Thursday, June 23, 2022

ஹஜ்ஜும் இஸ்லாமிய ஒற்றுமையும்

 Hajj and the Concept of Islamic Unity


ஒரு முழுமையான ஒற்றுமை இல்லாத நிலையில் இஸ்லாமிய உம்மத் என்ற கருத்து வடிவம் பெறுவதில்லை. அதாவது, இஸ்லாமிய உம்மா இஸ்லாமிய ஒற்றுமையாலேயே வகைப்படுத்தப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு இஸ்லாமிய உம்மா ஒற்றுமை அற்றிருப்பின் சர்வவல்லமையுள்ள இறைவன் மீதான உண்மையான மற்றும் உறுதியான நம்பிக்கைகளைக் கூட ஒருவேளை இழக்க நேரிடலாம்.

இஸ்லாமிய ஒற்றுமை என்ற கருத்து ஒரே மாதிரியான சிந்தனை முறையைக் குறிக்கவில்லை என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும், மேலும் அனைத்து இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளையும் ஒன்றிணைப்பது என்பதும் சாத்தியமற்ற ஒன்று. எவ்வாறாயினும், இஸ்லாமிய ஒற்றுமை என்பது முன்னரே ஏற்றுக்கொள்ளப்பட்ட இஸ்லாமியக் கொள்கைகளுக்கு தம் விசுவாசத்தை உறுதி செய்வதுடன் ஒரு உம்மத்தின் உருவாக்கத்தில் பின்வருவனவற்றை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்:

1- அணுகுமுறைகள், செய்முறைகள், வசதிகள், பார்வைகள், அறிவு நிலைகள், கலாச்சாரங்கள், புரிதல் முறைகள் ஆகியவற்றில் பொதுவாக எதிர்பார்க்கப்படும் வேறுபாடுகள் மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான நம்பிக்கைகள் அனைத்தும் சில புரிந்துகொள்ளக்கூடிய கருத்து வேறுபாடுகளை பல நூற்றாண்டுகளாக நமது சிறந்த அறிஞர்களை ஆட்கொண்டுவந்துள்ளது.

2- அவற்றில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியம்.  அவற்றில் மிக முக்கியமானவை பின்வருமாறு:

a) மறுக்க முடியாததாகக் கருதப்படும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவான இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்

b)     இஸ்லாமிய உம்மத்தின் பொதுவான குணாதிசயங்களை உருவாக்கும் நற்பண்புகள் மற்றும் அனைத்து முஸ்லிம்களும் உம்மத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

c)     தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இஸ்லாமிய ஷரியாவை கடைபிடித்தல்.மற்றும் இறைவனின் அனைத்து தீர்க்கதரிசிகளும் மனித சமுதாயத்தில் நிலைநிறுத்த நியமிக்கப்பட்ட மறுக்க முடியாத இஸ்லாமிய சட்டங்களும்

d)     உலகளாவிய பிரச்சினைகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த அரசியல் நிலைப்பாடு குறிப்பாக இஸ்லாத்தின் முக்கிய எதிரிகளாக கருதப்படும் நிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்கள் மற்றும் திமிர்பிடித்த மனித விரோத சக்திகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் இஸ்லாத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதில் ஒருமித்த நிலைப்பாடு.

மேலே பட்டியலிடப்பட்டவை இஸ்லாமிய சமூகம் ஒன்றிணைந்து ஒன்றுபட வேண்டிய சில பகுதிகள் மட்டுமே என்றாலும் ஆகக்குறைந்தது இவை இடம்பெற்றால் உண்மையான முஸ்லிம் உம்மத் ஒன்றை உருவாக்க முடியும்.


இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இஸ்லாமிய ஒற்றுமையை நடைமுறைப்படுத்துவதற்கான இஸ்லாத்தின் விரிவான திட்டத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது. அதற்காக நாம் பின்வரும் விடயங்களில் உரிய கவனம் செலுத்துவது அவசியமாகும்.

        I.            இஸ்லாம் வலியுறுத்தும் ஒற்றுமை என்பது நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது, மேலும் இது 'இதயங்களின் ஒற்றுமை' என்றும் குறிப்பிடப்படுகிறது.

     II.            இஸ்லாம் அனைத்து முஸ்லிம்களையும் சமமாக எந்த பாகுபாடும் இல்லாமல் விழிக்கிறது மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் மீதான அவர்களின் பொதுவான பொறுப்புகளை அவர்களுக்கு நினைவூட்டுகிறது.

   III.            தற்புகழ்ச்சி மற்றும் உயர்வுமனப்பான்மை போன்ற அனைத்து உலக அளவுகோல்களையும் இஸ்லாம் நீக்கியுள்ளது; இறையச்சம், ஆன்மீக அறிவு, உளத்தூய்மையுடன் கீழ்ப்படிதல் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் முயற்சி செய்தல் போன்ற நற்பண்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது.

