Tuesday, March 31, 2020

மனித இனத்தின் பாதுகாப்புக்காக ஈரான் மீதான தடைகளை அமேரிக்கா நீக்க வேண்டும்.


US must remove sanctions on Iran for the protection of humanity.

COVID-19 ஐ எதிர்த்துப் போராட அமேரிக்கா மற்ற நாடுகளிடம் உதவி கோருகையில், ஈரான் மீதான அதனது பொருளாதார பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர மறுக்கிறது: ஸரீஃப்


கோவிட்-19 எந்த நாட்டையும் விட்டுவைக்காமல் உலகை அச்சுறுத்துகிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அமேரிக்கா கூட தொற்றுநோயை எதிர்த்துப் போராட மற்றவர்கள்  உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக்கொண்டு இருக்கிறது, ஆனால் ஈரானுக்கு எதிரான அதன் பொருளாதார பயங்கரவாதத்தை நிறுத்த மறுக்கிறதுஎன்று என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஸரீஃப் தெரிவித்துள்ளார்.

தென் கொரிய ஜனாதிபதியின் 'நீல மாளிகை' விடுத்த ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டி தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு கட்டுரையை பிரசுரித்திருந்தது; அதன்படி கொரோனா வைரஸை எதிர்த்து போராட மருத்துவ உபகரணங்களை அனுப்புமாறு தென் கொரியாவை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் கொடிய கொரோனா வைரஸ் ஈரானில் பாரிய சேதத்தை ஏற்படுத்தி வருவதால், ஈரானுக்கு எதிரான அமெரிக்க சட்டவிரோத பொருளாதாரத் தடைகளுக்கு உலகளாவிய எதிர்ப்பு தீவிரமடைந்து வருகிறது. 

ஈரானில் 2020 மார்ச் 30ம் திகதி வரை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,495 ஐ எட்டியுள்ளது, அவர்களில் 2,757 பேர் இறந்துள்ளனர்.

இவ்வாறு இருக்கையில் ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான மிருகத்தனமான அமெரிக்க பொருளாதாரத் தடையை மேலும் விஸ்தரித்துள்ளார்.

கொரோனா பரம்பலை எதிர்ப்பதற்கான ஈரானின் முயற்சிகள் அமெரிக்க பொருளாதாரத் தடை காரணமாக கடுமையாக தடைபட்டுள்ளதாக தெஹ்ரான் கூறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர், செவ்வாயன்று, ஈரான் போன்ற நாடுகளுக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்ளும் சகலவிதமான (அமெரிக்க) தடைகளையும் மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மருத்துவ முறைகள் வீழ்ச்சிக்கு தள்ளப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

"இந்த இக்கட்டான சமயத்தில், உலகளாவிய பொது சுகாதார காரணங்களுக்காகவும், இந்த நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் உயிர் வாழ் உரிமை உட்பட அனைத்து உரிமைகளை காப்பதற்கும், தடைகள் தளர்த்தப்பட வேண்டும் அல்லது இடைநிறுத்தப்பட வேண்டும்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கேல் பேச்லெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"உலகளாவிய தொற்றுநோயின் சூழலில், ஒரு நாட்டில் மருத்துவ முயற்சிகளைத் தடுப்பது நம் அனைவருக்கும் உயிர் ஆபத்தை அதிகரிக்கிறது," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஈரானின் முயற்சியில் பெரும் பாதிப்பு 

கொடிய வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள், பல ஈரானியர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல், அது முழு உலகையும் பாதிக்கும் என்று ஐ.நா.வுக்கான ஈரானிய தூதுவர் ராவஞ்சி, எச்சரித்தார்.
"ஈரானிய வர்த்தகத்தில் கடுமையான அமெரிக்க தலையீடு கொரோனா தொற்றுநோயைச் சமாளிக்கும் ஈரானின் முயற்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது."

உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இந்த கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் பறித்துவிட்டது. இந்த வைரசுக்கு எதிராக  உலக மக்கள் போராடுகிறார்கள், பல நாடுகளில் மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் மக்கள் சவாலை எதிர்கொள்ள போராடுகிறார்கள், ஆயினும் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து அவர்களால் விடுபடவில்லை.

உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸை ஒரு தொற்றுநோய் என்று கூறியுள்ளது. இதை எதிர்கொள்ள பல நாடுகள் பல பில்லியன் டாலர்களை செலவிடுகின்றன. இந்த வைரஸின் வீரியம் எப்போது அடங்கும் என்பதிலும் எந்த தெளிவும் இல்லை. அதன் பங்கிற்கு, ஈரானும் வைரஸைத் தோற்கடிப்பதற்காக வளங்களைத் திரட்ட போராடுகிறது. எவ்வாறாயினும், ஈரானிய மக்கள் மீது சுமத்தப்பட்ட அநியாய அமெரிக்க பொருளாதாரத் தடைகள் காரணமாக அதைக் திறம்பட கையாள்வதற்கான ஈரானின் திறன் குறைவாக வே உள்ளது.

