Wednesday, June 30, 2021

“அமெரிக்கா எம்மீது கோபப்பட்டு அக்கோபத்தினாலேயே சாகட்டும்"

 Martyr Beheshti’s Vision Continues to Guide Iran to the Horror of the US


மாபெரும் புரட்சிகர பிரமுகர், தலைமை நீதிபதி ஆயதுல்லா முகமது ஹுசைனி பெஹெஷ்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட 72 உயர் அதிகாரிகளுடன் குண்டுவைத்து ஷஹீதாக்கப்பட்டு ஜூன் 28ம் திகதி நாற்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இத்தகைய பயங்கரவாத செயல்கள் ஈரானில் இஸ்லாமிய குடியரசு அரசாங்கத்தின் வீழ்ச்சியைக் கொண்டுவரும் என்று நினைத்தனர் அமெரிக்காவின் ஊதியத்திற்காக துணைபோன துரோகிகள்.

இன்றும், அமெரிக்க அதிகாரத்தில் இருப்போர் பயங்கரவாதத்தின் அதே பழமையான கொள்கையையே பின்பற்றுகிறார்கள் - ஈரானுக்கு எதிரான சமீபத்திய முக்கிய பயங்கரவாதம் ஜெனரல் காஸெம் சுலைமணி படுகொலை - ஆனால் வெலாயத்தே பக்கீஹ் அமைப்பு (சன்மார்க்கசீலர்களின் நிர்வாகம்), அதன் அரசியலமைப்பு பிரதானமாக ஆயதுல்லாஹ் பெஹெஷ்டியால் தயாரிக்கப்பட்டது https://en.parliran.ir/eng/en/Constitutionவெலாயத்தே பக்கீஹ் முறைமை, அமெரிக்க சதிகளால் பலம் குன்றாது, இறைவன் அருளால் இன்னும் இன்னும் வலிமையடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபோதும் திருந்தாத வாஷிங்டனின் துஷ்ட இயல்பு தொடர்பாக  பெஹெஷ்டியின் பிரபல்யமான வார்த்தைகள் - அவர்களின் பரிதாபத்துக்குரிய வில்லத்தனம் எம்மை பலவீனமாக்கும் என்ற  எதிர்பார்ப்புகளுக்கு மாறாக -  “அமெரிக்கா எம்மீது கோபப்பட்டு அக்கோபத்தினாலேயே சாகட்டும்" என்ற சொற்கள் தொடர்ந்து எங்கள் காதுகளில் ஒலிக்கின்றன.

உண்மையில், 1979 ஆம் ஆண்டில் இஸ்லாமிய புரட்சியைத் தொடர்ந்து ஈரானிய மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்காவின் முகத்தில் இப்போது அச்சம் குடிகொள்ள ஆரம்பித்துள்ளது, இது எங்கள் பிராந்தியத்தில் அதனது வள சுரண்டல் நீடிக்க போவதில்லை என்பதை உணர தலைப்பட்டுள்ளது. ஈராக், சிரியா, அரேபியா, பஹ்ரைன் மற்றும் பிற இடங்களில் இருந்து (ஆப்கானிஸ்தான் அடங்கலாக), அது வெளியேற்றப்படுவதற்கு முன்பான ஒரு சிறு கால அவகாசமே இதுவாகும். இஸ்லாமிய புரட்சியை அழிக்கும் நோக்கில் அமெரிக்க முகவர்களால் படுகொலை செய்யப்பட்ட உயிர் தியாகிகளின் அழியாத மரபுக்கு நன்றி.

இஸ்லாமியப் புரட்சியின் தந்தை இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1981 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி தனது அர்ப்பணிப்பு மிக்க மாணவரின் உயிர் தியாகம் தொடர்பான துன்பகரமான செய்தியைக் கேட்டபோது, அவரது அந்த அழியாத வார்த்தைகளை உச்சரித்தது மட்டுமல்லாமல் “பெஹெஷ்டி நம் தேசத்திற்கு ஒரு தேசமாக இருந்தார்” என்று வர்ணித்தார்கள்.