  IV.            கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக கூட்டாக, இணைந்து போராட வேண்டும் என்று இஸ்லாம் முஸ்லிம்களை அழைக்கிறது.

     V.            அனைத்து முஸ்லிம்களும் பொதுவான கிப்லாவை முன்னோக்குவதால், சமத்துவம், அருகாமை மற்றும் இஸ்லாமிய ஒற்றுமைக்கு வழிவகுப்பதோடு விசுவாசிகளிடையே தேவையான ஞானத்தை உருவாக்குவதில் இஸ்லாமிய பிரார்த்தனை முறை முக்கிய பங்கு வகிக்கிறது. ரமலான் மாதத்தில், முழு முஸ்லிம் உம்மாவும் விருப்பத்துடன், நோன்பு நோற்பதன் மூலம் சுய சுத்திகரிப்பு செயல்முறையில் நுழைந்து, அவர்களின் தெய்வீக மனித குணங்களை விரிவுபடுத்தி, இந்த குணங்களின் வேர்களை அவர்களின் இருப்பு மற்றும் ஆன்மாவில் ஆழப்படுத்துகிறது.

அதற்கு அடையாளமாக, ஹஜ் யாத்திரை - உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலும் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ஆன்மாக்களைப் பயிற்றுவிப்பதற்கும், அவர்களின் பொருளிய மற்றும் ஆன்மீக வாழ்வில் ஒப்பிடமுடியாத நன்மைகளை அடைவதற்கும் - இஸ்லாமிய ஒற்றுமைக்கு ஒரு குறிப்பிடத்தக்க சந்தர்ப்பமாகும்.

"ஏகத்துவம்", "இறை பக்தி", "ஏகனுக்கு விசுவாசம்", "மனிதனால் உருவாக்கப்பட்ட தீய அமைப்புகள் மற்றும் சாத்தானிய நெறிமுறைகளுக்கு மறுப்பு", "தெய்வீக வரம்புகள் மற்றும் செய்ய வேண்டியவைகளை கடைபிடித்தல்" போன்ற கருத்துகளுக்கு அர்த்தத்தை வழங்கியது மற்றும் செய்யக்கூடாதவை”, “மனித குலத்தினரிடையே பிளவை உருவாக்கும் அனைத்து பொருள் கூறுகளிலிருந்தும் விடுதலை”, மற்றும் “காஃபிர்களை நோக்கி பராஅத்தை வெளிப்படுத்துதல்” ஆகிய அனைத்துக்கும் ஹஜ் மகத்தான சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

ஹஜ் மற்றும் பைத் அல்-ஹராமின் புனிதம் என்பன சில சிறந்த சமூகக் கருத்துகளின் உட்குறிப்பு ஆகும், அவை இங்கே சுருக்கமாக விவாதிக்கப்படுகிறது:

1)     'பாவை வலம் வருதல், மனிதன் சரீர இச்சைகள் மற்றும் விலகல்களிலிருந்து விடுதலையைத் தேடுவதையும், மதத்தின் ஏகத்துவக் கருத்துக்களை உள்வாங்கும் நிலையில் இருப்பதையும் குறிக்கிறது. இஸ்லாமிய உம்மத்தினரிடையே ஒற்றுமையை வெளிப்படுத்த முயற்சிக்கும் தூய மற்றும் நேர்மையான இதயங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தல் ஹஜ் யாத்திரையின் சிறந்த நி'மத்களில் ஒன்று,

2)     ஒவ்வொரு முஸ்லிமும் தனது இனம், பாலினம் மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தனது எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், அடக்குமுறை ஆட்சியாளர்களால் ஒடுக்கப்படுவதைப் பற்றி எந்த அச்சமும் இல்லாமல் மற்ற முஸ்லிம்களுடன் உரையாடி, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் ஒரு சந்தர்ப்பத்தின் தேவையை ஹஜ் முஸ்லிம்களுக்கு நினைவூட்டுகிறது.

ஹஜ் என்பது அனைத்து நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஒரு சர்வதேச மன்றமாகும்.  அவர்கள் தங்கள் சமூகங்களின் பிரச்சினைகள் மற்றும் சவால்களை மதிப்பாய்வு செய்து, பொருத்தமான தீர்வுகளைத் தேடவும், ஏனைய முஸ்லிம்கள் மற்றவர்களுக்குத் தங்களின் பொறுப்புகளைக் கவனிப்பதற்காக பல்வேறு வழிகள் மற்றும் அனுபவங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், ஏகத்துவப் பாதையில் உள்ள தடைகள், அதற்கு எதிரான சதிகள் மற்றும் வஞ்சகமான சூழ்ச்சிகள் பற்றி அறிந்து அவற்றைக் கண்டிக்கவும் சந்தர்ப்பமாக பயன்படுத்தலாம். இந்த கருத்தை புனித குர்ஆன் இன்னும் தெளிவாக விளக்கப்படுத்துகிறது “(கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்...... (சூரா அல்-பகரா: 125)