ஈரானிய அணுசக்தி ஒப்பந்தமான ஜே.சி.பி.ஓ.ஏ-வில் இருந்து அமெரிக்கா தன்னிச்சையாக விலகி 22 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது என்பது மட்டுமல்லாமல் ஈரானுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பொருளாதாரத் தடை விதித்தது. இதனால் சாதாரண ஈரானிய மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்; குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட மருந்தின் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடிப்படை தேவைக்கான மனிதாபிமான பொருட்கள் அதன் பொருளாதாரத் தடைகளுக்கு உட்படவில்லை என்று அமேரிக்கா கூறினாலும், அது உண்மை அல்ல. அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்கான பணப்பரிமாற்றம் செய்வதற்கு எந்த ஒரு வழியுமில்லை. மனிதாபிமான பொருட்களுக்காகக் கூட, அமெரிக்க தடையை மீறுவதாக கண்டறிந்தால் தாங்கள் அமேரிக்க பழிவாங்கலுக்கு உள்ளாவோம் என்று நிதி பரிவர்த்தனை நிறுவனங்களை அச்சப்படுகின்றன.

ஈரானுடனான மனிதாபிமான வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட சுவிஸ் சேனல் என்று அழைக்கப்படுவது கூட சரியாக இயங்குவதில்லை.  ஈரானுக்கு வெளியே அதன் சொத்துக்கள், வங்கி இருப்புகள் முடக்கப்பட்டுள்ள காரணத்தினால் சுவிஸ் வங்கிக்கு மாற்றுவதில் பரிவர்த்தனை சிக்கல் காணப்படுகின்றது. இதன் காரணமாக சுவிஸ் சேனல் சரியாக செயல்படவில்லை. மேலும், ஈரானிய சர்வதேச வர்த்தக நடவடிக்கையில் அமெரிக்க தலையீடு, எங்கள் வெளிநாட்டு நாணய இருப்புக்களை மேலும் வடிகட்டுகிறது, இந்த சேனல் உண்மையில் சில மாதங்களில் அவசியமற்ற ஒன்றாக ஆகலாம். ஈரானியர்கள் துயரத்தில் அமெரிக்காவுக்கு எந்த அக்கறையும் கிடையாது. அவர்கள் மனிதாபிமானம் பற்றி பேசுவதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்க ளே அன்றி வேறில்லை.

இன்று, முழு உலகும் கொரோனா வைரஸால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது. எந்தவொரு நாடும் அதன் அச்சுறுத்தலிலிருந்து விடுபடுபட்டுள்ளதாக கூற முடியாது. இது ஒரு சர்வதேச அச்சுறுத்தலாகும், இந்த வைரஸ் எல்லா பௌதிக எல்லைகளை கடந்துகொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த சர்வதேச செயற்பாடு அவசியமாகும். அமெரிக்கா ஈரான் மீது விதித்துள்ள மருத்துவ உபகரணங்கள் உட்பட கடுமையான பொருளாதாரத் தடைகள், வைரஸைக் கட்டுப்படுத்தும் ஈரானின் முயற்சிகளை மோசமாக பாதித்துள்ளன. எனவே, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஈரானிடம் சிறந்த மருத்துவ திறன்கள் இருந்தபோதிலும், அது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாகும்.  உண்மையில், கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்தும் வசதிகள், மற்றவர்களை விட ஈரான்  குறைவாகவே கொண்டிருக்கிறது.

இன்று நாடுகள் முன்பை விட ஒன்றையொன்று அதிகம் சார்ந்திருக்கின்றன. உலகம் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களுக்கு சர்வதேச அளவில் அதிக ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் தேவை. இந்த சூழலில், எந்த நாடும் இந்த சவால்களை தனித்து எதிர்கொள்ளவோ அல்லது அவற்றின் விளைவுகளை தனித்து சமாளிக்கவோ முடியாது. எல்லா நாடுகளும்,  ஒரே படகில், அடிக்கடி புயல் வீசும் கடல்களில் பயணம் செய்கின்றன. ஒன்றோ நாம் ஒன்றாக போராடி வெற்றி பெறுவோம், அல்லது நாம் ஒன்றாகவே பாதிக்கப்பட்டு இழப்புகளை சந்திப்போம்.  இதுவே யதார்த்தம்.

ஈரான் மீதான சட்டவிரோத அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் தொடர்ச்சியானது நோயைக் கட்டுப்படுத்தும் ஈரானின் திறனை எதிர்மறையாக பாதிக்கும். இந்த பயனற்ற அமெரிக்க கொள்கையின் விளைவாக ஈரானிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள், அதேபோல் - நலன்களில் ஒன்றோடொன்று இணைந்த நமது கிரகத்தில் உள்ள - மற்ற நாடுகளும் ஈரானுடன் சேர்ந்து பாதிப்புகளுக்கு உள்ளாகும். அமேரிக்கா ஒழுக்கக்கேடான அதன் பொருளாதாரத் தடைக் கொள்கையைத் தொடர வலியுறுத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானது மட்டுமல்லாமல், ஈரானில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பலரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.

