Tuesday, May 23, 2023

வெளிநாட்டு கொள்கையின் ஆறு முக்கிய அம்சங்கள் - இமாம் காமனெய்

Against enemies' desires, maintain policy of honorable relations with neighboring, Islamic, & friendly countries

ஈரானின் வெளியுறவு அமைச்சர் மற்றும் அமைச்சின் மூத்த அதிகாரிகளையும்,பிற நாடுகளில் உள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதர்கள் மற்றும் பிரதிநிதிகளையும் மே 20, 2023 அன்று சந்தித்த தருணத்தில், இமாம் காமனெய் அண்டை, இஸ்லாமிய மற்றும் நட்பு நாடுகளுடன் கெளரவமான உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சந்திப்பின் போது, இமாம் காமனெய் ஈரானிய வெளியுறவுக் கொள்கையில் "கௌரவம், ஞானம் மற்றும் சமயோசிதம்" ஆகிய மூன்று முக்கிய வார்த்தைகளின் அர்த்தங்களை விளக்கினார்.

"கௌரவம் என்பது வார்த்தைகள் மற்றும் உள்ளடக்கம் ஆகிய இரண்டிலும் இராஜதந்திரத்தை கோருவதை மறுப்பது மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளின் வார்த்தைகள் மற்றும் முடிவுகளின் மீது பூரண நம்பிக்கை வைப்பதைத் தவிர்ப்பது" என்று அவர் கூறினார். வெளியுறவுக் கொள்கையில் நம்பிக்கையீனம் மற்றும் மரியாதை மீறல் தயக்கத்திற்கான காரணம் என்று தலைவர் விவரித்தார்.

"அனைத்து உலகளாவிய பிரச்சனைகளின் போதும், 'வார்த்தைகள், செயல்கள் மற்றும் மற்றவர்கள் எடுத்த நடவடிக்கையை எதிர்கொள்ளும் போது' நாங்கள் கௌரவத்துடனும் எங்கள் கொள்கைகளுக்கு ஏற்பவும் செல்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

இமாம் காமனெய் "ஞானம்" என்பதன் அர்த்தத்தை "நன்கு சிந்தனைக்குரிய மற்றும் விவேகமான" பேச்சு மற்றும் நடத்தை என்று விவரித்தார்.

"வெளியுறவுக் கொள்கையில் அனைத்து நடவடிக்கைகளும் தர்க்கரீதியாகவும் ஆழமாக சிந்தித்து எடுக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். நன்கு திட்டமிட்டு எடுக்கப்படாத முடிவுகள் மற்றும் செயல்கள் சில நேரங்களில் நாட்டிற்கு தீங்கு விளைவித்துள்ளன."

புரட்சித் தலைவர் மற்ற தரப்பினரில் தேவையற்ற அவநம்பிக்கை "ஞானம்" என்ற கருத்தின் மற்றொரு அர்த்தமாக கூறினார். "நிச்சயமாக, அரசியல் உலகில் எல்லாவற்றையும் பொய்யெனக் கருதிவிடக் கூடாது, ஏனென்றால் உண்மை மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வார்த்தைகளும் அவற்றில் உள்ளன, இருப்பினும், சொல்லப்பட்ட அனைத்தையும் ஒரேயடியாக உண்மையென நம்பிவிடவும் கூடாது," என்று அவர் கூறினார்.

ஒரு பாதையில் தொடர்ந்து செல்லும்போது பல தடைகளை நாம் சந்திக்கலாம், கடும் பாறைகளைத் தாண்டிச் செல்ல வேண்டிய இடங்களும் இருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் சமயோசிதமான உத்தியை கொண்டிருப்பது என்பதே "நெகிழ்வுத்தன்மை" என்று தலைவர் தெளிவுபடுத்திய மற்றொரு முக்கியமான முக்கிய வார்த்தையாகும்.

