Wednesday, April 29, 2020

பாரசீகத்தின் வியக்கவைக்கும் பண்டைய நீர் பொறிமுறை.


Shushtar Hydraulic System: 
The Oldest Engineering Masterpiece in World
சுஷ்டார் என்பது ஈரானின் குஜெஸ்தான் மாகாணத்தின் சுஷ்டர் பிரதேச  தலைநகரம் ஆகும். சுஷ்டர் ஒரு பழங்கால கோட்டை நகரம், இது மாகாணத்தின் மையமான அஹ்வாஸிலிருந்து சுமார் 92 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சுஷ்டாரின் வரலாற்று புகழ்மிக்க ஹைட்ராலிக் அமைப்பு 5 ஆம் நூற்றாண்டு வரையிலான பகுதிகளை உள்ளடக்கியது.

ஐரோப்பாவில் 18 ஆம் நூற்றாண்டின் தொழில்துறை புரட்சி ஆரம்பிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஈரான் ஒரு மேம்பட்ட தொழில்துறை வளாகமாக விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீர்நிலை அமைப்பு, நீரனை பாலங்கள், அணைக்கட்டுகள், நீர் வழிகள், நீர் ஆலைகள், ஆறுகள், அகழிகள் மற்றும் அமைப்பின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் மைய கோட்டை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் மிகப் பழமையான பகுதிகள் ஆக்கிமினிட்  சகாப்தத்தில் (கிமு 550-330) நிர்மாணிக்கப்பட்டவை என்று நம்பப்படுகிறது.

மேலும் கர்கர் சேனல் மற்றும் சலாசெல் கோட்டை என அழைக்கப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட நதியும் இவற்றுள் அடங்கும். இதுவே முழு ஹைட்ராலிக் செயல்பாட்டு அமைப்பின் மூளையாகும். சலாசெல் கோட்டை, நீர் அமைப்பின் செயல்பாட்டு ஓட்டத்தை கட்டுப்படுத்துவது  மட்டுமல்லாமல், சுஷ்டார் நகர பாதுகாப்பின் ஒரு பகுதியாகவும் இருந்தது.

பிற்காலத்தில், கோட்டையை சுற்றி ஒரு பேக்கரி, தொழுவங்கள், தடுப்பணைகள், பாதுகாப்பு அறைகள், குளியலுக்கான ஓரிடம், ஒரு சமையலறை பகுதி மற்றும் பல முற்றங்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டு குஸேஸ்தான் மாகாண ஆளுநரின் வதிவிடமாக மாறியது.

கர்கர் ஆற்றின் மீது பல நீரனை பாலங்கள் கட்டப்பட்டன, குறிப்பாக சசானிட் (224-651) கர்கர் நீரனை பாலம், மீன்பிடி அணை, மற்றும் சசானிட் அயார் கோபுர அணை ஆகியவை கட்டப்பட்டிருந்தன.

இந்த அமைப்பில் அமையப்பெற்றுள்ள  பாலங்களில் மிகவும் பிரபலமானது பேண்ட்-இ கைசர் என்று அழைக்கப்படும் ஷாடோர்வன் நீரனை பாலமாகும். இது ஷாபூர்-1 (240 முதல் 270 வரை) மன்னரால் 253-260ல் ஆட்சி செய்த வலேரியன் பேரரசருடன் சேர்த்து சிறைபிடிக்கப்பட்ட ரோமானிய வீரர்கள் மற்றும் பொறியியலாளர்களால் கட்டப்பட்டது. (ஷாபூர் I, ஷாபூர் தி கிரேட் என்றும் அழைக்கப்படுபவர், ஈரானின் மன்னர்களின் இரண்டாவது சாசானிய மன்னர் ஆவார். அவரது ஆட்சியின் 240 முதல் 270 வரை ஆட்சி செய்தார் என்று ஒப்புக் கொள்ளப்படுகிறது.)



பாரசீக மொழியில் சரிசெய்தல் அணை என்று பொருள்படும் பேண்ட்-இ மிசான், ஷாபூர் I இன் மற்றொரு கட்டமைப்பாகும், இது கரோன் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை அதன் இரண்டு கிளைகளான கர்கர் மற்றும் ஷோட்டீட் இடையே பிரிக்கிறது.

