Sunday, November 25, 2018

நாம் சவுதி மக்களை எமது சகோதரர்களாவே கருதுகிறோம் - ரூஹானி


“We do consider you as a brother… We do consider the people of Makkah and Madinah our brothers.” 
- Rouhani


றஸூலுல்லாஹ்வின் மீலாத் தினத்தை முன்னிட்டு ஈரான் இஸ்லாமிய குடியரசு தலைநகர் தெஹ்ரானில் 32 வது மூன்று நாள் சர்வதேச ஒற்றுமை மாநாடு நவம்பர் 24 ம் தேதி ஆரம்பித்தது.


600க்கும் அதிகமான இஸ்லாமிய அறிஞர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டின் துவக்க வைபவத்தில் இஸ்லாமிய குடியரசின்  ஜனாதிபதி ஹசன் ரூஹானி உரையாற்றினார்.

அவரது உரையில், சியோனிச புற்றுக்கட்டியை வன்மையாக கண்டித்ததுடன் சவுதி அரேபியாவை  "இலவசமாக" காப்பாற்றுவதற்கு நாம் தயார் என்றும் தெரிவித்தார்.
நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சர்வதேச மாநாடு, பலஸ்தீன் விடுதலையினை ஆராய்வதற்கென  "அல் குத்ஸ், இஸ்லாமிய ஒற்றுமையின் அச்சு" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது. இதில் ஏராளமான பலஸ்தீன் போராளிகளும்  கலந்துகொண்டனர்.
சவுதியை விழித்து கூறுகையில் ரூஹானி "உங்களது பாதுகாப்புக்காக நீங்கள் அமெரிக்காவுக்கு 450 பில்லியன் டொலரை வழங்கியபோதும், உங்கள் பாதுகாவலர் (டிரம்ப்) உங்களை பகிரங்கமாக இழிவுபடுத்துகிறார். கடந்த செப்டம்பர் 27 அன்று ஒரு பிரச்சார கூட்டத்தில் டிரம்ப், "அமெரிக்க பாதுகாப்பு இல்லாமல், சவுதி அரேபியா இரண்டு வாரங்களுக்கு கூட நீடிக்காது." என்று கூறினார்.
அமேரிக்கா பிராந்திய முஸ்லிம் நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துள்ளது இஸ்ரேலை பாதுகாப்பதற்காகவே அன்றி வேறில்லை. இதனை இந்த முஸ்லீம் நாடுகள் உணர மறுக்கின்றன. அமேரிக்க அழுத்தங்களுக்கு அடிபணிவது "துரோகம்" என்றும் இன்னுமின்னும் தலைகுனிவையே ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்க உளறுவாய் ஜனாதிபதி செப்டம்பர் 27 ம் தேதி பேசிய உரையில், தான் சவூதி மன்னருடன் பேசியபோது உங்களிடம் தாராளமாக பணம் இருக்கிறது. மன்னரே, நீங்கள் அப்பணத்தில் எமக்கும் கொஞ்சம் தரவேண்டும். உங்களது பாதுகாப்புக்காக அதனைத் தந்தேயாகவேண்டும். எமக்கு இரண்டு ட்ரில்லியன் ($2 trillion) டொலர்கள் தேவை" என்று கூறியதாக குறிப்பிட்டார்.
'எட்டி உதந்தவன் காலை முத்தமிடுவது' போன்று இத்தகைய பகிரங்க அவமானத்தை சவூதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் "நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் சாதாரணம்" என்று கூறினார்.
ஆனால் இது ஒரு கருத்து வேறுபாடு அல்ல; இது அப்பட்டமான அவமானமாகும் என்பதை அவரால் உணர முடியவில்லை.
இதனை புன்சிரிப்புடன் ஏற்றுக்கொள்வதானது, மானம், ரோஷம் அற்ற அடிமை ஒருவனால் மட்டுமே முடியும்.
பின் சல்மானுக்கும் அவரை சுற்றியுள்ளோருக்கும் இஸ்லாமிய ஈரானே "பெரிய  எதிரி"யாகத் தெரிகிறது. அவர்கள் இஸ்ரேலியர்கள் தங்கள் மச்சான்மார்கள் (Our cousins) என்று பகிரங்கமாகவே கூறியுள்ளனர்...! 
"மேற்குலகினதும் அரபிகளினதும் தூடுத்தலில் சத்தாமினால் திணிக்கப்பட்ட யுத்தத்தை, எட்டு ஆண்டுகளாக தன்னந்தனியாக நின்று முகம்கொடுத்தோம், நமது நாட்டை பாதுகாத்தோம். அதுபோல் எம்மால் சவூதி அரேபியாவையும் பாதுகாக்க முடியும்" என்றும் ரூஹானி கூறினார்.
சதாமுக்கு பின்னரான ஈராக்குக்கு தாயேஷின் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட உதவினோம், சிரியா தன்னை பாதுகாத்துக்கொள்ளவும் உதவினோம். அதுபோல், இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு எதிராக லெபனானில் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் பலஸ்தீன் போராளிகளுக்கும் உதவிக்கொண்டிருக்கிறோம்என்றும் ரூஹானி குறிப்பிட்டார்
ரூஹானி  தொடர்ந்து  உரையாற்றுகையில் சவூதி அரேபியாவை நோக்கி "நாம் உங்களை பயங்கரவாதத்தில் இருந்து மட்டுமன்றி வல்லரசுகளிடமிருந்தும் பாதுகாப்போம். நாம் சவுதி மக்களை  எமது சகோதரர்களாவே கருதுகிறோம். மக்கா மற்றும் மதீனா வாசிகள் எமது உடன்பிறப்புகளாகும்,” என்றார்.
ஹாமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹானியேவுக்கு இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது. இருந்தபோதும், இலத்திரனியல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி, வீடியோ மூலம் மாநாட்டில் உரையாற்றினார். இவ்வருட மாநாடு பலஸ்தீன விடுதலையை மையமாக வைத்து ஏற்பாடு செய்யப்பட்டதை பாராட்டியும் ஈரான் இஸ்லாமிய குடிரசு தளராமல் அர்ப்பணிப்புடன், தொடர்ச்சியாக செய்துவரும் உதவிக்கு நன்றியும் தெரிவித்தார்.
ஆனால் இந்த நாடோடி அரபிகளின் பிடிவாதம் (அல்லது முட்டாள்தனம்) எமது நல்லெண்ணத்தை புரிந்துகொள்ள விடாது. அவர்கள் $ 450 பில்லியன் பாதுகாப்பு பணத்தை அமெரிக்காவுக்கு செலுத்தி, அவமானப்பட தயாராய் உள்ளனர் ஆயினும் கௌரவமாக, ஒரு பைசாவையேனும் இழக்காமல் இஸ்லாமிய ஈரான் நீட்டும் நட்புக்கரத்தை பற்றி அதன் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு தயாரில்லை.
இந்த நாடோடி அரபிகள் தங்களது முன்னோர்கள் பல தசாப்தங்களாக செய்ததை செய்வதிலேயே திருப்தி காண்கின்றனர். அதாவது உதைத்து தம் பற்களை உடைக்கும் பூட்ஸ் கால்களை நக்கிக்கொண்டும் இருப்பார்கள். தொடர்ந்தும், அடிக்குமேல் அடிவாங்குவதில் அவர்களுக்கு எந்த அவமானமும் தெரிவதில்லை. புன்னகைத்துக்கொண்டே அடிகளை வாங்கிக்கொண்டு இருப்பார்கள், இந்த அடிமட்ட அடிமைகள்.
Crescent International
Rabi' al-Awwal 16, 1440