3)     புகலிடமான இந்த புனித ஸ்தலத்தினது பாதுகாப்பையும் முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையின் மூலமே உறுதி செய்ய முடியும் என்பதையும், எனவே, அங்கு அதற்கு எதிராக எந்த விதமான கிளர்ச்சிக்கும் அல்லது நம்பிக்கையாளர்களை அச்சுறுத்துவதற்கும் இடமில்லை என்பதையும் ஹஜ் உலக முஸ்லிம்களுக்கு நினைவூட்டுகிறது. பாதுகாப்பு எனும் இந்த குறிக்கோள் உலகம் முழுவதும் நிறுவப்பட வேண்டும், அதை உலகம் முழுவதும் விரிவுபடுத்தி உலகளாவியதாக மாற்றுவது அனைத்து விசுவாசிகளின் மீதும் கடமையாகும்.

4)     அன்பாலும் பாசத்தாலும் நிரம்பிய விசுவாசிகளின் இதயங்கள் இந்த புனித இடத்தின்பால் ஈர்க்கப்படுகின்றன, அங்கு அவர்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அசுத்தங்களிலிருந்து விடுபட்டு தங்கள் சமூக வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டியவர்களாக உள்ளனர், அவர்களுடைய தூய அன்பு, கருணை மற்றும் பாசம் ஆகியவற்றின் செய்தியை தங்கள் சமுதாய உறுப்பினர்களிடையே பரப்புகையில், அவர்களின் சக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு சிறந்த உணர்ச்சிகரமான சூழ்நிலையை ஸ்தாபிப்பதற்கான பாதையை வகுத்துக் கொடுக்கிறது.

அன்பும் பாசமும் நிறைந்த ஹஜ்ஜின் உணர்ச்சிகரமான சூழல், சந்தேகத்திற்கு இடமின்றி, விசுவாசிகள் அல்லாஹ்வின் செய்தியை உள்வாங்குவதை சாத்தியமாக்குகிறது, "நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்." 49:10

5)     இந்த புனித ஆலயத்தின் (கஅபா) அருகாமையில் மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு, உலகின் பல்வேறு கூறுகளுக்கு இடையே ஒரு அற்புதமான இயற்கை நல்லிணக்க பாதையை வகுப்பதைக் குறிக்கிறது. இதை அடைவது மனிதனின் மிகப்பெரிய குறிக்கோள்களில் ஒன்று.

ஹஜ் மற்றும் மனிதனின் முழு வாழ்க்கையின் செயல்பாட்டில் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இயற்கையான இணக்கத்தை சுட்டிக்காட்டும் ஏராளமான போதனைகள் உள்ளன. உதாரணமாக, குலைனி குறிப்பிடுகின்றார்: இமாம் முஹம்மது பாக்கர் (அலை) கூறுகிறார்: "மூஸா (அலை) எகிப்தில் உள்ள ரம்லா நகரில் தனது இஹ்ராமைத் தொடங்கி, ஒட்டகத்தின் மீது ஏறி, இரண்டு துண்டு பருத்தி ஆடைகளை அணிந்து மலைகளின் அடிவாரத்தைத் தாண்டி, 'லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்' என்று ஓதினார். அதற்கு மலைகள் பதிலளிக்க ஆரம்பித்தன.

மற்றொரு இடத்தில் இமாம் முகமது பாக்கர் (அலை) இமாம் அலி (அலை) தம் தோழர்களிடம் இந்த வார்த்தைகளில் பேசியதை மேற்கோள் காட்டியுள்ளார்: "ஒரு யாத்ரீகர் 'லப்பைக்' என்று முழங்கத் தொடங்கும் போது, அவரது வலது மற்றும் இடதுபுறத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் அவருடன் (இணைந்து) முழங்குகின்றன மற்றும் அவரை நோக்கி இரண்டு மலக்குகள் "அல்லாஹ்வின் அடியாரே, உங்களுக்கு நற்செய்தி, இதற்காக அல்லாஹ் சுவனத்தைத் தராமல் இருக்க மாட்டான்" என்று கூறுவார்கள்.

இந்த குணாதிசயங்கள் மனிதனின் உலகக் கண்ணோட்டத்திலும் வாழ்க்கையிலும் நிச்சயமாக அவற்றின் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் இறை தூதர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பூமியில் சர்வவல்லமையுள்ள இறைவனின் ஆட்சியை ஸ்தாபிப்பதற்கும், ஓர் இறையச்சமுள்ள முஸ்லிம் சமுதாயத்தை உருவாக்குவதற்கும் முயற்சிக்கும் போது, முழு உலகமும் அவரை ஆதரிக்க தொடங்குகிறது என்பதைக் குறிக்கிறது.

