Friday, October 11, 2024

உலகப்புகழ் பெற்ற, தலைசிறந்த பாரசீக கவிஞர்கள் வரிசையில் ஹாபீஸும் ஒருவர்

Hafez is one of the world famous Persian poets

ஈரானின் கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தின் தனித்துவமான முத்தான ஹாஃபெஸ் ஷிராசி, 14 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பாரசீக கவிஞர் ஆவார், அவர் உலகளவில் கொண்டாடப்படுகிறார். அக்டோபர் 11 பாரசீக நாட்காட்டியில் தேசிய ஹஃபீஸ் தினமாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாரசீகக் கவிஞர் ஹஃபீஸ் ஈரானில் கௌரவிக்கப்படும் நாள் இது. ஒவ்வொரு ஆண்டும் ஹஃபீஸ் நினைவு வாரம் ஹஃபீஸ் தினத்திற்கு முந்தைய வாரத்தில் நடத்தப்படுகிறது.

ஜலாலுத்தீன் ரூமிபிர்தவ்ஸி'அதிஉமர் கையாம் போன்ற உலகப்புகழ் பெற்றதலைசிறந்த பாரசீக கவிஞர்கள் வரிசையில் ஹாபீஸும் ஒருவர்.

க்வாஜா ஷம்சுத்தீன் முஹம்மது ஹாபிஸ் ஷிராஸிவளமிக்க பாரசீக இலக்கியத்தின் பிரகாசமான நட்சத்திரமாக ஹி.726 (1315)ல் ஷிராஸில் பிறந்தார்.

சிறுவயதிலேயே புனித குர்'ஆனை மனனம் செய்ததன் காரணமாக அவர் 'ஹாபிஸ்என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இவருக்கு இப்பெயரே நிலைத்திருக்கலாயிற்று.

ஹாபிஸ் புனித குர்ஆனை முழுமையாக மனனம் செய்தது மட்டுமல்லாமல் குர்'ஆன் ஓதும் அனுமதிக்கப்பட்ட 7 முறைகளில் இனிமைமையாக ஓதுவதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

பாரசீக இலக்கியத்திற்கும் ஈரானிய கலாச்சாரத்துக்கும் அவரது 77 ஆண்டுகால பங்களிப்பு அளப்பரியது. அவரது ஆத்மஞான கவிதைகளும் புரட்சிகர சிந்தனையைத் தூண்டும் கவி வரிகளும் இன்றும் உலகளவில் புகழ்ந்துரைக்கப்படுகின்றன.

அவர் உயிர்வாழும் காலத்தியிலேயே உலகளவில் போற்றப்பட்ட மாபெரும் சிந்தனையாளர் ஆவார். பெரியதாயினும் சொல்லவேண்டிய விடயத்தை ஒரே வரியில் சொல்லும் அவரது அலாதியான ஆற்றல் பிரமிக்கத்தக்கது.

அவரது அநேகமான கவிதைகளின் கருப்பொருள்கள் மோசடிக்கும் நயவஞ்சகத்துக்கும் எதிரான விழிப்பூட்டலை கொண்டதாகவும், அன்பையும் மனிதாபிமானத்தையும் வலியுறுத்துவதாகவுமே இருந்தது. ஜெர்மனியின் கோதே மற்றும் இந்தியாவின் ரவீந்த்ரநாத் தாகூர் போன்றோர் அவரின் கவிதையின்பால் கவரப்பட்டவர்களாகும்.

ஹாபிஸ் கருத்தாழமிக்க ஆத்மஞான கவிதை வரிகளைஆற்றல் மிக்க மொழிநடையில் அற்புதமாக உருவாக்கினார். இன்றும் அவை சிறந்த இலக்கிய படைப்புகளாக உலகளவில் போற்றப்படுகின்றன. அவரது கருத்துகள் ஏனைய சமகால தத்துவவாதிகள்சிந்தனையாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோரைக் மிகைத்தருந்தன.

அவரது அற்புதமான கவிதைகள், அவருடைய காலத்தின் கவிதை விதிமுறைகளுக்கு மாறுபட்டதாக இருந்ததாயினும் பாரசீக இலக்கியத்திற்கு மதிப்புமிக்க, தனித்துவமான பொக்கிஷத்தை வழங்கிற்று. இது பாரசீக கலாச்சாரத்திற்கான ஒரு கௌரவமாகும்.

புகழின் உச்சியில் இருந்த அவர் தனது அறிவுக்கு கருவூலமாய் அமைந்து புனித குர்'ஆனே என்று கூறுவார்.

