Friday, September 6, 2024

எதிரிகள் கடலில் எமது சக்தியை பார்ப்பது போலவே நிலத்திலும் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்

 'New technologies will shock enemy on the ground': Sayyed al-Houthi

·        சையத் அல்-ஹூதி நேற்று ஆற்றிய உரையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் யெமனின் திறன்கள் குறித்து, சதி செய்யும் ஆட்சிகளை எச்சரித்து, சியோனிஸ்ட் உடனான மோதல்கள் நிறுத்தப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்துகிறார்.


அன்சார் அல்லா தலைவர் சையத் அப்துல்-மாலிக் அல்-ஹூதி தனது வாராந்திர வியாழக்கிழமை உரையில், "வரலாற்றில் முன்னோடியில்லாத புதிய தொழில்நுட்பங்களை எதிர்கொள்ளும்போது எதிரிகள் கடலில் எமது சக்தியை பார்ப்பது போலவே நிலத்திலும் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்" என்று கூறினார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ரபீயுல் அவ்வல் மாதம் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், சையத் அல்-ஹூதி காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் உள்ளூர் மற்றும் பிராந்திய நிலை குறித்து உரையாற்றினார், உம்மத் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலை எதிர்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் "ஜி-ஹாத்" என்ற கருத்தை வலியுறுத்தினார்.

பாலஸ்தீனத்தில் கொலை மற்றும் பட்டினி போன்ற குற்றங்கள், கௌரவ மீறல், குர்ஆன் எரிப்பு மற்றும் மசூதிகள் அழிப்பு போன்ற குற்றங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரேபியர்களின் "மௌன திருப்தியை" அவர் கண்டித்தார்.

அல்-ஹூதியின் கூற்றுப்படி, சில ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த தேசத்திற்கு எதிராக சதி செய்கின்றனர். இவ்வாறு செய்யும்போது எதிரிகளுக்கு சலுகைகள் வழங்குதல், கப்பம் செலுத்துதல் மற்றும் அவர்களிடம் பாதுகாப்பைத் தேடுவதன் மூலம் எதிரியை திருப்திப்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் எத்தனை சேவைகளை வழங்கினாலும், எதிரி இறுதியில் நன்றியின்றி அவர்களைக் கைவிட்டுவிடுவான் என்று அவர் குறிப்பிட்டார்.

சில ஆட்சியாளர்களின் "இஸ்ரேலிய எதிரியுடனான ஒத்துழைப்பு மற்றும் விசுவாசம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது" என்று யெமன் தலைவர் கூறினார், இது "வெட்கக்கேடானது" என்றும் சாடினார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதன் பகைமை குறித்து தெளிவாகவும் வெளிப்படையாகவும் உள்ளது என்றும் வலியுறுத்திய அவர் "தக்ஃபீரிகளின் ஜிஹாத் எங்கே? தியாகம் எங்கே? சியோனிச யூதர்களின் முன்னால் தன உயிரை மாய்த்துக்கொள்வோர் எங்கே?" என்று கேட்டார்.

காஸாவில் உள்ள போராளிகளின் துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டிய சையத் அல்-ஹூதி, அவர்களிடம் மிதமான திறன்களே இருந்தபோதிலும், அவர்களது "ஜிஹாத் பதாகை இஸ்ரேலிய எதிரியின் அழிவுக்கு உண்மையான தீர்வாக இருக்கும்" என்று வலியுறுத்தினார், இது (இஸ்லாத்தில்) தவிர்க்க முடியாத ஒன்று, மற்ற அனைத்து வழிகளும் தோல்வியில் முடிவடைகின்றன என்பது கண்கூடு என்றும் குறிப்பிட்டார்.

"கொடுங்கோன்மை, அநீதி, மிருகத்தனமான ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலை இருந்தபோதிலும் இஸ்ரேலிய எதிரியின் இப்போதைய யதார்த்தம் அதன் தோல்விக்கு சாட்சியமளிக்கிறது" என்றும், "பாலஸ்தீனிய மக்களின் உறுதியான தன்மை அவர்களின் சகோதர தேசங்களில் இருந்து ஆதரவையும் உதவியையும் பெற்றிருந்தால், நிலைமை மிகவும் முன்னேறியிருக்கும்" என்றும் அவர் கூறினார்.

"இஸ்ரேலின் எதிரிகளாக தம்மை காட்டிக்கொள்ளும் ஆட்சியாளர்கள், குற்றம், ஆணவம் மற்றும் மொத்த அழிவு ஆகியவற்றிலிருந்து, அதன் கோழைத்தனம், பலவீனம் மற்றும் பலவீனத்தை மட்டுமே காட்டுகிறார்கள்."

ஒரு பெரிய நாட்டத்திற்கான செயல்பாடுகள்

யெமன் மக்கள் "ஜிஹாத்தின் அடிப்படையிலும், இறைவனின் பொருட்டும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும்" அணிதிரண்டனர் "இஸ்ரேல்", அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு எதிராக வெளிப்படையான, தெளிவான மற்றும் அறிவிக்கப்பட்ட மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்று சையத் அல்-ஹூதி வலியுறுத்தினார்,

யெமன் ஆயுதப் படைகளின் "துணிச்சலான மற்றும் துணிகாரமான இராணுவ நடவடிக்கைகள், எந்த அச்சமும் இல்லாமல் எதிரியை அதன் அனைத்து திறன்களுடனும் தாக்கியது" என்று அவர் பாராட்டினார்.

இராணுவ நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன, ஒவ்வொரு வாரமும் எமது சொந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் க்ரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று அவர் அறிவித்தார்.

