் பிரச்னைகள் அனைத்தும் உலகையே சூழ்ந்திருக்கும் இருளைக் காட்டுவதாகவும், உலகையே தங்கள் கைகளில் வைத்திருக்கும் இரத்தவெறி கொண்ட ஓநாய்களின் உண்மை நிறத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்கின்றன” என்றும் அவர் கூறினார்.

உக்ரைனின் நிகழ்வுகள் மேற்கில் இனவெறி இன்னும் இருப்பதைக் காட்டுவதாக இமாம் காமனெய் குறிப்பிட்டார். "வெள்ளையர்களிடமிருந்து கறுப்பர்களை பிரித்து அவர்களை ரயில்களில் இருந்து (அகதிகள்) இறக்கிவிடுவது அல்லது மத்திய கிழக்கில் செய்யும் அநியாயங்களை மறைத்து அதற்கு பதிலாக ஐரோப்பாவில் போர் நடக்கிறது என்று தங்கள் ஊடகங்களில் வருத்தம் தெரிவிப்பது மேற்குலகின் வெளிப்படையான இனவெறிக்கு எடுத்துக்காட்டுகள்," என்றும் அவர் கூறினார்,

பல்வேறு நாடுகளில் அடக்குமுறையைக் கையாள்வதில் மேற்கத்திய நாடுகளின் இரட்டைத்தன்மையையும் சுட்டிக்காட்டினார், “அவர்களுக்குக் கீழ்ப்படியும் நாடுகளில் அடக்குமுறைகள் நடந்தால், அவை எந்த எதிர்வினையும் காட்டாது. இத்தனை கொடுமைகள் மற்றும் அடக்குமுறைகள் இருந்தபோதிலும், அவர்களை மனித உரிமைகளின் காவலர்கள் என்று கூறுகின்றனர். இந்த பொய்யான கூற்றைப் பயன்படுத்தி, சுதந்திர நாடுகளை மிரட்டுகிறார்கள், என்று இஸ்லாமியப் புரட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அடக்குமுறை மற்றும் ஆணவத்தின் அடிப்படையில் சமகால வரலாற்றில் மிகவும் வெளிப்படையான அவமானகரமான காலகட்டங்களில் ஒன்று இன்றாகும். உலக மக்கள் இந்த அடக்குமுறை மற்றும் இரட்டை வேடத்தின் செயல்களை நேரடியாகக் காண்கிறார்கள் என்றும் தலைவர் குறிப்பிட்டார்,

கடந்த ஆண்டு தனது உரையில், நாட்டின் பொருளாதாரத்தை அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுடன் பிணைக்கக் கூடாது என்று இமாம் கமேனி வலியுறுத்தியிருந்தார். இந்த நிலைப்பாட்டை தொடர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், “அதிர்ஷ்டவசமாக, நாட்டின் புதிய கொள்கைகள், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், ஒருவர் முன்னேறலாம், வெளிநாட்டு வர்த்தகத்தை அதிகரிக்கலாம், எண்ணெய் மற்றும் புதிய பிராந்திய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம் மற்றும் பிற விஷயங்களில் முன்னேற்றம் காணலாம் என்பதைக் காட்டுகின்றன," என்றும் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காமனெய் வலியுறுத்தினார்.

https://english.khamenei.ir/news/8915/Today-is-one-of-the-most-openly-disgraceful-periods-in-terms

Friday, March 18, 2022

ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான தினம் நவ்ரூஸ் (பாரசீக புத்தாண்டு)

 Nowruz is a day of unity and reconciliation

ஈரானின் பண்டைய வரலாற்றில் உருவான நவ்ரூஸ், பூமத்திய ரேகையை சூரியன் கடப்பதையும், வடக்கு அரைக்கோளத்தில் வசந்த காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கும் வசந்த உத்தராயணத்தின் நாளான மார்ச் 21 அன்று உலகம் முழுவதும் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் கொண்டாடப்படுகிறது. நவ்ரூஸ் குறைந்தது 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்படும் பழமையான மற்றும் மிகவும் நேசத்துக்குரிய பண்டிகைகளில் ஒன்றாகும்.

