Thursday, December 28, 2023

பாலின சமத்துவம்' என்பது தவறானது, 'பாலின நீதி' என்பதே சரியானது

 West is illogical on the issue of women and flees from answering questions about its outlook

இஸ்லாமியப் புரட்சியின் தலைவரான இமாம் காமனேயி பெண்கள் குழுவுடனான சந்திப்பில், குடும்பத்தில் பெண்களின் இருப்பின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து இஸ்லாத்தின் தர்க்கரீதியான மற்றும் பகுத்தறிவுப் பார்வையையும் சமூகம், அரசியல் மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு நிலைகளில் அவர்களின் வரம்பற்ற செயல்பாடுகளையும் விளக்கினார்.

ஈரானிய நாட்காட்டியில் மகளிர் தினத்தைக் குறிக்கும் பாத்திமா ஸஹ்ரா (ஸலாமுன் அலைஹா) அவர்களின் பிறந்தநாளுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில், டிசம்பர் 27, 2023 புதன்கிழமை அன்று இமாம் கொமைனி (ரஹ்) அவர்களின் ஞாபகார்த்த ஹுசைனியாவில் குறிப்பிட்ட சந்திப்பு நிகழ்ந்தது.

ஒரு பெண்ணின் அடையாளம், அவளது மதிப்புகள், உரிமைகள், கடமைகள், சுதந்திரங்கள் மற்றும் வரம்புகள் ஆகியவை ஒரு முக்கிய மற்றும் மிக முக்கியமான விடயமாக கருதும் இமாம் அவர்கள், உலக பெண்கள் விடயங்களில் ஒருவருக்கொருவர் எதிர்க்கும் இரண்டு பொதுவான அணுகுமுறைகள் உள்ளன என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டினார் - ஒன்று மேற்கத்திய அணுகுமுறை. மற்றது இஸ்லாமிய அணுகுமுறை.

மேற்கத்திய நாகரிக மற்றும் கலாச்சார அமைப்பு பெரும்பாலும் பெண்களின் பிரச்சினைகளைச் சுற்றியுள்ள விவாதங்களைத் தவிர்க்கிறது என்று இமாம் காமனேயி விளக்கினார்.

மேற்கத்தியர்களுக்கு பெண்களைப் பற்றிய எந்த தர்க்கமும் இல்லாததால், அவர்கள் தங்கள் கருத்தை சர்ச்சைகள் மூலமாகவும், ரவுடித்தனத்தின் மூலமாகவும், அரசியல் மற்றும் அரசியல் அல்லாத பிரமுகர்களுக்கு பணம் கொடுத்து தங்களுக்கு வேண்டியதைச் சொல்ல முயற்சிக்கிறார்கள். இதற்காக அவர்கள் பெண்களுடன் தொடர்புடைய சர்வதேச மையங்களில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமும். கலை, இலக்கியம் மற்றும் சைபர்ஸ்பேஸை கருவிகளாகப் பயன்படுத்துவதன் மூலமும் அடைந்துகொள்ள முயற்சிக்கிறார்கள்.

மேற்குலகின் தார்மீக ஊழல் பற்றிய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் பயங்கரமானதாக இருப்பதைக் சுட்டிக்காட்டிய இஸ்லாமியப் புரட்சித் தலைவர் பெண்களிடம் மேற்குலகின் நடத்தை பற்றி ஒரு கேள்வியை எழுப்பினார்: "குடும்பங்களை அழிக்கும் ஒவ்வொரு விடயமும் மேற்கத்திய நாடுகளில் தினசரி அதிக வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவது ஏன்? அதேசமயம், இதற்கு மாறாக, (மேற்குலகில்) ஹிஜாப் அணிந்திருக்கும் பெண்களைத் தாக்கும் குற்றவாளிகளுக்கு எதிராக எந்தக் கண்டனமோ அல்லது கடுமையான நடவடிக்கையோ எடுக்கப்படுவதை நாங்கள் காணவில்லை ஏன்?"

பெண்களின் பிரச்சினையில் இஸ்லாத்தின் அணுகுமுறையானது தர்க்கம் மற்றும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது என்றும் மேற்கத்திய அணுகுமுறைக்கு நேர் எதிரானது என்றும் இமாம் காமனேயி வலியுறுத்தினார்.

