Sunday, May 14, 2023

பலஸ்தீனை முழுமையாக விடுவிக்காது, இஸ்லாமிய ஈரான் ஓயப்போவதில்லை

Iran will not rest until Palestine is fully liberated

நக்பா தினம் என்றால் என்னவென்று இன்றளவிலும் அறியாத பலர் எம்மத்தியில் உள்ளனர். அவ்வாறானோருக்கு விடயத்தைத் தெளிவுபடுத்துவது எமது கடமையாகும்.

"நக்பா" என்பது "பேரழிவு" என்பதற்கான அரபு வார்த்தையாகும். 1948 ஆம் ஆண்டில் 700,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிஇஸ்ரேல் ஸ்தாபிக்க வழிவகுத்த தினம் “நக்பா தினம்” என்று அழைக்கப்படுகிறது.

ஐரோப்பாவில் யூதர்கள் சொல்லொனாத் துயரங்களுக்கு முகம் கொடுத்த போது, Gas chamber களில் கொல்லப்பட்ட போது பாலஸ்தீன அரபிகள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள், அரவணைத்தார்கள்.

காலப்போக்கில், ஐரோப்பாவில் இருந்து ஆயிரக்கணக்கில் என்று வந்தவர்கள் இலட்சக்கணக்காக, மில்லியன் கணக்காக என்று மாறியது. அடைக்கலம் ஆக்கிரமிப்பாக மாறியது; அடைக்கலம் கொடுத்தவர்கள் அடித்துத் துரத்தப்பட்டார்கள். மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர் சொந்த நாட்டிலும் அதற்கு வெளியிலும் அகதிகளாக்கப்பட்டார்கள்.

1948 இல் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் பல லட்சம் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகள் மற்றும் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 15 அன்று பாலஸ்தீனியர்களால் நக்பா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பாலஸ்தீனத்தில் (சட்டவிரோத) இஸ்ரேல் அரசை உருவாக்கியதைக் குறிக்கும் நக்பா தினத்தை இந்த ஆண்டு, வரலாற்றில் முதல் முறையாக, ஐ.நா. அனுஷ்டிக்கவுள்ளது.

"1948 ஆம் ஆண்டின் வரலாற்றுத் துரோகத்தை, நக்பாவை நினைவுகூர்வது நமது முன்னுரிமைகளில் முதன்மையானதாக இருக்க வேண்டும், அதை நாம் அனுஷ்டிக்க வேண்டும் இழைக்கப்பட்ட அநியாயத்தை முழு உலகிற்கும் தெரிவிக்க வேண்டும்" என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை மேற்கோள் காட்டியுள்ளது பாலஸ்தீனிய WAFA செய்தி நிறுவனம்.

"வரலாறு மற்றும் உண்மைகளை சிதைக்க முயற்சிக்கும் அனைத்து பொய்கள் மற்றும் தவறான கதைகளை எதிர்கொள்ள" இத்தினத்தை நினைவுகூருமாறு அனைத்து பாலஸ்தீனியர்களையும் அப்பாஸ் வலியுறுத்தினார்.

"இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாட்களில், எங்கள் நோக்கம், எங்கள் நிலம் மற்றும் நமது புனிதங்கள் முகம்கொடுத்துள்ள சவால்களை எதிர்கொள்ளவும், ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கும் எங்கள் திசைகாட்டியை மையப்படுத்துவதற்கும் எங்கள் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்குமாறு நாங்கள் அழைக்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

75 வது ஆண்டு நக்பா தினத்தின்” (பேரழிவு நாள்நிறைவைக் குறித்து ஆர்ப்பாட்டம் பலஸ்தீனின் எல்லா பாகங்களிலும் இடம்பெற்று வருகின்றன. அடிமைப்படுத்தும் மத்தியகிழக்கு நூற்றாண்டு சமாதானத் திட்டத்தை முறியடித்து,  பாலஸ்தீனியர்களின் முழுமையான விடுதலையை அடைவோம் என்று   விடுதலைப் போராளிகள் உறுதிபூண்டனர்.


பாலஸ்தீனம் பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமானது

அனைத்து பாலஸ்தீன நிலங்களும் பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமானது என்று நாங்கள் நம்புகிறோம். பாலஸ்தீனத்தை உலக வரைபடத்தில் இருந்து துடைத்தெறிய முயன்றவர்கள் தவறு செய்கிறார்கள். அப்படி ஒன்று நடக்காது.

சியோனிஸ்டுகள் பலவீனமடைந்து வருகின்றனர், அதே நேரத்தில் பாலஸ்தீன போராளிகள் வலுவடைந்து வருகின்றனர். அல்லாஹ்வை மிகைக்கும் எந்த சக்தியும் எங்கும் கிடையாது. பலஸ்தீனுக்கான எமது ஆதரவு தொடரும். பாலஸ்தீன இளைஞர்கள் தங்கள் சுய தியாகச் செயல்பாடுகளால் பாலஸ்தீனத்தின் தற்காப்புக் கவசமாகச் செயல்பட்டு வருகின்றனர் மேலும் அவர்கள் எதிர்காலத்திற்கான முன்னோடிகளாகவும் உள்ளனர்.