லஷ்கர் நீரனை பாலம் ஈரானில் சிறப்பாக பராமரிக்கப்படும் சசானிட் பாலங்களில் ஒன்றாகும். சாரூஜ் (சுண்ணாம்பு மற்றும் களிமண் கலவை) மற்றும் மணற்கல் ஆகியவற்றால் கட்டப்பட்ட இந்த பாலம், சுஷ்டார் நகரின் தெற்கே உள்ள கிராமங்களுடன் இணைப்பதிலும், அதன் தெற்கு பக்கத்தில் அமைந்துள்ள நீர் ஆலைகளுக்கு தண்ணீரை சேர்ப்பதிலும் முக்கிய பங்கு வகித்தது. இது ஒரு காலத்தில் அப்பகுதி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்தது.

பேண்ட்-இ-ஷரப்தார் அல்லது ஒயின் அணை என்பது மற்றொரு முக்கிய நீரணையாகும்பல திராட்சைத் தோட்டங்கள் அதன் அருகாமையில் அமைந்துள்ள காரணமாக அவ்வாறு பெயரிடப்பட்டது. இது லஷ்கர் நீரணை பாலம் மற்றும் பேண்ட்-இ மஹி பஸானுக்கு இடையில் அமைந்துள்ள மற்றொரு சசானிய கட்டமைப்பாகும்.

கஜார் வம்ச மன்னர்களின் காலத்தில் பேண்ட்-இ-மிஸான் மற்றும் காரூன் நதிக்கு அருகில் ஒரு கோபுரம் அமைக்கப்பட்டது. பார்வையாளர் கோபுரம் (போர்ஜ்-இ-கோலா ஃபாரங்கி) என்று அழைக்கப்படுகிறது. இது சுஷ்டார் நீர்நிலை அமைப்பின் பழைய பாலங்களின் கட்டமைப்புகளை மேற்பார்வை செய்வதற்காக ஷாபூர்-I ஆல் பயன்படுத்தப் படுவதற்காக, பழைய கட்டமைப்பொன்ரின் மீது கட்டப்பட்ட ஒரு காவற்கோபுரமாகும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.


இதை அதி அற்புத படைப்பாக அடையாளம் கண்ட யுனெஸ்கோ  நிறுவனம், இந்த நீர் நிலை அமைப்பை, 2009 ஆம் ஆண்டில் உலக பாரம்பரிய தளமாக பதிவு செய்தது.


Sunday, April 26, 2020

ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் நோன்பின் மகத்துவம்



பிரபல பாரசீக இறையியலாளர் ஷேக் சதூக் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொகுத்த "உயூன் அக்பர் அர்-ரெஸா" என்ற கிரந்தத்தில், இமாம் ரெஸா (அலை) தனது கண்ணியமிக்க மூதாதையர்களின் அதிகார சங்கிலி தொடருடன்  இமாம் அலி (அலை) அவர்களை ஆதாரம் காட்டி, ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதம் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹீ வஸல்லம்) அவர்கள் மக்களை நோக்கி பின்வரும் பிரசங்கத்தை செய்தார் என்று விவரிக்கப்பட்டுள்ளது:

"
மக்களே! அல்லாஹ்வின் மாதம் அதன் கருணை, ஆசீர்வாதம் மற்றும் மன்னிப்புடன் வந்துள்ளது. அல்லாஹ் இந்த மாதத்தை எல்லா மாதங்களை விடவும் சிறந்தது என்று அறிவித்துள்ளான்; அதன் நாட்கள் எல்லா நாட்களை விடவும் சிறந்தது, அதன் இரவுகள் எல்லா இரவுகளை விடவும் சிறந்தது, அதன் நேரங்கள் எல்லா நேரங்களை விடவும் மிகச் சிறந்தது. அவன் உங்களை இம்மாதத்தில் (நோன்பு நோற்கவும் மற்றும் இறைவணக்கத்தில் ஈடுபடவும்) அழைக்கின்றான்; அதில் அவன்  உங்களை கண்ணியப்படுத்துகிறான். அதில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு சுவாசத்திற்கும் தஸ்பீஹ் (அல்லாஹ்வைப் புகழ்வது) செய்யும் பலன் உண்டு; உங்கள் உறக்கமும் வழிபாடாகும், உங்கள் நல்ல செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, உங்கள் வேண்டுதல்களுக்கு பதிலளிக்கப்படுகின்றன. ஆகையால், பாவத்திலிருந்தும் தீமையிலிருந்தும் விடுபட்ட இருதயங்களுடன் உங்கள் இறைவனை நீங்கள் சரியான முறையில் இறைஞ்சவேண்டும், மேலும் நோன்பை உரியமுறையில் கடைப்பிடிக்கவும், குர்ஆனை ஓதவும் அல்லாஹ் உங்களுக்கு உதவும்படி கேட்க வேண்டும். உண்மையில், இந்த மாபெரும் மாதத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை இழந்தவர் பரிதாபகரமானவர். நோன்பு இருக்கும்போது, நியாயத்தீர்ப்பு நாளின் பசியையும் தாகத்தையும் காட்சிப்படுத்துங்கள். ஏழைகளுக்கும் தேவை உடையோருக்கு தர்மம் செய்யுங்கள்; உங்கள் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள், உங்கள் இளையவர்களுக்கு பரிவு காட்டுங்கள், உங்கள் உற்றார் உறவினர்களிடம் அன்பு செலுத்துங்கள். தகுதியற்ற வார்த்தைகளில் இருந்து உங்கள் நாவைக் காத்துக்கொள்ளுங்கள்; காணக்கூடா (தடைசெய்யப்பட்ட) காட்சிகளில் இருந்து உங்கள் கண்களை தடுத்துக் கொள்ளுங்கள்; மற்றும் கேட்கக்கூடாதவற்றில் இருந்து உங்கள் காதுகளையும் காத்துக்கொள்ளுங்கள். அனாதைகளிடம் கருணை காட்டுங்கள், இதனால் உங்கள் குழந்தைகள் அனாதைகளாக மாறினால் அவர்களும் கருணையுடன் நடத்தப்படுவார்கள். உங்கள் பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மனம் திருந்தி மன்னிப்பு கோருங்கள்., தொழுகை நேரங்களில் உங்கள் கைகளை உயர்த்தி  வேண்டிக்கொள்ளுங்கள், இவை மிகச் சிறந்த நேரங்கள், அந்த நேரத்தில் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் தன் அடியார்களை கருணையுடன் பார்க்கிறான்; அவர்களின் வேண்டுதலை ஏற்றுக்கொள்கிறான்; அவர்களின் அழைப்புக்கு பதிலளிக்கிறான்; அவர்கள் கேட்டால் தாராளமாக வழங்குகிறான்; அவர்களின் மன்றாட்டத்தை ஏற்றுக்கொள்கிறான்.


"மக்களே! உங்கள் மனசாட்சியை உங்கள் ஆசைகளின் அடிமையாக ஆக்கியுள்ளீர்கள். மன்னிப்புக்காக அவனை அழைப்பதன் மூலம் அதை விடுவியுங்கள். உங்கள் பாவச்சுமை காரணமாக உங்கள் முதுகு உடைந்து போகிறது; எனவே அவனுக்கு முன்பாக நீண்ட நேரத்துக்கு ஸஜ்தா செய்து, அதை இலகுவாக்குங்கள். தொழுகையையும், ஸஜ்தாவையும் செய்யும் அத்தகைய நபர்களை அவன் கஷ்டங்களுக்கு உள்ளாக்க மாட்டான் என்று அல்லாஹ் தனது மாட்சிமை மற்றும் கௌரவத்தின் பெயரில் வாக்குறுதி அளித்துள்ளான். நியாயத்தீர்ப்பு நாளில் அவன் அவர்களின் உடல்களை நரகத்தின் நெருப்பிலிருந்து பாதுகாப்பான் என்பதை  முழுமையாக புரிந்து கொள்ளுங்கள்.

"மக்களே! உங்களிடமிருந்து எவரேனும் எந்த விசுவாசிகளின் இப்தார் (சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நோன்பை முடிப்பதற்கான உணவு) ஏற்பாடு செய்தால், அல்லாஹ் அவன் / அவள் ஒரு அடிமையை விடுவித்ததைப் போன்றதொரு வெகுமதியைக் கொடுப்பான், முந்தைய பாவங்களை அவன் மன்னிப்பான்.