முஹம்மது ஹுசைனி பெஹெஷ்டி; (24 அக்டோபர் 1928 - 28 ஜூன் 1981) ஒரு ஈரானிய நீதிபதி, தத்துவஞானி, சன்மார்க்க மேதை மற்றும் அரசியல்வாதியும் ஆவார், அவர் புரட்சிக்குப் பின்னர் ஈரானின் அரசியல் வரிசையில் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது செல்வாக்குமிக்க நபராக அறியப்பட்டார். ஈரானின் இஸ்லாமிய புரட்சிக்கு பிந்தைய அரசியலமைப்பின் முதன்மை சிற்பியாகவும் இஸ்லாமிய குடியரசின் நிர்வாக கட்டமைப்பின் கர்த்தாவாகவும் பெஹெஷ்டி கருதப்படுகிறார்.

பெஹெஷ்டி தற்போதைய ஜனாதிபதி ஹசன் ரூஹானி, முன்னாள் ஜனாதிபதி முஹம்மத் காத்தமி, அலி அக்பர் வேலாயத்தி, முஹம்மத் ஜவாத் லரிஜானி, அலி பல்லாஹியான், மற்றும் முஸ்தபா பூர்முஹம்மதி  போன்ற பல முக்கிய அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்கியவர் என்றும் அறியப்படுகிறது.

பெஹெஷ்டி இஸ்லாமிய குடியரசுக் கட்சியின் பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார், மேலும் ஈரானிய நீதித்துறை அமைப்பின் தலைவராகவும் இருந்தார். இஸ்லாமிய புரட்சி கவுன்சில் மற்றும் நிபுணர்களின் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றினார். பெஹெஷ்டி தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் அரபு மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.

ஈரான் மக்கள் முஜாஹெடின் என்று அழைக்கப்பட்ட முனாபிக் கூலிப்படையின் குண்டுவெடிப்பில் 1981 ஜூன் 28 அன்று பெஹெஷ்டி படுகொலை செய்யப்பட்டார், இஸ்லாமிய குடியரசுக் கட்சியின் 70 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 4 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட. பலர் இந்த சம்பவத்தில் ஷஹீதாகினர். பெஹெஷ்டியின் மரணத்தைத் தொடர்ந்து, ஆயதுல்லா கொமெய்னி அவரை  "எங்களுக்கு ஒரு தேசமாக" இருந்த ஒரு நபர் என்று குறிப்பிட்டார்.

ஆம், அவர் தனது சொந்த உரிமையில் ஒரு தேசமாகவும், இஸ்லாமிய குடியரசின் தேசிய அரசியலமைப்பின் சீரான செயல்பாட்டாளராகவும் இருந்தார். இந்த மாபெரும் ஈரானிய நீதித்துறை அறிஞர், தத்துவஞானி அவருடைய 53 வயதில் அமெரிக்க முகவர்களால் கோழைத்தனமாக கொல்லப்பட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, இஸ்லாமிய ஈரானின்  தலைமை நீதிபதியாக இருந்த ரயீஸி மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் பல்வேறு நீதித்துறை பதவிகளில் நீண்டகாலமாக பணியாற்றியது உட்பட, தனது கடமைகளை பாராட்டத்தக்க வகையில் நிறைவேற்றியவராகும்.

இஸ்லாமிய குடியரசின் குறிக்கோள்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஊக்குவிக்கும் தீர்மானத்துடன் அவர் இப்போது இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் (அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதில்லை என்ற தீர்மானத்துடன் இருக்கும் நாடுகளின் நலனுக்காக) அர்ப்பணிப்புடன் செயல்பட தயாராகி வருகிறார்.

ரயீஸியின் தெரிவானது உண்மையில் தியாகி பெஹெஷ்டியின் அபிலாஷைகளின் நிறைவேற்றமாகும், இஸ்லாமிய ஒற்றுமை, சியோனிச ஆக்கிரமிப்பில் இருந்து அல்-அக்ஸா மற்றும் பாலஸ்தீனத்தை விடுவிப்பதற்கான பிரச்சாரம் உட்பட இமாம் கோமெய்னி (ரஹ்) அவர்களது போராட்டத்தில் விசுவாசமான சீடராக இருந்து, இஸ்லாமிய குடியரசின் கௌரவத்தையும் மனிதாபிமான விழுமியங்களையும் சத்தியத்தின் வெற்றிக்கான போராட்டத்தை இப்பிராந்தியத்தில் தூண்டியது நிச்சயமாக அவரின் சிந்தனையாகும் என்றால் மிகையல்ல.

