Sunday, March 8, 2020

மேற்குலகம் ஈரானை தொடர்ச்சியாக குறிவைப்பது ஏன்...? : அமெரிக்க அரசியல் ஆய்வாளர் வோல்ட் பெரெட்டோ


West Continues to Target Iran As It Refuses to Be A 'Puppet' Nation: US Researcher

மேற்கு நாடுகள் அவற்றின் தவறான பிரச்சாரங்களின் மூலம் ஈரான் இஸ்லாமிய குடியரசை குறிவைக்க நீண்ட காலமாக முயன்று வருகின்றன. ஏனெனில் இஸ்லாமிய குடியரசு மேற்கின் பூகோளவாத பார்வைக்கு முகங்கொடுக்கும் வகையில் "அரசியல் ரீதியாக சுயாதீனமான" தேசமாக இருந்து வருகிறது என்பதும் மேலும் அது "மேற்கின் கைப்பாவை" ஆக இருப்பதற்கு மறுக்கிறது என்பதுமே காரணமாகும் என்று அமெரிக்க அரசியல் ஆய்வாளர் வோல்ட் பேரெட்டோ தெரிவிக்கின்றார்.



"இந்த பூகோளவாத நிகழ்ச்சி நிரலில் இருந்து விடுபட்டு, அரசியல் ரீதியாக சுயாதீனமாக உள்ள மீதமுள்ள சில சுதந்திர தேசிய அரசுகளில் ஈரானும் ஒன்றாகும். தவறான தகவல்கள், பொருளாதார யுத்தங்கள் மற்றும் சமீபத்தில் நாம் பார்த்தது போல் படுகொலை போன்றவற்றால் ஈரான் மேற்கு நாடுகளால் தொடர்ந்து குறிவைக்கப்படுவதற்கான முக்கிய காரணங்கள் இவைதான்.

இந்த வரிசையில் கொரோனா வைரஸ் காட்சியில் புதியது மற்றும் அதன் தோற்றம் மற்றும் அது செலுத்தும் தாக்கம் பொது மக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் மற்றும் பெரும்பாலான விஞ்ஞானிகளுக்கும் ஒரு மர்மமாகவே உள்ளது. கொரோனா வைரஸ் பரம்பல் என்பது உலகளவில் தங்கள் சக்தியையும் செல்வாக்கையும் அதிகரிக்க உலக வாதிகளின் திட்டமிட்ட முயற்சியாகும் என்ற திடமான சந்தேகம் உள்ளது. இது அவர்களின் தொடர்ச்சியான நடத்தைகளுடன் நிச்சயமாக ஒத்துப்போகிறது,” என்று வால்ட் பெரெட்டோ தஸ்னீம் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

வால்ட் பெரெட்டோ ஒரு அமெரிக்க எழுத்தாளர், ஆராய்ச்சியாளர், ஆய்வாளர் மற்றும் சமூக அரசியல் உளவியலாளர் ஆவார். பிரஸ் டிவியில் வழக்கமான பங்களிப்பாளராக இருக்கும் அவர் பல ஆன்லைன் செய்தி இதழ்களுக்கு எழுதுகிறார். சமூக அரசியல் உளவியலுக்கான அடித்தளத்தை அறிமுகப்படுத்தும் ஒரு புத்தகத்திலும் அவர் பணியாற்றி வருகிறார். இது சமூக அமைப்புகளுக்குப் பின்னால் உள்ள நடத்தைகள் மற்றும் அவற்றின் தொடர்புகளைப் பற்றிய ஆய்வு ஆகும்.

நேர்காணலின் முழு வடிவம் பின்வருமாறு:

தஸ்னிம்: வாஷிங்டனை தளமாகக் கொண்ட ஜனநாயக பாதுகாப்பு அமைப்பின் (எஃப்.டி.டி) தலைமை நிர்வாகி மார்க் டுபோவிட்ஸ் கடந்த செவ்வாயன்று தனது ட்விட்டரில் செய்தியில் கொரோனா வைரஸ் ஈரானின் எண்ணெய் அல்லாத ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதாகவும், “அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் அடைய முடியாததைஅடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த கொடிய வைரஸ் ஈரானில் பரவுவதை சில அமெரிக்க அதிகாரிகள் ஏன் உற்சாகப்படுத்துகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் - ஈரானிய மக்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து அவர்கள் ஏன் மகிழ்ச்சியடைகின்றனர்...?

