Thursday, September 26, 2024

ஊழல் நிறைந்த உலக ஒழுங்கிற்கு சவால் விடும் இஸ்லாமியக் குடியரசு

 Palestinian Resistance and Hezbollah are victorious

ஆயிரக்கணக்கான முன்னாள் வீரர்கள் மற்றும் புனித பாதுகாப்பு மற்றும் எதிர்ப்பின் செயல்பாட்டில் உள்ள உறுப்பினர்களுடனான ஒரு சந்திப்பில், இஸ்லாமிய புரட்சியின் தலைவர் இமாம் காமனேயி, திணிக்கப்பட்ட போர் தொடங்கியதன் பின்னணியில் உள்ள காரணங்களை கோடிட்டுக் காட்டினார். இஸ்லாமிய குடியரசின் "புதிய செய்தி" மற்றும் "ஈர்ப்புகளின்" முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், இது ஊழல் மற்றும் பொய்யான உலக ஒழுங்குடன் அப்பட்டமாக முரண்படுகிறது.

புனித பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு 25.09.2024 புதன்கிழமை இமாம் கொமெய்னி ஹுசைனிய்யாவில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, இமாம் காமனேயி "புனித பாதுகாப்பு, தாயகத்தின் மதிப்புமிக்க பாதுகாப்பாக இருப்பதோடு, மதத்தின் பாதுகாப்பு மற்றும் இறைவனின் பாதையில் போராடுவதும் ஆகும். இது இஸ்லாமுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது, ஈரானிய தேசத்தை கௌரவித்துள்ளது, நாடு முழுவதும் ஆன்மீக உணர்வை வளர்த்துள்ளது." என்று கூறினார்.

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் தற்போதைய நிகழ்வுகளை புனித பாதுகாப்பு சகாப்தத்தின் நிகழ்வுகளுக்கு ஒத்ததாக விவரித்தார், அவை "இறைவனின் பாதையில் ஜிஹாத்" வடிவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதை வலியுறுத்தினார்.

பாலஸ்தீனம், ஒரு இஸ்லாமிய நாடு, உலகின் மிகவும் தீய காஃபிர்களால் அபகரிக்கப்பட்டுவிட்டது என்று அவர் கூறினார்.

"பாலஸ்தீனம் மற்றும் அல்-அக்ஸா மசூதியை முஸ்லிம்கள் மற்றும் அதன் உண்மையான உரிமையாளர்கள் மீட்டெடுக்க முயற்சிப்பதும் அதற்காக உதவுவதும் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்" என்று அவர் வலியுறுத்தினார்.

"காஸாவுக்காக எழுந்து நின்று, இந்த கசப்பான நிகழ்வுகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, இறைவனின் பாதையில் போராடுவதில் ஈடுபட்டுள்ளது" என்று இமாம் கூறினார்.

தற்போதைய போருக்கும் (இஸ்லாமிய குடியரசின் மீது) எட்டு ஆண்டுகளாக திணிக்கப்பட்ட போருக்கும் இடையிலான ஒற்றுமைகளை சுட்டிக்காட்டிய தலைவர், "இந்த போரில், காஃபிர்கள் மற்றும் தீய எதிரிகள் சிறந்த வளங்களைக் கொண்டுள்ளனர். அமெரிக்கா அவர்கள் பின்னால் உள்ளது. அமெரிக்கர்கள் தாங்கள் சம்பந்தப்படவில்லை என்றும் விஷயங்களைப் பற்றி தமக்குத் தெரியாது என்றும் கூறுகின்றனர், இது உண்மையல்ல. அவர்கள் இதனை நன்கு அறிவார்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டும் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு சியோனிச ஆட்சியின் வெற்றியும் அவசியப்படுகிறது."

"வரவிருக்கும் (அமெரிக்க) தேர்தல்கள் காரணமாக, தற்போதைய அமெரிக்க நிர்வாகம் சியோனிச ஆட்சியை ஆதரித்தது மற்றும் அது வெற்றியை அடைய உதவியது என்பதை நிரூபிக்கும் தேவை அவர்களுக்கு உள்ளது. எனினும், அவர்களுக்கும் முஸ்லிம்களின் வாக்குகளும் தேவைப்படுவதால், அவர்கள் (இந்த போரில்) சம்பந்தப்படாதது போல் நடிக்கிறார்கள்.