இஸ்லாமிய குடியரசு அமைப்பு மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கும் பரிணாமத்திற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஆயதுல்லாஹ் பெஹெஷ்டி கூறியது போல, அரசியல் சிந்தனையின் மிக முக்கியமான தூண்களில் ஒன்று, மனிதர்கள் சத்தியத்தை நோக்கிய நம்பிக்கையுடன் சரியான பாதையில் நடக்க முடியும் என்பதுதான். இன்று ஈரான் அப்பாதையில் சீராக அணிவகுத்து வருகிறது. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நிபுணத்துவம் பெறச் செய்வதன் மூலம் முன்னேற்றத்தின் உச்சத்தை நோக்கி, மற்றும் அமெரிக்காவின் துஷ்ட நுகத்திலிருந்து விடுபட நாடுகளுக்கு உதவுகிறது.

Wednesday, June 23, 2021

தடுப்பூசி தயாரிப்பில் ஈரான் மாபெரும் சாதனை தொழில்நுட்ப அறிவை மற்ற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயார்

 Iran stands tall against COVID-19 ‘vaccine apartheid’

கோவிட் 19 இந்த "நூற்றாண்டின் மிகப்பெரிய நிறவெறியை" உருவாக்கியது எனலாம்; இது பிழைப்புக்கான முழு அளவிலான போராகும். தடுப்பூசி ஏகபோகம், பொது சுகாதாரத்தை அரசியலின் பாதாளத்துக்கு தள்ளிவிட்டுள்ள ஒரு நேரத்தில், தடுப்பூசிகள், மருத்துவம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் ஈரான் ஒரு மகத்தான வெற்றியைப் பெற முடிந்தது.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கியதும், பல்வேறு நாடுகளும் தடுப்பூசி உற்பத்தியில் உயிர்வாழ்வதற்கும், வணிக நோக்கங்களுக்காகவும் போட்டி தொடங்கின. அதன்படி, ஆய்வுகள் அடிப்படையில் தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்த முறை, மருத்துவ மற்றும் சுகாதார சார்ந்த தயாரிப்புகளை விற்பனை செய்வதிலும் வாங்குவதிலும் வழக்கமான தொடர்புகளைப் பொருட்படுத்தாமல், நாடுகள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுப்பட்ட தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இதற்கிடையில், தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே, பல பணக்கார நாடுகள் தங்கள் தேவைகளுக்கும் மேலதிகமாக அவற்றை வாங்கின. நாட்டின் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, உலகின் 80 சதவீதத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை ஆறு செல்வந்த நாடுகள் வாங்கிக்கொண்டன, அமெரிக்கா போன்ற ஒரு நாடு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்று வாங்கி களஞ்சியப்படுத்திய தடுப்பூசிகள் 200 மில்லியன் அளவு காலாவதியாகின.

அமெரிக்க, பிரிட்டிஷ் தடுப்பூசிகளுக்கு ஈரானுக்கு தடை

ஜனவரி 8 ம் தேதி தனது உரையின் போது, இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செய்யத் அலி கமேனி ஈரானி விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசியை "பெருமைபடக்கூடிய சாதனையின் ஆதாரமாக" புகழ்ந்துரைத்தார், இந்த முன்னேற்றத்தை யாரும் மறுக்க முடியாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தடுப்பூசி ஆய்வுகளை  நம்பமுடியாதுள்ளது என்பதால் அவற்றை இறக்குமதி செய்வதையும் அவர் தடை செய்தார்.

ஈரானிய ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களுக்கு வழங்கி தங்கள் தடுப்பூசியை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளனர், மேலும் அவர்கள் இன்னும் சிறந்த மற்றும் பயனுள்ள தடுப்பூசியை வெகு சீக்கிரமாக உருவாக்குவர் என்று ஆயதுல்லா கமேனி நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தடுப்பூசிகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை நான் அதிகாரிகளிடம் கூறியுள்ளேன், இப்போது அதை பகிரங்கமாக சொல்கிறேன். அமெரிக்கர்களால் பயனளிக்கக்கூடிய ஒரு தடுப்பூசியை தயாரிக்க முடிந்திருந்தால், இந்த கொரோனா பேரழிவு தங்கள் நாட்டில் நிகழ்ந்திருக்காது.

