The only way to liberate Quds is through Islamic unity
முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை இந்த நாட்களில் உம்மத்தின் உறுப்பினர்கள் அதிகமாக உணர்கிறார்கள். உம்மத்தின் ஒற்றுமைக்கு வழி வகுக்க முஸ்லிம்கள் தனிப்பட்ட முறையில் என்ன செய்ய முடியும்? என்று ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்
பலஸ்தீன் விவகாரம் போன்றதொரு பெரும் பிரச்சினையை
அவ்வாறு இலகுவில் மறந்துவிட முஸ்லிம் சமுதாயங்களின் ஆர்வமும் அவர்களது
தன்னம்பிக்கையும் விழிப்புணர்வும் ஒருகாலமும் அதற்கு இடம் கொடுப்பதில்லை. அமெரிக்காவும்
ஏனைய ஆதிக்க சக்திகளும் பிராந்தியத்தின் அல்லக்கைகளும் எவ்வளவு செல்வமும் பலமும் அதற்காக
செலவிட்டாலும் அது சாத்தியப்படப்
போவதில்லை.
குத்ஸ் மீட்புக்கு ஒரே வழி இஸ்லாமிய ஒற்றுமையே
“இந்த அபகரிப்பாளர்களின் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் கைகளைத் துண்டிக்க உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் இஸ்லாமிய நாடுகளையும் ஒன்றிணையுமாறு நான் அழைக்கிறேன். பாலஸ்தீனிய மக்களின் தலைவிதியை தீர்மானிக்க கூடிய நாளாக புனித ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை சர்வதேச "குத்ஸ் தினமாக" அறிவிக்கின்றேன். இத்தினத்தை முஸ்லிம் மக்களின் சட்டரீதியான உரிமைகளை பாதுகாக்க, குத்ஸ் விடுதலைக்கான முஸ்லிம்களின் சர்வதேச ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு நாளாக மட்டுமல்லாது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக நாளாக அனுஷ்டிக்குமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஆயத்துல்லாஹ் கொமெய்னி அறைகூவல் விடுத்தார்.
இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்றதை அடுத்து இஸ்ரேலுடன் ஷாவின் அரசாங்கம் கொண்டிருந்த அனைத்து தொடர்புகளையும் உடனடியாகவே துண்டித்து, அங்கிருந்த இஸ்ரேலிய தூதரகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி, அவ்விடத்தை பலஸ்தீன் தூதரகமாக மாற்றினார். அதுமட்டுமல்லாமல், பைத்துல் முகத்தஸை விடுவிக்கும் முக்கியத்துவத்தை உலக முஸ்லிம்களுக்கு உணர்த்தும் முகமாக, புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையை "சர்வதேச குத்ஸ் தினம்" என்று பிரகடனப்படுத்தினார் மர்ஹூம் ஆயதுல்லாஹ் கொமெய் (ரஹ்) அவர்கள்.
இஸ்லாமிய ஒற்றுமையை வளர்க்க எல்லா முஸ்லிம்களாலும் தனிப்பட்ட முறையில் செய்யக்கூடிய விஷயங்கள்
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் நாடுகள் பல்வேறு வகையான ஆயுத மோதல்கள் முதல் பொருளாதார கஷ்டங்கள் மற்றும் பொது சுகாதார பிரச்சினைகள் வரை எண்ணற்ற சிரமங்களை எதிர்கொள்கின்றன.
உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் காரணியான, பல நூறு வருடங்களாக இடம்பெற்றுவந்த முஸ்லிம்களின் வருடாந்திர யாத்திரையான ஹஜ்ஜை கூட ரத்து செய்யும் நிலையை இந்த நவ கொரோனா வைரஸ் தொற்று உருவாக்கி உள்ளது.
இதற்கிடையில், கடந்த ஏழு தசாப்தங்களாக அளவிட முடியாத அநீதிக்கு ஆளான பாலஸ்தீனத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்து, மேற்குக் கரையில் உள்ள ஏராளமான நிலங்களை இஸ்ரேலுடன் இணைப்பதில் சியோனிச ஆட்சி உறுதிபூண்டுள்ளது
இந்த கொடும் ஆட்சிக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் கைகோர்த்திருந்தால், சியோனிச ஆட்சி அத்தகைய ஒரு திட்டத்தை செயல்படுத்த துணிந்திருக்காது என்பது மட்டுமல்ல அதை நிறைவேற்ற நினைத்தும் பார்த்திருக்காது,
சிரமங்களை எதிர்கொள்வதற்கும் ஒற்றுமையை அடைவதற்கும் முஸ்லிம் அரசாங்கங்களின் கூட்டு முயற்சிகள் இல்லாத நிலையில், உம்மாவின் ஒற்றுமைக்கு வழி வகுப்பதற்கும் உதவுவதற்கும் முஸ்லிம்களாகிய எம் அனைவருக்கும் தட்டிக்கழிக்க முடியாத தனிப்பட்ட கடமை உள்ளது என்பதை ஞாபகத்தில் கொள்வோம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒற்றுமை என்ற கட்டிடம் தனிநபருடன் தொடங்குகிறது என்பதையும் அறிந்துகொள்வோம்..
"ஆயிரம் மைல் பயணம் நாம் முன் வைக்கும் ஓர் அடியுடன் தொடங்குகிறது".என்று ஒரு பிரபலமான பழமொழி உண்டு.
ஒரே நாளில் இஸ்லாமிய ஒற்றுமையை நாம் உருவாக்க நிச்சயமாக முடியாது என்பது நிதர்சனம். ஆனால் நாம் அனைவரும் தினசரி அடிப்படையில் அந்த இலக்கை நோக்கிச் செல்ல சிறிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.
இஸ்லாமிய ஒற்றுமை என்பது விரும்பினால் செய்யலாம் என்று விடக்கூடிய ஒரு விடயமல்ல
முஸ்லிம்கள் இஸ்லாத்தை சடங்குகளாகக் குறைத்து விட்டார்கள் மற்றும் இன்ன பிற முக்கியமான கொள்கைகளையும் மறந்துவிட்டார்கள் என்று சொல்வது இப்போது வழக்கமாகிவிட்டது. இஸ்லாத்தின் ஐந்து தூண்களைப் பயிற்சி செய்வது மிக முக்கியமானது என்றாலும், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விசுவாசத்தின் பிற அடிப்படை அம்சங்களையும் நாம் புறக்கணிக்க முடியாது.
குர்ஆன் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மரபுகளின்படி முஸ்லிம்களின் ஒற்றுமை என்பது ஒரு "பர்ழ்" (கட்டாய கடமை) ஆகும். கீழே உள்ள பின்வரும் குறிப்புகளைக் கவனியுங்கள்:
49:10 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَيْنَ اَخَوَيْكُمْوَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
49:10. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
3:103 وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا ۚ وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ
3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
இதிலிருந்து ஒற்றுமை எந்தளவு அவசியம் என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
எம் பொது எதிரியை வெற்றிகொள்ள மிகச்சிறந்த ஆயுதம் ஒற்றுமையே! அதை ஒவ்வொரு இயக்கமும் கைக்கொள்ளவேண்டும், அதன்பால் அழைப்புவிடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.
No comments:
Post a Comment