அவர்கள் மத்தியில் இருந்த ஒருவர்  "ஆனால் நம்மிடையே உள்ள அனைவருக்கும் அவ்வாறு செய்யும் வசதி இல்லையே" என்று சொன்னபோது: நபி (ஸல்) அவரை  நோக்கி: "நரகத்தின் நெருப்பிலிருந்து (இப்தாரை வழங்குவதன் மூலம்) உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள், வேறு எதுவும் இல்லையென்றால் உங்களிடமுள்ள பேரீத்தம் பழத்தின் பாதியாகவோ அல்லது கொஞ்சம் தண்ணீராகக் கூட அது இருக்கலாம்என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தனது பிரசங்கத்தின் தொடர்ச்சியாக இவ்வாறு கூறினார்:

"மக்களே! இந்த மாதத்தில் நல்ல பழக்கவழக்கங்களை வளர்க்கும் எவரும், கால்கள் நழுவும் நாளில், சிராத் (நரகத்தின் விளிம்பு வழியாக சொர்க்கத்திற்கு செல்லும் பாலம்) மீது நடப்பார்கள். இந்த மாதத்தில் (கஷ்டப்படுத்தாமல்) தமது ஊழியர்களிடமிருந்து இலகுவான வேலையை எடுத்துக் கொள்ளும் எவருக்கும் அல்லாஹ் தனது கணக்கை எளிதாக்குவான். அம்மாதத்தில் மற்றவர்களைத் தொந்தரவு செய்யாத அவனை / அவளை நியாயத்தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவனது கோபத்திலிருந்து பாதுகாப்பான். எவரேனும் ஒரு அனாதையை மரியாதையுடன் மதித்து நடத்துகிறார்களோ, அந்த நாளில் அல்லாஹ் அவனை / அவளை தயவுடன் பார்ப்பான்.


ரமலானில் உறவினர்களை நல்ல முறையில் கையாளும் எவரும், நியாயத்தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவனுடைய கருணையை அவனுக்கு / அவளுக்கு வழங்குவான், அதே சமயம் உறவினர்களைத் துன்புறுத்துபவர்களிடம் இருந்து அல்லாஹ் அவனது கருணையை பறித்துக் கொள்வான். அம்மாதத்தில் பரிந்துரைக்கப்பட்ட பிரார்த்தனைகளை செய்வோரை அல்லாஹ் நரகத்திலிருந்து காப்பாற்றுவான்; கட்டாய வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவோருக்கு, மற்ற மாதங்களுடன் ஒப்பிடும்போது இதுபோன்ற செயல்களுக்கு வெகுமதி ஏழு மடங்காக இருக்கும். எவர் என் மீது சலாவத்தை (ஆசீர்வாதங்களை) மீண்டும் மீண்டும் ஓதினால், அல்லாஹ் நற்செயல்களின் தராசை (நியாயத்தீர்ப்பு நாளில்) கனமாக வைத்திருப்பான், அதே நேரத்தில் மற்றவர்களின் தராசு இலேசாக இருக்கும். இந்த மாதத்தில் குர்ஆனின் ஓர் ஆயத்தை யார் ஓதினாலும், மற்ற மாதங்களில் முழு குர்ஆனையும் ஓதியதற்கு சமமான வெகுமதி உண்டு.


"மக்களே, இந்த மாதத்தில் சொர்க்கத்தின் வாயில்கள் திறந்தே இருக்கின்றன, அவை உங்களுக்காக மூடப்படாமல் இருக்கும்படி உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்; நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டிருக்கும்போது, அவை உங்களுக்காக ஒருபோதும் திறக்கப்படாமல் இருக்கும்படி உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இம்மாதத்தில் சாத்தான்கள் விலங்கிடப்பட்டிருக்கும், ஆகவே, அவை உங்களை ஆதிக்கம் செலுத்தும்படி ஆக்கிவிடாதே என்று உங்கள் இறைவனிடம் இறைஞ்சுங்கள்.

இமாம் அலி (அலை) அவர்கள் கூறுகிறார்: நான் றஸூலுல்லாஹ்விடம் "அல்லாஹ்வின் தூதரே, இந்த மாதத்தில் சிறந்த செயல்கள் யாவை?" என்று கேட்டேன்: ரசூலுல்லாஹ் அவர்கள் "ஓ அபாஅல்-ஹசன், இந்த மாதத்தில் மிகச் சிறந்த செயல் அல்லாஹ் தடைசெய்தவற்றில் இருந்து விலகி, வெகு தூரத்தில் இருப்பதாகும்," என்று கூறினார்கள்.



Tuesday, April 21, 2020

அமெரிக்காவை ஈரான் சொந்தமாக்கிக்கொள்ளும்; உங்களுக்கு ஒரு நாடு எஞ்சியிருக்காது - ட்ரம்ப்




தெஹ்ரான் கோருமானால், கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிக்க ஈரானுக்கு உதவி வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"ஈரானுக்கு உதவி தேவைப்பட்டால், நான் தயாராக இருக்கிறேன்" என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகை மாநாட்டில் கூறினார்.

