Monday, April 20, 2020

கொரோனாவின் போது ரமழானில் நோன்பு இருப்பது குறித்து இமாம் ஆயத்துல்லாஹ் கமேனி அவர்களின் அவர்களின் தீர்ப்பு.


Imam Khamenei’s decree on fasting in Ramadan during Corona


மத தீர்ப்புகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த இமாம் ஆயத்துல்லாஹ் கமேனி அவர்களின் அலுவலகம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது தொடர்பான தீர்ப்பை வெளியிட்டுள்ளது. பின்வருவது கேள்வியும் அதற்கான பதிலும்:

இப்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவலாகிவிட்டதால், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் விதிகள் என்ன?

நோன்பு என்பது ஒரு மதக் கடமையாகும், உண்மையில் இறைவன் தம்முடைய அடியார்களுக்கு வழங்கியுள்ள சிறப்பு அருட்கொடையும்  மனிதகுலத்திற்கான பரிபூரணத்திற்கும் ஆன்மீக மேம்பாட்டிற்குமான ஓர் அடித்தளமாகும். முந்தைய சமுதாயங்களுக்கும் இது கடமையாக்கப்பட்ட இருந்தது.

நோன்பின் விளைவுகளில் சில: ஆன்மீகம் மற்றும் உள் தூய்மை நிலையைப் பெறுதல், தனிநபர் மற்றும் சமூக இறையச்சம் அதிகரித்தல் மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது ஒருவரின் மன உறுதியையும் பொறுமையையும் வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும். மக்களின் ஆரோக்கியத்தில் அது வகிக்கும் பங்கு மிகத்தெளிவாகத் தெரிகிறது, மேலும் நோன்பு நோற்பவர்களுக்கு இறைவன் ஒரு பெரிய வெகுமதியை அளித்துள்ளான்.

நோன்பு என்பது ஒரு மதக் கடமை மற்றும் அது இஸ்லாமிய சட்டத்தில் ஒரு தூண். ஆகவே, பின்வரும் காரணங்களுக்காக அன்றி, ரமழான் மாதத்தில் புனித நோன்பு நோற்பதை விடுதல் அனுமதிக்கப்படடவில்லை:

1. நோயை ஏற்படும்

2. நோயை தீவிரப்படுத்தும்

3. நோயை நீடிக்கவும் அல்லது ஒருவரின் குணமடையும் காலத்தை தாமதப்படுத்தும்

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒருவர் நோன்பு நோற்றல் கூடாது, ஆனால் தவறவிட்ட நோன்பை பிற்காலத்தில் ஈடுசெய்வது அவசியமாகும்.

வெளிப்படையாக, மதத்தை பின்பற்றும் ஒரு மருத்துவரின்  பரிந்துரையின் அடிப்படையில் இந்த நம்பிக்கை பெறப்பட்டால் போதுமானது.

ஆகையால், ஒரு நபருக்கு மேற்கூறிய ஏதேனும் சிரமங்களுக்கு ஆளாக நேரிடும் என்ற நியாயமான பயம் இருந்தால், அவர்கள் நோன்பிருக்கும் அவசியம் இல்லை, ஆனால் பிற்காலத்தில் தவறவிட்ட இந்த நோன்புகளை ஈடுசெய்வது அவசியமாகும்.
ஏப்ரல் 19, 2020


No comments:

Post a Comment