கொரோனா வைரஸின் பரவலைத் தணிக்க அமேரிக்கா இப்போது செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயங்களிலொன்று ஈரானுக்கு எதிரான அதன் பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக்கும். இது ஈரானிய பொது மற்றும் தனியார் துறைகளுக்கு வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான ஆதாரங்களைக் கொண்டிருக்க வழிவகுக்கும். அமேரிக்கா தார்மீக மற்றும் சட்டபூர்வமான கடமைகளுக்கு உட்பட்டுள்ளது, அதை விரைவில் செய்ய வேண்டும். ஈரான் மீதான தடைகளை நீக்குவது ஈரானியர்களுக்கு மட்டுமல்ல, முழு மனிதகுலத்திற்கும் பாதுகாப்பாக அமையும்.



Monday, March 23, 2020

இந்த ஈனத்தனமான செயலை நாம் ஒருபோதும் அமெரிக்க, ஐரோப்பிய மக்களுக்கு செய்ய மாட்டோம்.


Iranians to Western nations: We will never do what you did to us in hard days!




இமாம் மஹ்தி (அலை) அவர்கள் நாம் எதிர்பாராத நேரத்தில் மீண்டும் தோன்றி, உலகில் நீதியையும் அமைதியையும் நிறுவுவார் என்பது பொதுவாக முஸ்லிம்கள் அனைவரினதும் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையில் குறிப்பாக ஜ'பரி ஷீஆ முஸ்லிம்கள் மிகவும் உறுதியாய் உள்ளனர்.

ஈரான் மீதான அதிகபட்ச அழுத்தத்தில் திருப்தி அடையும் குறிப்பிட்ட அந்த நாடுகள் ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிலைமை இன்னும் சிறந்ததாக நிச்சயம் மாறும் என்பதையும், அது மீண்டும் மேலதிக பலம்பெற்று தனது கௌரவத்தை காத்துக்கொள்ளும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், மேற்கத்திய அரசாங்கங்கள் எமது மக்களுக்கு செய்த அநீதியை, இழைத்து வரும் கொடுமையை நாங்கள் ஒருபோதும் அந்த நாட்டு மக்களுக்கு செய்ய மாட்டோம் என்று உறுதிபட கூறுகின்றோம்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் எங்கள் மதிப்புமிக்க ஈரான் நாடும், ஏனைய 160 க்கும் மேற்பட்ட நாடுகளைப் போலவே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயை எதிர்கொள்ள சமீபத்திய வாரங்களாக நாட்டின் முழு திறனும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இயற்கையாகவே, வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள் தங்கள் வசதிகள், திறன்கள் மற்றும் ஆற்றல் அனைத்தையும் நோயை எதிர்கொள்ள பயன்படுத்தத் தொடங்கின. இருப்பினும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஈரானின் நிலை  வேறுபட்டது.

தமக்கு எதிரான எதிரிகளின் அதிகபட்ச அழுத்தக் கொள்கையை  எதிர்கொண்ட நிலையில் ஈரானிய மக்கள் மிகவும் கடினமான ஒரு பாரசீக ஆண்டை (மார்ச் 21, 2019-மார்ச் 19, 2020) கடந்து புத்தாண்டை தொடங்கினர். எதிரிகள் எம்மை பலவீனப்படுத்த கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளனர், இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடங்கினர், ஈரானிய இராணுவத் தளபதியை படுகொலை செய்தனர்.

கடந்த டிசம்பரில் வுஹானில் தோன்றியதாகக் கருதப்படும் கோவிட்-19, வைரஸ் 162 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றின் காணமாக உலகில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டும் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் உள்ளனர். ஈரானிலும் பல நூறு மக்கள் உயிரிழந்துள்ளனர்.


வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு கலாச்சார மற்றும் மதக் ஒன்றுகூடல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பொது இடங்கள், பேருந்துகள் மற்றும் நிலத்தடி ரயில்கள் தொடர்ந்து கிருமி நீக்கம் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றன.

ஈரானுக்கு எதிரான அதிகபட்ச அழுத்தத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் இருந்து வரும் பேரழிவு தரும் பொருளாதாரத் தடைகள் மற்றும் உளவியல் யுத்தங்களுக்கு முகம்கொடுத்த நிலையிலும் திட உறுதிகொண்ட ஈரானிய மக்கள் வைரஸ் தொற்றை எதிர்கொண்டுவருகின்றனர்.

இந்த அதிகபட்ச அழுத்தம் ஈரானியர்களுக்கு எதிரான உளவியல் உளவியல் யுத்தம் என்பதைத் தவிர வேறில்லை. ஈரானியர்களிடையே நம்பிக்கையற்ற உணர்வை உருவாக்கி, அவர்களை அமெரிக்காவின் காலடியில் மண்டியிட்டு சரணடையச் செய்வதே அவர்களது முதன்மையான நோக்கம். அது நிச்சயமாக நடக்கப்போவதில்லை என்பதை கடந்த 4 சதாப்த வரலாறு பறைசாட்டிக்கிக் கொண்டிருக்கிறது..

ஈரானுக்கு எதிரான இவ்வாறான தொடர்ச்சியான அழுத்தங்கள் பயனளிக்காததைத் தொடர்ந்து எதிரிகள் இப்போது கொரோனா வைரஸ் பரம்பலை, ஈரானிய சமுதாயத்தில் கடைசி இழப்புகளை ஏற்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொண்டுள்ளது. இருப்பினும் சர்வ வல்லமையுள்ள இறைவனின் சக்தி வேறு எந்த சக்திகளையும் விட வலிமையானது என்பதில் எமது எதிரிகள் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கின்றனர்.