"காஸா மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து, தரைவழிப் போரில் நேரடியாக ஈடுபட எங்கள் மக்கள் நூறாயிரக்கணக்கில் திரள வேண்டும் என்று நாங்கள் ஆர்வமாக இருந்தோம்," என்று கூறிய அவர், "எங்களுக்கும் ஆக்கிரமிப்புடன் நேரடி மோதலுக்கும் தடையாக இருப்பது இஸ்ரேலிய எதிரியுடன் சதி செய்யும் அரபு ஆட்சிகளின் பரந்த புவியியல் ஆகும்," என்றும் குறிப்பிட்டார்.

"அவர்கள் எங்களை சோதிப்பார்கள், இன்னல்களை ஏற்படுத்துவார்கள் அல்லது காஸாவுக்கான சாலையைத் திறந்து விடுவதன் மூலம் எங்களை அகற்ற முனைவார்கள் என்பது நாம் எதிர்பார்த்ததே எனினும் அவர்களால் அவ்வாறு செய்ய இயலவில்லை, அவர்களால் ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாது."

களத்தில் ஒரு ஆச்சரியம்

மத்திய தரைக்கடலில் மற்றும் கடல்களில் எமது ஆயுதப் படைகளின் நடவடிக்கைள் ஏற்படுத்திவரும் குறிப்பிடத்தக்க விளைவுகளையும் யெமன் தலைவர் விரிவுபடுத்தினார், "எதிரிகள் இஸ்ரேலிய கப்பல்களைப் பாதுகாக்க இயலாமையின் காரணமாக தோல்வியை ஒப்புக்கொண்டு செங்கடல் போரைப் பற்றி விவாதிக்கின்றனர்" என்று குறிப்பிட்டார்.

தங்கள் கடல் நடவடிக்கைகளில் ஜி-ஹாத் என்ற மையக் கருவை சுமக்கும் யெமன் மக்களும் தங்கள் திறன்களை தொடர்ந்து வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்திய அவர், அவை அவர்கள் "கடலில் செய்ததைப் போலவே, வரலாற்றில் முன்னோடியில்லாத நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எதிரியை அவமானப்படுத்துவோம்" என்று கூறினார்.

சையத் அல்-ஹூதி, யெமன் மக்கள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதற்காக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதில் எந்த முயற்சியையும் விட்டுவிடமாட்டார்கள் என்று உறுதியளித்தார், "நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் இருப்போம், எங்கள் பதில் அதன் வழியில் செல்கிறது, கஇறைவன் நாடினால் அது எமது நிலையான பாதை [மோதல்]" என்றார்.

பொதுமக்கள் போராட்டங்களை அரசியலாக்குதல்

ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மீதான எமது விசுவாசத்தையும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவையும் காட்டும் வகையில், வெள்ளிக்கிழமை மில்லியன் பேர் கொண்ட பேரணியில் பங்கேற்குமாறு யெமன் மக்களுக்கு அழைப்பு விடுத்த சையத் அல்-ஹூதி, யெமன் மக்கள் "அவமானகரமான மற்றும் இழிவான சூழ்நிலைகளில் இருந்து கண்ணியம் மற்றும் சுதந்திரத்தின் கௌரவத்தை அடைந்துள்ளனர்" என்று வலியுறுத்தினார்.

முந்தைய மாதங்களில் ஒவ்வொரு வாரமும் மில்லியன் கணக்கான யெமன் மக்கள் வீதிகளில் இறங்கியதை நினைவுகூர்ந்த அவர், "எந்தவொரு மக்களிடையேயும் இதற்கு எந்த முன்னுதாரணமும் இல்லை" என்று வலியுறுத்தினார், நான்கு தலைமுறையினர் வீதிகளில் இறங்கி உள்ளனர், அவர்கள் அனைவரும் நம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் மதிப்புகளிலிருந்து உற்சாகத்துடன் வெளியே வருகிறார்கள்.

சதுக்கங்களுக்கு செல்வது அரசியல் நோக்கங்களுக்காக அல்ல, மாறாக அது யெமன் மக்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று வலியுறுத்திய அவர், "எங்களுக்குள் ஒரு துடிக்கும் நரம்பு இருக்கும் வரை, எங்களுக்குள் உயிர் இருக்கும் வரை நாங்கள் பாலஸ்தீனிய மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம்" என்று உறுதிப்படுத்தினார்.

மனித மனசாட்சிக்கு மேலதிகமாக, காஸா பகுதி மற்றும் மேற்குக் கரைக்கு எதிரான சியோனிச ஆக்கிரமிப்புக்கு எதிராக நிற்பதற்கு அனைத்து முஸ்லிம்களுக்கும் தார்மீக மற்றும் மத பொறுப்பு உள்ளது என்று அப்துல்-மாலிக் அல்-ஹூதி கூறினார். இஸ்ரேலிய எதிரியுடன் ஒத்துழைத்த சில ஆட்சிகளை அவர் மேலும் விமர்சித்தார், மேலும் அவற்றின் நிலைப்பாடு வெட்கக்கேடானது என்று விவரித்தார்.

யெமன் அதிகாரியின் கூற்றுப்படி, பாலஸ்தீனிய மக்களை படுகொலை செய்தல் மற்றும் பட்டினி போடுதல், புனித குர்ஆனை அவமதித்தல் மற்றும் எரித்தல் மற்றும் மசூதிகளை அழித்தல் போன்ற இஸ்ரேலிய குற்றங்களை அரபு நாடுகள் கண்டுகொள்வதில்லை.

புனித இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிராக போரிடுவதற்கு முஸ்லிம் நாடுகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அல்-ஹூதி அழைப்பு விடுத்தார்.

https://english.almayadeen.net/news/politics/-new-technologies-will-shock-enemy-on-the-ground---sayyed-al

No comments:

Post a Comment