பெரெட்டோ: இன்றுவரை எந்தவொரு வைரஸ் நோய்க்கிருமியையும் விட மிகவும் வீரியமிக்க மற்றும் ஆபத்தான ஒரு நோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. பச்சாத்தாபம், குற்ற உணர்வு அல்லது வருத்தத்தின் இயல்பான உணர்ச்சிகளை உணரும் ஓர் உள்ளார்ந்த திறன் இவர்களிடம் கிடையாது. மொத்தத்தில், மனநோயாளிகளால் மற்றவர்களின் துன்பத்தை அடையாளம் காணவோ, உணரவோ முடியாது.

பல ஆயிரம் ஆண்டுகளில் சில மனநோயாளிகள் ஆளும் குடும்பங்களை உருவாக்கியுள்ளனர் என்பதை நாம் சரித்திரத்தில் பார்க்கிறோம். அவை தொடர்ச்சியாக மனநோயாளிகளை பிறப்பிக்கின்றன. தமது சுயநலத்துக்காக உலக வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஆதிக்கம் செலுத்துவதும் கட்டுப்படுத்துவதும் அவர்களின் முக்கிய குறிக்கோள்களாக உள்ளன. இந்த உயரடுக்கு மனநோயாளிகளில் பலர் இந்த இலக்குகளை ஒரே இரவில் அடைய முடியாது என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு புத்திசாலிகள். இது ஒரு நீண்ட கால பன்முக முயற்சி என்பதையும் அவர்கள் அறிவார்கள். உலகளாவிய கடின நாணயங்கள் இந்த உயரடுக்கினாலேயே  உருவாக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன மற்றும் பொருளாதாரங்கள், ஊடகங்கள் மற்றும் இறுதியில் மக்கள்தொகை மீது செல்வாக்கு செலுத்துவதற்கும் அவர்களை கட்டுப்படுத்துவதற்கும் ஒரு வழிமுறையாக நிதியை பயன்படுத்தப்படுகின்றன. இந்த உலகளாவிய ஒரு உலக அரசாங்க ஆதரவாளர்களின் நோயியல் அபிலாஷைகளை மார்க் டுபோவிட்ஸ் தெளிவாக பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

மேற்கு நாடுகள் அவற்றின் தவறான பிரச்சாரங்களின் மூலம் ஈரான் இஸ்லாமிய குடியரசை குறிவைக்க நீண்ட காலமாக முயன்று வருகின்றன. ஏனெனில் இஸ்லாமிய குடியரசு மேற்கின் பூகோளவாத பார்வைக்கு முகங்கொடுக்கும் வகையில் "அரசியல் ரீதியாக சுயாதீனமான" தேசமாக இருந்து வருகிறது என்பதும் மேலும் அது "மேற்கின் கைப்பாவை" ஆக இருப்பதற்கு மறுக்கிறது என்பதுமே காரணமாகும். "இந்த பூகோளவாத நிகழ்ச்சி நிரலில் இருந்து விடுபட்டு, அரசியல் ரீதியாக சுயாதீனமாக உள்ள மீதமுள்ள சில சுதந்திர தேசிய அரசுகளில் ஈரானும் ஒன்றாகும். தவறான தகவல்கள், பொருளாதார யுத்தங்கள் மற்றும் சமீபத்தில் நாம் பார்த்தது போல் படுகொலை போன்றவற்றால் ஈரான் மேற்கு நாடுகளால் தொடர்ந்து குறிவைக்கப்படுவதற்கான முக்கிய காரணங்கள் இவைதான்.