இவர்கள் எந்தளவு மோசமான செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதை புரிந்துகொள்ள கடந்த சில வாரங்களாக இவர்களது ஏவல் ஊடகங்கள் வெளியிட்டு வரும் சில மோசமான செய்திகளில் கவனம் செலுத்துவோம்:

ஈரானில் அரச மட்டத்தில் சிலர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானதை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டதை அடுத்து எதிரிகளின் ஏவல் ஊடகங்கள் ஈரான் முகம்கொடுத்துள்ள இக்கட்டான நிலைபற்றி கேலி செய்தன. பிறர் துயரத்தில் குதூகலித்தன. பின்னர் பிரிட்டிஷ் சுகாதார அமைச்சரும் 10 பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது வாயை மூடிக்கிக்கொண்டு இருந்தன.

வைரஸ் பரம்பலைத் தொடர்ந்து திடீர் என ஏற்பட்ட கேள்வி அதிகரிப்பின் காரணமாக ஈரானில் முக கவசங்கள் மற்றும் கிருமிநாசினி, தோற்று நீக்கி ஜெல் ஆகியவற்றின் சாதாரண பற்றாக்குறையை அவர்கள் ஒரு பேரழிவாக பெரிதுபடுத்தினர், ஆனால் பின்னர் அதே நிலை, நாட்டில் வைரஸ் தொற்றுக்கு முன்பே, அமெரிக்காவில் ஏற்பட்டதை செய்தி ஊடகங்களில் எதுவும் பெரிதாக கவனம் செலுத்தவில்லை!

எதோ ஈரான் தான் வைரஸை பரப்புவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பது போன்று குற்றம் சாட்டி, ஈரான் அதன் எல்லைகளை மூட வேண்டும், ஈரானை தனிமைப் படுத்த வேண்டும் என்று பிரச்சாரங்களை மேற்கொண்டன. ஆனால் இப்போது நாம் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வைரஸ் தொற்றுவதைத் தடுக்கும் பொருட்டு அவற்றின் எல்லைகளை மூடிக்கொண்டு இருக்கின்றன என்பதைக் காண்கிறோம்..


ஈரானிய அரசியல் மற்றும் மத பிரமுகர்களின் வைரஸ் காரணமான மரணம் ஈரானில் ஒரு பெரிய நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது, ஈரானிய தலைவர்கள் தனிமைப் பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டனர், இதனால் ஈரானே முடங்கிவிட்டது போன்று செய்தி வெளியிட்டனர். எவ்வாறாயினும், சிறிது நேரத்திற்குப் பிறகு, கனேடிய பிரதமரின் மனைவி, அமெரிக்க பாதுகாப்பு செயலாளரும் பதில் செயலரும் வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டனர்; இதை அவ்வூடகங்கள் பெரிதுபடுத்தவில்லை!

புனித கும் நகரில் உள்ள ஆயத்துல்லாஹ்க்கள் சுகாதார அறிவுறுத்தல்களை நிறைவேற்ற பிரதான தடையாக இருப்பதாக அவர்கள் பொய் பிரசாரத்தை மேற்கொண்டார்கள். பின்னர், சில அமெரிக்க கிறிஸ்தவ மத குருக்கள் வைரஸ் பரம்பலை பொருட்படுத்தாமல் ஒருவருக்கொருவர் குலுக்குமாறு தொடர்ந்து மக்களை ஊக்குவித்தனர். அது தொடர்பான படங்களும் வெளியிடப்பட்டன.

இமாம் ரெஸாவின் சகோதரியான மசூமேவின் (அ.ஸ.) புனித பள்ளிவாசல் கதவை ஒருவர் முத்தமிடும் ஒரு வீடியோவை வெளியிட்டு குற்றம்சாட்டினர். பின்னர் சுவிஸ் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு தெருவின் நிலக்கீல்களை நக்குவதைக் காட்டும் வீடியோ வைரலாகியது; அந்த செயலை குற்றமாக அவர்கள் காணவில்லை.!.

ஈரானியர்கள் மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ளதாக அவர்கள் கூறினர். இருப்பினும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் சக்தியை தாம் பெற்றுள்ளதாக கூறுகிறார். இது தொடர்பாக வீடியோவும் வெளியாகியது!  இது அவர்களுக்கு மூட நம்பிக்கையாகத் தெரியவில்லை.

அவர்கள் ஈரானியர் பதற்றமடைந்துள்ளதாக, பீதியில் உறைந்து போயுள்ளதாக உலகுக்கு கூறினார், ஆனால் மேற்கத்திய நாடுகளில் பீதியில் கழிப்பறை திசுக்களை (Toilet tissue) வாங்குவது தொடர்பாக மக்கள் மத்தியில் சண்டை பற்றி நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகின. சில நாடுகளின் அதிகாரிகள் கழிப்பறை திசுக்களைப் பயன்படுத்தும் அவர்களது சீர்கெட்ட கலாசாரத்துக்கு  பதிலாக சுத்தம் செய்வதற்கு நீர் சொம்புகளை பயன்படுத்தவும் முன்வந்தனர்!