பெண்கள் என்ற விடயம் இஸ்லாத்தின் பலங்களில் ஒன்றாகும் என்று கூறுவதால் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டியதில்லை என்று கருதிவிடக்கூடாது என்பதை அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஒரு நபரின் கண்ணியம் மற்றும் மதிப்புகள் தொடர்பான பாலின சமத்துவத்தை இஸ்லாத்தின் வலுவான பகுத்தறிவின் கூறுகளில் ஒன்றாக கருதும் இமாமவர்கள் "மனித விழுமியங்கள் மற்றும் ஆன்மீக உயர்வுகளைப் பொறுத்தவரை, எந்த பாலினமும் மற்றொன்றை விட உயர்வாகக் கருதப்படுவதில்லை," என்று குறிப்பிட்டார்.

இது தவிர, "ஆன்மிகத் துறைகளில், இறைவன் குர்ஆனில் சில சமயங்களில் ஆண்களை விட பெண்களை விரும்புகின்றான், மேலும் பிர்அவுனின் மனைவி [ஆசியா] மற்றும் [ஈஸா] (அலை) அவர்களின் தாய் மரியம் (அலை) போன்ற பெண்களை அனைத்து விசுவாசிகளுக்கும் முன்மாதிரியாக அறிமுகப்படுத்துகின்றான்.

சந்திப்பின் போது, இமாம் காமனேயி அவர்கள் சமூக விடயங்களில் இருப்பது மற்றும் சமூகப் பொறுப்புகளை மேற்கொள்வது ஆகியவை ஆண்களும் பெண்களும் சமமாக செயலில் பங்கு வகிக்கக்கூடிய சில துறைகளாகும். "இமாம் கொமைனி (ரஹ்) அவர்களின் கூற்றுப்படி, அரசியலிலும் நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளிலும் ஈடுபடுவது பெண்களின் உரிமையும் கடமையும் ஆகும் என்று குறிப்பிட்டார். மேலும், சில ஹதீஸ்களின்படி, சமூக விவகாரங்களைக் கையாள்வது அனைவருக்கும் கடமையாகும், மேலும் காஸாவில் நடக்கும் தற்போதைய பிரச்சினை போன்ற முஸ்லிம்களின் விவகாரங்களில் கவனம் செலுத்துவதும் இதில் அடங்கும்", என்றார்.

குடும்பக் கடமைகளை பொறுத்தவரை ஆண்களும் பெண்களும் தங்கள் உடல் மற்றும் மன திறன்களுக்கு ஏற்ப வெவ்வேறு கடமைகளைக் கொண்ட ஒரு பகுதி என்று கருதும் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர். "இதன் அடிப்படையில், சிலர் கூறும் 'பாலின சமத்துவம்' என்ற முழக்கம் தவறானது என்றும் 'பாலின நீதி' என்பதே சரியானது," என்ற உண்மையை தெளிவுபடுத்தினார்.

ஒரு பெண்ணின் குழந்தைகளை வளர்ப்பது போன்ற சிறப்புக் கடமைகள் ஒரு பெண்ணின் மன, உடல் மற்றும் உணர்ச்சி வடிவத்திற்கு ஏற்ப இருப்பதாக வலியுறுத்திய இமாம் காமனேயி "குடும்பத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடமைகள் வேறுபட்டாலும், புனித குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்களுக்கு இருக்கும் குடும்ப உரிமைகள் சமமானதாகும்," என்றார்.

இந்த பாத்திரம் வாழ்க்கை மற்றும் மனித இனத்தின் தொடர்ச்சிக்கு உத்தரவாதம் அளிப்பதால், மனித படைப்பில் ஒரு தாயின் பங்கு சிறந்த மற்றும் மிக முக்கியமான பங்காக அவர் கருதும் இமாம் காமனேயி வீட்டு வேலைகள் பற்றிய பிரச்சினையையும் குறிப்பிட்டார், "வீட்டு வேலை ஒரு பெண்ணின் கடமை என்ற கருத்து முற்றிலும் தவறானது மற்றும் ஒரு குடும்பத்தில் உள்ள பணிகள் இரு தரப்பிலிருந்தும் பரஸ்பர புரிதலுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்," என்றார்.