அபகரிப்பாளர்கள் பாலஸ்தீனத்தை சில தசாப்தங்களாக ஆக்கிரமித்துள்ளனர், ஆனால் பாலஸ்தீன நிலங்கள் மீட்டெடுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இது நிச்சயமாக நடக்கும். பாலஸ்தீன மக்கள் விழிப்புடன் உள்ளனர். பாலஸ்தீனத்தை பிரிக்க முடியாது. முழு பாலஸ்தீனம் பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமானது. ஈரான் இஸ்லாமியக் குடியரசு பாலஸ்தீனப் பிரச்சினைக்கான தீர்வை கொண்டுள்ளது. பாலஸ்தீனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் முன்வைக்கும் தீர்வுகள் அல்ல. இத்தகைய தீர்வுகள் பயனற்றதாக இருக்கும், என்று ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனெய் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனை முழுமையாக விடுவிக்காது,  இஸ்லாமிய ஈரான் ஓயப்போவதில்லை என்பதில் ஈரானிய தலைவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

இஸ்லாமிய உம்மத்தின் எதிரிகளுடன் எந்த சமரசமும் செய்துகொள்வது, நிறவெறி சியோனிச அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற செயல்களையும் மனித உரிமை மீறல்களையும் ஊக்குவிக்கும் செயலாகும், இதையே வரலாறு எமக்கு புகட்டிக்கொண்டிருக்கிறது. பாலஸ்தீன மக்களின் உரிமைகளை அடைவதற்கான ஒரே வழி இஸ்லாமிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் உலகின் சுதந்திரம் தேடும் அரசாங்கங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் கொடுமைப்படுத்தும் சக்திகளுக்கு எதிராக முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பேணுவது மட்டுமே என்பதை முஸ்லிம் நாடுகளும் தலைவர்களும் அறிந்து கொள்ள வேண்டும், என்று ஈரானின் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் "இஸ்லாமிய ஒற்றுமை ஊடாக நிச்சயமாக இஸ்ரேலிய ஆட்சியை மண்டியிடச்செய்ய  முடியும்" என்று குறிப்பிட்டுள்ளது.

லெபனான் எதிர்ப்பு இயக்கமான ஹிஸ்புல்லாஹ் காஸா பகுதிக்கு எதிரான சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதலை கண்டித்துள்ளது மற்றும் இஸ்ரேலிய ஆட்சியுடன் மோதலில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கங்களுக்கு முழு ஆதரவையும் உறுதியளித்துள்ளது.

லெபனான் எதிர்ப்பு இயக்கமான ஹிஸ்புல்லாஹ் காஸா பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களை "மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்" என்று கண்டித்தது, நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேலிய குற்றங்களைத் தடுக்க மனித உரிமை அமைப்புகளை வலியுறுத்தியது.

1948 இல் இஸ்ரேல் அரசு ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னும் பின்னும் நூறாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களின் கட்டாய இடப்பெயர்ச்சியை விவரிக்கப் பயன்படுத்தப்படும் பாலஸ்தீனிய நக்பாவை அங்கீகரிக்கும் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரஷிதா த்லைப் அறிமுகப்படுத்தினார்.

ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ரஷிதா த்லைப் அமெரிக்க காங்கிரஸில் உள்ள பல முற்போக்குவாதிகளில் ஒருவராவார்அவர்கள் இஸ்ரேலை விமர்சிப்பதில் வெளிப்படையாகப் பேசுகிறார்கள் [கோப்பு: சாரா சில்பிகர்/ராய்ட்டர்ஸ்]

புதனன்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட இந்த நடவடிக்கை, பாலஸ்தீனிய உரிமைகளை முன்னேற்றுவதற்கும், இஸ்ரேலுக்கான அமெரிக்க உதவிகளை கட்டுப்படுத்துவதற்கும் அமெரிக்காவில் உள்ள முற்போக்குவாதிகளின் அதிகரித்து வரும் உந்துதலுக்கு மத்தியில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் இந்த அடாவடித்தனத்தை தடுத்துநிறுத்த உலகின் ஒன்றுபட்ட, தீர்க்கமான நடவடிக்கையே இப்போது அவசியமாகும்.


'ஏழு தசாப்த இஸ்ரேல் உலக வரைப்படைத்தில் இருந்து அழிக்கப்படும்' என்று ஈரானிய ஜனாதிபதி சொன்னதற்கு முழு ஐரோப்பாவும் கொதித்து எழுந்தது; ஆயிரம் வருடத்துக்குமேல் உலக வரைப்படத்தில் இருந்த பாலஸ்தீன் எங்கே என்று கேட்பதற்கு நாதியில்லை.

- தாஹா முஸம்மில் 


No comments:

Post a Comment