Saturday, May 9, 2020

சியோனிச பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் பிற்போக்கு அரபு ஆட்சிகள்



புனித ரமலான் மாதத்தில் ஒளிபரப்பப்படும் இரண்டு சவுதி தொலைக்காட்சித் தொடர்கள் அரபு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன, ஏனெனில் இஸ்ரேல் தொடர்பான அறபு மக்களின் கருத்துக்களை மாற்றும் முயற்சி, தொடரின் பின்னணியில் இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



துபாயை தளமாகக் கொண்ட, சவுதிக்குச் சொந்தமான எம்பிசி (MBC Network) நெட்வொர்க்கும் பாலஸ்தீனியர்களை அதன் திட்டங்களில் எதிர்மறையான நிலைக்குத் தள்ள முயற்சித்ததற்காக கடும் விமர்சனங்களைப் எதிர்கொண்டுள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சியோனிஸ்ட்டுகள் பல தசாப்தங்களாக பாலஸ்தீனிய மற்றும் அரபு பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்த போதிலும், பாலஸ்தீனியர்களை அதன் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் மோசமாக துஷ்பிரயோகம் செய்த போதிலும், சியோனிச இஸ்ரேலுடன் "சுமுக உறவை ஊக்குவிப்பதாக" சவுதிக்கு சொந்தமான எம்.பி.சி நெட்வொர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது என்று அல்ஜஸீரா இணைதளம் குறிப்பிடுகிறது. https://www.aljazeera.com/news/2020/05/saudi-tv-shows-spark-uproar-promotion-israel-200506174943064.html?

கடிகாரங்கள் இஸ்ரேலின் நெருங்கி வரும் முடிவை காட்டுகின்றன. உலக வரைபடத்திலிருந்து அதன் அழிப்பையும் நோக்கி நகர்வதை உணர்ந்த  சியோனிஸ்டுகள் லண்டன் மற்றும் வாஷிங்டனில் உள்ள தங்கள் காட்பாதர்களின் ஆதரவோடு வாழ்வை நீடிப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எவ்வாறாயினும், உலக நாடுகளை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதற்கும் அவர்களின் பொருளாதாரங்களை கையாளுவதற்கும் ஒரு இனவெறி / பயங்கரவாத சித்தாந்தமாக இருக்கும் சியோனிசம் உண்மையான யூத மதத்தின் ஏகத்துவ கொள்கைக்கு மாற்றமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதே சூழலில், தீர்க்கதரிசிகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்றி ஓரிறை விசுவாசத்தின் உறுப்பினர்களாக உள்ள யூதர்கள், ஈரான் இஸ்லாமிய குடியரசில் ஆயிரக்கணக்கானோர் நிம்மதியாக வாழ்கின்றனர், தங்கள் சடங்குகளை தங்கள் ஜெப ஆலயங்களில் கடைப்பிடிக்கின்றனர், தேசிய நாடாளுமன்றத்தில் தங்கள் சமூகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த முறை, தங்களது புதிய அரபு உறவினர்கள், திறந்த இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு முன்னோடியாக, சியோனிச சார்பு தொலைக்காட்சி சீரியல்களின் வடிவத்தில் கலாச்சார ஊடுருவல் மற்றும் வர்த்தக தொடர்பு, இறுதியாக அரசியல் கூட்டாண்மை ஆகியவற்றின் மூலம் அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற அவர்களின் நூற்றாண்டு கால கனவை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கை முத்தத்தை அளிப்பார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அரபு ஆட்சியாளர்களைப் போல் அல்லாது, அரபு மக்கள் அதற்கு ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

சியோனிஸம் யூதர்கள் மற்றும் யூத மதத்தின் பிம்பத்தை கெடுக்க முயற்சிக்கிறது, சியோனிசமும் சியோனிசவாதிகளும் சாத்தானிய கூறுகள் என்பதற்கு இது மறுக்கமுடியாத சான்றாகும். அதேபோல் நமது பிராந்தியத்தில் சில அரபு ஆட்சிகள் முஸ்லிம்களின் மற்றும் இஸ்லாத்தின் மகத்துவத்தை சிதைக்க முயற்சிக்கின்றன. ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களைக் காட்டிக் கொடுக்கும் சாத்தானிய கொள்கைகள் மற்றும் அல்-குத்ஸின் விடுதலையின் குறிக்கோளை மறந்து, சட்டவிரோத இஸ்ரேலுடன் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் கூடிக்குலாவுகின்றனர்.

தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும் 'ரமலான் ஸ்பெஷல்' சீரியல்கள் நிச்சயமாக அரபு ஊடகங்களால் கூறப்படும் இடைக்கால புரிந்துணர்வை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் அல்ல; அது இஸ்ரேலுக்கு கதவு திறக்கும் பிற்போக்குத்தனமான முயற்சிகளில் ஒன்றாகும்.