எனவே, ஹஜ் என்பது பலதரப்பட்ட பார்வை கோணங்களை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கும், ஒற்றுமை, சமநிலை, நிதானம் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கான நடைமுறை பாதையை வகுப்பதற்காக ஒரு சிறந்த சூழ்நிலையை உருவாக்கும் தூய இறை வழிபாடு என்று முடிவு செய்யலாம்.

Monday, June 20, 2022

இஸ்ரேல் அழிவை எதிர்வு கூறும் முன்னாள் இஸ்ரேலிய பிரதமர்கள்

 Zionists Prophesying Their Imminent Doom


By: Ramzy Baroud*

மூலம்: ரம்ஸி பரூட்

சியோனிசம் என்பது பாலஸ்தீனத்தில் குறிப்பிட்ட காலனித்துவ நோக்கங்களை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு நவீன அரசியல் சித்தாந்தம் என்பது உண்மைதான் என்றாலும், தீர்க்கதரிசனங்கள், இஸ்ரேல் தன்னைப் பற்றி கொண்டுள்ள கருத்து மற்றும் பிற குழுக்களுடனான அதன் உறவு, குறிப்பாக அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மேசியானிக் குழுக்களின் ஓர் அங்கமாக தொடர்கின்றன.

முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுட் பராக் ஹீப்ரு மொழி செய்தித்தாள் Yedioth Ahronoth க்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, (யூத) மத தீர்க்கதரிசனங்களுக்கு அமைய இஸ்ரேல் அது ஸ்தாபிக்கப்பட்ட 1948 இல் இருந்து 80வது ஆண்டு நிறைவுக்கு முன்னதாக "சிதைந்துவிடும்" என்ற அச்சத்தை வெளிப்படுத்தினார். ஒரு "முற்போக்கு" அரசியல்வாதியாகக் கருதப்பட்ட எஹுட் பராக், இஸ்ரேல் பிரதமராகவும் ஒரு காலத்தில் இஸ்ரேலின் தொழிற்கட்சியின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"யூத வரலாறு முழுவதும், டேவிட் மற்றும் ஹஸ்மோனியன் வம்சத்தின் இரண்டு ராஜ்யங்களைத் தவிர யூதர்கள் 80 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த வரலாறு கிடையாது. இவ்விரண்டு காலகட்டங்களிலும் கூட, எட்டாவது தசாப்தத்தில் அவர்களின் சிதைவு தொடங்கியது" என்று பராக் கூறினார்.

போலி வரலாற்று பகுப்பாய்வின் அடிப்படையில், பராக்கின் தீர்க்கதரிசனம், 2017 இல் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அறிக்கைகளை நினைவூட்டும் வகையில், வழக்கமான மெசியானிய இஸ்ரேலிய சிந்தனையுடன் வரலாற்று உண்மைகளை ஒன்றிணைப்பது போல் தோன்றியது.

பராக்கினது போலவே, நெதன்யாகுவின் கருத்துக்களும் இஸ்ரேலின் எதிர்காலம் குறித்த அச்சத்தின் வெளிப்பாடாகவே இருந்தன, மேலும் பல ஆண்டுகளாக இஸ்ரேலிய "இருத்தலுக்கான அச்சுறுத்தல்" என்ற விடயம் ஜெருசலேமில் உள்ள நெதன்யாகுவின் வீட்டில் நடந்த ஒரு பைபிள் ஆய்வு அமர்வில், நெதன்யாகு, ஹாஸ்மோனியன் இராச்சியம் - மக்காபீஸ் என்றும் அழைக்கப்பட்டது - கிமு 63 இல் ரோமானியர்களால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு 80 ஆண்டுகள் மட்டுமே தப்பிப்பிழைத்ததாக எச்சரித்தார்.

"ஹஸ்மோனியன் அரசு 80 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது, இதை நாங்கள் மிகைக்க வேண்டும்," என்று நெதன்யாகு கூறியதாக அமர்வில் கலந்துகொண்டவர்களில் ஒருவரை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஹாரெட்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

ஆனால், நெதன்யாகு அந்த எண்ணிக்கையை மிகைக்க வேண்டும் என்று சொன்னதாக கூறப்படும் உறுதியின்படி, அவர் இஸ்ரேல் மக்காபீஸின் 80 ஆண்டுகளைக் கடக்கும், 100 ஆண்டுகள் உயிர்வாழும் என்று உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு இன்னும் 25 ஆண்டுகளே உள்ளன.