இஸ்லாமிய வல்லரசு என்ற கனவு நிறைவேறும், இது நடக்குமானால்...!

UNITY the weapon to defeat enemies

மாபெரும் சாம்ராஜ்யம் ஒன்றை ஓர் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக கட்டிக்காத்து, கணிதம், வானியல், பூகோளவியல், மருத்துவம் போன்ற எல்லா அறிவியலில் துறைகளிலும் முன்னோடிகளாக இருந்து, உலகுக்கே பாடம் கற்றுக்கொடுத்த  முஸ்லிம்களின் இன்றைய நிலையை நோக்குகையில் ஒவ்வொரு முஸ்லிமும் வேதனையடைவான் என்பதில் சந்தேகமில்லை.

முஸ்லிகள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான அனைத்து செல்வங்களையும் அல்லாஹ் எமக்கு அருட்கொடையாக வழங்கியுள்ளான். அபரிமிதமாகவே வழங்கியுள்ளான்.

முஸ்லிம்களிடம் என்ன வளம் இல்லை...? ஆளணி இல்லையா...? பொருள் வளம் இல்லையா...? இயற்கை வளம் இல்லையா...? எல்லாம் உள்ளது. அப்படியிருக்க, கண்டகண்டவனெல்லாம் எம்மை சீண்டிப்பார்க்கிறான், அடிமையாக நடத்துகிறான், எமது செல்வங்களை 
சுரண்டுகிறான், கொள்ளையடித்துச் செல்கிறான், வழியில் செல்வோனெல்லாம் உதைத்துவிட்டுச் செல்கிறான். 