ஈரானியர்களால் கொரோனா வைரஸ் பரம்பலை எதிர்த்துப் போராட முடியவில்லை என்றும் அதனால் அவர்கள் பிரார்த்தனை செய்துகொள்ளட்டும் என்றும் நக்கலடித்தனர், ஆனால் வெள்ளை மாளிகையில் அரசாங்க அதிகாரிகளின் வெகுஜன ஜெபங்களில் ஈடுபட்ட புகைப்படம் வைரலாகியது; இப்போது இவர்களது நக்கலும் நையாண்டியும் எங்கு போனதோ தெரியவில்லை.!

ஈரானிய சமுதாயத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பலவற்றை அவர்கள் தொடர்ச்சியாக பிரசாரம் செய்தனர்.

கடந்த 40 ஆண்டுகளில் ஈரானியர்கள் மீதான பரந்தளவிலான மிருகத்தனமான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியையேனும் அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ அனுபவித்திருந்தால், சந்தேகத்திற்கு இடமின்றி, அவை எப்போதோ சரிந்திருக்கும் என்பது திண்ணம்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, முன்னேறிய நாடுகள் என்று அழைக்கப்படும் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளால் இத்தகைய பேரழிவு தரும் பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தங்கள் ஏதும் அற்ற நிலையில் செய்ய முடியாதவற்றை ஈரான் நாடு முழுவதும் பரவலான கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளைச் செய்து வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளத்தக்கது.

தன்னம்பிக்கை, மேம்பட்ட கலாச்சாரம், ஆழ்ந்த மனிதாபிமான உணர்வு மற்றும் உறுதியான மத நம்பிக்கைகள் கொண்ட வரலாற்றின் மூலம் ஈரான்,  எந்த நிலைமையையும் சமாளிக்கக்கூடிய ஒரு முன்னோடி தேசமாக மாற்றி யுள்ளது என்பதை யாரும் புறக்கணிக்க முடியாது.

நாட்டின் மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்தோரின் தியாகங்கள் தொற்றுநோயை மேலும் சக்திவாய்ந்த முறையில் எதிர்கொள்வதற்கு  அரசாங்கத்திற்கு உதவியுள்ளன. மனிதநேயமற்ற மேற்கத்தேய பொருள்முதல்வாதத்தின் சித்தாந்தங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட சமூகங்களில் இத்தகைய மதிப்புமிக்க பண்புகளை காண்பது அரிது.

ஈரானைத் தவிர, இதுபோன்ற நெருக்கடி நிலைமைகளை சமாளிப்பதற்காக தங்கள் அரசாங்கத்திற்கு உதவ தன்னிச்சையாக திரண்டு வரும் மக்கள் கூட்டத்தை வேறு எந்த நாட்டையும் கண்டுபிடிப்பது கஷ்டமான காரியமாகும். அதேவேளை, கொரோனா வைரஸ் பரம்பல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், ஏற்படக்கூடிய குழப்பங்களிலிருந்தும் தம்மை பாதுகாத்துக்கொள்ள அமெரிக்க மக்கள் துப்பாக்கிகளை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் என்பது வேடிக்கையாய் இல்லையா...?

இந்தக் கட்டுரை ஈரானுக்கு எதிரான போரை நாடும் எதிரிகளின் உண்மையான நோக்கங்களை அறிய முயற்சிக்கிறது. எங்கள் சமுதாயத்தின் ஒற்றுமையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில், இவர்கள் புனையப்பட்ட புள்ளிவிவரங்கள், தரவுகள் மற்றும்  விகடமானதும்  கீழ்த்தரமானதுமான போலி செய்திகளை நம்பும் மக்களாக ஈரானியர்களும் ஆகவேண்டும் என்று அவர்கள் கனவு காண்கிறார்கள். நிச்சயமாக அது கனவாகவே போகும்.

இறுதியாக நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது: கடினமான இந்த காலம் நிச்சயமாக கடந்து போகும், நாங்கள் மீண்டும் மேலதிக பலம் பெற்று முன்னேறுவோம், அதேநேரம் ஈரானியர்களான நாம் உலகளாவிய ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக எழுந்து நிற்கிறோம்; எழுந்து நிற்போம் என்பதை உலக நாடுகள் உணர வேண்டும்.

ஈரான் மீதான அதிகபட்ச அழுத்தத்தில் திருப்தி அடையும் குறிப்பிட்ட அந்த நாடுகள் ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிலைமை இன்னும் சிறந்ததாக நிச்சயம் மாறும் என்பதையும், அது மீண்டும் மேலதிக பலம்பெற்று தனது கௌரவத்தை காத்துக்கொள்ளும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், மேற்கத்திய அரசாங்கங்கள் எமது மக்களுக்கு செய்த அநீதியை, இழைத்து வரும் கொடுமையை நாங்கள் ஒருபோதும் அந்த நாட்டு மக்களுக்கு செய்ய மாட்டோம் என்று உறுதிபட கூறுகின்றோம்.