காதலரின் துயரத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்ட அரிய கவிஞர்களில் ஒருவரான ஹாபிஸ், 'எரியும் பட்டாம்பூச்சிககளின் உணர்வு', 'ஒரு மெழுகுவர்த்தியின் பெருமூச்சு' மற்றும் 'கோகிலத்தின் காதல்' போன்ற தனித்துவமான இலக்கியங்களின் ஊடாக அவரது சொல்லாட்சி சமுத்திரத்தின் ஆழத்தில் எம்மை மூழ்கடிக்கிறார். அவரது சொற்பிரயோகங்கள், உருவகங்கள், உவமைகள் மற்றும் மொழிவழக்குகள் எதனையும், முன் அல்லது பின் வந்த எவராலும் இன்றளவிலும் மிகைக்க முடியவில்லை.

அவரது மிகப் பெரிய கவிதைத் தொகுப்பிலிருந்து 400-க்கும் மேற்பட்ட நன்கு அறியப்பட்ட வசனங்கள் மற்றும் பாடல் வரிகள் இதுவரை ஆயிரக்கணக்கான முறை எழுதப்பட்டுஅச்சிடப்பட்டுஉலகின் பிரபலமான அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது விசேடமாகும்.

ஓரியண்டல் ஆய்வுகளை ஒரு கல்வித் துறையாக நிறுவிய பிரபல ஓரியண்டலிஸ்ட், ஜோசப் வான் ஹேமர் பர்க்ஸ்டால் 1846 இல் திவான் ஹபீஸை மொழிபெயர்த்தார்.

ஹஃபீஸின் கவிதைகள் புகழ்பெற்ற ஜெர்மன் தத்துவஞானியான கொதே(Goethe) யை "செயிண்ட் ஹாஃபிஸ்" என்றும் "தெய்வீக நண்பர்" என்றும் அழைக்க வழிவகுத்தது.

கொதேயைப் பொறுத்தவரை, பாரசீக கவிதை மொழி ஹபீஸின் வசனங்களில் உச்சத்தை எட்டியது, அதில் அவர் தனது வாழ்நாள் முழுவதும் தேடிக்கொண்டிருந்த சிந்தனைகளின் மகத்துவத்தையும் உலகின் பார்வையையும் அவரால் கண்டுபிடிக்க முடிந்தது.

கொதேயின் மேற்கு-கிழக்கு திவானால் ஈர்க்கப்பட்டு, பிரெடெரிக் ரக்கெர்ட் மற்றும் ஆகஸ்ட் வான் பிளேட்டன் உட்பட பல ஜெர்மன் கவிஞர்கள், கசலின் மாதிரியில் கவிதைகளை இயற்றினர்.

ஹஃபீஸால் கவரப்பட்ட ஜெர்மானிய சிந்தனையாளர்களில் முக்கியமானவர் பிரெடெரிக் நீட்ஷே (Friedrich Nietzsche) ஆவார், அவர் தனது முக்கிய படைப்புகளில் மீண்டும் மீண்டும் அவரைப் பற்றி குறிப்பிடுகிறார்.

ஹஃபீஸுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கவிதையில், பாரசீக கவிஞரின் நுண்ணறிவு மற்றும் அவரது கவிதைகளை நீட்சே மகிமைப்படுத்துகிறார்.

1315 இல் ஈரானின் ஷிராஸில் பிறந்த ஹாபிஸ் ஹிஜ்ரி 803 (1390)ல் உயிர்நீத்தார். அவரது உடல் ஷீராஸ் புறநகர் பகுதியில் உள்ள முஸல்லா (தொழுகை மைதானத்திற்கு) அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது ஸியாரத்தை தரிசிக்க ஆத்மஞானத்தில் ஆர்வமுடையோரும் கவிதை பிரியர்களும் உண்மை மற்றும் மனிதநேய ஆர்வலர்களும் உலகின் பல பாகங்களில் இருந்தும் இன்றளவிலும் விஜயம் செய்கின்றனர்.

ஹாபிஸின் மரபு கவிதைகள் சுமார் 4000-5000 வசனங்களைக் கொண்டவையாகும்அவற்றில் 400-500 கவிதைகளும்பல நீளமான இரங்கல் பாக்களும்குறுகிய கஸல் வரிகளும் அடங்கும். இவற்றில் சில 9ம் நூற்றாண்டு கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இறை கருணை மற்றும் குர்ஆனின் உள்ளார்ந்த செய்திகளுக்கு இட்டுச்செல்லும் அவருடைய பாடல் வரிகள் பாரசீக மொழி பேசுபவர்கள்ஆர்வலர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரால் எப்போதும் மதிக்கப்படுகின்றன. இந்த மாபெரும் கவிஞருக்கு மரியாதை செலுத்துமுகமாக கலை பொக்கிஷமான அவரது 'திவான்' ஒவ்வொரு பாரசீகர் வீட்டிலும் பாதுகாக்கப்படுகிறது.

தாஹா முஸம்மில்

No comments:

Post a Comment