குடும்பத்தில் நடக்கும் சில வன்முறைகள், உடல் ரீதியான துஷ்பிரயோகம் போன்றவற்றைச் சமாளிப்பதற்கான வழி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற வீட்டுச் சூழலை உருவாக்கும் ஆண்களுக்குக் கடுமையான தண்டனைகளைக் கொண்ட சட்டங்களை இயற்றுவதே என்று இமாம் கமேனி அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானியப் பெண்கள் பல்வேறு துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றம், புரட்சிக்கு முந்தைய காலத்தை விட பத்து மடங்கு அதிகம் என்று குறிப்பிட்ட இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் "நாட்டை இன்னும் முழுமையாக இஸ்லாமியமாக்க முடியவில்லை - நாட்டில் ஒரு பகுதி மட்டுமே இஸ்லாமியம் - அதில் தான் இந்த சாதனைகள் அடையப்பட்டுள்ளன, இஸ்லாம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், இந்த சாதனைகள் பல மடங்கு அதிகரிக்கும்," என்றார்.

அமைச்சர் பதவிகள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகள் போன்ற பதவிகளில் சமூக மற்றும் அரசியல் பொறுப்புகளை ஒப்படைப்பதற்கான ஒரே அளவுகோல் தகுதி மட்டுமே என்று இமாம் கமேனி கூறினார்.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை சுட்டிக்காட்டிய தலைவர், இத்துறையில் பெண்கள் தங்கள் வீட்டுச் சூழலிலும் சமூகத்திலும் ஆற்றும் பங்கு முக்கியமானது என்பதை வலியுறுத்தினார்.

https://english.khamenei.ir/news/10407/West-is-illogical-on-the-issue-of-women-and-flees-from-answering

Tuesday, December 26, 2023

சியோனிச ஆட்சியின் தோல்வி அமெரிக்காவின் தோல்விக்கு சமம் - இமாம் செய்யிதலி காமனெயி

 Palestinians' greatest achievement in Gaza: US & Britain being disgraced

காஸாவில் பாலஸ்தீனியர்களின் மிகப்பெரிய சாதனை: அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அவமானம்

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் இமாம் செய்யிதலி காமனெயி 2023 டிசம்பர் 23 சனிக்கிழமை இமாம் கொமைனி ஹுசைனியாவில் கெர்மான் மற்றும் குசெஸ்தான் மாகாணங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை சந்நதித்தபோது ஆற்றிய உரையின் சுருக்கம்

"இந்த சம்பவம் இரண்டு வழிகளில் இணையற்றது. சியோனிச ஆட்சியின் தரப்பிலிருந்து, இதுபோன்ற கொடூரம், குற்றச்செயல்கள், இரத்தவெறி, குழந்தை கொலைகள், தீமை, கொடூரம், நோயாளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது பதுங்கு குழிகளை உடைக்கும் குண்டுகளை வீசுதல் ஆகியவை இதற்கு முன்பு காணப்படவில்லை. மேலும், பாலஸ்தீன மக்கள் மற்றும் போராளிகளின் தரப்பில், அவர்கள் பொறுமையையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்திய விதம் முன்னெப்போதும் இல்லாதது.

“தண்ணீர், உணவு, மருந்து, எரிபொருட்கள் இம்மக்களுக்குச் சென்றடையவில்லை என்றாலும், மலைபோல் உறுதியாக நிற்கிறார்கள், இந்த நெகிழ்ச்சிதான் அவர்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும், பொறுமையாக இருப்பவர்களிடம் இறைவன் இருக்கிறான், வெற்றியின் அடையாளங்களை இன்று பார்க்கக்கூடியதாக இருக்கிறது."

சியோனிச ஆட்சி அதன் அனைத்து உபகரணங்கள் மற்றும் சொத்துக்களை கொண்டிருந்தபோதிலும் பாலஸ்தீனிய போராளிகளுக்கு எதிராக சக்தியற்றதாக உள்ளது, மேலும் இது இந்த இணையற்ற மோதலின் மற்றொரு முக்கிய அம்சமாகும். இந்த சம்பவத்தில் சியோனிச ஆட்சியின் தோல்வி அமெரிக்காவின் தோல்விக்கு சமம். இன்று, உலகில் யாரும் சியோனிச ஆக்கிரமிப்பு ஆட்சி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக கருதவில்லை. அவர்கள் அனைவரும் ஒன்றுதான் என்பது அனைவருக்கும் புரிந்துள்ளது.