அவர்களுக்கு ஒரு தடுப்பூசி தயாரிப்பது எப்படி என்று தெரிந்தால், அவர்களின் ஃபைஸர் நிறுவனத்தினால் ஒரு தடுப்பூசியை தயாரிக்க முடிந்திருந்தால், அவர்கள் அதை எப்படி எங்களுக்குத் தருவார்கள்? அவர்கள் அதை  தாங்களே பயன்படுத்திக் கொள்ளலாம், இதனால் அவர்களுக்குள் இத்தனை மரணங்கள் ஏற்பட்டிருக்காது மற்றும் பாதிக்கப்பட்ட பலர் இருந்திருக்க மாட்டார்கள், இங்கிலாந்திலும் இதே நிலைதான். எனவே, அவர்கள் நம்பகமானவர்கள் அல்ல. நான் அவர்களை உண்மையில் நம்பவில்லை,” என்று தலைவர் கூறினார்.

அமெரிக்க ஒடுக்குமுறை

சுகாதார அமைச்சர் சயீத் நாமகி, உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தி நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வரை, “பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்” என்று பிப்ரவரி மாதம், வலியுறுத்தினார்.

நீண்ட காலத்திற்கு முன்பே தடுப்பூசி போடத் தொடங்கியதாகக் கூறும் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் பிற நாடுகளின் தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. எந்தவொரு வெளிநாட்டு தடுப்பூசியையும் எங்கள் மக்கள் மீது மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்க நாங்கள் தயாரிக்கல்லை,” என்று நாமகி கூறினார்.

இதற்கிடையில், மற்றொரு முக்கியமான பிரச்சினை வெளிநாட்டு தடுப்பூசிகளை வாங்குவதற்கு நிதி, இது பெருந்தொகை பணம் தேவைப்படுவது மட்டுமல்லாமல், அமெரிக்க பொருளாதாரத் தடை காரணமாக தடுப்பூசி இறக்குமதியை முன்னெப்போதையும் விட கடினமாக்கியது.

வளரும் நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண உலக சுகாதார அமைப்பின் (WHO) அனுசரணையில் ஒரு வழிமுறை அமைக்கப்பட்டிருந்தாலும், கோவெக்ஸ் (COVAX) இதுவரை வல்லரசு நாடுகளின் நடவடிக்கைகள் காரணமாக கால அட்டவணையில் பின்தங்கியிருக்கிறது மற்றும் அதன் இலக்குகளை அடையத் தவறிவிட்டது.

உற்பத்தியாளர்கள் வாக்குறுதிகளை மீறுகிறார்கள்

இதற்கிடையில், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ஈரானுக்கு தடுப்பூசிகளை வழங்குவதாக பல வாக்குறுதிகளை அளித்திருந்தனர் மற்றும் பல ஒப்பந்தங்கள் நாட்டின் அதிகாரிகளால் கையெழுத்திடப்பட்டன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உற்பத்தியாளர்களால் இந்த துறையில் தங்கள் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை.

"தடுப்பூசி வாங்க இந்தியாவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம், முதல் கட்டத்தில், பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சினின் இரண்டு மில்லியன் டோஸை நாங்கள் வாங்கினோம்" என்று உணவு மற்றும் மருந்து நிர்வாக செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் கூறினார்.

இருப்பினும், 125,000 டோஸ் மட்டுமே எமது நாட்டிற்கு வழங்கப்பட்டது, மீதமுள்ளவை இந்திய நீதித்துறையின் உத்தரவின் பேரில், விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜூன் மாத இறுதிக்குள் ஈரானுக்கு 10 மில்லியன் டோஸ் தடுப்பூசி வழங்குவதாக சீனா உறுதியளித்தது. இருப்பினும், 10,000,000 தடுப்பூசியின் 3,650,000 மட்டுமே இதுவரை அனுப்பப்பட்டுள்ளன.

ஈரானுடனான அதன் ஆரம்ப ஒப்பந்தத்தில், ரஷ்யா இரண்டு மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை அனுப்புவதாக இருந்தது, மற்றொரு ஒப்பந்தத்தில், 60 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை விற்பனை செய்வதாக உறுதியளித்தது, ஆயினும் இதுவரை 920,000 டோஸ் தடுப்பூசிகளை மட்டுமே அனுப்பியுள்ளது,” என்று அவர் கவலைப்பட்டார்.