Tuesday, March 17, 2020

விஞ்ஞானிகளை இன்றளவிலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் ஈரானிய புத்தாண்டு


The Iranian New Year is still surprising scientists
நவ்ருஸ் என்பது ஈரானிய புத்தாண்டு ஆகும், இது பொதுவாக பாரசீக புத்தாண்டு என்றும் அழைக்கப்படுகிறது. பல்வேறு இன-மொழியியல் மக்கள் குழுக்களால் உலகளவில் இப்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.


பாரசீகம் என்பது ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை கட்டியாண்டது என்பதை நாம் அறிவோம். அதற்கென சில பண்பாட்டு நாகரீக பழக்கவழக்கங்கள் இருந்தன; அதிலொன்றுதான் வசந்த காலத்தின் முதல் நாளைக் கொண்டாடும் நவ்ரூஸ் பண்டிகையாகும். பாரசீக சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டிருந்த அனைத்து பிரதேசங்களிலும் இன்றுவரை இந்தப் பண்டிகை அதன் தனித்துவமான ஈரானிய பாரம்பரியங்களுடன் குறைந்தது 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.



வசந்த காலத்தின் முதல் நாளை சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மிகத்துல்லியமாக கணிப்பிட்டு வைத்துள்ள ஈரானியர்களின் ஆற்றல், விண்ணியலாளர்களை இன்றளவிலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

இந்த பண்டிகையைக் கொண்டாடும் பல நாடுகளின் முன்முயற்சியின் பேரில், 2010 ஆம் ஆண்டின் A / RES / 64/253 என்ற தீர்மானத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் இத்தினம் சர்வதேச நவ்ருஸ் தினம்என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

சமாதான கலாச்சாரம்என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ், ஆப்கானிஸ்தான், அஜர்பைஜான், அல்பேனியா, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசு, மாசிடோனியா, ஈரான் (இஸ்லாமிய குடியரசு), இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் எடுத்த முயற்சியின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் சர்வதேச நவ்ருஸ் தினம்பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த பரந்த பிராந்தியத்தில் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களால் கொண்டாடப்படும் நவ்ருஸ் பண்டிகையின் ஆரம்பகால தோற்றங்கள் சில ஜோராஸ்ட்ரியனிசத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. இது பண்டைய ஜோராஸ்ட்ரியன் காலண்டரில் புனிதமான நாட்களில் ஒன்றாகும்.


ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அஜர்பைஜான், முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசு மாசிடோனியா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளும் இப்பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுகின்றன.

மனிதகுலத்தின் உள்ளார்ந்த கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ நாடுகளால் "நவ்ரூஸ்" வசந்த காலத்தின் முதல் நாளாக மற்றும் இயற்கையின் புதுப்பித்தலைக் குறிக்கும் நாளாக ஒரு புராதன பண்டிகை ஆகும். நவ்ரூஸ் உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் மக்களால் கொண்டாடப்படுகிறது.


"இது குடும்பங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் மற்றும் நாடுகளுக்கு இடையேயான சமாதானம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பல்வேறு சமூகங்களுக்கிடையேயான நட்புறவு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது" என்று ஐ.நா. குறிப்பிடுகிறது.

ஜோராஸ்ட்ரிய பாரம்பரியத்தின் படி வசந்தத்தின் வருகை மிகுந்த ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்ட ஒன்றாகும். இது தீமைக்கு எத்திரான போராட்டத்தில் நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது மற்றும் துக்கம் களைந்து மகிழ்ச்சி பொங்கச் செய்வதைக் குறிக்கிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் நிலத்தடிக்கு விரட்டப்பட்டதாகக் கருதப்பட்ட 'ராபித்வினா' என அழைக்கப்படும் நல் ஆவி, நவ்ருஸ் நாளில் நண்பகலில் கொண்டாட்டங்களுடன் புத்துயிர் பெறுகிறது என்று அவர்களால் நம்பப்படுகிறது.

புராணக் கதைகள் (Legend)
இக்கொண்டாட்டம் தொடர்பான பல புராணக் கதைகள் இன்றளவிலும் சமூகத்தில் பேசப்படும் ஒன்றாக இருக்கின்றது. பாரசீக மன்னரான ஜம்ஷித்தின் புராணக்கதை உட்பட பல்வேறு வகையான உள்ளூர் மரபுகளுடன் நவ்ருஸை தொடர்பு படுத்தி பேசப்படுகிறது. ஈரானில் இன்றுவரை, நவ்ருஸ் கொண்டாட்டங்கள் சில நேரங்களில் நவ்ருஸ் ஜம்ஷிடிஎன்று அழைக்கப்படுகிறது. புராணத்தின் படி, ஜம்ஷித் ஒரு தேரில் காற்றில் பறந்து செல்கிறார், இது அவரது குடிமக்களை வியப்பில் ஆழ்த்தியது, அந்த நாளை அவர்கள் ஒரு திருவிழாவாக கொண்டாடினர். இதே போன்ற புராணக் கதைகள் இந்திய மற்றும் துருக்கிய மரபுகளிலும் உள்ளன, அதே நேரத்தில் 'நவ்ரூஸ்' தொடர்பான புராணக்கதைகள் மத்திய ஆசிய நாடுகளில் பிரபலமாக உள்ளன.