பராக் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் அறிக்கைகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை: முன்னவர் கருத்துக்கள் "வரலாறு" என்றும் பின்னவர் கருத்து விவிலியம் என்றும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இரு தலைவர்களும் இரண்டு வெவ்வேறு அரசியல் பள்ளிகளை சேர்ந்தோராய் இருப்பினும், ஒரே மாதிரியான சந்திப்பு புள்ளிகளில் ஒன்றிணைந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது: இஸ்ரேலின் உயிர்வாழ்வு ஆபத்தில் உள்ளது; இருத்தலியல் அச்சுறுத்தல் உண்மையானது மற்றும் இஸ்ரேலின் முடிவு காலத்தின் ஒரு விஷயம் மட்டுமே.

ஆனால் இஸ்ரேலின் இருப்பில் உள்ள அவநம்பிக்கையானது அரசியல் தலைவர்களிடம் மட்டும் இருப்பதாகத் தெரியவில்லை, அவர்கள் பயத்தை தூண்டுவதற்கும், அவர்களின் அரசியல் முகாம்களை, குறிப்பாக இஸ்ரேலின் சக்திவாய்ந்த மேசியானிக் தொகுதிகளை தூண்டுவதற்கும் சம்பவங்களை பெரிதுபடுத்தி கையாளுவதற்கும் கைதேர்ந்தவர்கள். இது உண்மையாக இருந்தாலும், இஸ்ரேலின் மோசமான எதிர்காலம் பற்றிய கணிப்புகள் அதன் அரசியல் உயரடுக்குகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை என்பது நிதர்சனம்.

2019 இல் Haaretz பத்திரிகை உடனான ஒரு நேர்காணலில், இஸ்ரேலின் மிகவும் மதிக்கப்படும் முக்கிய வரலாற்றாசிரியர்களில் ஒருவரான Benny Morris, இஸ்ரேலின் எதிர்காலம் பற்றி அதிகம் சொல்லியிருந்தார். பராக் மற்றும் நெதன்யாகு போல், மோரிஸ் எச்சரிக்கை சமிக்ஞைகளை விடுக்கவில்லை, ஆனால் அவர் இஸ்ரேலின் அரசியல் மற்றும் மக்கள்தொகை பரிணாம வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவு என்று கூறினார்.

"நாங்கள் அதிலிருந்து எப்படி வெளியேறப் போகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை," என்று மோரிஸ் மேலும் கூறினார்: "ஏற்கனவே, இன்று (மத்தியதரைக்) கடல் மற்றும் ஜோர்டான் (நதி) இடையே யூதர்களை விட அதிகமான அரேபியர்கள் உள்ளனர். முழுப் பகுதியும் தவிர்க்க முடியாமல் அரேபியப் பெரும்பான்மையைக் கொண்ட ஒரே தேசமாக மாறி வருகிறது. இஸ்ரேல் இன்னும் தன்னை ஒரு யூத நாடு என்று அழைக்கிறது, ஆனால் எந்த உரிமையும் இல்லாத ஆக்கிரமிக்கப்பட்ட மக்களை நாம் ஆளும் சூழ்நிலை 21 ஆம் நூற்றாண்டில் நீடிக்க முடியாது என்று கூறுகிறார்..

மொரிஸின் கணிப்புகள், யூத பெரும்பான்மையினரின் இனக் கற்பனையில் அவர் உறுதியாக இருந்தபோதும், பராக், நெதன்யாகு மற்றும் பிறரின் கணிப்புகளுடன் ஒப்பிடும் போது, மிகவும் தெளிவாகவும் யதார்த்தமாகவும் இருந்தது. இஸ்ரேலின் நிறுவனர் டேவிட் பென் குரியன் 1947-48ல் பாலஸ்தீனத்தின் அனைத்து பூர்வீக மக்களையும் வெளியேற்றவில்லை என்று ஒருமுறை வருந்தியவர், ஒரு தலைமுறையில், இஸ்ரேல் அதன் தற்போதைய வடிவத்தில் இல்லாமல் போகும் என்று கவலைப்பட்டார்.

"பாலஸ்தீனியர்கள் வெளிநாடுகளில் இருந்து அனைத்தையும் பரந்த, நீண்ட காலக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்" மற்றும் பாலஸ்தீனியர்கள் "அகதிகள் (சொந்த நாட்டிற்கு) திரும்பும் உரிமையைக் கோருவார்கள்" என்ற துல்லியமான கருத்து அவரது கருத்துக்களில் குறிப்பாக அவதானிக்கத்தக்கது. ஆனால் மோரிஸ் குறிப்பிடும் "பாலஸ்தீனியர்கள்" யார்? நிச்சயமாக அவர்கள் பாலஸ்தீனிய அதிகாரசபை இல்லை, அதன் தலைவர்கள் ஏற்கனவே பாலஸ்தீனிய அகதிகள் திரும்புவதற்கான உரிமையை ஓரங்கட்டியுள்ளனர், மேலும் நிச்சயமாக "பரந்த, நீண்ட கால முன்னோக்கு" அவர்களுக்கு இல்லை என்பதைக் கூறித்தான் ஆக வேண்டும். மோரிஸ் குறிப்பிடும் "பாலஸ்தீனியர்கள்", நிச்சயமாக, பாலஸ்தீனிய மக்களே, அவர்களின் தலைமுறைகள், பின்னடைவுகள், தோல்விகள் மற்றும் அரசியல் "சமரசங்கள்" அனைத்தையும் மீறி பாலஸ்தீனியர் உரிமைகளுக்கான முன்னணிப் படைகளாக தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர்.