ஈரானில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 

இன்றுவரை, ஒரு ஈரானிய தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு உரிமம் கிடைத்துள்ளது, இது முதல் மாதத்தில் மூன்று மில்லியன் டோஸ் வரை உற்பத்தி செய்த COVIRAN BAREKAT எனப்படும் முதல் உள்நாட்டு தடுப்பூசி ஆகும், மேலும் இதனால் செப்டம்பர் இறுதிக்குள் 30 முதல் 50 மில்லியன் டோஸ்களைவழங்க முடியும். என்று ஜஹான்பூர் கூறினார்.


ஈரானின் பாஸ்டர் இன்ஸ்டிடியூட் (Pasteur Institute) உருவாக்கிய பாஸ்டர் கோவக் தடுப்பூசி (Pastu Covac vaccine) விரைவில் அவசரகால பயன்பாட்டு உரிமத்தைப் பெறும் மற்றும் முதல் மூன்று மாதங்களில் ஒரு மாதத்திற்கு ஒரு மில்லியன் டோஸையும், இரண்டாவது மூன்று மாதங்களில் ஒரு மாதத்திற்கு இரண்டு மில்லியன் டோஸையும், மூன்றாவது மூன்று மாதங்களில் மூன்று மில்லியன் டோஸ்களை தயாரித்து வழங்கும்.

கூடுதலாக, கோவ்பார்ஸ் ராசி(CovPars Razi), ஃபக்ரா (Fakhra) மற்றும் ஸ்பைகோஜென் (Spicogen) தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டிற்காக உரிமம் பெறலாம் மற்றும் அவற்றின் மருத்துவ சோதனை வெற்றிகரமாக இருந்தால் செப்டம்பர் பிற்பகுதியில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும்.

கோவிரான் தடுப்பூசி வாங்க தென் அமெரிக்கா, ஆபிரிக்க நாடுகள், பல அண்டை மற்றும் இரண்டு ஐரோப்பிய நாடுகள் கேட்டுள்ளதாக தடுப்பூசி ஆராய்ச்சி குழுவின் இயக்குனர் ஹசன் ஜலிலி ஜூன் 8 அன்று தெரிவித்தார்.

இருப்பினும், தடுப்பூசியை எம்மால் ஏற்றுமதி செய்ய முடியும்  என்றாலும், சுகாதார அமைச்சினால் பின்பற்றப்பட்ட கொள்கையின் அடிப்படையில், உள்நாட்டுத் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும் வரை எந்தவொரு தடுப்பூசியும் ஏற்றுமதி செய்யப்படாது என்று அவர் கூறினார்.

நிறவெறியை முறியடிக்கும் ஈரான்

ஈரான் இப்போது உள்நாட்டு தடுப்பூசிகளின் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கிறது. பல நாடுகள் ஈரானின் திறனைப் பயன்படுத்தி வரும் வாரங்களில் அறிவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் அல்லது தங்கள் நாடுகளில் கூட்டாக தடுப்பூசிகளை உற்பத்தி செய்யலாம் என்று ஜஹான்பூர் கூறினார்.

இந்த நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையிலும் மற்றும் உலகளாவிய சுகாதார அணுகுமுறையுடன் ஈரான் இந்த வசதிகளை வழங்க முயற்சிக்கிறது, மேலும் இந்த நாடுகளில் சில தொழில்நுட்பங்களை பெறுவதற்கும் தயாரிப்புகளை இணை உற்பத்தி செய்வதற்கும் ஈரானிய தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றன,

நிச்சயமாக, மருத்துவம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் இன்று தடுப்பூசிகள் துறையில் உற்பத்தி செய்வதில் உள்ள நெருக்கடி ஆகியன அதிர்ஷ்டவசமாக, உள்நாட்டு திறன்களை பயன்படுத்திக் கொள்ள ஈரானினால் முடிந்தது.

இன்று, கொரோனா வைரஸ் தடுப்பூசியின் உற்பத்தியாளராக, நாங்கள் நிச்சயமாக தடுப்பூசி ஏகபோகம் மற்றும் நிறவெறியைத் தடுக்க முயற்சிக்கிறோம். இந்த தொழில்நுட்ப அறிவை மனிதாபிமான முன்னோக்குடன், மற்ற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள ஈரான் தயாராக உள்ளது.

https://www.tehrantimes.com/news/462303/Iran-stands-tall-against-COVID-19-vaccine-apartheid 