ஈரானிய அதிகாரிகளை அமெரிக்காவுடன் "புத்திசாலித்தனமாக அணுகுங்கள் என்றும் (அமெரிக்காவுடன்) ஒப்பந்தம் செய்யுங்கள்" என்று அவர் வலியுறுத்தினார்.

டிரம்ப், 2015 ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியாது மட்டுமல்லாமல் உடனடியாக ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் பிறப்பித்தார்.

அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை நீக்க மறுத்து, அவற்றை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கையில் ஈரான் இதை பாசாங்குத்தனமானது என்று நிராகரித்தது. பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்பதில் ஈரான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறது.

ஆனால் 2020 தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் ஜனாதிபதியாக வருவாரா என்று ஈரான் காத்திருக்கக்கூடும்; அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் "அவர்கள் (ஈரானியர்கள்) அமெரிக்காவை சொந்தமாக்கிக் கொள்வார்கள்" என்று டிரம்ப் மாநாட்டில் கூறினார். "அவர் (ஜோ பிடன்) வெற்றிபெற்றால் உங்களுக்கு ஒரு நாடு எஞ்சியிருக்காது" என்று அமெரிக்க ஜனாதிபதி தனது வழக்கமான தொனியில் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, ஈரானின் வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஸரீஃப், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஈரானுக்கு வென்டிலேட்டர்களை அனுப்ப ட்ரம்ப் விருப்பம் தெரிவித்ததை கபட நாடகம் என்று குற்றம் சாட்டினார்.

"
ஈரான் சில மாதங்களில் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்யும்" என்று ஸரீஃப் ட்வீட் செய்துள்ளார். "நீங்கள் செய்ய வேண்டியது மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள்; குறிப்பாக என்னுடைய நாட்டில். நாங்கள் எந்த அமெரிக்க அரசியல்வாதியிடமும் ஆலோசனை பெறுவதில்லை, என்று உறுதியாக சொல்கிறேன்என்றும் அவர் தனது டீவீட்டில் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் உதவுவதாக சொல்லும் அதேவேளை, இஸ்லாமிய குடியரசு அதை நேரடியாகக் கேட்க வேண்டும் என்றும் சொல்கிறார். இது ட்ரம்பின் உதவும் மனப்பாண்மையைக் காட்டவில்லை. மாறாக ஈரான் அவரிடம் சரணடைய வேண்டும் எதிர்பார்க்கிறார் என்பதையே காட்டுகிறது.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் சஞ்சிகைக்கு  அளித்த பேட்டியில், ஈரானின் மத்திய வங்கி ஆளுநர் அப்துல்நாசர் ஹெம்மாதி வாஷிங்டனின் விரோத நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி அவை தெஹ்ரானின் சர்வதேச வர்த்தகத்தை சிக்கலாக்கியுள்ளன என்று தெரிவித்தார்.

அமெரிக்க பொருளாதாரத் தடைகள் மற்றும் கடந்த செப்டம்பரில் ஈரானிய மத்திய வங்கியை அதன் "தடடைசெய்யப்பட்ட நிறுவனங்கள்" பட்டியலில் சேர்க்கும் முடிவின் காரணமாக ஈரான் தனது சொந்த பணத்தை அணுகுவதைத் தடுக்கிறது; இது அதன் தேவைகளைப் பூர்த்தி செய்ய "போதுமானதை விட அதிகமாக" இருக்கும் தொகை என்று அவர் கூறினார்.

"
ஈரானின் மத்திய வங்கி இருப்புக்கள் வெளிநாடுகளில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளின் கீழ் உள்ளன, இந்தத் தடை  சட்டவிரோதமானது மற்றும் ஒருதலைப்பட்சமானது, என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் சொல்வது என்னவென்றால், பொருளாதாரத் தடைகள் முழுவதுமாக நீக்கப்பட வேண்டும் என்பதாகும். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள நிறைவேற்றுவோர் சர்வதேச சட்டம் ஒழுங்கு குறித்து சிறிதும் அக்கறை காட்டுவதில்லை,” என்று ஹெம்மாதி மேலும் கூறினார்.

சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) தெஹ்ரானின் கடன் கோரிக்கையை தாமதமின்றி அங்கீகரிக்க வேண்டும் என்றும் கொடிய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அமெரிக்காவின் ஈரான் மீதான மனிதாபிமானமற்ற அழுத்தத்தை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடந்த மாதம், இஸ்லாமிய குடியரசு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 5 பில்லியன் டாலர் கடன்களைக் கேட்டது. கடந்த ஐந்து தசாப்தங்களில் நித்தியத்திடமிருந்து கடன் கோருவது இதுவே முதல் தடவையாகும். ஈரானின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கான  நடவடிக்கை  தொடர்கிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர், ஆனால் ஈரானின் இந்தக் கடனுக்கான விண்ணப்பத்தைத் தடுப்பதில் அமேரிக்கா குறியாய் இருக்கிறது.

ஈரானில் கொரோனா வைரஸ் உயிர் இழப்பு குறித்தும் ஹெம்மதி  தொட்டுக்காட்டி, கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவிடம் நேரடியாக கோரிக்கை விடுத்தார்.
 
"
அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இழந்ததைப் போல நாங்கள் பல உயிர்களை இழந்துவிட்டோம், எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் செல்கின்றன" என்று ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில் ஹேமதி தெரிவித்தார். "கூட்டாக செயல்பட வேண்டிய நேரம் இது," என்றும் அவர் கூறினார்.


Monday, April 20, 2020

கொரோனாவின் போது ரமழானில் நோன்பு இருப்பது குறித்து இமாம் ஆயத்துல்லாஹ் கமேனி அவர்களின் அவர்களின் தீர்ப்பு.


Imam Khamenei’s decree on fasting in Ramadan during Corona


மத தீர்ப்புகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த இமாம் ஆயத்துல்லாஹ் கமேனி அவர்களின் அலுவலகம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது தொடர்பான தீர்ப்பை வெளியிட்டுள்ளது. பின்வருவது கேள்வியும் அதற்கான பதிலும்:

இப்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவலாகிவிட்டதால், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் விதிகள் என்ன?

நோன்பு என்பது ஒரு மதக் கடமையாகும், உண்மையில் இறைவன் தம்முடைய அடியார்களுக்கு வழங்கியுள்ள சிறப்பு அருட்கொடையும்  மனிதகுலத்திற்கான பரிபூரணத்திற்கும் ஆன்மீக மேம்பாட்டிற்குமான ஓர் அடித்தளமாகும். முந்தைய சமுதாயங்களுக்கும் இது கடமையாக்கப்பட்ட இருந்தது.

நோன்பின் விளைவுகளில் சில: ஆன்மீகம் மற்றும் உள் தூய்மை நிலையைப் பெறுதல், தனிநபர் மற்றும் சமூக இறையச்சம் அதிகரித்தல் மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது ஒருவரின் மன உறுதியையும் பொறுமையையும் வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும். மக்களின் ஆரோக்கியத்தில் அது வகிக்கும் பங்கு மிகத்தெளிவாகத் தெரிகிறது, மேலும் நோன்பு நோற்பவர்களுக்கு இறைவன் ஒரு பெரிய வெகுமதியை அளித்துள்ளான்.

நோன்பு என்பது ஒரு மதக் கடமை மற்றும் அது இஸ்லாமிய சட்டத்தில் ஒரு தூண். ஆகவே, பின்வரும் காரணங்களுக்காக அன்றி, ரமழான் மாதத்தில் புனித நோன்பு நோற்பதை விடுதல் அனுமதிக்கப்படடவில்லை:

1. நோயை ஏற்படும்

2. நோயை தீவிரப்படுத்தும்

3. நோயை நீடிக்கவும் அல்லது ஒருவரின் குணமடையும் காலத்தை தாமதப்படுத்தும்

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒருவர் நோன்பு நோற்றல் கூடாது, ஆனால் தவறவிட்ட நோன்பை பிற்காலத்தில் ஈடுசெய்வது அவசியமாகும்.

வெளிப்படையாக, மதத்தை பின்பற்றும் ஒரு மருத்துவரின்  பரிந்துரையின் அடிப்படையில் இந்த நம்பிக்கை பெறப்பட்டால் போதுமானது.

ஆகையால், ஒரு நபருக்கு மேற்கூறிய ஏதேனும் சிரமங்களுக்கு ஆளாக நேரிடும் என்ற நியாயமான பயம் இருந்தால், அவர்கள் நோன்பிருக்கும் அவசியம் இல்லை, ஆனால் பிற்காலத்தில் தவறவிட்ட இந்த நோன்புகளை ஈடுசெய்வது அவசியமாகும்.
ஏப்ரல் 19, 2020