"நெகிழ்ச்சியுடன் இருப்பது என்பது நீங்கள் கொள்கைகளை புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. நிச்சயமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு, 'வீர நெகிழ்வுத்தன்மை' என்ற வார்த்தையை நான் குறிப்பிட்டபோது, அது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. ஏனென்றால், நெகிழ்ச்சி என்பது கடினமான தடைகளைத் தாண்டி, உங்கள் இலக்கை அடையும் வரை பாதையைத் தொடர்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதாகும்." என்று அவர் அடிக்கோடிட்டுக் கூறினார்,

இமாம் காமனெய்  வெளியுறவுக் கொள்கையில் ஆறு கட்டாய விதிகளை விளக்கினார், "இந்த குறிகாட்டிகளுடன் இணங்குவது வெற்றிகரமான வெளியுறவுக் கொள்கையின் அடையாளமாகும், இந்த விதிகள் கவனிக்கப்படாவிட்டால், வெளியுறவுக் கொள்கை கோட்பாட்டில் அல்லது இராஜதந்திர செயல்பாடுகளில் சிக்கல்கள் ஏற்படும்."

தலைவர் கோடிட்டுக் காட்டிய முதல் கொள்கை, பல்வேறு பிரச்சினைகளின் போது நாட்டின் அணுகுமுறையின் பின்னணியில் உள்ள காரணத்தை திருப்திகரமான முறையில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் விளக்கும் திறன் ஆகும்.

மற்ற ஐந்து கொள்கைகள் பின்வருமாறு: "உலகின் பல்வேறு அரசியல்-பொருளாதார நிகழ்வுகள் மற்றும் நடப்புகளில் பயனுள்ள, நேரடியான இருப்பைக் கொண்டிருத்தல்; இஸ்லாமிய ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தும் கொள்கைகள் மற்றும் முடிவுகளை முறியடித்தல் மற்றும் அதன் தாக்கத்தைக் குறைத்தல்; அச்சுறுத்தும் மையங்களை பலவீனப்படுத்துதல்; ஈரானுடன் நட்புறவு கொண்டுள்ள அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளை வலுப்படுத்துதல்; நாட்டின் மூலோபாய திட்டத்தின் ஆழத்தை மேம்படுத்தி, பிராந்திய மற்றும் உலகளாவிய முடிவுகள் மற்றும் செயல்களில் மறைந்துள்ள அடுக்குகளைக் கண்டறியும் திறனைக் கொண்டிருத்தல்."

அண்டை நாடுகளுடன் தொடர்புகொள்வதற்கான தற்போதைய ஈரானிய நிர்வாகத்தின் கொள்கையை இஸ்லாமிய புரட்சியின் தலைவர் பாராட்டினார், இது சரியான மற்றும் முக்கியமான நடவடிக்கை என்று விவரித்தார். ஈரானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே வெளிநாட்டு சக்திகள் தீவிரமாக பிரச்சனைகளை உருவாக்கி வருகின்றன, இந்தக் கொள்கையில் அந்த சக்திகள் வெற்றிபெற நீங்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் எதிரிகளின் திட்டத்திற்கு மாற்றமாக, நமது அண்டை நாடுகளுடனும், இஸ்லாமிய நாடுகளுடனும், இஸ்லாமியக் குடியரசின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் நாடுகளுடனும் நீங்கள் உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தலைவர் குறிப்பிட்டார்.

தூரத்தொலைவில் அமைந்திருந்தாலும், ஒத்த கருத்துக் கொண்ட நாடுகளுடனும் மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் உறவைப் பேணுவது முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.  "இன்று இடம்பெற்றுவரும் சில நிகழ்வுகள் மற்றும் சர்வதேச அரசியலின் அடிப்படை மாற்று வழிகளில் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு உலகின் சில பெரிய மற்றும் முக்கியமான நாடுகளின் ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது. இது முன்பு இடம்பெற்றிராத ஒன்றாகும். மேலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அந்த நாடுகளுடனான உறவுகளை நாம் வலுப்படுத்த வேண்டும்," என்றும் தலைவர் குறிப்பிட்டார்.