Sunday, June 20, 2021

செய்யித் இப்ராஹிம் ரயீஸி - ஈரான் இஸ்லாமிய குடியரசின் புதிய ஜனாதிபதி

 Ebrahim Raisi - President elect of Iran 

செய்யித் இப்ராஹிம் ரயீஸி-சதாதி 14 1960 டிசம்பர் பிறந்தார், பொதுவாக இப்ராஹிம் ரயீஸி என்று அழைக்கப்படும் இவர் ஈரானின் தலைமை நீதிபதி பதவி உட்பட பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

ஈரானின் நீதித்துறை அமைப்பில் சட்டமா அதிபர்  (2014–2016), துணை தலைமை நீதிபதி (2004–2014) போன்ற பல பதவிகளில் பணியாற்றியுள்ளார்.


அவர் நிபுணர்களின் மன்ற உறுப்பினராக

2017 இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 38.3% வாக்குகளை பெற்றார், 57% வாக்குகளை பெற்றிருந்த தற்போதைய ஜனாதிபதி ஹசன் ரூஹானிக்கு அடுத்த அதிகப்படியான அதிக வாக்குகளை பெற்றிருந்தார். கடந்த 18ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளை பெற்று அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது பதவி ஏற்பு வைபவம் ஆகஸ்ட் மாதம் முதலாவது வாரத்தில் இடம்பெறும்.

இப்ராஹிம் ரயீஸி 1960 டிசம்பர் 14 அன்று மஷ்ஹத்தின் நோர்கான் மாவட்டத்தில் ஒரு சன்மார்க்க குடும்பத்தில் பிறந்தார். இப்போது அவருக்கு வயது 60 ஆகும். இவரின் 5வது வயதில் அவரது தந்தையான சையத் ஹாஜியை இழந்தார்.

 

மாணவ பருவம்

அவர் 15 வயதில் கோம் நகரின் புகழ்பெற்ற சன்மார்க்க கல்விக்கூடத்தில் படிக்கத் தொடங்கினார். பின்னர் அவர் ஆயதுல்லா செய்யத் முஹம்மது மூசவி நெசாத் கல்விக்கூடத்தில் கற்கும் அதேவேளை மற்ற மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதிலும் ஈடுபட்டார். 1976 ஆம் ஆண்டில், ஆயதுல்லா புரூஜெதியின் கல்விக்கூடத்தில் உயர் படிப்பைத் தொடர கோமுக்குச் சென்றார். தலைசிறந்த உலமாக்களான  சையத் ஹொசைன் புரூஜெதி, முர்த்தஸா முதஹ்ஹரி, அபுல்காஸிம் கஸாலி, ஹொசைன் நூரி ஹமதானி, அலி மெஷ்கினி மற்றும் முர்த்தஸா பஸான்திதே ஆகியோரின் மாணவராக இருந்தார்.


சட்டத்துறையில்

1981 இல், அவர் கராஜின் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். பின்னர், அவர் ஹமதானின் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டு இரு பதவிகளையும் ஒன்றாக வகித்தார். அவர் ஒரே நேரத்தில் 300 கி.மீ தூரத்தில் உள்ள இரண்டு நகரங்களில் தீவிரமாக செயல்பட்டார்.

 

தெஹ்ரான் துணை வழக்குரைஞராக

அவர் 1985 இல் தெஹ்ரானின் துணை வழக்குரைஞராக நியமிக்கப்பட்டு தலைநகருக்குச் சென்றார்.


உயர் பதவிகள்

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் மறைவுக்குப் பிறகு, அலி கமேனி அவர்கள் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரயீஸி தெஹ்ரான் வழக்குரைஞராக, புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நீதிபதி முகமது யஸ்தி அவர்களால் நியமிக்கப்பட்டார். 1989 முதல் 1994 வரை ஐந்து ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். 1994 இல், பொது ஆய்வு அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2004 முதல் 2014 வரை, ரயீஸி ஈரானின் முதல் துணை தலைமை நீதிபதியாக பணியாற்றினார், தலைமை நீதிபதி மஹ்மூத் ஹஷேமி ஷாஹ்ரூதியினால் நியமிக்கப்பட்டார். தலைமை நீதிபதியாக சாதேக் லரிஜானியின் முதல் பதவியில் அவர் தனது பதவியை தொடர்ந்தார். பின்னர் அவர் 2014 இல் ஈரானின் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டார், அவர் அஸ்தான் குத்ஸ் ரஸாவியின் தலைவர் பதவியை பொறுப்பேதார்.ற்கும் வரை (2016 வரை) அவர் அப்பதவியை தொடர்ந்து வகித்தார்.