தலைநிமிர்ந்து வாழ்ந்த சமுதாயத்துக்கு ஏன் இந்த இழி நிலை என்று சிந்திக்க வேண்டிய அவசியமேயின்றி தெளிவாகாகத் தெரிகிறது. எம்மத்தியில் ஒற்றுமையில்லை என்பதுவே இதற்குக்காரணம் என்பது சொல்லிப் புரிய வேண்டும் என்தில்லை.

இஸ்லாத்தின் அடிப்படையிலும் அடிப்படையான 'வஹ்தத்' அல்லது 'தௌஹீத்' என்ற சொல்லுக்குள்ளேயே சர்வமும் அடங்கிய ஒருமையுள்ளது, ஒற்றுமையுள்ளது. எமது சக்தியின் ஊற்றுவாயே 'தௌஹீத்' என்ற ஒற்றுமைதான் என்பதை நாமின்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. 

'நிச்சயமாக உங்கள் 'உம்மத்து' சமுதாயம்(வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான்.' (அல் குர்ஆன் 21:92, 23:52) என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

இந்த தௌஹீதை நிலைநாட்டுவதற்கே அல்லாஹ் மனிதர்களை அவனது கலீபாவாக இவ்வுலகுக்கு அனுப்பி வைத்ததுமன்றி, வேதங்களுடன் வழிகாட்டிகளாக தூதர்களையும் அனுப்பிவைத்தான். 

அப்படியிருக்க, இதனை பரிபூரணமாக ஏற்றுக்கொண்டுள்ள முஸ்லிம்கள் மத்தியில் தோன்றியிருக்கும் பிரிவினையின் காரணமாக, குறித்த இலக்கை அடையமுடியாதுள்ளது. அது மட்டுமல்லாமல் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு, அறிந்தோ அறியாமலோ, நாமே உடந்தையாகிவிடுகிறோம். 

எம்மளவு பிளவு பட்ட சமூகம் வேறில்லை எனும் அளவுக்கு பிளவு பட்டிருக்கின்றோம்.  

சுன்னிகளாகட்டும் ஷியாக்களாகட்டும் இரு தரப்பினரும் அல்லாஹ் ஒருவன் என்றும், முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு  அலைஹி வசல்லம் அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்றும் மற்றும் மறுமை நாளையும் நம்பி ஏற்றுக்கொண்டவர்கள்; ஒரே குர்'ஆனைப் பின்பற்றுபவர்கள், ஒரே கிபலாவை முன்னோக்குபவர்கள். அவ்வாறிருக்க ஏன் நாம் பிரிந்திருக்க வேண்டும்? இந்த பிரிவினையால் பயனென்ன கண்டோம்..? 

கருத்து வேறுபாடுகள் என்பது மனித நாகரீகத்தின் வளர்ச்சியே அன்றி பிரிந்திருப்பதற்கான காரணம் அல்ல என்பதை புரிந்துகொள்வோம்.


இன்றைய உலக அரசியல் களநிலையில் ஈரான், சவூதி, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள், தமக்கிடையில் உள்ள முரண்பாடுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, இஸ்லாமிய அடிப்படையில் "இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம்" ("Union of Islamic Countries") என்று  ஒன்றிணையுமானால், ஒரே இரவில் வல்லரசாகிவிடும்.

'முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்! இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்' (அல்-குர்ஆன் 5:8)



'அஹ்லுல்பைத்துகளான எமது இமாம்களை கொன்றார்கள், தூஷித்தார்கள்' என்று ஷீ'ஆக்களும் 'நாம் உத்தமர்களாகக் கருதும் சஹாபாக்களை ஏற்றுக் கொள்ளவில்லை, தூஷித்தார்கள்' என்று ஸுன்னிகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி, தர்க்கித்து, முரண்பட்டு, 1400 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களையிட்டு எமக்குள் இன்றளவிலும் சண்டையிட்டுக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமாகாது.

இந்த நிலையினை இவ்வாறு தொடரவிடக்கூடாது, அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேயாக வேண்டும் என்றுணர்ந்த ஷீஆ மற்றும் ஸுன்னி உலமாக்கள் இவ்விரு தரப்பினர்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்று அர்ப்பணத்துடன் செயலாற்றி வந்துள்ளனர்.

