Thursday, August 15, 2024

'செத்த பூனை ராஜதந்திரம்' இங்கே தோல்வி - பதிலடிக்கு முன்னால் விடுக்கப்படும் அறிக்கைகள் மட்டுமே

‘Dead cat diplomacy’ fails here

Western calls, statements intended to tamper Iran's calculations ahead of retaliation against Israel

 By Mona Hojat Ansari

மேற்கத்திய நாடுகளால் அனுப்பப்படும் தூதுகள், ஈரானின் உத்திகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இஸ்ரேலுக்கு எதிரான பதிலடிக்கு முன்னால் விடுக்கப்படும் அறிக்கைகள் மட்டுமே.

பேச்சுவார்த்தைகள் தோல்வியின் விளிம்பில் இருக்கையில் அல்லது ஏற்கனவே தோல்வியுற்றிருக்கையில் எதிர்த்தரப்பு மற்றும் அதன் கூட்டாளிகளின் மீது பழியைப் போடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தந்திரோபாயமான "இறந்த பூனை இராஜதந்திரம்", 1991 இல் பிராந்திய நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு முக்கிய கருவியாக இருந்திருக்கலாம், அதன் மூலம் இஸ்ரேல் தன்னை அப்பாவியாக காட்டிக் கொள்ளலாம்.

எவ்வாறாயினும், 2024 இல், இஸ்ரேலின் உண்மையான இனவெறி நிறங்கள் மற்றும் மனித உரிமைகள் மீதான மேற்குலகின் பாசாங்குத்தனமான அணுகுமுறை பற்றிய விழிப்புணர்வு உலக மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஈரானின் அல்லது ஹமாஸின் வீட்டு வாசலில் இறந்த பூனைகளை போடுவதால் காஸா நெருக்கடியின் குற்றவாளிகள் அவர்கள் அல்ல என்றாகிவிடப்போவதில்லை.

"இறந்த பூனை இராஜதந்திரம்" என்ற சொல் முதன்முதலில் முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜேம்ஸ் பேக்கரால் உருவாக்கப்பட்டது, அவர் இஸ்ரேலுடனான 1991 மாட்ரிட் சமாதான மாநாட்டில் கலந்து கொள்ள, ஏமாற்றமடைந்த அரபு தலைவர்களை வற்புறுத்த போராடிக் கொண்டிருந்தார்.  மாட்ரிட் மாநாடு, அந்த நேரத்தில் எந்த உடன்படிக்கையையும் நோக்கிச் செல்லவில்லை என்றாலும், பிராந்திய நாடுகளை இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் பாதுகாப்பு நிலையை தளர்த்துமாறு வற்புறுத்துவதற்கு வாஷிங்டனுக்கு ஒரு படிக்கல்லாக அது மாறியது. இது 1994 இல் ஜோர்டான்-இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம் மற்றும் ஆபிரகாம் ஒப்பந்தங்களுக்கான அடித்தளத்தை அமைத்தது, அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், மொராக்கோ மற்றும் சூடான் ஆகியவை 2020 இல் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கின.

1973 ஜெனிவா மாநாட்டின் தீர்மானத்தின் கீழ் இஸ்ரேல் ஆட்சி அதன் உறுதிமொழிகளை அப்பட்டமாக மீறியதை அடுத்து அரபு தலைவர்கள் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயக்கம் காட்டினர், வாஷிங்டனின் அப்போதைய முயற்சி விரயமாறிவிட்டது.  முதல் பாரசீக வளைகுடாப் போருக்குப் பிறகு அரேபியர்கள் மீது ஒரு தீர்வைத் திணிக்கவும், அதே நேரத்தில் அதை நம்பத்தகுந்ததாக மாற்றவும் அமெரிக்கா விரும்பியது.