பொருளாதாரக்கொள்கை

2017 ஆம் ஆண்டில் ரயீஸி "நாட்டில் வறுமை மற்றும் பற்றாக்குறையை ஒழிப்பதற்கான ஒரே வழியாக சுய உற்பத்தி பொருளாதாரத்தை செயல்படுத்துவதையே நான் காண்கிறேன்" என்று அறிவித்தார். வணிக ரீதியான விற்பனையை விட விவசாயத் துறையின் வளர்ச்சியை அவர் ஆதரிக்கிறார்,


வெளியுறவு கொள்கை

தனது வெளியுறவுக் கொள்கை குறித்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர், “இஸ்ரேலைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுடனும் உறவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும்” என்றார்.


சொந்த வாழ்க்கை

ரயீஸி மஷ்ஹத் வெள்ளிக்கிழமை ஜும்மா இமாம், அஹ்மத் ஆலமுல்ஹுதாவின் மகள் ஜெமீலா ஆலமுல்ஹதாவை மணந்தார். ஜெமீலா தெஹ்ரானின் ஷஹீத் பெஹெஸ்த்தி பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகவும், பல்கலைக்கழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகள் உள்ளனர்.

Thursday, June 17, 2021

ஈரானிய தேர்தல்களுக்கு எதிரான எதிரிகளின் சதிகளை முறியடிப்போம்

Let us defeat enemy's plots against Iranian elections


2021 ஜூன் 18 அன்று ஈரானில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுகிறது. இது ஈரானில் பதின்மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலாகும். இம்முறை 7 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர். (போட்டியில் இருந்து விலகுவதாக இரண்டு அபேட்சகர்கள் இப்போது அறிவித்துள்ளனர்.) ஈரானின் சுமார் 83 மில்லியன் மக்களில் 64% வீதமானோர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

ஈரானில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜானதிபதி தேர்தல் இடம்பெறும். ஈரானிய மக்களால் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தில் இருந்து உரிய நேரத்தில் தேர்தல் தவறாது இடம்பெற்று வந்துள்ளது என்பது, இந்தப் பிராந்தியத்தியத்தை பொறுத்தவரை, குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஈரானிய அரசியலமைப்பின் படி, தொடர்ச்சியாக ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியாது.

வெள்ளியன்று இடம்பெறும் தேர்தல் தொடர்பாக உரையாற்றிய இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயத்துல்லா  சையத் அலி கமேனி ஜனாதிபதித் தேர்தலை "தீர்க்கமான ஒன்று" என்று விவரித்து, ஈரானியர்களுக்கு அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தேர்தல்களுக்குச் சென்று வாக்களிப்பதாகும் என்றும் கூறினார்.

"இஸ்லாத்தினதும் ஈரானினதும் எதிரிகள் நீங்கள் தேர்தல்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு எதிரானவர்கள். எனவே, நாம் அதனை முறியடிக்க வேண்டும். தேர்தல்கள் ஒரு நல்லொழுக்கச் செயல், ஒரு நல்ல விடயத்தைச் செய்ய விரும்புவோம், எமது தேர்தல்கள் நீதியான செயல்” என்று தலைவர் ஒரு தொலைக்காட்சி உரையில் தேச மக்களிடம் தெரிவித்தார்.

“மக்கள் ஒன்றுபட்டு இருப்பதை தேர்தல்கள் காட்டுகின்றன. மக்கள் இருப்பு என்பது இஸ்லாமிய குடியரசின் அமைப்புக்கு மக்களின் ஆதரவு உள்ளது என்பதாகும். இது அமைப்பு மற்றும் நாட்டின் அதிகாரத்தில் ஒரு தனித்துவமான விளைவைக் கொண்டுள்ளது.”


அமெரிக்க மற்றும் ஆங்கில ஊடகங்கள், அவர்களின் “கூலிப்படையினருடன்” சேர்ந்து, ஜனாதிபதித் தேர்தலில் பங்கேற்பாளர்களை தடுக்க முயற்சிப்பதன் மூலம் மக்களுக்கும் ஸ்தாபனத்திற்கும் இடையில் ஒரு பிளவை ஏற்படுத்த முயல்வதாக தலைவர் கூறினார் “ஏனெனில் தேர்தல்களில் இருந்து விலகி இருப்பது அரசு என்ற நிறுவனத்தில் இருந்து விலகியிருப்பதற்கு சமம்”.

