Message to the Palestinian nation for their victory over the Zionist regime
இஸ்லாமிய புரட்சியின் தலைவரான இமாம் கமேனி 2021 மே 21 அன்று விடுத்த செய்தியின் முழு வடிவம் பின்வருமாறு: ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனிய தேசத்திற்கு எதிரான 12 நாள் போரில் ஹமாஸ் வெற்றி பெற்ற சந்தர்ப்பத்தில் இந்த சித்தி விடுக்கப்படுகிறது.
அளவற்ற வற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திரு நாமத்தால்.
சக்திவாய்ந்த, ஒடுக்கப்பட்ட
பாலஸ்தீனத்திற்கு எனது வாழ்த்துக்கள். தைரியமாகவும் வைராக்கியத்துடனும் போராடிய பாலஸ்தீனிய
இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள். சியோனிச ஆக்கிரமிப்பாளர்களுக்கு
எதிராக வீரத்துடன் போராடிய காஸா மக்களுக்கும்
ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் பாலஸ்தீனத்தில்
உள்ள அனைத்து ஜிஹாதிய மற்றும் அரசியல் குழுக்களுக்கும் வாழ்த்துக்கள்.
அவனுடைய உதவிகளை வழங்கியதற்காகவும், பாலஸ்தீனிய போராளிகளுக்கு அவன் அளித்த கௌரவத்திற்காகவும்
சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
இந்த போராட்டத்தில் துயரமடைந்தவர்களின் இதயங்களுக்கு பொறுமையையும்
மன அமைதியையும் அளிக்கும்படி, தியாகிகள் மீது
இறைவன் அவனுடைய அருளையும் மகிழ்ச்சியான செய்திகளையும்
வழங்குவதோடு காயமடைந்தவர்களை விரைவில் முழுமையாக குணப்படுத்துவதற்கும் நான் கருணை மிகு
அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். கிரிமினல் சியோனிச ஆட்சிக்கு எதிரான இந்த வெற்றிக்காகவும்
எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த சில நாட்களில் ஏற்பட்ட சோதனை பாலஸ்தீனிய மக்களை
கௌரவித்துள்ளது. பாலஸ்தீனர்களின்
ஒருங்கிணைந்த எழுச்சிக்கு முன் அது சக்தியற்றது என்பதை காட்டுமிராண்டித்தனமான, ஓநாய் போன்ற எதிரி உணர்ந்துள்ளது.
இந்த சோதனையானது குத்ஸுக்கும் மேற்குக் கரைக்கும் காஸாவுக்கும்
மற்றும் பாலஸ்தீனிய முகாம்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பே எதிர்கால தீர்வு என்பதை பாலஸ்தீனியர்களுக்கு
உணர்த்தியுள்ளது.
கடந்த 12 நாட்களாக, சியோனிச வன்முறை ஆட்சி, பலஸ்தீனர்களுக்கு எதிராக, குறிப்பாக காஸாவில், பாரிய அநியாயங்களை செய்து வந்தது. பாலஸ்தீனியர்களின்
ஒருங்கிணைந்த எழுச்சியை எதிர்கொள்ள அதனால் முடியாது என்பதையும் சியோனிஸ்ட்டுகளின் வெட்கமற்ற
முட்டாள்தனமான நடத்தைகள் உலகின் பொதுக் கருத்தை அவர்களுக்கு எதிராகத் தூண்டுகிறது என்பதையும்
அவர்கள் இப்போது நன்கு உணர்ந்திருப்பார்.
தமக்கும் தம்மை ஆதரிக்கும் மேற்கத்திய அரசாங்கங்களுக்கும், குறிப்பாக அநியாயக்கார அமெரிக்காவிற்கும்
அவர்கள் தொடர்ச்சியாக செய்துவந்த குற்றங்களின் காரணமாக அவர்கள்மீதான வெறுப்பை அதிகரித்துள்ளது.
சமாதானத்திற்கான அவர்களின் இப்போதைய கோரிக்கையும் சியோனிஸ்டுகளின் தோல்வியையே குறிக்கிறது.
சியோனிஸ்டுகள் தோல்வியை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அநியாயக்கார ஆட்சி இன்னும் பலவீனமடையும்.