1989 முதல் ஜேம்ஸ் பேக்கர் அரபு நாடுகளின் இஸ்ரேலுடனான உறவு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த முயன்று வந்தார். குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய போராடிய பிறகு, ஒரு புதிய மூலோபாயத்தை பின்பற்ற வேண்டிய நேரம் இது என்று அவர் முடிவு செய்தார். 1991 மார்ச்சுக்கும் அக்டோபருக்கும் இடையில், ஜேம்ஸ் பேக்கர் மேற்கு ஆசியாவிற்கு எட்டு பயணங்களை மேற்கொண்டார், எகிப்து, சிரியா, ஜோர்டான், சவுதி அரேபியா தலைவர்கள் மற்றும் ஒரு பாலஸ்தீனிய பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்தார். இந்த சந்திப்புகளின் போது, இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அரபு தலைவர்களை அவர் எச்சரித்தார். இதற்கிடையில், பிராந்தியத்தில் அமைதி இல்லாததற்கான பழியை அவர்கள் மீது போடுவதற்காக, அவர் அரேபியர்களை, குறிப்பாக பாலஸ்தீனியர்களை பகிரங்கமாக விமர்சித்தார். அதற்காக ஊடகங்களைப் பயன்படுத்தியதன் மூலம், அரபு நாடுகள் சமாதானத்தை எதிர்ப்பவர்களாகக் கருதப்படாமல் பேச்சுவார்த்தைகளிலிருந்து பின்வாங்க முடியாது என்று உணரும் சூழலை ஜேம்ஸ் பேக்கர் உருவாக்கினார் என்று மேற்கு ஆசியாவுக்கான அவரது ஆலோசகர்களில் ஒருவரான ஆரோன் மில்லர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேம்ஸ் பேக்கர் அரேபியர்களை இஸ்ரேலுக்கு விட்டுக்கொடுக்க வெற்றிகரமாக இழுத்ததிலிருந்து, விளைவுக்கு மற்றவர் மீது பழியைப் போடும் இறந்த பூனை இராஜதந்திரம் எந்த பேச்சுவார்த்தை மேசையிலும் அமெரிக்க அரசியல்வாதிகளின் விருப்பமான மூலோபாயமாக மாறியது.

வாஷிங்டன், ஊடகத்தின் மீதான அதனது கட்டுப்பாடு மற்றும் வார்த்தை ஜாலங்களைக் கொண்டு விளையாடுவதில் பெற்றுள்ள நிபுணத்துவம் காரணமாக, களத்தில் என்ன நடந்தாலும் அது எப்போதும் அதற்கு சாதகமான நிலையில் இருப்பதாக நம்புவதாகத் தெரிகிறது. எனினும் அது எப்போதும் அவ்வாறு இருந்து விடப்போவதில்லை. மேலே உயர்வது கீழே வந்தாகவேண்டும்.

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் பதிலடி மற்றும் சியோனிச ஆட்சியை விடுவிக்க ஒரு வாய்ப்பு

ஈரானிய மண்ணில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு ஈரானிய பதிலடியை எதிர்பார்த்து சியோனிச ஆட்சி காத்திருக்கையில், சமீபத்திய நாட்களில், மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக தமது பலத்தை செலுத்த முயன்று வருகின்றன. இந்த ஆதரவில் இராணுவ உதவி மற்றும் சியோனிஸ்டுகளை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் அவர்களின் சமீபத்திய பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்துதல் ஆகியன அடங்கும்.

திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு கூட்டறிக்கையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலியின் தலைவர்கள் சமீபத்திய விவாதங்களின் போது "ஈரானின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு" தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியதாகக் கூறினர்.

"இஸ்ரேலுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் குறித்த அதன் தற்போதைய அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு நாங்கள் ஈரானுக்கு அழைப்பு விடுத்தோம், அத்தகைய தாக்குதல் நடந்தால் பிராந்திய பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகள் குறித்து விவாதித்தோம்" என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஈரானிய மண்ணில் ஹமாஸ் தலைவர் ஒருவரை இஸ்ரேல் கொன்றதை அது கண்டிக்கவில்லை. நடந்தது ஈரானின் இறையாண்மையை மீறும் செயலாகும், அத்துடன் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறிய குற்றமுமாகும்.

ஜூலை 31 ஆம் தேதி இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செய்யத் அலி காமனேயி அவரை ஈரானின் "அன்புக்குரிய விருந்தினர்" என்று குறிப்பிட்டு அவரது கொலைக்கு பழிவாங்குவதாக சூளுரைத்தார்,. அதை தொடர்ந்து பல ஈரானிய அதிகாரிகள் இந்த உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல்வாதிகளும் தங்கள் அறிக்கையில், இஸ்ரேல், குறிப்பாக பெஞ்சமின் நெத்தென்யாகு காஸாவில் சமாதான முயற்சிகளுக்கு இடையூறு விளைவிப்பதை பற்றி எதையும் குறிப்பிடாது, "காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு" மட்டும் முயற்சிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தினர்.

இதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை இதேபோன்றவொரு அறிக்கையை வெளியிட்டு, காஸாவில் போர்நிறுத்தத்திற்கான "வாய்ப்பு" வெற்றி பெறவில்லை என்றால் ஈரான் தான் பொறுப்பு என்று வலியுறுத்தின.  10 மாதங்களுக்கும் மேலாக காஸாவில் சியோனிச ஆட்சியின் தாக்குதல் மற்றும் அழிவு மற்றும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட முக்கியமான ஒருவரை கொன்றதன் பின்னர், இஸ்ரேல் மீதான ஈரானிய தாக்குதல்கள், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய ஆட்சிக்கு இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளை தடம் புரளச் செய்யலாம் என்று E3 கருதுவதாக கூறுகிறது.

"இவ்வாறு அவர்கள் விடுக்கும் அறிக்கைகள் ஒன்றும் புதிதல்ல. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய குற்றங்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஒரு முக்கிய உடந்தையாக இருந்து வருகின்றன மற்றும் அனைத்து முனைகளிலும் சியோனிச ஆட்சிக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்குகின்றன" என்று அஜர்பைஜான், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகளுக்கான தூதராக பல ஆண்டுகள் பதவிவகித்த முன்னாள் ஈரானிய இராஜதந்திரி மொஹ்சென் பகாயென் தெஹ்ரான் டைம்ஸிடம் தெரிவித்தார்.

"பெய்ரூட் மற்றும் தெஹ்ரானில் உயர்மட்ட எதிர்ப்புத் தலைவர்களின் படுகொலைகளுக்கு ஈரானும் ஹிஸ்புல்லாவும் பதிலடி கொடுக்கும் என்பதை மேற்கத்திய நாடுகள் நன்றாக அறிந்திருந்தன. வாஷிங்டனும் அதன் மற்ற மேற்கத்திய நட்பு நாடுகளும் இஸ்ரேலை அதன் ஆபத்தான, அழிவுகரமான திட்டங்களுடன் முன்னேறுவதற்கு அனுமதித்தன. இப்பொழுது அதன் நடவடிக்கைகளின் விளைவுகளுக்கு அதுவே பொறுப்பு என்பதற்கு மாற்றமாக, இஸ்ரேல்தான் பாதிப்புக்குள்ளான தரப்பு போன்று காட்டி, அதை குற்றங்களில் இருந்து விடுவிக்க முயல்கின்றன. அடிப்படையில் இஸ்ரேல் தான் போர்நிறுத்தத்தை ஸ்தாபிப்பதைத் தடுக்கிறது என்பதை நன்றாக அறிந்துகொண்டு அவர்கள் ஈரானையும் லெபனானையும் காஸாவில் சமாதானத்தைத் தடுப்பவர்கள் என்று கூறப்படும் ஆபத்துக்கு விடையிறுப்பதைத் தவிர்க்குமாறு நயவஞ்சகத்தனமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்," என்று முன்னாள் இராஜதந்திரி விளக்கினார்.

எவ்வாறாயினும், இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் அதன் பெயரைப் பாதுகாப்பதற்கான மேற்கத்திய நாடுகளின் சமீபத்திய முயற்சிகள் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று பக்காயீன் மேலும் கூறினார். "மேற்கத்திய நாடுகள் என்ன சொன்னாலும் ஈரான் தனது பதிலடி திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்பது உறுதி. அனைத்திற்கும் மேலாக, கடந்த பத்து மாதங்களில் சியோனிச ஆட்சி செய்துள்ள பயங்கரவாத இனப்படுகொலை செயல் ஒவ்வொன்றிற்கும் பின்னர், பொதுமக்கள் கருத்தை முன்பு செய்ததை போல இப்போது அவ்வளவு எளிதாக திசைதிருப்பப்பிவிட முடியாது".

ஈரான் நிச்சயமாக அதன் பதிலடியை நடத்தியே தீரும், அது எங்கு, எப்போது, எப்படி என்பதை சம்பந்தப்பட்ட ஈரான் அதிகாரிகள் தீர்மானிப்பார்.

https://www.tehrantimes.com/news/502429/Dead-cat-diplomacy-fails-here

No comments:

Post a Comment