போர்நிறுத்தத்திற்கான பல ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை வீட்டோ அதிகாரம் கொண்டு ரத்து செய்தது அமெரிக்க அரசாங்கத்தின் "வெட்கங்கெட்ட" செயல். அதே நேரத்தில் காமனெயி குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் மற்றும் பிற பாதுகாப்பற்ற மக்கள் மீது குண்டுகளை வீசுவதற்கு சியோனிச ஆட்சிக்கு அமெரிக்கா உடந்தையாக இருப்பதைக் கண்டித்தார்.

"பாலஸ்தீன தேசமும், உண்மையுடன் நிற்கும் எதிர்ப்பு முன்னணியும், விடுதலைப் போராளிகளும் மேற்கத்திய நாடுகளையும் அமெரிக்காவையும் இழிவுபடுத்தியதன் மூலமும், இவர்களின் பொய்யான மனித உரிமைக் கோஷங்களின் தன்மையை அம்பலப்படுத்தியதன் மூலமும் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளனர்; ஏனெனில் அமெரிக்காவின் ஆதரவு இல்லையென்றால் இஸ்ரேல் இந்த குற்றங்கள் அனைத்தையும் செய்திருக்க முடியாது. இன்று, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் கொடூரமான, நயவஞ்சகமான, தீய முகங்கள் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன,"

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு எந்த வகையிலேனும் அல்லது வடிவத்திலேனும் உதவுவது உலக அரசாங்கங்கள் மற்றும் நாடுகளின் கடமை. "அதே நேரத்தில் சியோனிச ஆட்சிக்கு உதவுவது பெரும் குற்றம் மற்றும் துரோகமுமாகும்."

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் காமனெயி சில இஸ்லாமிய அரசுகள் சியோனிச ஆட்சிக்கு உதவிய குற்றச் செயலுக்காக வன்மையாகக்  கண்டனம் செய்தார், "உலக முஸ்லிம்கள் இந்தத் துரோகத்தை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்" என்று வலியுறுத்தினார்.

இது தவிர, பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆகியவை காசா மக்களுக்கு நீர் கிடைப்பதைத் தடுத்த சியோனிச ஆட்சியை அடைவதைத் தடுப்பது இஸ்லாமிய அரசாங்கங்களின் கடமை என்று அவர் வலியுறுத்தினார்.

"சியோனிச குற்றவாளிகளுடன் வைத்திருக்கும்  எந்தவித உறவுகளையும், வழங்கிவரும் உதவியையும் துண்டிக்குமாறு முஸ்லிம் சமூகம் தங்கள் அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அவர்களால் உறவுகளை நிரந்தரமாக துண்டிக்க முடியாவிட்டால், தீய, குரூரமான மற்றும் இரத்தவெறி ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவர்கள் தற்காலிகமாகவாவது அதைச் செய்ய வேண்டும்."

இன்று, சியோனிச ஆட்சியின் காட்டுமிராண்டித்தனத்தால் உலகின் மனசாட்சி புண்பட்டுள்ளது."அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள், அவர்களில் சில அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழகத் வேந்தர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சியோனிச ஆட்சிக்கு தங்கள் அரசாங்கம் வழங்கிவரும் ஆதரவுக்கு எதிராக போராடி வருகின்றனர். ஆனால் அதையும் மீறி சில அரசுகள் கொடூரமான ஆட்சிக்கு தொடர்ந்து உதவி வருகின்றன.

"இறைவனின் உதவியுடன், உண்மையுடன் நிற்கும் எதிர்ப்பு முன்னணி சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றி பெறும் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட சியோனிச ஆட்சி நிச்சயமாக அகற்றப்படும். அந்த நாளை இளைஞர்களாகிய நீங்கள் உங்கள் கண்களால் காண்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த சந்திப்பின் போது, 2024 மார்ச் 21 அன்று நடைபெற உள்ள ஈரானின் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் இமாம் காமனெயி குறிப்பிட்டார். பின்வரும் நான்கு பண்புகளுக்கு ஏற்ப, தேர்தல்களை சிறந்த முறையில் நடத்துவதற்கு ஈரானிய தேசம் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்: "வலுவான மற்றும் உயிரோட்டமான பங்கேற்பு, பிரிவுகளின் உண்மையான போட்டித்தன்மை மற்றும் அவர்களின் மாறுபட்ட கருத்துக்களை உள்ளடக்குதல், உண்மையான சட்டப்பூர்வத்தன்மை மற்றும் முழுமையான பாதுகாப்பை வழங்குதல்."