நவ்ரூஸ், ஈரானியர்களுக்கு மட்டுமல்ல, இந்த பழங்கால பண்டிகையை அலங்கரித்து கொண்டாடும் பல நாடுகளுக்கும் பழங்குடியினருக்கும் அமைதி, நட்பு, மனித குலத்திற்கான கருணை மற்றும் இயற்கையைப் போற்றும் தூதுவர். நவ்ரூஸ் என்பது மறுபரிசீலனை செய்வதற்கும், மறுதொடக்கம் செய்வதற்கும், மறு உருவாக்கம் செய்வதற்கும் ஒரு வாய்ப்பு.


நவ்ரூஸ் என்பது ஈரானியர்களால் உலகம் முழுவதும் அமைதி மற்றும் நட்பின் தூது. நவ்ரூஸ் மனிதகுலத்தின் ஆன்மீக பாரம்பரியம் மற்றும் உலக நாடுகள் இந்த பாரம்பரியத்தை அனுபவித்து அதைப் பயன்படுத்திக் கொண்டால் ஈரானியர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.

ஈரானின் வளமான நாகரீகம், தேசிய பண்புகள் மற்றும் வரலாறு ஆகியவற்றிற்கு நவ்ருஸ் ஒரு வலுவான சாட்சி.

அழிவுகள், அரசியல் குழப்பங்கள், கஷ்டங்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் இருந்தபோதிலும் ஒரு தேசம் எவ்வாறு அவை அனைத்தையும் சகித்துக்கொண்டு, செழித்து வளர்கிறது என்பதை அதன் மீளமுடியாத உறுதியுடன் இது நிரூபிக்கிறது.

பாரசீகம் என்பது ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை கட்டியாண்டது என்பதை நாம் அறிவோம். அதற்கென சில பண்பாட்டு நாகரீக பழக்கவழக்கங்கள் இருந்தனஅதிலொன்றுதான் வசந்த காலத்தின் முதல் நாளைக் கொண்டாடும் நவ்ரூஸ் பண்டிகையாகும். பாரசீக சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டிருந்த அனைத்து பிரதேசங்களிலும் இன்றுவரை இந்தப் பண்டிகை அதன் தனித்துவமான ஈரானிய பாரம்பரியங்களுடன் குறைந்தது 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.


வசந்த காலத்தின் முதல் நாளை சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மிகத்துல்லியமாக கணிப்பிட்டு வைத்துள்ள ஈரானியர்களின் ஆற்றல்விண்ணியலாளர்களை இன்றளவிலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

இந்த பண்டிகையைக் கொண்டாடும் பல நாடுகளின் முன்முயற்சியின் பேரில்2010 ஆம் ஆண்டின் A / RES / 64/253 என்ற தீர்மானத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் இத்தினம் ‘சர்வதேச நவ்ருஸ் தினம்’ என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

சமாதான கலாச்சாரம்” என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ்ஆப்கானிஸ்தான்அஜர்பைஜான்அல்பேனியாமுன்னாள் யூகோஸ்லாவிய குடியரசுமாசிடோனியாஈரான் (இஸ்லாமிய குடியரசு)இந்தியாகஜகஸ்தான்கிர்கிஸ்தான்தஜிகிஸ்தான்துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் எடுத்த முயற்சியின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் ‘சர்வதேச நவ்ருஸ் தினம்’ பிரகடனப்படுத்தப்பட்டது.


இந்த பரந்த பிராந்தியத்தில் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களால் கொண்டாடப்படும் நவ்ருஸ் பண்டிகையின் ஆரம்பகால தோற்றங்கள் ஜோராஸ்ட்ரியனிசத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. இது பண்டைய ஜோராஸ்ட்ரியன் காலண்டரில் புனிதமான நாட்களில் ஒன்றாகும்.

ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் ஆப்கானிஸ்தான்அல்பேனியாஅஜர்பைஜான்முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசு மாசிடோனியாஇந்தியாகஜகஸ்தான்கிர்கிஸ்தான்தஜிகிஸ்தான்துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளும் இப்பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுகின்றன.

மனிதகுலத்தின் உள்ளார்ந்த கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ நாடுகளால் "நவ்ரூஸ்" வசந்த காலத்தின் முதல் நாளாக, மற்றும் இயற்கையின் புதுப்பித்தலைக் குறிக்கும் ஒரு புராதன பண்டிகை ஆகும். நவ்ரூஸ் உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் மக்களால் கொண்டாடப்படுகிறது.