இந்த வரிசையில் கொரோனா வைரஸ் காட்சியில் புதியது மற்றும் அதன் தோற்றம் மற்றும் அது செலுத்தும் தாக்கம் பொது மக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் மற்றும் பெரும்பாலான விஞ்ஞானிகளுக்கும் ஒரு மர்மமாகவே உள்ளது. கொரோனா வைரஸ் பரம்பல் என்பது உலகளவில் தங்கள் சக்தியையும் செல்வாக்கையும் அதிகரிக்க உலக வாதிகளின் திட்டமிட்ட முயற்சியாகும் என்ற திடமான சந்தேகம் உள்ளது. இது அவர்களின் தொடர்ச்சியான நடத்தைகளுடன் நிச்சயமாக ஒத்துப்போகிறது.

9/11 தாக்குதல்களுக்கு காரணமாக முஸ்லிம் உலகை பொய்யாக குற்றம்சாட்டியாதும் அதே நோயியல் மனநிலைகள் தான். 1990 களின் முற்பகுதியில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், முஸ்லிம் மற்றும் அரபு உலகை, உலகளாவிய ஒழுங்கமைக்கப்பட்ட மனநோயிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, இலக்கு குழுவாக மாறியுள்ளது. டுபோவிட்ஸ் என்பவர் எஃப்.டி.டி ஆராய்ச்சி (திங்க்-டேங்க்) நிறுவனத்தின் முறையைப் பயன்படுத்தும் அவர்களின் முகவராகும்.

தஸ்னிம்: மற்றொரு மூர்க்கத்தனமான மற்றும் ஆதாரமற்ற கூற்றில், மத்திய கிழக்கில் தெஹ்ரான்தான் "பயங்கரவாதத்தை பரப்பியுள்ளது" என்றும் "இப்போது அது கொரோனா வைரஸை பரப்புகிறது" என்றும் டுபோவிட்ஸ் கூறியுள்ளார், இப்பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை பரப்புவது தெஹ்ரான் தான் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பெரெட்டோ: ஷாவின் ஆட்சி காலத்தில் இருந்ததைப் போலவே தெஹ்ரான் உலகமயமாக்கப்பட்ட ஒரு கைப்பாவையால் வழிநடத்தப்பட்டால் --- டுபோவிட்ஸ் ஈரானை ஜனநாயகத்தின்மாதிரியாக அடித்துச் செல்வார். ஆனால் ஈரான் உலகளாவிய பார்வையில் இருந்து சுயாதீனமாக இருப்பதால் --- அது பயங்கரவாதத்தை தூண்டும் நாடாகவும் நோய்களைத் பரப்பும் நாடாகவும் இலக்கு வைக்கப் படுவது ஆச்சரியமல்ல. இவ்வாறு செய்வது அவர்களுக்கு கடினமான பணி அல்ல, ஏனெனில் உலகவாதிகள் தாங்கள் கட்டுப்படுத்தும் நாடுகளில் உள்ள ஒவ்வொரு முக்கிய முக்கிய செய்தி மூலங்களையும் சொந்தமாக வைத்திருக்கிறார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், கோடிக்கணக்கான மக்கள் தங்கள் உத்தியோகபூர்வசெய்திகளையும் தகவல்களையும் இந்த மனநோய் பீடித்த 'ஓர் உலக அரசு' ஆதரவாளர்களால் கட்டுப்படுத்தப்படும் மூலங்களிலிருந்து பெறுகிறார்கள்.