"
உம் ஹாரூன்" அல்லது "ஆரோனின் தாய்" என்ற தொலைக்காட்சி நாடகம், அரபு நாடுகளில் பொதுமக்களை மூளைச்சலவை செய்வதற்காக சவூதி அரசின் அங்கீகாரத்துடனும் அனுசரணையுடனும் அரங்கேறி வருகிறது. இந்த நிகழ்ச்சி சவூதி அரேபியாவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள அரபு உலகின் மிகப்பெரிய தனியார் ஒளிபரப்பு நிறுவனமான MBC யினால் ஒளிபரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அதே நெட்வொர்க் "மக்ரஜ் 7" என்ற ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியையும் ஒளிபரப்புகிறது, இது சட்டவிரோதமான இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான அரபுலகின் வரலாற்று ரீதியாக நியாயமான போராட்டங்களை, அணுகுமுறைகளை கொச்சைப்படுத்துகிறது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற பேரில் தங்கள் சியோனிச சார்பு பிரச்சாரத்தை பரப்புவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

நகைச்சுவை நிகழ்ச்சி, "மக்ரஜ் 7" (வெளியேறு 7) - தேவையற்ற உரையாடலைத் தவிர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சவுதி பேச்சு வழக்கு (ஸ்லாங்) சொல் - அரபு மக்களின் நீண்டகால கருத்துக்களை, இஸ்ரேலைக் கைப்பற்றுவது, பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலை போன்ற விடயங்களை வேடிக்கையாக சித்தரித்து காட்டுகிறது என்பது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு எதிரான சியோனிஸத்தின் வடிவமைப்புகளை வெளிப்படையாகவே சிலாகித்து காட்டுகிறது.

பிரபல பாலஸ்தீனிய பத்திரிகையாளர் அப்தெல் பாரி அத்வானின் கூற்றுப்படி: "வருந்தத்தக்கது, இந்த ரமழான் விரைவில் மறக்கப்படாது, ஏனெனில் இது சவூதி ஊடகங்களால் இயக்கப்படும் ஒளிபரப்பு நிறுவனங்களால், அரசாங்கத்தின் உதவியுடன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசுடன் இணங்கிச்செல்லும் மிகப்பெரிய துரோக  பிரச்சாரத்திற்கு சாட்சியாக உள்ளது.

பலஸ்தீன் விடயத்தில் வரலாற்றுத் துரோகமிழைத்த சவூதி அரேபியா இப்போது பலஸ்தீன் விடுதலைப் போராட்டத்தை நக்கலும் நையாண்டியுமாக சித்தரிக்கிறது. இது அரபுலகை கொதிக்கச் செய்துள்ளது.

சட்டவிரோத சியோனிச ஆட்சி, அதன் போலி கலாச்சார பிரச்சாரங்கள் மூலம் அதன் இருப்புக்கு சட்டபூர்வமான தன்மையை வழங்குவதில் அதன் ஸலபி மச்சான்மார்கள் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள் என்று கருதுகின்றது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் மீதான தங்கள் ஆட்சியாளர்களின் அடிமை மனப்பான்மையை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாத, பிராந்தியத்தில் அரபு முஸ்லிம்கள் மத்தியில் வளர்ந்து வரும் மனக்கசப்பைக் கருத்தில் கொண்டு நோக்கும்போது இந்த சியோனிச-அரபிகளின் சல்லாபம் குறுகிய காலத்தில் அடங்கிவிடும் என்றே தோன்றுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இஸ்ரேலின் அழிவு காலம் மிக  வேகமாக நெருங்கி வருகிறது, அதோடு அரபு மக்களின் எண்ணெய் செல்வத்தை கொள்ளையடித்து தனிப்பட்ட இன்பங்களுக்காகவும் அமெரிக்காவினதும் பிரிட்டனினதும் நன்மைக்காகவும் அதைப் பயன்படுத்தும் ஆட்சியாளர்கள் மேலும் செய்த காரியம் என்னவென்றால் சிரியா மற்றும் ஈராக்கை ஸ்திரமின்மைக்கு இட்டுச்செல்வதற்காக பயங்கரவாதிகளுக்கு நியளிப்பதும் மற்றும் சக அரபு நாடான யேமன் மீது போரை திணித்ததுமாகும்.

பலஸ்தீனர்களை ஈராக்கில் குடியேற்றும் அமெரிக்க திட்டம்

இது இவ்வாறிருக்க, நூற்றாண்டின் ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் அமெரிக்க சூழ்ச்சி திட்டத்தை ஈராக்கின் சில பகுதிகளில் அமல்படுத்துவதற்கு வழி வகுத்து வருவதாக ஈராக் பாதுகாப்பு இயக்கம் அசாப் அஹ்ல் அல்-ஹக் செவ்வாயன்று எச்சரித்தது. இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களை அங்கு குடியேற்ற திட்டமிட்டுள்ளது என்றும் அது கூறியது.

ஈராக்கில் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கப் படைகள் ஒத்துழைக்கின்றன என்பதற்கு தமது இயக்கம் மறுக்கமுடியாத ஆணித்தரமான ஆதாரங்களைக் கொண்டுள்ளது என்று தஸ்னிமுக்கு அளித்த பேட்டியில் ஆசாஹிப் அஹ்ல் அல்-ஹக் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் அல்-ரபீ கூறினார்.

"இந்த சூழ்ச்சியை நடைமுறைப்படுத்துவதற்காக, ஈராக்கின் சில பகுதிகளை மேற்கு மற்றும் அல்-அன்பார் நுழைவாயில்களாக மாற்ற அமெரிக்கா (சில பிற்போக்குவாத அரபு தலைவர்களுடன் இணைந்து) முயற்சிக்கிறது. இந்த திட்டத்தின் படி, நூற்றாண்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட பாலஸ்தீனர்கள் அல்-அன்பார் மாகாண மேற்கு பகுதிகளுக்கு மாற்றப்படுவார்கள்”.

பலஸ்தீனும் ஈராக்கும் அமெரிக்காவின் சொல்லுக்கு ஆடும் பொம்மைகள் அல்ல என்பதை அவர்கள் வெகு விரைவில் உணர்ந்துகொள்வார்கள்.

No comments:

Post a Comment