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் சியோனிச எதிரிக்கு கணிசமான நிதி ஆதாரங்கள், ஆயுதங்கள் மற்றும் உலகளாவிய பிரச்சாரத்தை அவர்கள் வழங்கிவருவதை சுட்டிக்காட்டினார். "விசுவாசிகள் மற்றும் முஜா-ஹிதீன்களின் உபகரணங்கள் மற்றும் வளங்கள் எதிர் தரப்பினரிடமும் உள்ளன என்பது உண்மையே. ஆயினும்கூட, இறைவனின் பாதையில் போராடுபவர்களுக்கு, அதாவது பாலஸ்தீனிய எதிர்ப்பு மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு நிச்சயம் வெற்றி உள்ளது" என்று அவர் கூறினார்,

இமாம் காமனேயி எதிர்ப்பு முன்னணியின் வெற்றிகளுக்கு சியோனிச ஆட்சியால் இழைக்கப்பட்ட குற்றங்களும் காரணம் என்று கூறினார், அவற்றில் அப்பாவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டது, பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான குண்டுவீச்சுக்களும் அடங்கும். இவற்றை சியோனிச ஆட்சி காஸா, மேற்குக் கரை அல்லது லெபனானில் போராளிகளை தோற்கடிக்கும் திறன் என்று கூறிக்கொண்டு இருக்கிறது. அவ்வாறான மேலாதிக்க போலித் தோற்றத்தை காட்டும் வழிவகையாக இத்தகைய கொடூரமான செயல்களில் இஸ்லாமிய போராளி அமைப்புகள் ஈடுபடாது என்று அவர் வலியுறுத்தினார்.

இஸ்லாமிய படைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களும் லெபனானின் ஹிஸ்புல்லாவின் திறமையான மற்றும் மதிப்புமிக்க தலைவர்களின் உயிர்த்தியாகமும் வீரமிக்க இந்த குழுவிற்கு ஒரு இழப்பு அல்ல "இந்த இழப்புக்கள் ஹிஸ்புல்லாஹ்வை ஒருபோதும் மண்டியிட வைக்காது, ஏனெனில் அதன் அமைப்பு அவ்வாறானது, மேலும் அவர்களது இராணுவ வலிமை, அத்துடன் அதன் அதிகாரம் இவற்றைவிட மிக உறுதியானது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"இன்று வரை, எதிர்ப்பு முன்னணி வெற்றி பெற்றுள்ளது, அல்லாஹ்வின் கிருபையால், இந்த போரில் இறுதி வெற்றி எதிர்ப்பு முன்னணிக்கு சொந்தமாகும்." என்று இஸ்லாமிய புரட்சியின் தலைவர் வலியுறுத்தினார்,

இமாம் காமனேயி தனது உரையின் இன்னோர் இடத்தில், 1980 இல் ஈரானிய தேசத்திற்கு எதிரான சதாம் ஹுசைனின் போரின் பின்னணியில் உள்ள உந்துதல்களை விரிவாக விளக்கினார். "ஈரானின் எல்லைகள் மீதான தாக்குதலுக்கான உத்வேகம் சதாம் ஹுசைன் மற்றும் பாத் கட்சியுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை, மாறாக, அந்த நேரத்தில் உலக ஒழுங்கின் தலைவர்கள், அதாவது அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், மற்றும் அவர்களின் கூட்டாளிகளுடன் சேர்ந்து, படையெடுப்புக்கு வலுவான உந்துதல்களை வழங்கியிருந்தன," என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னோடியில்லாத பிரபலமான ஈரானியப் புரட்சியின் மீது வல்லரசுகளின் விரோதப் போக்கை அதன் புதிய சித்தாந்தம் மற்றும் செய்தியின் "தாங்க முடியாத" தன்மைக்கு அவர் காரணம் என்று கூறினார். "இஸ்லாமியப் புரட்சி என்பது உலகில் நிலவும் பொய்யான மற்றும் அழிவுகரமான ஒழுங்கிற்கும் ஏகாதிபத்திய அமைப்பிற்கும் எதிரான ஒரு தெளிவான குரல் என்ற உண்மையிலிருந்து அவர்களின் பகைமை உருவானது, இது உலகை ஒடுக்குபவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் என்று பிரித்து, ஒடுக்குபவர்களின் கலாச்சாரத்தையும் கருத்துக்களையும் பிற நாடுகளின் மீது திணிக்கிறது."