"ஆனால் பெரும்பான்மையான மக்கள் - இங்கே, நிச்சயமாக, பத்திரிகைகள் மற்றும் சைபர்ஸ்பேஸில் எதிரிகளின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்லும் சில குழுக்களுடன் எங்களிடம் எதுவும் இல்லை - எதிரி எதை விரும்பினாலும், மக்கள் அதற்கு நேர்மாறாகவே செய்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன," ஆயதுல்லா கமேனி கூறினார்.

அரசியல் மற்றும் அரசியல் சாய்வுகளுக்கு அப்பால் தேர்தல்களைப் பார்க்க வேண்டும் என்று தலைவர் கூறினார். ஈரானின் எதிரிகள், தேர்தல்களில் மக்கள் பங்கேற்பதை ஊக்கமிழக்கச் செய்ய முற்படுகிறார்கள், ஏனெனில் ஈரான் எனும் ஸ்தாபனத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்றால், அவர்களால் நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

தேர்தல்களில் குறைந்த பங்களிப்பு, நாட்டின் எதிரிகளால் ஈரானுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வாய்ப்பை வழங்கும் என்றும் தலைவர் கூறினார்.

இஸ்லாமிய குடியரசில் தேர்தல்கள் எப்போதுமே சிறப்பானவை என்று ஆயதுல்லா கமேனி கூறினார், இதற்கு சான்றுகள் சில நேரங்களில் வேறுபட்ட அரசியல் கண்ணோட்டங்களின் தலைவர்கள் கடந்த காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதே.

மூன்று ஜனாதிபதி தேர்தல் விவாதங்களில் போட்டியாளர்களின் அறிவுசார் மோதல்களை மேற்கோளிட்டு காட்டி ஜூன் 18 தேர்தல் போட்டி இல்லை என்ற கருத்தையும் தலைவர் நிராகரித்தார்.

சவுதி அரேபியாவின் செயலுக்கான வெளிப்படையான கண்டனத்தில், ஆயதுல்லா கமேனி சில நாடுகளில் “ஒரு பழப் பெட்டியிலிருந்து ஒரு வாக்குப் பெட்டியை பிரித்தறிய முடியாத படி மக்களை வைத்துள்ள ஒரு பழங்குடி அரசை நடத்துகிறவர்கள் 24/7 தொலைக்காட்சி நெட்வொர்க்குகளைத் தொடங்கி ஈரானில் தேர்தல்கள் “ஜனநாயகமற்றவை” என்று பிரச்சாரம் செய்கிறார்கள்”.

சில ஈரானியர்கள் தேர்தலில் பங்கேற்பதில் தயக்கம் காட்டுகிறார்கள், ஏனெனில் அவர்களின் பொருளாதார பிரச்சினைகள் கடந்த நிர்வாகங்களால் தீர்க்கப்படவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

"பொருளாதார நிலைமை குறித்த மக்களின் ஆதங்கத்துடன் நான் உடன்படுகிறேன், ஆனால் தேர்தலில் கலந்துகொள்ளாதிருப்பதற்கு அது காரணமாக்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரச்சினைகளுக்கு தீர்வு வாக்குப் பெட்டிகளில் இருக்க வேண்டும், ”என்று ஆயதுல்லா கமேனி கூறினார்.

"இலைஞர்கள் எப்போதும் முன்னணியில் இருப்பவர், மற்றவர்களை முன்னோக்கி செலுத்துகின்றவர்கள்" ஜூன் 18 தேர்தலில் மக்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க ஈரானிய இளைஞர்களை தலைவர் கேட்டுக்கொண்டார்.

COVID-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் வாக்காளர்களின் பாதுகாப்பு சமரசம் செய்யப்படமாட்டாது என்பதையும், வாக்குச் சீட்டுகள் சரியான நேரத்தில் வரும் என்பதையும் உறுதிப்படுத்துங்கள் என்றும் வெளிநாடுகளில் உள்ள ஈரானியர்களுக்கு வாக்குப்பதிவு முறையாக நடத்தப்படும் என்பதை உருத்திப்படுத்துங்கள் என்றும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். எந்த மீறலும் எதிர்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.