சந்தேகத்திற்கு இடமின்றி, எல்லா மனிதர்களும் அமைதி மற்றும் சமாதானச் சூழலில் வாழ வேண்டும் என்பது சர்வவல்லமையுள்ள
இறைவனின் விருப்பம்; அது ஒரு தெய்வீக ஆசீர்வாதமுமாகும், இந்த இறை நாட்டம், துரதிர்ஷ்டவசமாக, சில அடக்குமுறை மற்றும் அநியாயம்
புரிவோரால் மீறப்படுகிறது.
இந்த நாட்களில், சியோனிச ஆட்சி மீண்டும் அப்பாவி குழந்தைகள், பெண்கள்
மற்றும் பொதுமக்களின் இரத்தத்தை சிந்துவதில் ஈடுபட்டுள்ளது என்பதை நாம் கண்டுகொண்டு இருக்கிறோம். ஆச்சரியப்படும் விதமாக, இது
ஒரு கொடூரமான செயல் என்று கூறும் நபர்களின் கண்களுக்கு முன்னாலேயே இடம்பெற்றுக்கொண்டு
இருக்கிறது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் காவலர்கள் என்று கூறிக்கொள்வோர்
இந்த கொடூரமான குற்றங்களைக் கண்டும் இன்னும் அமைதியாகவே இருக்கிறார்கள்.
இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயல் உலக அமைதியை நேசிக்கும் அனைத்து மக்களின் ஆத்மாக்களையும் காயப்படுத்தியுள்ளது.
இந்த வெட்கக்கேடான செயலை எதிர்கொள்வதில் உலக மதத் தலைவர்கள் அலட்சியமாகவும் அமைதியாகவும்
இருக்க மாட்டார்கள் என்றும் மிக அடிப்படையான மத போதனைகளுக்கு இணங்க, ஒடுக்கப்பட்டவர்களைப்
பாதுகாப்பதிலும், நடந்துகொண்டிருக்கும் இந்த குற்றச்செயலினால் எரியும் நெருப்பை
அணைப்பதிலும் பயனுள்ள நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கிறோம்.
அப்பாவி பொதுமக்கள் மீதான இந்த அப்பட்டமான அடக்குமுறை
மற்றும் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுப்பதை பார்த்துக்கொண்டு எந்தவொரு சுதந்திர மனிதனும்
அமைதியாக இருக்க முடியாது. மேலும் இதனைத் தடுக்குமுகமாக மதத் தலைவர்கள் மற்றும் கலாச்சார
பிரமுகர்களிடமிருந்து பன்மடங்கு முயற்சிகள்
எதிர்பார்க்கப்படுகின்றன என்பதை சொல்ல வேண்டியியதில்லை, மக்களது
சுதந்திரத்தைக் காப்பது அவர்களது ஆளுமைப் பண்புடன் இணைந்த சிறப்பியல்பாகும்.
இஸ்லாமிய புரட்சியின் உச்ச தலைவரான கண்ணியத்துக்குரிய
ஆயதுல்லா கமேனி அவர்கள் கூறியது போல, பாலஸ்தீனத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்தி, பாதுகாப்பை
நிலைநிறுத்த வேண்டுமானால், தவறாக ஆக்கிரமிக்கப்பட்ட தமது சொந்த பிரதேசங்களுக்கு பாலஸ்தீன
அகதிகள் திரும்புவதன் மூலமும் அவர்களின் - யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள்
- கூட்டு முடிவிலும் அதன் நிர்வாகம் அவர்கள் கையில் ஒப்படைப்பதால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, பல்வேறு மதங்களிடையே அதிக புரிதலையும் ஒத்துழைப்பையும்
வளர்ப்பதற்காக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் கொள்கை வகுத்தல்
மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக, நான் அனைத்து மதத் தலைவர்களையும் கலாச்சார
பிரமுகர்களையும் அழைக்கிறேன் பல மாபெரும் தீர்க்கதரிசிகளின் பிறப்பிடமாகவும் தோற்றத்தலமாகவும்
இருக்கும் பாலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றங்களை
கடுமையாக கண்டிப்பதுடன் அதற்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் கோரிக்கை விடுக்கிறேன்.
இந்த முக்கியமான விஷயத்தில் எங்களுக்கு உதவ சர்வவல்லமையுள்ள
இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
டாக்டர் அபூஸர் இப்ராஹிமி துர்க்கமன்
ஈரான் இஸ்லாமிய குடியரசின் மதங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு
இடையில் உரையாடலுக்கான கொள்கை வகுத்தல் மற்றும்
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்
===========
In the name of God, the Most Beneficent, the Most Merciful
Honorable Religions, Dignitaries, Respected
Thinkers, and Free People of the World
My sincere greetings to you and all the
truth-seekers.
Undoubtedly, it is God Almighty’s wish that
all human beings should live in an atmosphere of peace and tranquility; a
divine blessing that is, unfortunately, being violated by some people who are
depriving others of blessing through oppression and crime.
We are, these days, being witness that the
usurper Zionist regime is once again engaged in shedding the blood of innocent
children, women, and civilians, and surprisingly, this cruel act is being
carried out before the eyes of those who claim to be the champions of democracy
and human rights and have yet remained silent vis-à-vis these atrocious crimes.
This human crime has wounded the souls of all
the peace-loving people of the world, who for sure, expect that world religious
leaders would not remain indifferent and silent in the face of this shameful
act, and take effective action, in accordance with the most fundamental
religious teachings, in defending the oppressed and extinguishing the blazing
fire of this ongoing crime.
No free human being can remain silent in the
face of blatant oppression and persecution, and it goes without saying that
expectations from religious leaders and cultural personalities whose
personality trait, characteristic and social status is earmarked with “freedom”
are manifold.
It should be remembered that, as very rightly
stated by the Supreme Leader of the Islamic Revolution, Ayatollah Khamenei, the
establishment of lasting peace and security in Palestine will be possible only
with the return of Palestinian refugees to the wrongly occupied territories and
the collective decision of all its inhabitants - Jews, Christians, and Muslims
- with regard to its administration and nothing else.
Therefore, as the Chairman of the
Policy-Making and Coordination Council of the Interreligious Dialogue of the
Islamic Republic of Iran, which has been working for years to promote greater
understanding and cooperation among different religions, I call upon all
religious leaders and cultural personalities to strongly condemn these barbaric
crimes that are mercilessly going on in Palestine, the birthplace and origin of
many great divine prophets, and take appropriate steps in fulfilling the
religious and human duty that has been vested on them.
We pray to God Almighty to help us with regard
to this important matter.
Dr. Abouzar Ebrahimi Torkaman
Chairman of the Policy-Making and Coordination
Council of the Interreligious Dialogue of the Islamic Republic of Iran
No comments:
Post a Comment