Monday, August 19, 2024

எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க ஈரானிய ஆட்சிக் கவிழ்ப்பில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் பங்கு

  US to forever be ashamed of overthrowing Mossadegh's govt.

ஈரான் பிரதமர் மொஹமட் முசத்தெக் மற்றும் ஜனநாயக நடைமுறைக்கு எதிராக 1953 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தொடங்கிய ஆட்சிக் கவிழ்ப்பின் ஆண்டு தினம் ஆகஸ்ட் 19 ஆகும். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முசத்தெக் அரசாங்கத்தை தூக்கியெறிந்த அவமானம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆட்சிகளின் முகத்தில் எப்போதும் ஒட்டி இருக்கும்.

1953 ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முசத்தெக் அரசாங்கத்தை தூக்கியெறிந்த அவமானம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆட்சிகளின் முகத்தில் எப்போதும் ஒட்டி இருக்கும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஈரானில் 1953 ஆட்சிக் கவிழ்ப்பின் ஆண்டு நிறைவில், நாசர் கனானி தனது எக்ஸ் சமூக கணக்கில் அடிமைத்தனம், காலனித்துவம், ஆட்சிக் கவிழ்ப்புகள் மற்றும் பிற நாடுகளில் இராணுவத் தலையீடுகள் ஆகியவை உலகில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தலையீடுகளின் இருண்ட மற்றும் வெட்கக்கேடான வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.

1953 ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் ஈரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முசத்தெக் அரசாங்கத்தை கவிழ்த்ததன் அவமானம் மற்றும் கொடுங்கோன்மை அரசியல், பாதுகாப்பு மற்றும் இராணுவ ஆதரவு ஆகியவை அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆட்சிகளின் முகத்தில் எப்போதும் ஒட்டி இருக்கும் என்று கானானி கூறினார்.

இத்தகைய இருண்ட வரலாற்றைக் கொண்ட இந்த இரண்டு நாடுகளும் தற்போது போலி மற்றும் இனவெறி இஸ்ரேலிய ஆட்சி மற்றும் காஸாவில் இனப்படுகொலையை ஆதரித்து வருகின்றன, அதே நேரத்தில் அவை தங்களை மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் கொடி ஏந்தியவர்களாக கருதுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

https://en.mehrnews.com/news/219703/US-to-forever-be-ashamed-of-overthrowing-Mossadegh-s-govt

 

அமெரிக்கா, இங்கிலாந்து ஆதரவுடன் 1953 ஆட்சிக் கவிழ்ப்பு ஈரானின் ஜனநாயக செயல்முறையை சிதைத்தது

1953 ஆகஸ்டில் ஈரானில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் முகமது மொசாதிக்கை அதிகாரத்திலிருந்து அகற்றி, முகமது ரேசா ஷா பஹ்லவியை ஈரானின் மன்னராக மீண்டும் பதவியில் அமர்த்தியது. இதன்போது தெஹ்ரானில் நடந்த சண்டையின் போது சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.

ஈரானின் மூலோபாய அமைவிடம் மற்றும் பரந்த எண்ணெய் வள இருப்புக்கள், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிற சக்திகளுக்கு ஈரான் சிறப்பு ஆர்வம் கொண்ட இடமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டன் அப்போது தனது நட்பு நாடாக இருந்த சோவியத் யூனியனுக்கு ஒரு முக்கிய எரிபொருள் விநியோக வழியைப் பாதுகாப்பதற்கும், எண்ணெய் ஜேர்மனிய கைகளுக்குச் செல்வதைத் தடுப்பதற்கும் நாட்டில் ஒரு இருப்பை நிறுவியது. போருக்குப் பிறகு, அதாவது, ஆங்கிலோ-ஈரானிய எண்ணெய் நிறுவனத்தை நிறுவுவதன் மூலம் ஐக்கிய இராச்சியம் ஈரானின் எண்ணெய் மீதான கட்டுப்பாட்டை திறம்பட தம்வசம் தக்க வைத்துக் கொண்டது.

பிரதமர் முகமது முசத்தெக்ஈரானின் எண்ணெய் தேசியமயமாக்கல்


மொஹமட் மொசத்தேக் 1951 இல் ஈரானின் பிரதமரானார் மற்றும் ஆங்கிலோ-ஈரானிய எண்ணெய் நிறுவனத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததற்காக பெரும் மக்கள் அபிமானத்தை பெற்றிருந்தார். அக்டோபர் 1952 இல், முசத்தெக் பிரிட்டனை ஒரு எதிரி என்று அறிவித்து அனைத்து இராஜதந்திர உறவுகளையும் துண்டித்தார்.