"இது குடும்பங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கும்நல்லிணக்கத்திற்கும் மற்றும் நாடுகளுக்கு இடையேயான சமாதானம்கலாச்சாரம்பாரம்பரியம் மற்றும் பல்வேறு சமூகங்களுக்கிடையேயான நட்புறவு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது" என்று ஐ.நா. குறிப்பிடுகிறது.

ஜோராஸ்ட்ரிய பாரம்பரியத்தின் படி வசந்தத்தின் வருகையானது மிகுந்த ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்ட ஒன்றாகும். இது தீமைக்கு எத்திரான போராட்டத்தில் நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது மற்றும் துக்கம் களைந்து மகிழ்ச்சி பொங்கச் செய்வதைக் குறிக்கிறது. குறிப்பாககுளிர்காலத்தில் நிலத்தடிக்கு விரட்டப்பட்டதாகக் கருதப்பட்ட ' ராபித்வினாஎன அழைக்கப்படும் நல் ஆவிநவ்ருஸ் நாளில் நண்பகலில் கொண்டாட்டங்களுடன் புத்துயிர் பெறுகிறது என்று அவர்களால் நம்பப்பட்டது.

புராணக் கதைகள் (Legend)

இக்கொண்டாட்டம் தொடர்பான பல புராணக் கதைகள் இன்றளவிலும் சமூகத்தில் பேசப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. பாரசீக மன்னரான ஜம்ஷித்தின் புராணக்கதை உட்பட பல்வேறு வகையான உள்ளூர் மரபுகளுடன் நவ்ருஸை தொடர்பு படுத்தி இது பேசப்படுகிறது.

ஈரானில் இன்றுவரைநவ்ருஸ் கொண்டாட்டங்கள் சில நேரங்களில் ‘நவ்ருஸ் ஜம்ஷிடி’ என்று அழைக்கப்படுகிறது. புராணத்தின் படிஜம்ஷித் ஒரு தேரில் காற்றில் பறந்து செல்கிறார்இது அவரது குடிமக்களை வியப்பில் ஆழ்த்தியதுஅந்த நாளை அவர்கள் ஒரு திருவிழாவாக கொண்டாடினர். இதே போன்ற புராணக் கதைகள் இந்திய மற்றும் துருக்கிய மரபுகளிலும் உள்ளனஅதே நேரத்தில் ' நவ்ரூஸ்தொடர்பான புராணக்கதைகள் மத்திய ஆசிய நாடுகளில் பிரபலமாக உள்ளன.

நவ்ருஸ் நாளில்பல்வகை உணவு தயாரித்து விருந்து படைத்தல்மூத்த குடும்ப உறுப்பினர்கள் வீடுகளுக்கும் நண்பர்கள் வீடுகளுக்கும் சென்று வாழ்த்துக்களையும் அன்பளிப்புகளையும் பரிமாறிக்கொள்ளல் போன்றன பொதுவாக இடம்பெறும் சம்பிரதாயமாகும். பரந்த அளவிலான கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் மரபு ரீதியான விளையாட்டுக்கள் போன்றனவும் இத்தினத்தையொட்டி இடம்பெறும். குழந்தைகளுக்கு பெரும்பாலும் விளைட்டுப்பொருட்கள் வழங்கப்படுகின்றனமேலும் பல வர்ணம் பூசப்பட்ட முட்டைகளுடன் விளையாடுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. 

பெரும்பாலும் பல உள்ளூர் பொருட்கலவையில் செய்யப்பட்ட சோறு மற்றும் காய்கறிகளை அது கொண்டிருக்கும். கிர்கிஸ்தானில்இந்த உணவு சமைத்தல் ஒரு பொது விழாவாகும். முக்கியமாக நூருஸ் கெட்ஜே அல்லது சோன் கெட்ஜே என்று பெயர் கொண்ட இவ்விழாவில்காளைகளின் இறைச்சியிலிருந்து ஒரு வகை சூப் தயாரிப்பதற்காக நகரங்களில் விசேடமான பகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.