ஈரான் இஸ்லாமிய புரட்சியின் பிறகு இஸ்லாமிய புரட்சியின் தலைவர்கள் இந்த ஒற்றுமையின்பால் அதிக கவனம் செலுத்தினர். ரபீயுல் அவ்வல் மாதம் 12ம் நாளை ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பிறந்த தினமாக சுன்னத் வல் ஜமாத்தைச் சேர்ந்த நாம் நினைவு கூறும் அதேவேளை ஷியா முஸ்லிம்கள் 17ம் நாளை ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் பிறந்த தினமாக நினைவு கூறுகின்றனர். வரலாற்றுரீதியாக பிரிந்திருக்கும் இவ்விரு இஸ்லாமிய சமூகங்களும் தமக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு, ஒன்றுபடும் சந்தர்பமாக ரபீயுல் அவ்வல் மாதம் 12-17 ஐ 'இஸ்லாமிய ஒற்றுமை வாரம்' என்று ஈரானிய தலைவர்கள் பிரகடனப்படுத்தி, உலக முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை வலியுறுத்தும் மாநாடுகளையும் வருடாந்தம் நடாத்தி வருகின்றனர். என்னவோர் அருமையான முன்மாதிரி.

ஈரான் கலாசார நிலையத்தினால் கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை வாரம்' நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஈரானிலிருந்து இலங்கை வந்திருந்த அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் மௌலானா காலித் அப்ரா இப்ராஹிம் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகளை இங்கு குறிப்பிடுவது சிறந்தது என்று நினைக்கின்றேன்: 

'ஈரானில் சுமார் பத்து வீதம் அளவில் அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்தோர் வசிக்கின்றனர். இங்கு சுன்னி - ஷியா என்ற அடிப்படையில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. அதனை ஈரானியர் எவரும் விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதும் இல்லை. அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நம்பிக்கையை விமர்சிக்கும் எவரும் ஷியாக்களாலேயே கண்டிக்கப்படுவர். 'அஹ்லுஸ்ஸுன்னாக்களால் மதிக்கப்படும் எந்த சஹாபாக்களையும் இழிவுபடுத்துவது, கண்ணியக்குறைவாக பேசுவது ஹராம் என்றும் றஸூலுல்லாஹ்வின் குடும்பத்தவரை, மனைவியரை இழிவுபடுத்துவது இஸ்லாத்தை இழிவுபடுத்துவதற்கு, குர்'ஆனை இழிவுபடுத்துவதற்கு, றஸூலுல்லாஹ்வை இழிவுபடுத்துவதற்கு சமனாகும்' என்றெல்லாம் ஷியா உலாமாக்களால் பத்வா வழங்கப்பட்டுள்ளது.'

மேலும், திருமண பந்தத்தால் இணைந்து வாழும் பல ஷியா - ஸுன்னா குடும்பங்களை ஈரானில் சர்வசாதாரணமாகக் காணலாம்.

இஸ்லாத்துக்கு எதிராக, இஸ்லாமிய ஒற்றுமைக்கு எதிராக மாபெரும் பிரச்சாரம் இஸ்லாத்தின் எதிரிகளால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஷியாக்களுக்கு எதிராக சுன்னிகளை தூண்டிவிடுவதற்கு அமெரிக்காவும் சுன்னிகளுக்கு எதிராக ஷியாக்களை தூண்டிவிடுதற்கு பிரித்தானியாவும் கோடிக்கணக்கான நிதியினை ஒதுக்கி, செலவு செய்து வருகின்றன. இதற்கென்றே பல ஊடக நிறுவனங்கள் நிறுவப்பட்டு இன்றும் செயற்பட்டு வருகின்றன.

1400 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற சரித்திர சம்பவங்களை இன்று நாம் பிரிந்திருக்க காரணிகளாக அமைத்துக்கொள்வதால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க நினைக்கும் சக்திகளே நன்மை பெறும்.  

ஷீஆ-ஸுன்னி ஒற்றுமை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் ஸுன்னிகளுக்கு எதிராக ஷீஆக்களின் பெயரிலும், ஷீஆக்களுக்கு எதிராக ஸுன்னிகளின் பெயரிலும் பல்லாரக்கணக்கான நூல்கள் அச்சிடப்பட்டு இரு சமூகங்கள் மத்தியிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனையிட்டு நாம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். யாருமொருவர் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால்... சிந்தியுங்கள், ஆராயுங்கள்; சதித்திட்டங்களுக்கு பலியாகி விடாதீர்கள்.