உண்மையில், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பற்றிய தீர்க்கதரிசனங்கள் ஒரு புதிய விடயமல்ல.. பாலஸ்தீனம் பிரிட்டனின் உதவியுடன் சியோனிஸ்டுகளால் விவிலியக் குறிப்புகளின் அடிப்படையில் காலனித்துவப்படுத்தப்பட்டது. பண்டைய மக்கள் "வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்திற்கு" "திரும்புவதற்கு" விவிலியக் குறிப்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. பல ஆண்டுகளாக இஸ்ரேல் பல்வேறு அர்த்தங்களைப் பெற்றிருந்த போதும் - சில சமயங்களில் ஒரு "சோசலிச" கற்பனாவாதமாக, மற்றவர்களுக்கு ஒரு தாராளவாத, ஜனநாயக புகலிடமாக காட்டப்பட்டாலும்- அது உண்மையில் சியோனிஸவாதிகளைக் கொண்டது. இந்த உண்மையின் மிக மோசமான வெளிப்பாடு என்னவென்றால், மேற்குலகில் உள்ள மில்லியன் கணக்கான கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் இஸ்ரேலிக்கான தற்போதைய ஆதரவு பெரும்பாலும் மேசியானிய, உலக முடிவு தீர்க்கதரிசனங்களால் இயக்கப்படுகிறது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்..

இஸ்ரேலின் நிச்சயமற்ற எதிர்காலம் பற்றிய சமீபத்திய கணிப்புகள் வேறுபட்ட தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. இஸ்ரேல் எப்பொழுதும் தன்னை ஒரு யூத நாடாக வரையறுத்துக் கொண்டிருப்பதால், அதன் எதிர்காலம் பெரும்பாலும் வரலாற்று பாலஸ்தீனத்தில் யூத பெரும்பான்மையை தக்கவைக்கும் திறனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மோரிஸ் மற்றும் பிறர் ஏற்றுக்கொண்டுள்ளதன் அடிப்படையில் "மக்கள்தொகை மேலாதிக்கம்" தெளிவாகவும் விரைவாகவும் தொலைந்து வருவதால், அவர்களது இந்தக் கனவு இப்போது சிதைந்து கொண்டிருக்கிறது.

நிச்சயமாக, ஒரே ஜனநாயக அரசில் சகவாழ்வு எப்போதும் சாத்தியமான ஒன்றே. எனினும், இஸ்ரேலின் சியோனிச சித்தாந்தங்களைப் பொறுத்தவரை, அத்தகைய அரசு யூத, சியோனிச அரசின் வடிவத்தில் இனி இருக்கப்போவதில்லை என்பதால், நிறுவனத்தின் நிறுவனர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சகவாழ்வு நடைபெற வேண்டுமானால், சியோனிச சித்தாந்தம் முற்றாக அகற்றப்பட வேண்டும்.

பராக், நெதன்யாகு மற்றும் மோரிஸ் ஆகியோர்: மக்கள்தொகை அடிப்படையில் இஸ்ரேல் ஒரு "யூத நாடாக" நீண்ட காலம் இருக்கப்போவதில்லை. என்று பேசினாலும், இஸ்ரேல் இனி யூதர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடாக ஒரு போதும் இருந்ததில்லை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மத்திய கிழக்கு மற்றும் ஐபீரிய தீபகற்பம் முழுவதும் இருந்ததை போல, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் அமைதியாக இணைந்து வாழலாம் மற்றும் கூட்டாக செழிக்க முடியும் என்பதை வரலாறு நமக்குக் கற்பித்துள்ளது. உண்மையில், இது ஒரு கணிப்பு, ஒரு தீர்க்கதரிசனம் கூட, அதற்காக முயற்சித்தல் நல்லதே.

நன்றி: Antiwar.com

https://kayhan.ir/en/news/103831/zionists-prophesying-their-imminent-doom

Tuesday, June 14, 2022

இமாமை பின்பற்ற வேண்டியது முஸ்லிம்களின் கடமை

 Guarantor of the Righteous


 மூலம்: செய்யத் அலி ஷஹ்பாஸ்

 

يَوْمَ نَدْعُوْا كُلَّ اُنَاسٍۢ بِاِمَامِهِمْ‌ۚ فَمَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖ فَاُولٰۤٮِٕكَ يَقْرَءُوْنَ كِتٰبَهُمْ وَلَا يُظْلَمُوْنَ فَتِيْلًا‏

 (நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய இமாம்களுடன் (தலைவர்களுடன்) அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். 17:71.

சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வின் மேற்கண்ட வார்த்தைகள், நிரந்தரமற்ற உலகின் நிலையற்ற வாழ்க்கையில் வழிகாட்டுதலுக்காகவும், மறுமை நாளில் இரட்சிப்பின் முக்கியமான அம்சமாகவும் "விலாயா" அல்லது மனிதகுலத்தின் தலைமைத்துவத்தின் முக்கிய ஒன்றாக குறிப்பிடுகின்றன.

இந்த "ஆயா" (அத்தாட்சி) என்பது ஒவ்வொரு காலகட்டத்தின் சமகாலத் தலைவரின் அங்கீகாரத்தைக் குறிக்கிறது - ஒரு நபியாக இருந்தாலும் சரி, தூய இமாமாக இருந்தாலும் சரி - மேலும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களின் செயல்களின் அறிக்கை அட்டையை வலது கையில் கொடுக்கப்பட்டவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என்று கூறுகிறது. இரட்சிப்பு.

அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களால் பதிவுசெய்யப்பட்ட பிரபல்யமான ஹதீஸ் வெளிப்படையாக கூறுகிறது: "யுகத்தின் இமாமை அறியாமல் இறப்பவர்  அறியாமையுடன் மரணம் அடைகிறார்."

இன்று, நபிகளாரின் தூய வாரிசான இமாம் மஹ்தி (அலை) அவர்களை பூமியை ஊழல் மற்றும் ஒடுக்குமுறையின் அனைத்துச் சிதைவுகளிலிருந்தும் தூய்மைப்படுத்துவதற்குத் தோன்றுவார் என்றும் அமைதி, சுபீட்சம் மற்றும் நீதிக்கான உலகளாவிய அரசாங்கம் ஒன்றை நிறுவுவார் என்றும் எதிர்பார்த்து முழு நம்பிக்கையுடன் வாழ்கிறோம். மேற்கண்ட (சூரா அல்-இஸ்ரா) தெய்வீக சொற்றொடர்களின் விளக்கத்தை மேலும் மேலும் அறிய ஒரு சிறந்த வாய்ப்பை 8வது தூய வாரிசு பிறந்த துல்-கதாவின் 11வது நாள் வழங்குகிறது.

இமாம் அலி அர்-ரெஸா (அலை), பல முஸ்லிம்களால், அவர்களின் சிந்தனைப் பிரிவு எதுவாக இருந்தாலும், "இமாம்-ஏ ஸமான்" அல்லது தலைவன், தன்னை நம்பித் தம்மை ஒப்படைக்கும் எவருக்கும் மறுக்க முடியாத பாதுகாவலர் இந்த குறிப்பிட்ட "ஆயா" அர்த்தத்தை விவரிக்கும் போது இவ்வாறு கூறுகிறார்:

"அந்த நாளில் (மறுமை), ஒவ்வொரு சமூகமும் அதன் சமகால இமாம் (தலைவர்), மற்றும் அவர்களின் இறைவனின் வேதம் மற்றும் றஸூலுல்லாஹ்வின் நடைமுறைப் போக்கோடு அழைக்கப்படும்."

இமாம் ரெஸா (அலை) அவர்கள் தனது பாட்டனார் இமாம் ஜாபர் அஸ்-சாதிக் (அலை) தியாகியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஹிஜ்ரி 148 இல் நபிகளாரின் நகரமான மதீனாவில் பிறந்தார்கள், அவர் தனது 35 வயதில் தனது தந்தை இமாம் மூசா அல்-கஸெம் (அலை) பாக்தாத்தில் விஷம் ஊட்டப்பட்டு கொல்லப்பட்டதன் பின் விலாயத் பொறுப்பை ஏற்று, இஸ்லாத்தில் தலைமைத்துவம் பற்றி விரிவாக அலசினார்.

ரசூலுல்லாஹ் (ஸல்) மற்றும் அமீருல் முஃமினீன் இமாம் அலி இப்னு அபீ தாலிப் (அலை), அவரைத் தொடர்ந்து அவரது மகன்களான இமாம் ஹசன் (அலை) மற்றும் கர்பாலாவின் தியாகி இமாம் ஹுசைன் (அலை) ஆகியோரின் பணியைத் தொடர்வதற்காக வெலாயத்தை "அல்லாஹ் கொடுத்த அதிகாரம்" என்று அவர் கூறினார்கள்.