இஸ்லாமிய குடியரசில் தேர்தல்களின் கொள்கை மற்றும் தர்க்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் போது, "அமைப்பின் 'குடியரசு' மற்றும் 'இஸ்லாமிய' அம்சங்கள் இரண்டும் தேர்தல்களைச் சார்ந்துள்ளன, ஏனெனில் ஒரு குடியரசு, ஜனநாயகம் மற்றும் நாட்டின் நிர்வாகத்தில் மக்களின் ஈடுபாட்டைப் பெறுவதற்கு தேர்தல்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் நடத்தப்படாவிட்டால், நாடு சர்வாதிகாரம், குழப்பம், பாதுகாப்பின்மை மற்றும் கலவரங்களை எதிர்கொள்ளும் என்றும் இமாம் கமேனி சுட்டிக்காட்டினார். மக்களின் தேசிய இறையாண்மையை உறுதி செய்யக்கூடிய ஒரே சரியான மற்றும் உண்மையான பாதை தேர்தல்கள் மட்டுமே" என்று அவர் மேலும் கூறினார்.

https://english.khamenei.ir/news/10393/Palestinians-greatest-achievement-in-Gaza-US-Britain-being

 

Thursday, December 21, 2023

சர்வதேச அமைப்புகளின் கட்டமைப்பில் தீவிர மாற்றம் வேண்டும்...!

 Raeisi calls on Muslims to prevent Israel crimes in Gaza

காசாவில் ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் குற்றங்களை தடுக்க முஸ்லிம் அரசுகளுக்கு ரைசி அழைப்பு விடுத்துள்ளார்

Raeisi

காஸாவில் கொலை இயந்திரம் மற்றும் குற்றச்செயல்களை நிறுத்த இஸ்ரேலிய ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்க இஸ்லாமிய நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை ஈரான் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஈரான் ஜானதிபதி இப்ராஹிம் ரயீஸி, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வியுடன் புதன்கிழமை தொலைபேசியில் உரையாடியபோதே  இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

குறிப்பாக எரிசக்தித் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு ஈரான் மற்றும் பாக்கிஸ்தானின் சிறந்த திறன்களை சுட்டிக்காட்டிய ரைசி, இந்த திறன்களை நடைமுறைப்படுத்த இரு நாடுகளின் அதிகாரிகளும் மிகவும் தீவிரமாக செயல்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்த பாகிஸ்தான் அதிக முயற்சி எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த தொலைபேசி உரையாடலின்போது, பாலஸ்தீனத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை ஆதரிக்கும் மற்றும் பாதுகாக்கும் துறையில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைமையின் நிலைப்பாட்டை பாகிஸ்தான் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார், மேலும் இந்த விஷயத்தில் ஈரானின் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

இஸ்லாமிய நாடுகளின் ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு முயற்சி மற்றும் நடவடிக்கை சியோனிஸ்டுகள் காஸாவில் இழைத்துவரும் குற்றங்களை நிறுத்த கூடுதல் அழுத்தத்தை கொடுக்க முடியும், என்றும் அவர் தெரிவித்தார்.

பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், காசாவில் சியோனிச ஆட்சியின் குற்றங்களைத் தடுக்கவும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உட்பட சர்வதேச அமைப்புகளால் இயலாமை குறித்த ஜனாதிபதி ரைசியின் கருத்தை பாகிஸ்தான் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். மேலும், "சர்வதேச அமைப்புகளின் கட்டமைப்பில் தீவிரமான மாற்றத்தை நாம் எதிர்பார்க்க வேண்டும் மற்றும் முஸ்லிம்கள் இந்தத் துறையில் முன்னோடிகளாக இருக்க வேண்டும்", என்றும் வலியுறுத்தினார்.

https://en.mehrnews.com/news/209789/Raeisi-calls-on-Muslims-to-prevent-Israel-crimes-in-Gaza

இது இவ்வாறிருக்க செங்கடல் பாதுகாப்பு விவகாரம் .....