இஸ்லாமியப் புரட்சியின் புதிய செய்தியை ஏற்க வல்லரசுகளின் விருப்பமின்மையை எடுத்துக்காட்டி - நாடுகள் முழுவதும் பரவலான ஈர்ப்புக்கான சாத்தியக்கூறுகளைக் புரட்சி கொண்டிருந்தது - இதன் காரணமாக "இந்த நாடுகள் ஈரான் மீது தாக்குதலை நடத்த எந்த வாய்ப்பையும் பயன்படுத்த தயாராக இருந்தன. அதே நேரத்தில், ஒரு அதிகார வெறியராக, பேராசை, சண்டித்தனம், அடக்குமுறை மற்றும் பொறுப்பற்ற நபராக இருந்த சதாம், வல்லாதிக்க சக்திகளுக்கு இந்த வாய்ப்பை அளித்து, அவர்களைத் தூண்டி, ஈரானுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கினார் என்று தலைவர் குறிப்பிட்டார்.

இன்று, பல்வேறு துறைகளில் ஈரானிய தேசத்தின் உறுதியான மற்றும் செயலூக்கமான பங்கேற்பு காரணமாக, எந்தவொரு எதிரியும் ஈரானின் எல்லைகளைத் தாக்கத் துணியவில்லை என்று இமாம் கமேனி வலியுறுத்தினார். "இன்று, அவர்கள் வேறு வடிவத்தில் குறும்புத்தனம் மற்றும் விரோதத்தில் ஈடுபட்டுள்ளனர், மேலும் அவர்களின் பகைமைக்கான காரணங்கள் அணுசக்தி, மனித உரிமைகள் அல்லது பெண்கள் உரிமைகள் போன்ற சாக்குப்போக்குகளில் உள்ளவை அல்ல என்பதை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, ஊழல் நிறைந்த உலக ஒழுங்கிற்கு சவால் விடும் இஸ்லாமியக் குடியரசின் புதிய கொள்கைக்கு அவர்களின் எதிர்ப்பில் இருந்து உருவானது,” என்று அவர் வலியுறுத்தினார்.

ஈரானின் இராணுவ உபகரணங்கள் மற்றும் போர் அமைப்பின் அடிப்படையில் திணிக்கப்பட்ட போரின் ஆரம்ப நாட்களில் ஈரானின் சாதகமற்ற சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கும் வகையில், “கணிப்புக்கள் மற்றும் வழக்கமான பொருள் தரநிலைகளின்படி, சதாமின் ஆக்கிரமிப்பு படைகள் ஒன்று முதல் சில வாரங்களுக்குள் தெஹ்ரானை அடைந்திருக்க வேண்டும். இருப்பினும், ஒரு வருடம் கடந்த பிறகு, ஆரம்பத்தில் பின்தங்கிய நமது துருப்புக்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றன மற்றும் சதாமின் நன்கு ஆயுதமேந்திய இராணுவத்திற்கு மரண அடிகளை வழங்கின. இறுதியில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் நம் நாட்டின் எல்லைகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இந்த வெற்றிக்கு அடிப்படையாக இருந்த முக்கிய காரணிகள் ஈமான் என்னும் நம்பிக்கை மற்றும் போராட்டம்.

போர் தேசத்தின் பாதுகாப்புடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல  என்ற உண்மையை எடுத்துக்காட்டி, இது ஒரு உன்னத முயற்சி. மட்டுமல்ல, அது ஒரு புனிதமான கடமை, இஸ்லாத்தைப் பாதுகாத்தல், மற்றும் "இறைவனின் பாதையில் போராடுதல்" என்று அழைக்கப்படும் குர்ஆனிய கட்டளையை நிறைவேற்றுதல் என்று இஸ்லாமிய புரட்சியின் தலைவர் குறிப்பிட்டார்.

இது, புரட்சியையும் இஸ்லாத்தையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதில் புனித பாதுகாப்பு கருவியாக இருந்தது என்று இமாம் கமேனி வலியுறுத்தினார். "இதன் விளைவாக, போர்க்களங்கள் வழிபாட்டுத் தலங்களாகவும், பிரார்த்தனைகளாகவும், துஆக்களாகவும், நள்ளிரவு அழுகையாகவும், தன்னலமற்ற சேவையாகவும் மாறின. இந்த ஆன்மீக ஆர்வத்தின் காரணமாகவே எல்லாம் வல்ல இறைவன் ஈரானிய தேசத்திற்கு கண்ணியத்தையும், உதவியையும், வெற்றியையும் வழங்கினான்.

https://english.khamenei.ir/news/11114/Palestinian-Resistance-and-Hezbollah-are-victorious 

 

 

No comments:

Post a Comment