பிரிட்டனுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனம் ஈரானுக்கு அதன் லாபத்தில் 16% மட்டுமே செலுத்தி பெரும் லாபத்தை ஈட்டியது. அவரது தேசியமயமாக்கல் முயற்சிகள் பிரிட்டிஷ் அரசாங்சங்கத்தை கோபமூட்டியது, மொசாட்டக்கை அதிகாரத்திலிருந்து அகற்றத் திட்டமிடத் தொடங்கியது. பிரிட்டனால் தனியாக அதைச்செய்ய முடியவில்லை என்பதால் அமெரிக்காவின் உதவியை நாடியது.

ஈரானின் ஜனநாயகத்தை தூக்கியெறிந்த சி.ஐ.ஏ.

ஆபரேஷன் அஜக்ஸ் என்று அழைக்கப்படும் சதி, முசத்தெக்கை பதவியில் இருந்து நீக்குவதற்கான ஆணையை வெளியிட ஈரானின் மன்னரை இணங்கச்செய்வதை மையமாகக் கொண்டது.

1953 ஆகஸ்ட் தொடக்கத்தில், ஈரானில் இயங்கிய சிஐஏ செயற்பாட்டாளர்கள் முஸ்லிம் தலைவர்களை "முசத்தெக்கை எதிர்க்கவில்லை என்றால் பயங்கரமான தண்டனைக்குள்ளாக நேரிடும்" என்று அச்சுறுத்தினர், இதன் மூலம் முசத்தெக் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குகிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்.

ஆகஸ்ட் 16, 1953 அன்று, மொஹம்மத் ரேசா பஹ்லவி முறையாக முசத்தெக்கை பதவி நீக்கம் செய்து, சிஐஏ தேர்ந்தெடுத்த ஜெனரல் பஸ்லுல்லா ஜாஹதியை பிரதமராக நியமித்தார். இந்த நியமனம் திட்டத்தை வடிவமைத்த சிஐஏ சதியின் சிற்பியான டொனால்ட் வில்பர் பிரகடனப்படுத்தினார். உடனியாக, ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு உதவுவதற்காக அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டங்கள் நகரம் முழுவதும் நடந்தேறின. முசத்தெக் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார், பின்னர் 1967 இல் இறக்கும் வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ஆங்கிலோ-அமெரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு ஈரானை பல தசாப்தங்களாக அடக்குமுறைக்கு ஆளாக்கியது 

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி ஷாவின் சர்வாதிகாரத்தை நோக்கிய சரிவை ஊக்குவித்தது மட்டுமல்லாமல், பின்னர் 1979 இஸ்லாமிய புரட்சியின் போது அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் அணிதிரளும் முழக்கமாகவும் மாறியது. இப்போதும் கூட, ஈரானிய வரலாற்றில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக மொசத்தேக் இருந்துவருகிறார்.

உண்மையில், ஈரானியர்களின் உதவியின்றி முசத்தெக் அதிகாரத்திலிருந்து வீழ்ந்திருக்க மாட்டார். என்றாலும், ஆட்சி கவிழ்ப்பில் அமெரிக்காவின் பங்கை நீக்கிவிட்டு நோக்குவது தவறாகும். இந்த துரோகத்தின் நினைவு அமெரிக்க-ஈரான் உறவுகளில் தொடர்ந்து தாக்கம் செலுத்துகிறது. இன்னும் முக்கியமாக, ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிந்தைய ஷாவின் ஆட்சியை ஸ்திரப்படுத்துவதில் அமெரிக்கா ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது.

ஆகஸ்ட் 19 ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்வுகளில் மட்டுமே கவனம் செலுத்துவது வாஷிங்டனின் இறுதி நோக்கத்தை மறைத்துவிடும்: உண்மையில், அமெரிக்காவின் குறிக்கோளானது, முசத்தெக் ஆட்சியில் இருந்து வீழ்ச்சியடைந்து ஏறக்குறைய ஒரு வருடத்தில் ஈரானின் எண்ணெய் வளங்களை வெளிநாட்டுக் கட்டுப்பாட்டிற்கு திருப்புதலாகும்.

1953இல் ஈரானில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பினால் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட விளைவுகள்

இதனால் ஈரான், மேற்கு ஆசியா மற்றும், இன்னும் கூறப்போனால், முழு உலகமும் ஆழமாக பாதிக்கட்டது எனலாம். இந்த சதியையிட்டு உலகம் அசட்டையாக இருந்ததால், ஏகாதிபத்திய தலையீடுகள் மற்றும் உலக தெற்கில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் கவிழ்வதற்கு வழி வகுத்தது.