யெமனுக்கு னுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கவிருக்கும் கூட்டணி வரலாற்றில் மிகவும் கேவலமான கூட்டணி என்று யெமனின் அன்சார் அல்லாஹ் அரசியல் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Al-Bukhaiti

யெமனுக்கு எதிரான சர்வதேச கூட்டணியை உருவாக்குவதில் அமெரிக்கா வெற்றி பெற்றால், அது மனிதகுலம் இதற்கு முன் அறிந்திராத மிக மோசமான கூட்டணியாக இருக்கும் என்று முகமது அல்-புகைதி கடந்த கூறினார்.

இதுகுறித்து அல்-புகைதி கூறுகையில், "வரலாற்றில் மிக புனிதமான போரில் ஈடுபடுவதற்காக வரலாற்றில் மிக மோசமான கூட்டணியை சந்திக்க யெமன் காத்திருக்கிறது. முந்தைய இனப்படுகொலைக் குற்றங்கள் குறித்து மௌனம் சாதித்த அவமானத்தை உலகம் இன்னும் மறக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

"இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களைக் காக்க யெமனுக்கு எதிராக சர்வதேசக் கூட்டணியை அமைக்க விரைந்த நாடுகளை எப்படி புரிந்துகொள்வது?" என்று அவர் வினவினார்.

"பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய இனப்படுகொலையைத் தடுப்பதற்காக யெமனிய நிர்வாகம் மற்றும் மக்கள் எடுத்த நடவடிக்கைகள் எவ்வாறு புரிந்துகொள்ளப்பட வேண்டும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினர்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் ஃபைனரின் கூற்றுப்படி, வாஷிங்டன் யெமனுக்கு எதிராக "இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியத்தை நிராகரிக்கவில்லை". இதை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தனது சவுதி பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மானுக்கும் தெரிவித்ததாக ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.

செங்கடலில் கப்பல்களை பாதுகாக்கக்கூடிய "தமது உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்கும் பல நாடுகளை உள்ளடக்கிய" ஒரு கடல்சார் கூட்டணியையும் அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

மேலும், யெமனுக்கான அமெரிக்க தூதர் டிம் லெண்டர்கிங் மின்னஞ்சல் கேள்விகளுக்கு பதிலளித்து, "செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் கடல்சார் பாதுகாப்பைப் பாதுகாக்க தீவிர அமெரிக்க இராஜதந்திரம் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பைத் தொடர" மத்திய கிழக்கிற்குத் திரும்பியதாகக் கூறினார்.

அன்சார் அல்லாஹ் இயக்கத்தின் மற்றுமொரு அரசியல் உயர்பீட  உறுப்பினர் அலி அல்-கஹூம் அல் மயாதீனிடம் கூறுகையில், "இஸ்ரேல்" மீதான தாக்குதல்கள், பாலஸ்தீனம், காஸா மற்றும் விடுதலைப் போராளிகளை ஆதரிப்பதில் யெமனின் குறிப்பிடத்தக்க, தாக்கமான மற்றும் மூலோபாய நடவடிக்கைகள் வெற்றி பெறும் வரை தொடரும், என்றார்.

Al-Qahoum

பாப் அல்-மண்தப் மற்றும் செங்கடலில் அமெரிக்கா, "இஸ்ரேல்" மற்றும் மேற்கத்திய நாடுகளின் இராணுவ இருப்பே சர்வதேச கடல்வழி போக்குவரத்தை அச்சுறுத்துகிறது என்று அல்-கஹூம் அல்-மயாதீனிடம் கூறினார், இந்த இருப்பு சர்வதேச கடல்சார் சட்டத்தை மீறுகிறது மற்றும் பிராந்தியம் மற்றும் உலகின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்க-இஸ்ரேல்-மேற்கத்திய இராணுவ பிரசன்னம் ஒற்றை துருவ உலகை வலுப்படுத்துகிறது மற்றும் முக்கிய மற்றும் மூலோபாய சர்வதேச கடல் பாதைகளில் மேற்கத்திய மேலாதிக்கத்தை திணிக்கிறது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