பின்னர் இமாம் ரெஸா (அலை) “இமாம் என்பவர் அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட வரம்புகளை நிறுவ பாடுபடுகிறார் மற்றும் ஞானம், நல்ல அறிவுரைகள் மற்றும் சுய விளக்கங்கள் மூலம் அல்லாஹ்வின் பாதைக்கு (மக்களை) அழைப்பதன் மூலம் வல்லமை மிக்க அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட மார்க்கத்தைப் பாதுகாக்கிறார் மேலும், இறுதியாக, இமாம் மதத்தின் தலைவர், முஸ்லிம்களின் ஒழுங்கைப் பேணுபவர், உலகில் உள்ள விசுவாசிகளுக்கு நன்மை பயப்பவர் மற்றும் அவர்களின் மகிமை."என்று கூறினார்.

அவர் மேலும் கூறினார்: “இமாம் என்பவர் இஸ்லாத்தின் செழிப்பான வேர் மற்றும் அதன் முக்கிய கிளை. இமாம் ஒரு நேர்மையான நண்பர், அன்பான மற்றும் நட்பான தந்தை, உண்மையான விசுவாசமான சகோதரன் மற்றும் தோழன், தன் சிறு குழந்தை மீது பாசமுள்ள மற்றும் தன்னலமற்ற தாயைப் போலவே, அல்லாஹ்வின் அடியார்களுக்கு அடைக்கலமாக இருக்கிறார்.


ஒவ்வொரு தூய இமாமும்,அல்லாஹ்வின் அனுமதியுடன், விசுவாசிகளுக்கு, குறிப்பாக அவரிடம் அடைக்கலம் தேடுபவர்களுக்கு உத்தரவாதம் அளிப்பவர் மற்றும் பாதுகாவலர் ஆவார்.

அப்பாசிய ஆட்சியின் பொது தன்னை கலீஃபாவென அழைத்துக்கொண்ட மாமூனால் வலுக்கட்டாயமாக கொராசான் அழைத்து வரப்பட்ட 55 வயதான இமாம் ரெஸா (அலை) அவர்களின் (இமாம்-ஏ-ஸமானின்) இமாமத் காலம் 20 வது ஆண்டுகளில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது ஏன் என்பதை இப்போது நாம் புரிந்துகொள்கிறோம்.

கொடுங்கோலன் ஹாரூனினால் தடை செய்யப்பட்டிருந்த கர்பலாவிற்கான யாத்திரை, கர்பாலாவில் உள்ள அவரது மூதாதையரான இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் புனித ஆலயத்திற்கு யாத்திரை செல்வோரின் பாதுகாப்பிற்காக இமாம் வழங்கிய உத்தரவாதம் போன்ற இமாமின் வாழ்க்கையிலிருந்து மறக்கமுடியாத பல நிகழ்வுகள் இந்த உண்மைகளை சுட்டிக்காட்டுகின்றன.

மற்றொரு உதாரணம், ஒரு வேட்டைக்காரனிடம் பிடிபட்ட ஒரு பெண் மான் இமாமின் பாதங்களில் தலையை உரசுவதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, ​​வேட்டைக்காரனிடம் அந்த மானை அதன் குட்டிகளுக்கு பாலூட்டுவதற்காக காட்டிற்குச் செல்ல விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டார். அது குட்டிகளுக்கு பாலூட்டிவிட்டு திரும்பும் வரை தானே பிணை நிற்பதாக உறுதியளித்தார். காட்டுக்குள் சென்ற அந்த பெண் மான் குட்டிகளுடன் திரும்பி வந்ததைப் பார்த்து திகைத்துப் போன வேட்டைக்காரன், இமாமிடன் மன்னிப்பு கோரியவனாக, அந்த பெண் மானையும் அதன் குட்டிகளையும் மீண்டும் காட்டிற்குள் விட்டுவிட்டான்.

பின்னர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தற்காலிக அதிகாரத்தை றஸூலுல்லாஹ்வின் அஹ்ல் அல்-பைத் வசம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக மக்களை ஏமாற்றும் முயற்சியில் மமூன் ஈடுபட்டான்; அவனது நோக்கம் இமாம் ரெஸா (அலை) அவர்களை "ஆட்சியின் வாரிசு" என்று அறிவிப்பதன் மூலம் மக்கள் பணத்தை சுரண்டுவதாகும்.

இமாமின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், உம்மத்தை அவரிடமிருந்து அந்நியப்படுத்தவும் தந்திரமான கலீஃபாவின் சதி, நிறைவேறவில்லை,

இன்று மாமூன் மற்றும் அப்பாஸிட்களின் எந்த ஞாபகார்த்த அடையாளமும் இல்லை, அதே நேரத்தில் இமாம் ரெஸா (அலை) மஷ்ஹத்தில் இருந்து ஆட்சி செய்கிறார், அங்கு ஈரான் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான யாத்ரீகர்கள் அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இமாமின் சன்னதியில் கூடுகின்றனர்.

https://kayhan.ir/en/news/103512/guarantor-of-the-righteous