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி மேற்கு ஆசியாவில் புவிசார் அரசியல் நிலையை மாற்றியது. 50 களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்வதற்கும் அரசாங்கங்களை ஸ்திரமற்றதாக்குவதற்கும் தொடர்ச்சியான அமெரிக்க முயற்சிகளுக்கான ஒரு வரைபடமாக மாறியது, மற்றும் பனிப்போரின் போது சோவியத் ஒன்றியத்திற்கு கருத்தியல் ஆயுதங்களை வழங்கியது.

ஈரானில் 1953 ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, CIA ஒரு வருடத்திற்குப் பிறகு குவாத்தமாலா ஆட்சி கவிழ்ப்பை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தியது, 1957 இல் சிரியாவின் அதிபரை வெளியேற்றுவதில் தோல்வியடைந்தது; மற்றும் 1961 இல் கியூபா மீதான இராணுவப் படையெடுப்பின் தோல்வியில் மூக்குடைப்பட்டது.

1953 ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் சம்பந்தப்பட்டதை சிஐஏ பகிரங்கமாக ஒப்புக்கொண்டது

பல தசாப்தங்களாக, ஈரானிய ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் தாம் எந்த பங்கும் வகிக்கவில்லை என்று அமெரிக்கா மறுத்து வந்தது. ஆனால் அந்த நிலைப்பாடு 2009 இல் ஜனாதிபதி பராக் ஒபாமா சதியில் வாஷிங்டனின் பாத்திரத்தை ஒப்புக் கொண்டபோது முடிவுக்கு வந்தது.     இதற்கிடையில், பிரிட்டனில், அரசாங்க நிதியுதவி பெற்ற பிபிசி 2011 இல் முசத்தெக் எதிர்ப்பு நிகழ்ச்சிகளை எவ்வாறு ஒளிபரப்பியது என்பது குறித்த விவரங்களை வழங்கியது. CIA செயற்பாட்டாளர்களின் இரகசிய கோப்புக்களும் நினைவுக் குறிப்புக்களும் சதியில் CIA ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகின்றன.

ஆகஸ்ட் 19, 2013 அன்று, ஈரான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி முகம்மது முசத்தெக் அவர்களுக்கு எதிரான 1953 ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் அதன் ஈடுபாட்டை சிஐஏ முதன்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டது.

ஈரானின் எண்ணெய் தொழில் தேசியமயமாக்கல் மற்றும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்து இந்த தேசிய மூலோபாய வளத்தை திரும்பப் பெறுதல் போன்ற பிரச்சினையில் நாம் பார்த்தது போல், நாடுகளின் மூலோபாய இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்துவது, ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு எதிராக முடிவில்லாத மற்றும் பல பரிமாணப் போர்களை நடத்துவது அமெரிக்கா போன்ற மேலாதிக்க சக்திகளின் உந்துதல்களில் உள்ளவையாகும் என்பதை நாம் மறத்தல் ஆகாது.

உலகப் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் என்பது உலகின் எந்தப் பகுதியிலும் அமெரிக்காவின் தலையீட்டின் சக்திவாய்ந்த உந்துதல்களில் ஒன்றாக இருந்தாலும், எண்ணெய் வள நாடுகள், கனிம வளங்கள் மற்றும் உலகின் இயற்கை வளங்கள் நிறைந்த ஈரான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, வெனிசுலா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் தலையிடுவதற்கு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது, சுதந்திரத்தைப் பாதுகாப்பது போன்ற சாக்குப்போக்குகள் தேவைப்படுகின்றன. பாதுகாப்புக்கு உத்தரவாதம், முன்கூட்டிய பாதுகாப்பு மூலோபாயம் போன்றவற்றை கூறிக்கொண்டு, ஆதிக்கம் செலுத்தும் நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, தங்கள் கொள்கைகளை செயல்படுத்த முயற்சிக்கின்றன.

பொதுவான சட்டங்கள், கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளைப் பின்பற்ற மற்ற அனைத்து நாடுகளின் கண்காணிப்பாளராக அமெரிக்கா தன்னைக் கருதினாலும், இந்த கொள்கைகளுக்கும் சட்டங்களுக்கும் அமெரிக்கா ஒருபோதும் கீழ்ப்படிவதில்லை என்பது கண்கூடு.

அமெரிக்க நாட்டின் வரலாற்றின் பக்கங்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம், வாஷிங்டன் தனது கொள்கைகளை எதிர்க்கும் நாடுகளுக்கு எதிராகவும், சில சந்தர்ப்பங்களில் அதன் நண்பர்களுக்கு எதிராகவும் கூட, உலகில் பொதுவான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மீறும் பல வழக்குகள் அதன் மீது உள்ளன என்பதை நாம் மறத்தல் ஆகாது..

Reported by Sahar Dadjoo

https://en.mehrnews.com/news/219647/US-UK-backed-1953-coup-shattered-Iran-s-democratic-process

No comments:

Post a Comment