யெமன், ஒரு சுதந்திர நாடாக, அதன் எல்லைகள் மற்றும் முக்கிய பகுதிகளைப் பாதுகாப்பதற்கும், சர்வதேச சட்டங்களுக்கு இணங்க சர்வதேச கடல்வழி போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தைப் பாதுகாப்பதில் யெமன் ஒரு பங்காளி மற்றும் பொறுப்புதாரி என்பதை சுட்டிக்காட்டிய அல்-கஹூம், பாலஸ்தீனம், காஸா மற்றும் தேசத்தின் சுதந்திர போராட்டத்தை ஆதரிப்பதில் யெமனின் நிலைப்பாடு உறுதியானது மற்றும் தளராது என்பதை உறுதிப்படுத்தினார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்ரேலிய துறைமுகங்களுக்குச் செல்லும் இரண்டு சரக்குக் கப்பல்களுக்கு எதிராக யெமன் ஆயுதப் படைகள் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சரீ அறிவித்தார்.

MSC Alanya and the MSC PALATIUM III ஆகிய இரண்டு கப்பல்கள் யெமன் கடற்படைப் படைகள் எதிர்ப்பு ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டன என்பதை சாரி உறுதிப்படுத்தினார், யெமனின் எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்பதால் இரண்டு கப்பல்களும் நேரடி தாக்குதல்களுக்கு உள்ளாகின.

"இஸ்ரேல்" காஸா மீதான அதனது தடையை விலக்கிக் கொண்டு, உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை காஸா பகுதிக்குள் செல்ல அனுமதிக்கும் வரை இஸ்ரேலிய துறைமுகங்களுக்குச் செல்லும் அனைத்து கப்பல்களும் தொடர்ந்து குறிவைக்கப்படும் என்று பிரிகேடியர் ஜெனரல் எச்சரித்தார்.

இஸ்ரேல் அல்லாத துறைமுகங்களுக்கு பயணிக்கும் மற்ற அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பை உறுதியளித்த செய்தித் தொடர்பாளர், கப்பல்களின் ஊழியர்கள் தங்கள் இறுதி இலக்கை தெளிவாக அடையாளம் பட்சத்தில், யெமன் ஆயுதப் படைகள் அவர்களை பாதுகாப்பாக கடந்து செல்ல அனுமதிக்கும் என்று கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் சமீபத்தில் பல சேனல்கள் மூலம் சனாவுக்கு செய்திகளை அனுப்பியதாகவும், "செங்கடலில் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு" எச்சரித்ததாகவும் இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆக்ஸியோஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

காசா முனையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து, யெமன் ஆயுதப்படைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிறுவனத்தை நோக்கி "70 க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளன" என்று ஆக்ஸியோஸ் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய நாட்களில் வளைகுடாவுக்கு விஜயம் செய்த யெமனுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் டிம் லெண்டர்கிங், சவுதி அரேபியா, ஓமான் மற்றும் கத்தாரில் உள்ள தனது சகாக்களை "எச்சரிக்கை செய்திகளை" யெமனுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

ஆக்ஸியோஸின் கூற்றுப்படி, இந்த எச்சரிக்கைகள் எதுவும் இதுவரை யெமனியர்கள் தங்கள் நடவடிக்கைகளைத் தணிக்க வழிவகுக்கவில்லை என்பதை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.

யெமன் படைகள் மேலும் தாக்குதல்களை நடத்துவதைத் தடுக்கவும், அவர்களை எதிர்கொள்ளவும் "சிறப்பு மேம்படுத்தப்பட்ட பன்னாட்டுப் செயற்குழு செங்கடலில் செயல்படத் தொடங்கும்" என்று கூறியதாக இரண்டு இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி அமெரிக்க செய்தி இணையதளம் கூறியது.

இந்த செயற்குழு செங்கடலில் உள்ள கப்பல்களுடன் செல்லாது, ஆனால் இப்பகுதியில் அதிக கடற்படை கப்பல்கள் இருப்பது அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதை எளிதாக்கும் என்று ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரி சுட்டிக் காட்டினார்.

https://english.almayadeen.net/news/politics/us-created-anti-yemen-coalition-to-be-filthiest-in-history