நவ்ரூஸ் உணவு மேசை  (Sofreh-ye Haft Sin)

நவ்ரூஸ் உணவு மேசையைத் தயார்படுத்தல் ஒரு விசேடமான பாரம்பரியமாகும். அதில் பல குறியீட்டு பொருள்கள் வைக்கப்படுகின்றன. இங்கு வைக்கப்படும் பொருட்கள் பிராந்தியத்திலிருந்து பிராந்தியத்திற்கு சற்று வேறுபடுகின்றன என்றாலும்மிகவும் பொதுவான அம்சங்கள்: நீர்மெழுகுவர்த்திகள்பச்சை முளைகளினால் தயாரிக்கப்பட்ட உணவுகள் (அல்லது சப்ஸே)கோதுமை முளைகள்முகம்பார்க்கும் கண்ணாடிகள்முட்டை மற்றும் பல்வேறு பழங்களால் ஆன பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்டிருக்கும். 

இந்த பொருட்கள் புதிய ஆண்டிற்கான தூய்மைபிரகாசம்தாராளம்மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிக்கின்றன. ஈரானில்இந்த அட்டவணை “சோஃப்ரே-யே ஹாஃப்ட் சின்” என்று குறிப்பிடப்படுகிறதுஇவை ஒவ்வொன்றும் ‘’ எழுத்தில் தொடங்கும் ஏழு பொருள்களைக் கொண்டதாய் இருக்கும். இதேபோன்ற அட்டவணை இந்தியாவின் சில பகுதிகளிலும் தயாரிக்கப்படுகிறது.

ஈரானில் நவ்ருஸ் கொண்டாட்டங்கள் (Nowruz in Iran)

பாரசீக புத்தாண்டு நவ்ருஸைக் கொண்டாட உலகெங்கிலும் உள்ள ஈரானியர்கள் தங்கள் வீடுகளை முழுமையாக சுத்தம் செய்கிறார்கள். இது "தூசி துடைத்தல் வைபவம்" என்று அழைக்கப்படுகிறதுமேலும் பழையன கழிந்துபழைய வருடத்திற்கு விடை சொல்லிபுத்தாண்டை வரவேற்பதை இது குறிக்கிறது.

வசந்தத்தின் வருகை என்றால் குளிர் காலம் முடிந்துவெப்ப காலம் வருவதைக் குறிப்பதாகும். ஆனால் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் பல நாடுகளுக்குகுறிப்பாக ஈரானுக்குஇதை விட அதிகமான முக்கியத்துவமிக்க விஷயங்கள் உள்ளன. ஈரானிய மக்களைப் பொறுத்தவரைவசந்தத்தின் வருகை என்பது ஒரு நீண்ட கால பாரம்பரியம்வரலாற்றில் வேரூன்றிய ஒரு கொண்டாட்டம் மற்றும் இயற்கை அன்னையின் வளர்ச்சியையும் வீரியத்தையும் மகிமைப்படுத்துவதாகும்.

கானே தேகானி! (KHANEH TEKANI)

இவை அனைத்தும் மார்ச் மாத தொடக்கத்தில் ‘வசந்த சுத்தம்’ மூலம் தொடங்குகின்றன. ‘கானே தேகானி’ என்று அழைக்கப்படும் இந்த பாரம்பரியம்இதற்கு ‘வீட்டை அசைத்தல்’ என்ற அர்த்தம். கிட்டத்தட்ட ஒவ்வொரு ஈரானியர் வீட்டிலும் பொதுவாக இடம்பெறும் ஒன்றாகும். தரைவிரிப்புகள் கழுவப்படுகின்றனஜன்னல்கள் துடைக்கப்படுகின்றனவெள்ளிப் பொருட்கள் மெருகூட்டப்படுகின்றனதிரைச்சீலைகள் உலர்த்துவதற்காக துப்புரவாளர்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் பழைய தளபாடங்கள் பழுதுபார்க்கப்படுகின்றன அல்லது புதியதாக மாற்றப்படுகின்றன.

வீடு முழுவதும் பிரகாசமாகவும் சுத்தமாகவும் இருக்கும் வரை ஒவ்வொரு மூலை முடுக்குகளெல்லாம் துடைக்கப்பட்டுமெருகூட்டப்படும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த சடங்கில் ஈடுபடுவர். இது ஒரு புதிய ஆண்டுக்கான ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. துடைக்கப்படும் தூசியுடன்துரதிர்ஷ்டமும் கழுவி நீக்கப்பட்டுசுபீட்சமுண்டாகிறது என்பது மக்களின் நம்பிக்கை.