இணைய யுகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுதந்திர தகவல்களுக்கு வழிவகுத்துள்ளது. இது முக்கிய ஊடகங்களுடன் போட்டியிடும் உண்மை அடிப்படையிலான செய்தி நிலையங்களை உருவாக்கியுள்ளது. இடைவிடாத ஏகபோக பிரச்சாரம் மற்றும் தவறான தகவல்களுக்கு மாற்றாக இந்த இணைய தளங்கள் பொது மக்களுக்கு செய்தியை வழங்குகின்றன. உலகளாவிய பிரதான ஊடகங்கள் இந்த மனநோயாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்கள் தினசரி அடிப்படையில் தங்கள் உலகக் கண்ணோட்டத்தை பில்லியன் கணக்கான மக்களிடம்  கொண்டு சேர்க்கின்றன, அதே சமயம் மாற்று ஊடகங்கள் ஆராய்ந்து உண்மையினை வெளிக்கொண்டுவருவதற்கு காலமெடுக்கும். இது உலகை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைப்போருக்கு  அவர்களது தந்திரோபாய திட்டத்தை திணிக்க, முந்திக்கொண்டு செய்திகளை வழங்க வசதியாக அமைந்துவிடுகிறது. எனவே ஈரான் பயங்கரவாதத்தையும் கொரோனா வைரஸையும் பரப்புகிறது என்ற டுபோவிட்ஸின் குற்றச்சாட்டை, உடனடியாக, சரிபார்த்தல் எதுவுமின்றி, பில்லியன் கணக்கான மக்களை சென்றடையச் செய்யலாம். கொரோனா வைரஸ் ஈரானின் எண்ணெய் அல்லாத ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது, அதே நேரத்தில் ஈரான் நோயைப் பரப்புகிறது போன்ற உண்மைக்கு புறம்பான, டுபோவிட்ஸின் செய்திகளை நுகரும் ஸொம்பிகளாக இந்த ஊடகங்கள் பொதுமக்களை மாற்றியுள்ளன.

தஸ்னிம்: ஈரான் மீது அதிகரித்து வரும் பொருளாதார அழுத்தம், கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்கொள்ளும் நாட்டின் முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது, ஏனெனில் சுகாதார துறை தொற்றுநோயைக் கண்டறிய சோதனை கருவிகளை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றன. இது குறித்த உங்கள் எண்ணங்கள் என்ன?

பெரெட்டோ: ஈரானில் உள்ள சுகாதார விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளை உருவாக்கும் இறுதி கட்டத்தில் இருப்பதாக ஒரு அறிக்கையைப் படித்தேன். அவர்களின் முயற்சி வெற்றிபெற வேண்டும். மனநோய் கொண்ட பூகோளவாதிகள் தாங்கள் உருவாக்கியுள்ள மற்றும் தம்மால் கட்டுப்படுத்தக்கூடிய நாணயங்களை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். உலகளாவிய சந்தை ஈரானுக்கு கடினமான (உலகளாவிய அங்கீகாரம் பெற்ற) நாணயத்தையே எண்ணெய்க்கு ஈடாக செலுத்துகிறது. இந்த நாணயம் அமெரிக்க டாலர் ஆகும், இதையே முழு உலகமும் எண்ணெய் பரிமாற்றத்திற்கு பயன்படுத்துகிறது. இது அமெரிக்க டாலருக்கான தேவையை உறுதி செய்கிறது, இது எந்தவொரு பொருளையும் பெறுமதியாகக் கொண்டிராத,  மெல்லிய காற்றிலிருந்து உலகவாதிகளால் உருவாக்கப்பட்ட நாணயமாகும். இது அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லாத மற்றும் பெரும்பாலும் வெளிநாட்டு கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பெடரல் ரிசர்வ் அமைப்பு மூலம் அமெரிக்க பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது. ஈரானின் நாணயம் மூலோபாயமாக மதிப்பிறக்கம் செய்யப்பட்டு, அதற்கு ஈடாக உலகளாவிய அங்கீகாரம் பெற்ற கடினநாணயத்திற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஈரானை கட்டாயப்படுத்தும் நிலை உலகவாதிகளால் உருவாக்கடுகிறது. எண்ணெய் ஏற்றுமதியைத் தடுப்பதன் மூலம், ஈரானின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இது தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர நினைக்கும் உலக அகம்பாவ சக்திகளின் கைகளிலும், ஓருலக திட்டத்துக்குள் ஈரானை உன்வாங்கும் திட்டத்திலும்  அடங்கி உள்ளது. இவை எல்லாவற்றையும் வைத்துப்பார்க்கையில், கொரோனா வைரஸ் பரவுவது உலகவாதிகளின் மற்றொரு உயர் குற்றமாகும் என்பதை எங்களால் நிராகரிக்க முடியாது. டுபோவிட்ஸின் முரண்பாட்டைக் கண்டது போல, கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஈரான் பொறுப்பல்ல. பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை, ஈரான் அதை எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் உள்ளது, அதைப் பரப்பவில்லை. ஜெனரல் சோலைமணி படுகொலை செய்யப்பட்டதற்கு இதுவே காரணம்.