சவுதியில் சில உலமாக்கள் 'ஷியாக்கள் முஸ்லிம்களல்ல' என்று அவ்வப்போது கூறுவதை நாம் அறிவோம். இதனை சவூதி அரசு கூட சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை என்பதை, அவர்கள் வருடாந்தம் சுமார் ஒரு லட்சம் ஈரானியரை ஹஜ்ஜுக்கு அனுமதிப்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

இன்று எமக்கு வேண்டியது முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை; இதற்காகவே ஈரானிய அரசு பல திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. இந்த சமயத்திலும் கூட ஈரானில் இஸ்லாமிய ஒற்றுமை தொடர்பாக சர்வதேச மாநாடு ஒன்று இடம்பெற்றுக்கொண்டு இருக்கிறது; உலகின் பல பாகங்களில் இருந்தும் சுன்னி உலமாக்கள் அதில் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஒற்றுமைக்காகவே நாமும் இங்கு விஜயம் செய்துள்ளோம் என்று கூறினார் மௌலானா காலித் அப்ரா.

அவர் மேலும் உரையற்றுகையில் 'முஸ்லிம்கள் மத்தியில் நட்பு என்பது இல்லை, இருப்பது சகோரத்துவமே. இதனையே அல்லாஹ்வும் வலியுறுத்துகிறான், அவனுடைய றஸூலும் வலியுறுத்துகின்றார்" என்றார்.

மௌலானா காலித் அப்ரா இப்ராஹிம் அஹ்லுஸ்ஸுன்னாவை சேர்ந்த ஆலிம், புஷர் மாகாணத்தின் பிரதான கதீப், ஹாபிஸ், பன்னூலாசிரியர், மத்ரஸாக்களுக்கான பாடத்திட்டம் அமைக்கும் குழுவின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

====================================

ஒருவரின் குற்றத்தை அல்லாஹ் இன்னொருவர்மீது சுமத்தமாட்டான். இது குர்'ஆனை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அல்லாஹ் அளித்துள்ள வாக்குறுதி. ஆக, ஒருவன் ஷிவாக இருப்பதிலோ, சுன்னியாக இருப்பதிலோ, வஹ்ஹாபியாக இருப்பதிலோ, குராஃபியாக இருப்பதிலோ எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. 

ஒருவன் அல்லாஹ்வையும் அவனுடைய ரஸூலையும் ஏற்று, கலிமாவை மொழிந்து, புனித குர்'ஆனை ஏற்று நடக்கும் எவரும் முஸ்லிமே என்பதுவே எனது நிலைப்பாடு. அதற்கு அப்பால் உள்ள எந்த விடயமும் இரண்டாம் பட்சமே. அடுத்தவருக்கு காஃபிர் பட்டம் சூட்டாது, அவரவர் கொள்கையை பிரசாரம் செய்ய ஒருவருக்கு இருக்கும் உரிமையை நானும் மதின்றேன், அடுத்தவரும் மதிக்கவேண்டும். 

அமெரிக்க சியோனிச பிசாசுகளை மட்டுமல்ல இஸ்லாத்தின் எதிர் சக்திகள் அனைத்தையும் முறியடிக்கக்கூடிய ஒரே ஆயுதம் 'இஸ்லாமிய உலகின் ஒற்றுமை மட்டுமே' என்பது இஸ்லாத்தின் எதிரிகளுக்குப் புரிகிறது, ஆகவேதான், இவர்கள் ஷியா, சுன்னி பிரிவினைக்கு தூபமிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாமோ எதிரிகளின் சதித்திட்டங்களை அறியாது, எமக்குள் சண்டையிட்டு எமது சக்திகள் அனைத்தையும் விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம். 

'அன்றி, நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாக இரு)ங்கள். உங்களுக்குள் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து, உங்கள் வலிமை குன்றி விடும். ஆகவே நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (அல் குர்ஆன் 8 :46).

'இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்- உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் நரக நெருப்புக் குழியின் விளிம்பின் மீது இருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான்-  நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.' –அல் குர்ஆன்.3:103. 