நவ்ருஸ் நாளில், பல்வகை உணவு தயாரித்து விருந்து படைத்தல், மூத்த குடும்ப உறுப்பினர்கள் வீடுகளுக்கும் நண்பர்கள் வீடுகளுக்கும் சென்று வாழ்த்துக்களையும் அன்பளிப்புகளையும் பரிமாறிக்கொள்ளல் போன்றன பொதுவாக இடம்பெறும் சம்பிரதாயமாகும். பரந்த அளவிலான கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் மரபு ரீதியான விளையாட்டுக்கள் போன்றனவும் இத்தினத்தையொட்டி இடம்பெறும். குழந்தைகளுக்கு பெரும்பாலும் விளைட்டுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன, மேலும் பல வர்ணம் பூசப்பட்ட முட்டைகளுடன் விளையாடுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. 

குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்குள் ஒரு குறியீட்டு உணவைப் பகிர்ந்து கொள்கின்றன, பெரும்பாலும் பல உள்ளூர் பொருட்கலவையில் செய்யப்பட்ட சமைத்த அரிசி மற்றும் காய்கறிகளைக் அது கொண்டிருக்கும். கிர்கிஸ்தானில், இந்த உணவு சமைத்தல் ஒரு பொது விழாவாகும். முக்கியமாக நூருஸ் கெட்ஜே அல்லது சோன் கெட்ஜே என்று பெயர் கொண்ட இவ்விழாவில், காளைகளின் இறைச்சியிலிருந்து ஒரு வகை சூப் தயாரிப்பதற்காக நகரங்களில் விசேடமான பகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.

நவ்ரூஸ் உணவு மேசை (Sofreh-ye Haft Sin)

நவ்ரூஸ் உணவு மேசையைத் தயார்படுத்தல் ஒரு விசேடமான பாரம்பரியமாகும். அதில் பல குறியீட்டு பொருள்கள் வைக்கப்படுகின்றன. இங்கு வைக்கப்படும் பொருட்கள் பிராந்தியத்திலிருந்து பிராந்தியத்திற்கு சற்று வேறுபடுகின்றன என்றாலும், மிகவும் பொதுவான அம்சங்கள்: நீர், மெழுகுவர்த்திகள், பச்சை முளைகளினால் தயாரிக்கப்பட்ட உணவுகள் (அல்லது சப்ஸே), கோதுமை முளைகள், முகம்பார்க்கும் கண்ணாடிகள், முட்டை மற்றும் பல்வேறு பழங்களால் ஆன பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்டிருக்கும். 

இந்த பொருள்கள் புதிய ஆண்டிற்கான தூய்மை, பிரகாசம், தாராளம், மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிக்கின்றன. ஈரானில், இந்த அட்டவணை சோஃப்ரே-யே ஹாஃப்ட் சின்என்று குறிப்பிடப்படுகிறது, இவை ஒவ்வொன்றும் எழுத்தில் தொடங்கும் ஏழு பொருள்களைக் கொண்டதாய் இருக்கும். இதேபோன்ற அட்டவணை இந்தியாவின் சில பகுதிகளிலும் தயாரிக்கப்படுகிறது.

ஈரானில் நவ்ருஸ் கொண்டாட்டங்கள் (Nowruz in Iran)
பாரசீக புத்தாண்டு நவ்ருஸைக் கொண்டாட உலகெங்கிலும் உள்ள ஈரானியர்கள் தங்கள் வீடுகளை முழுமையாக சுத்தம் செய்கிறார்கள். இது "தூசி துடைத்தல் வைபவம்" என்று அழைக்கப்படுகிறது, மேலும் பழையன கழிந்து, பழைய வருடத்திற்கு விடை சொல்லி, புத்தாண்டை வரவேற்பதை இது குறிக்கிறது.

வசந்தத்தின் வருகை என்றால் குளிர் காலம் முடிந்து, வெப்ப காலம் வருவதைக் குறிப்பதாகும். ஆனால் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் பல நாடுகளுக்கு, குறிப்பாக ஈரானுக்கு, இதை விட அதிகமான முக்கியத்துவமிக்க விஷயங்கள் உள்ளன. ஈரானிய மக்களைப் பொறுத்தவரை, வசந்தத்தின் வருகை என்பது ஒரு நீண்ட கால பாரம்பரியம், வரலாற்றில் வேரூன்றிய ஒரு கொண்டாட்டம் மற்றும் இயற்கை அன்னையின் வளர்ச்சியையும் வீரியத்தையும் மகிமைப்படுத்துவதாகும்.

கானே தேகானி! (KHANEH TEKANI)
இவை அனைத்தும் மார்ச் மாத தொடக்கத்தில் வசந்த சுத்தம்மூலம் தொடங்குகின்றன. கானே தேகானிஎன்று அழைக்கப்படும் இந்த பாரம்பரியம், இதற்கு வீட்டை அசைத்தல்என்ற அர்த்தம். கிட்டத்தட்ட ஒவ்வொரு ஈரானியர் வீட்டிலும் பொதுவாக இடம்பெறும் ஒன்றாகும். தரைவிரிப்புகள் கழுவப்படுகின்றன, ஜன்னல்கள் துடைக்கப்படுகின்றன, வெள்ளிப் பொருட்கள் மெருகூட்டப்படுகின்றன, திரைச்சீலைகள் உலர்த்துவதற்கா துப்புரவாளர்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் பழைய தளபாடங்கள் பழுதுபார்க்கப்படுகின்றன அல்லது புதியதாக மாற்றப்படுகின்றன.