தஸ்னிம்: சவூதி அரேபியா உட்பட பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் தங்கள் நாடுகளில் கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கையை சரியாக அறிவிக்க மறுக்கின்றன. ஈரானில் இறப்பு எண்ணிக்கை அரசாங்கம் அறிவித்ததை விட மிக அதிகமாக இருக்கலாம் என்று சில ஊடகங்கள் (பிபிசி பாரசீக போன்றவை) கூறிக்கொண்டும், ஈரான் பொய் உரைக்கிறது என்று குற்றம் சாட்டிக்கொண்டும் இருக்கிறது. இந்த தவறான தகவல் பிரச்சாரத்தின் பின்னணியில் இருப்பது என்னவாக இருக்கும்...?

பெரெட்டோ: அவர்களது ஒரு உலக அரசாங்க பார்வையில் இருந்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் எந்தவொரு தேசமும் கடுமையாக தண்டிக்கப்படுகிறது. இந்த சந்தர்ப்பங்களில், இரட்டை தரநிலைகள் நிலையானதாகின்றன. சவுதி அரேபியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால், பரவாயில்லை ... பசங்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று நியாயம் கற்பிக்கப்படும். ஈரான், வெனிசுலா அல்லது சிரியா போன்ற ஒரு சுதந்திர நாடு தொடர்ந்து ஒரு உலக அரசாங்கத்தை ஆதரிக்க மறுத்தால் --- அவர்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள். இது மிகவும் முரண்பாடானது மற்றும் நயவஞ்சகத்தனமானதுமாகும். 1979 ஆம் ஆண்டில் ஷாவை வீழ்த்தியதிலிருந்து ஈரான், மேற்கு நாடுகளின் பிரச்சார ஊடகங்களினதும் மற்றும் தவறான தகவல்களின் இலக்காக இருந்து வருகிறது. ஸியோ-நியோகான் 9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் மேற்குலகு  முஸ்லிம் மற்றும் அரபு உலகில் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவை பொய்யாகக் குற்றம் சாட்டி ஆக்கிரமிப்பில் இறங்கியதால்  ஈரான் கொஞ்ச காலம் தனியாக விடப்பட்டிருந்தது. 9/11 க்கு எழுதப்பட்ட தவறான அறிக்கை கடத்தல்காரர்களின் காட்சிகளை 'சவுதிகளை' பயன்படுத்தி சித்தரித்தது, ஆனால் பதிலடி என்று ஆப்கானிஸ்தான் தாக்கப்பட்டது மற்றும் ஈராக் மீது படையெடுத்தது. அந்த நாடுகளை அழித்தாகிவிட்டது, இது இறுதியாக ஈரானின் முறை, எனவே அவை இப்போது ஈரானை இடைவிடாமல் குறிவைக்கின்றன. இது ஒன்றோ மிகவும் தீவிரமான மற்றும் ஆபத்தானதாக இருக்கும் இல்லாவிட்டால் இது நகைச்சுவையாக இருக்கும். இதற்கு தீர்வு என்னவென்றால், மேற்கத்திய பிரதான ஊடகங்களையும், அவற்றின் எளிதாக கிடைக்கக்கூடிய தவறான தகவல்களையும் புறக்கணித்து, சொந்த புத்தியை பயன்படுத்தி, நம்பிக்கை அடிப்படையில் உண்மையை மதிப்பிடுங்கள் என்று சகலரையும் கேட்டுக்கொள்கிறேன்.



No comments:

Post a Comment