------------------------
- தாஹா முஸம்மில் 

Wednesday, November 21, 2018

இஸ்லாமியர்களின் ஒற்றுமையின் அவசியம்


Islamic unity - the need of the hour

ஆயதுல்லா செய்யிதலி காமெனே அவர்கள் 'முஸ்லிம்கள் இன்று உலக முஸ்லிம்களின் ஒற்றுமையின்பால் கவனம் செலுத்துவது அவசியமாகும். முஸ்லிம்களான நாம் ஒரே உம்மா என்ற சிந்தனை எம்முள் வந்துவிட்டால் பல பிரச்சினைகள் தானாக தீர்ந்துவிடும், முஸ்லிம் நாடுகள் அனைத்தும் பாதுகாப்பாக, நிம்மதியாக வாழமுடியும். எம்மை பிரித்து வைப்பதிலேயே எதிரிகள் குறியாய் இருக்கின்றனர், அதில்தான் அவர்களின் பலம் தங்கியுள்ளது கருதுகின்றனர். இந்த சதியினை நாம் சரியாக புரிந்துகொண்டால் எவரும் எம்மை சீண்டிபார்க்க முடியாது. எம்மை அடக்கியாள நினைக்கும் இந்த சக்திகள் அமெரிக்க முதலாளித்துவமும் ஆணவம்கொண்ட ஸியோனிஸமுமாகும். இந்த தீய சக்திகளுக்கெதிராக நாம் எழுந்து நிற்க வேண்டும். இதற்கான பலத்தை நாம் இஸ்லாத்தில் இருந்தும் புனித குர்'ஆனிலிருந்தும் பெறவேண்டும்.' என்று கூறினார்கள்.

ரபீயுல் அவ்வல் மாதம் 12ம் நாளை ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பிறந்த தினமாக சுன்னத் வல் ஜமாத்தைச் சேர்ந்த நாம் நினைவு கூறும் அதேவேளை ஷியா முஸ்லிம்கள் 17ம் நாளை ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் பிறந்த தினமாக நினைவு கூறுகின்றனர்.


வரலாற்றுரீதியாக பிரிந்திருக்கும் இவ்விரு இஸ்லாமிய சமூகங்களும் தமக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு, ஒன்றுபடும் சந்தர்பமாக ரபீயுல் அவ்வல் மாதம் 12-17 ஐ ஒற்றுமை வாரம் என்று ஈரானிய தலைவர்கள் பிரகடனப்படுத்தி, உலக முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை வலியுறுத்தும் மாநாடுகளையும் வருடாந்தம் நடாத்தி வருகின்றனர். 

உலகில் ஷீஆ-சுன்னீ ஒற்றுமைக்காகக் குரல் கொடுத்தவர்களுள் சுன்னீ அறிஞர்களைப் போலவே ஏராளமான ஷீஆ அறிஞர்களும் இருக்கிறார்கள். இமாம் கொமெய்னி, இமாம் காமெனயி, இமாம் சீஸ்தானி, இமாம் பாகிர் ஸத்ர், ஷஹீத் முதஹ்ஹரி இன்னும் பலர். தற்காலத்திலும் அவர்கள் அயராது இவ்வொற்றுமைக்காகப் பாடுபட்டு வருகின்றார்கள்.
 
ஈரான் இஸ்லாமியப் புரட்சியும் கூட, ஷீஆ சுன்னீ ஒற்றுமையின் பயனால் உருவானதே. எனவேதான், ப்போதே இமாம் கொமெய்னி அவர்கள், “ஷீஆவும் வேண்டாம்; சுன்னீயும் வேண்டாம்; இஸ்லாம் மட்டுமே வேண்டும்என்ற கோஷத்தை பிரகடனப்படுத்தினார்கள்.


அமெரிக்க சியோனிச பிசாசுகளை துரத்தியடிக்கூடியது இஸ்லாமிய ஒற்றுமை மட்டுமே. முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சனைகளை உருவாக்க அமேரிக்கா சுன்னிகளைத் தூண்டுகிறது, பிரித்தானியா ஷியாக்களைத் தூண்டுகிறது. இரண்டுமே ஒரு கத்தரிக்கோலில் உள்ள இரண்டு கத்திகளை போன்றது.

ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் விளைவாக, ஷீஆ இஸ்லாம் உலகெங்கும் உத்வேகம் பெற்றதென்பது உண்மை. ஆனால், ஈரான் ஒரு போதும் ஷீஆ இஸ்லாத்தை ஏற்றுமதி செய்யவோ பரப்புரை செய்யவோ கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டது கிடையாது.