வீடு முழுவதும் பிரகாசமாகவும் சுத்தமாகவும் இருக்கும் வரை ஒவ்வொரு மூலை முடுக்குகளெல்லாம் துடைக்கப்பட்டு, மெருகூட்டப்படும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த சடங்கில் ஈடுபடுவர். இது ஒரு புதிய ஆண்டுக்கான ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. துடைக்கப்படும் தூசியுடனும், துரதிர்ஷ்டமும் கழுவி நீக்கப்பட்டு, சுபீட்சமுண்டாகிறது என்பது மக்களின் நம்பிக்கை.

இதன் பின்னர் ஷாப்பிங் நேரம். சந்தைகள் மற்றும் ஷாப்பிங் மையங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து வழியும். புத்தாடையுடன் கனி வர்க்கங்கள், இனிப்பு வகைகள் மற்றும் மிட்டாய்கள், உளர் விதைகள், பூக்கள் மற்றும் ஹாஃப்ட் சீன் மேசைக்கு அவசியமான அனைத்தும் வாங்க மக்கள் முண்டியடிப்பர். ஹாஃப்ட் சீன் எனும் மேசை புத்தாண்டில் ஒரு கட்டாயம்இருக்கவேண்டிய ஒன்றாகும்.

புத்தாண்டு சடங்குகளில் ஏழு பொருட்கள் முக்கிய இடம் வகிக்கும். ஆப்பிள், பசும் புல், கோதுமை பண்டம், சிவப்பு வகை பெர்ரி, பூண்டு, விணாகிரி மற்றும் நாணயம் ஆகியன அலங்காரங்கங்களுடன் வைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு மேலதிகமாக புனித குர்ஆன் மற்றும் ஹாபிஸின் கவிதைத் தொகுதி ஆகியனவும் சுப்ராவில் (விரிப்பில்) வைக்கப்பட்டிருக்கும். சிலர் ஈரானின் தேசிய நூலான பிர்தவ்ஸியின் ஷாஹ்-நாமேயினையும் வைப்பதுண்டு.

இப்பண்டிகை சொராஸ்திரிய வேரைக் கொண்டிருந்தபோதும், இஸ்லாத்தின் வருகையின் பின், பாரசீகர்கள் எவ்வாறு தம்மை இஸ்லாமியப்படுத்திக் கொண்டார்களோ, அதுபோல் இப்பண்டிகையின் இஸ்லாத்துக்கு முரணான அனைத்து அம்சங்களும் களையப்பட்டு, இஸ்லாமிய மனம் கமழும் ஒன்றாக மாறியது. (ஈரானிலுள்ள சொராஸ்திரியார்கள் அவர்களுக்கே உரிய முறையில் இதனைக் கொண்டாடுவர்.)

சஹார்ஷன்பே சூரி (CHAHARSHANBE SOORI) 
நவ்ருஸுக்கான ஏற்பாடுகள் சஹார்ஷன்பே சூரிஎன்ற தினத்தில் ஆரம்பித்துவிடுகிறது. சஹார் ஷன்பே சூரிஎன்பது ஈரானிய ஆண்டின் கடைசி புதன்கிழமை ஆகும். இந்த தினம் விழாக்கோலம் பூண்டிருக்கும் மேலும் சிறப்பு பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளால் நிறைந்திருக்கும்; குறிப்பாக நெருப்பின் மேலால் குதிப்பது அவற்றில் ஒன்று. சூரியன் மறையும் வேளை, மக்கள் தீமூட்டி, அதன் மேலால் குதித்து குதூகலிப்பர். அவர்கள் இவ்வாறு செய்யும்போது, ஸார்தி-யே மன் அஸ் தோ, சோர்கி-யே தோ ஆஸ் மன், அதாவது என் மஞ்சள் உன்னுடையது, உனது சிவப்பு என்னுடையது என்று பாடுகிறார்கள். இந்த சடங்கில், அவர்கள் தங்கள் கவலைகளையும் சிக்கல்களையும் போக்கும்படி இறைவனிடம் கேட்கிறார்கள், அதற்கு பதிலாக அவர்களுக்கு ஆற்றலையும் சுகத்தையும் கோருகிறார்கள்.


ஆண்டின் கடைசி நாள் நிறைவு பெற்று, புத்தாண்டு ஆரம்பிக்கையில் எல்லோரும் தங்கள் குடும்பத்தினருடனும் அன்பானவர்களுடனும் ஒன்றாக இருப்பதற்காக தத்தம் வீடுகளுக்கு விரைந்து செல்வர். புத்தாண்டு என்பது அந்த சிறப்பு தருணங்களை குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து, கொண்டாடுவது தானே.

- தாஹா முஸம்மில்