தற்போதைய உலக ஒழுங்கில் மாற்றம் ஏற்பட்டு வருவது  தொடர்பாக உலகில் பலரும் தொடர்ச்சியாக எழுதி வருவதை சுட்டிக்காட்டிய தலைவர், "உலக ஒழுங்கில் மாற்றம் என்பது ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நீண்ட கால செயல்முறையாகும். மற்றும் சாத்தியமான எதிர்பாராத நிகழ்வுகளால் அது பாதிக்கப்படவும் செய்கிறது, மேலும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மற்றும் முரண்பட்ட கருத்துக்கள் மற்றும் அணுகுமுறைகள் உள்ளன" என்பதையும் தூதர்கள் சந்திப்பில் தலைவர் சுட்டிக்காட்டினார்.

உலகில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைக் கண்காணித்து மதிப்பீடு செய்வதன் மூலமும், நிகழ்வுகளின் சரியான திசையையும் திரைக்குப் பின்னால் நடப்பவற்றையும் அறிவதன் மூலமும் ஈரானை சரியான முறையில் புதிய ஒழுங்கு வரிசையில் வைப்பதன் அவசியம் பற்றி அவர் சுட்டிக்காட்டினார். "இந்த அவதானிப்பு மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில், நடைமுறை பரிந்துரைகள், வழிமுறைகள் காணப்பட வேண்டும். இந்த துறையில், குறிப்பாக செல்வாக்குமிக்க நாடுகளில் நமது தூதர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவின் தலைவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்."

வெளியுறவுக் கொள்கையின் முக்கியத்துவத்தையும், நாட்டின் நிர்வாகம் மற்றும் முன்னேற்றத்தில் அதன் முக்கியப் பங்கையும் இமாம் காமனெய் குறிப்பிட்டார். "நாட்டின் தற்போதைய நிலையை பகுப்பாய்வு செய்வதில் பொருளாதார மற்றும் கலாச்சார காரணிகளுக்கு கூடிய கவனம் செலுத்தப்பட்ட போதிலும், வெளியுறவுக் கொள்கை காரணி பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. ஒரு நல்ல மற்றும் வெற்றிகரமான வெளியுறவுக் கொள்கை நாட்டின் நிலையை நிச்சயமாக மேம்படுத்தும். மறுபுறம், வெளியுறவுக் கொள்கையில் குழப்பங்கள் மற்றும் சிக்கல்கள் இருப்பின், நாட்டின் பொதுவான சூழ்நிலையில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன," என்று இமாம் காமனெய் சுட்டிக்காட்டினார்.

புரட்சித் தலைவர், வெளிநாட்டில் உள்ள ஈரானின் பிரதிநிதிகளை ஈரானிய மக்களின் பிரதிநிதிகள் என்று விவரித்தார், அவர்களின் நடத்தை ஈரானிய தேசத்தின் அடையாளத்தையும் இயல்பையும் பிரதிபலிக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். "ஓர் ஈரானிய இராஜதந்திரி நம்பிக்கை, நாட்டுப்பற்று, உறுதிப்பாடு, பேரார்வம், சுறுசுறுப்பு மற்றும் கடின உழைப்பின் உருவகமாக இருக்க வேண்டும்,” என்றும் கூறினார்.

இந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில், ஈரானிய வெளியுறவு அமைச்சர், ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியான், தற்போதைய நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கைத் துறையின் நடவடிக்கைகள், திட்டங்கள் மற்றும் மாற்றங்களை உருவாக்குவதற்கான முன்னுரிமைகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தார்.

https://english.khamenei.ir/news/9783/Against-enemies-desires-maintain-policy-of-honorable-relations

 

No comments:

Post a Comment