 
உலகின் பல நாடுகளுக்கும் முஸ்லிமான, முஸ்லிமல்லாத பல நாடுகளுக்கும் ஈரானின் பொருளாதார உதவிகள் செல்கின்றன. ஆனால், ஷீஆ இஸ்லாத்தை பரப்புவதை நோக்காகக் கொண்டு அத்தகைய உதவிகள் செய்யப்படவில்லை என்பதை உண்மை வரலாறை ஆராய்வோர் விளங்கிக் கொள்வர்.

உதாரணமாக, பலஸ்தீன மக்கள் அனைவரும் சுன்னீகளே. அங்கு ஷீஆக்கள் யாருமே கிடையாது. எனினும், பலஸ்தீன மக்களுக்கு அவர்களது பாதுகாப்பு, வாழ்வாதாரம் என்பவற்றுக்காக கணிசமான உதவி செய்யும் நாடு ஈரான். 

ஈரானுக்குள்ளேயே எத்தனையோ பள்ளிவாயல்களும் பல்கலைக்கழகங்களும் மார்க்கக் கல்விக்கூடங்களும் சுன்னீகளுக்காக உள்ளன. ஈரான் பாராளுமன்றத்தில் கூட சுன்னீகள் பலர் உள்ளனர்.

 
இலங்கைக்கும் ஈரானின் பொருளாதார உதவிகள் கிடைக்கின்றன. ஆனால், இவ்வுதவிகள் கொள்கை பரப்பும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவையல்ல; மாறாக அவை மனிதாபிமான நோக்கை அடிப்படையாகக் கொண்டவை. பிறகெப்படி, இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் ஷீஆ இஸ்லாம் துரிதமாக வளர்ச்சியடைகின்றது என்ற கேள்வி எமக்குள் எழுகின்றது.

 
ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் பிற்பாடு, அந்தப் புரட்சியினால் கவரப்பட்டவர்கள் பலர், உலகின் பல பாகங்களிலுமிருந்து ஈரானுக்கு விஜயம் செய்து, ஈரானியப் புரட்சியின் வெற்றியின் பின்னணிகளை ஆராய்வதில் ஈடுபட்டனர். அதன் விளைவாக ஷீஆ இஸ்லாம் பற்றிய புரிதல் அவர்களுக்கு ஏற்பட்டது. முழுமையாகத் திறந்த மனத்துடன், ஷீஆ இஸ்லாம் தொடர்பாக காய்தல் உவத்தலின்றி தேடலில் ஈடுபடும் எவரும், அதன் உண்மைத் தன்மையை அறிந்து அதன் ஆதரவாளராகவோ அதனைப் பின்பற்றும் ஒருவராகவோ மாறும் நிலை இயல்பானது.

 
அதாவது, ஈரான் ஒரு போதும் யார் மீதும் ஷீஆ இஸ்லாத்தை வலிந்து திணிக்கவோ பிரசாரப்படுத்தவோ இல்லை. அங்குள்ள உலமாக்கள், மற்ற நாடுகளிலுள்ள சுன்னி உலமாக்களைப் போன்று தமது இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்கின்றார்கள். உண்மையினால் கவரப்படுவோர் அதன் ஆதரவாளராகின்றனர்.

 
ஆனால், ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். சவூதி சார்புடைய கடும்போக்கு உலமாக்கள் ஷீஆ இஸ்லாத்தை மிக மோசமாக எதிர்த்து அவதூறுகளை அள்ளி வீசுவது போன்று, ஷீஆ உலமாக்கள் யாரும் சுன்னி இஸ்லாம் தொடர்பாக அவதூறுகளை அள்ளி வீசுவது கிடையாது. அவர்கள் எப்போதும் ஷீஆ - சுன்னி ஒற்றுமை கட்டியெழுப்பப்படுவதையே மிகவும் விரும்புகின்றார்கள். 


உலகளாவிய ரீதியில் இன்று இஸ்லாமியர்களுக்கெதிரென சதித்திட்டங்கள் தீட்டபட்டு, அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவது அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. ஆக்கரமிப்பாளர்கள் முஸ்லிம்களுக்கு தீவிரவாத முத்திரை குத்தி, பெண்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் கொன்றொழிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கும் வேளையில் இஸ்லாமிய சமுதாயம் அதனை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்ற எந்த சிந்னையுமின்றி, ஏனோ தானோவென்று வாழ்ந்து வருவது கவலையளிக்கும் விடயமாகும். 

அழுகையும் ஒப்பாரியும் பிரச்சினைகளைத் தீர்க்காது.....!

பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, எகிப்து, சிரியா, லெபனான், யெமன், பஹ்ரைன், மத்திய ஆபிரிக்கா, பாகிஸ்தான், காஷ்மீர், மியன்மார் மற்றும் இதுபோன்ற எத்தனையோ இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் அநியாயங்களை எண்ணி கவலைப் படுகிறோம், அழுகிறோம், ஒப்பாரி வைக்கிறோம். இவை எமது உணர்வுகளின் வெளிப்பாடு தான். ஆயினும், வெளிப்படும் உணர்வுகளால் மாத்திரம் எமது பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை என்பது உணரப்பட வேண்டும்.

பிரச்சினைகளின் மூல காரணங்களை அறிந்து, அதற்கான தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே தற்போது எம்மத்தியில் பிரதான சவால். எம்மத்தியில் உள்ள ஒற்றுமை இன்மையே பிரச்சினைகளின் மூல காரணங்களில் பிரதானமானது என்பதை எம்மில் பலர் அறிவோம்.

இவற்றுக்கான தீர்வு சமுதாய ஓற்றுமையில் தான் உள்ளது என்பதை இஸ்லாம் எவ்வாறு வலியுறுத்துகிறது என்பதை பாருங்கள்...


இஸ்லாமும் புனித குர்'ஆனும் அதற்கான வழிமுறைகளை மிகத்தெளிவாக எமக்குக் காட்டித்தருகின்றன.

'இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்- உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் நரக நெருப்புக் குழியின் விளிம்பின் மீது இருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான்-  நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.' –அல் குர்ஆன்.3:103.

அன்றைய அரபு மக்கள் பல குலங்களாக, கோத்திரங்களாக பிரிந்து நின்று ஆண்டாண்டு காலமாக தங்களுக்குள் சண்டையிட்டு மனித உருவில் மிருகங்களாக நடமாடினார். இவர்கள் நரகின் விளிம்பில் இருந்ததாக அல்லாஹ் கூறுகிறான். இம்மக்கள் முஸ்லிமாகி குர்ஆன் கூறும் ஒற்றுமை கயிற்றை பற்றிப் பிடித்தவுடன் சகோதரத்துவம் பிறந்தது சண்டை சச்சரவு ஒழிந்தது. இஸ்லாம் மலர்ந்தது. அல்லாஹ் மேலும் கூறுகிறான்.

'நிச்சயமாக உங்கள் 'உம்மத்து' சமுதாயம்(வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான்.' (அல் குர்ஆன் 21:92, 23:52) என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

1.      (மனித சமுதாயமே) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்: உங்களில் சிலரே நல்லுணர்வு பெறுகின்றீர்கள். (அல்-குர்ஆன் 7:3)

2.      'முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்! இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்' (அல்-குர்ஆன் 5:8)

3. 'அன்றி, நீங்கள் அல்லா{ஹக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாக இரு)ங்கள். உங்களுக்குள் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து, உங்கள் வலிமை குன்றி விடும். ஆகவே நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (அல் குர்ஆன் 8 :46).

ஆனால் இன்றைய முஸ்லிம்கள் இதன் ஒழுக்க மாண்புகளை சிதைத்து சின்னாபின்னமாக்கி தனித்தனி கூட்டங்களாக இயக்கங்களாக பிரிந்து நிற்கின்றனர். இதில் கை சேதம் என்னவென்றால், ஒவ்வொருவரும் தாங்கள்தான் நேர் வழியில் இருப்பதாக பெருமிதம் கொள்கிறார்கள்.

எமக்குள் இருக்கும் சிறிய வேற்றுமைகளை வளர்ப்பதில் இஸ்லாத்தின் எதிரிகள் கண்ணும் கருத்துமாய் உள்ளனர் என்பதை ஏனோ நாம் உணரத் தவறிவிடுகிறோம். அல்லாஹ் வழங்கிய இஸ்லாம் மார்க்கமானது, முஸ்லிம்களின் சகோதரத்துவம் என்ற ஒற்றுமையில் உருவான ஒரு ஒப்பற்ற வாழ்க்கை நெறி.

'நேரான வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, மூமின்கள் செல்லாத வழியில் செல்பவனை நாம் அவன் செல்லும் தவறான வழியிலே செல்லவிட்டு (பின்னர்) நரகத்தில் நுழையச் செய்வோம். அதுவே சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்' (அல் குர் ஆன் 4 :115) என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்வோம்.

அனைவரும் 'முஸ்லிம்கள்' என்ற அடிப்படையில் ஒன்று சேர்வதற்கு உதவி செய்திடுவாயாக!