ஷாப்பிங் நேரம்.

சந்தைகள் மற்றும் ஷாப்பிங் மையங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து வழியும். புத்தாடையுடன் கனி வர்க்கங்கள்இனிப்பு வகைகள் மற்றும் மிட்டாய்கள்உளர் விதைகள்பூக்கள் மற்றும் ஹாஃப்ட் சீன் மேசைக்கு அவசியமான அனைத்தும் வாங்க மக்கள் முண்டியடிப்பர். ஹாஃப்ட் சீன் எனும் மேசை புத்தாண்டில் கட்டாயம்’ இருக்கவேண்டிய ஒன்றாகும்.

புத்தாண்டு சடங்குகளில் ஏழு பொருட்கள் முக்கிய இடம் வகிக்கும். ஆப்பிள்பசும் புல்கோதுமை பண்டம்சிவப்பு வகை பெர்ரிபூண்டுவிணாகிரி மற்றும் நாணயம் ஆகியன அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு மேலதிகமாக புனித குர்ஆன் மற்றும் ஹாபிஸின் கவிதைத் தொகுதி ஆகியனவும் சுப்ராவில் (விரிப்பில்) வைக்கப்பட்டிருக்கும். சிலர் ஈரானின் தேசிய நூலான பிர்தவ்ஸியின் ஷாஹ்-நாமேயினையும் வைப்பதுண்டு.

இப்பண்டிகை சொராஸ்திரிய வேரைக் கொண்டிருந்த போதும்இஸ்லாத்தின் வருகையின் பின்பாரசீகர்கள் எவ்வாறு தம்மை இஸ்லாமியப்படுத்திக் கொண்டார்களோஅதுபோல் இப்பண்டிகையின் இஸ்லாத்துக்கு முரணான அனைத்து அம்சங்களும் களையப்பட்டுஇஸ்லாமிய மனம் கமழும் ஒன்றாக மாறியது. (ஈரானிலுள்ள சொராஸ்திரியார்கள் அவர்களுக்கே உரிய முறையில் இதனைக் கொண்டாடுவர்.)

சஹார்ஷன்பே சூரி (CHAHARSHANBE SOORI) 

நவ்ருஸுக்கான ஏற்பாடுகள் ‘சஹார்ஷன்பே சூரி’ என்ற தினத்தில் ஆரம்பித்துவிடுகிறது. ‘சஹார் ஷன்பே சூரி’ என்பது ஈரானிய ஆண்டின் கடைசி புதன்கிழமை ஆகும். இந்த தினம் விழாக்கோலம் பூண்டிருக்கும் மேலும் சிறப்பு பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளால் நிறைந்திருக்கும்குறிப்பாக நெருப்பின் மேலால் குதிப்பது அவற்றில் ஒன்று. சூரியன் மறையும் வேளைமக்கள் தீமூட்டிஅதன் மேலால் குதித்து குதூகலிப்பர். அவர்கள் இவ்வாறு செய்யும்போதுஸார்தி-யே மன் அஸ் தோசோர்கி-யே தோ ஆஸ் மன்அதாவது என் மஞ்சள் உன்னுடையதுஉனது சிவப்பு என்னுடையது என்று பாடுகிறார்கள். இந்த சடங்கில்அவர்கள் தங்கள் கவலைகளையும் சிக்கல்களையும் போக்கும்படி இறைவனிடம் கேட்கிறார்கள்அதற்கு பதிலாக அவர்களுக்கு ஆற்றலையும் சுகத்தையும் கோருகிறார்கள்.

ஆண்டின் கடைசி நாள் நிறைவுபெற்றுபுத்தாண்டு ஆரம்பிக்கையில் எல்லோரும் தங்கள் குடும்பத்தினருடனும் அன்புக்குரிவர்களுடனும் ஒன்றாக இருப்பதற்காக தத்தம் வீடுகளுக்கு விரைந்து செல்வர். புத்தாண்டு என்பது அந்த சிறப்பு தருணங்களை குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்துகொண்டாடுவது தானே.

- தாஹா முஸம்மில்