பாலஸ்தீனிய இளைஞர்களின் தயார்நிலை, மதிப்புமிக்க ஜிஹாதிய குழுக்கள் அவர்களது வல்லமையைக் காண்பித்தல்
மற்றும் அதிகாரத்தின் கூறுகளின் தொடர்ச்சியான
அதிகரிப்பு பாலஸ்தீனத்தை நாளுக்கு நாள் வலுவடையச் செய்யும், மேலும் அது ஆக்கிரமிக்கும் எதிரியை பலவீனமடையச்செய்து, வெறுக்கத்தக்கதாகவும் மாற்றும்.
மோதல்களைத் தொடங்குவதற்கும் முடிவுக்குக் கொண்டுவருவதற்குமான
நேரம் பாலஸ்தீனத்தின் ஜிகாதிய குழுக்களின் மற்றும் அரசியல் தலைவர்களின் விவேகத்தைப்
பொறுத்தது. ஆனால் எப்போதும் தயார் நிலை மற்றும் களத்தில் ஒரு சக்திவாய்ந்த இருப்பைப்
பராமரிப்பதை நிறுத்தாது தொடரவேண்டும். அநியாயக்கார ஆட்சியின் ஆக்கிரமிப்பு
மற்றும் குடியேற்ற கூலிப்படையினரை எதிர்ப்பதில் ஷேக் ஜர்ராவின் அனுபவம் பாலஸ்தீனத்தின்
தைரியமான மக்களுக்கு ஒரு நிரந்தர செயல் திட்டமாக மாற வேண்டும். இதனை சிறப்பாக மேற்கொண்ட
ஷேக் ஜார்ராவின் வீரம் மிக்க இளைஞர்களை நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன்.
பாலஸ்தீனிய பிரச்சினையை பொறுத்தவரை இஸ்லாமிய உலகம் முழுவதற்குமே
தட்டிக்கழிக்க முடியாத பொறுப்புகள் மற்றும் மதக் கடமைகள் உள்ளன. அரசியல் பொது அறிவும் ஆளும் அனுபவமும் இந்த மதக் கட்டளையை
வலியுறுத்தி, அதன் முக்கியத்துவத்தை உணரச் செய்து
உள்ளன.
பாலஸ்தீனிய தேசத்தை இராணுவ மற்றும் நிதித் துறைகளில் ஆதரிக்க
முஸ்லிம் அரசாங்கங்கள் ஆர்வத்துடன் களத்தில் இறங்க வேண்டும் - இது கடந்த காலத்தை விட
அதிகமாக தேவைப்படுகிறது - மற்றும் காஸாவில் உள்ள அடித்தள கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்பி இடிபாடுகளை சரிசெய்ய உதவ முன்வரவேண்டும்.
இந்த விடயத்தில் முஸ்லிம் நாடுகள் இந்த அழைப்புக்கு ஆதரவாக
இருத்தல் வேண்டும். தங்கள் அரசாங்கங்களை இந்தக் கடமைகளைச் செய்ய வேண்டும் என்று முஸ்லிம்
மக்கள் வலியுறுத்த வேண்டும். தங்களால் இயன்றவரை
நிதி மற்றும் அரசியல் ஆதரவை வழங்க வேண்டிய பொறுப்பு இந்த நாடுகளுக்கு உள்ளது.
மற்றொரு முக்கியமான பொறுப்பு என்னவென்றால், பயங்கரவாத, இரத்தவெறி கொண்ட சியோனிச ஆட்சி அதன் குற்றச்செயலுக்கு தண்டனை பெறும் விஷயத்தைத் தொடர வேண்டும். கடந்த 12 நாட்களில் பாலஸ்தீனிய குழந்தைகளை, பெண்களை மற்றும் முதியோரை படுகொலை செய்த குற்றங்களுக்கு தண்டிக்கப்படாமல் செல்ல அனுமதிக்கக் கூடாது என்பதை உலகில் மனசாட்சியுள்ள அனைத்து மக்களும் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த குற்றத்தில் ஈடுபட்ட நெதன்யாகு மற்றும் ஆக்கிரமிப்பு ஆட்சியின் முகவர்கள் அனைவரையும் விசாரிக்க சுயாதீனமான சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தொடர வேண்டும் மற்றும் அவர்கள் தண்டனைப் பெற வேண்டும். அல்லாஹ்வின் சக்தியைக்கொண்டு இது நிச்சயம் நடக்கும்.
எல்லா புகழும்
அல்லாஹ்வுக்கே.
https://english.khamenei.ir/news/8502/Message-to-the-Palestinian-nation-for-their-victory-over-the
No comments:
Post a Comment