Truths about the IRGC, which the mainstream media doesn’t
want you to know about
ஐ.ஆர்.ஜி.சி
எனப்படும் இஸ்லாமிய புரட்சி காவல் படையினது நற்பெயருக்கு களங்கம் கற்பித்து, அதன் படத்தை
சிதைத்து உலகுக்கு சித்தரிக்கவும், அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து அதனது செயல்பாடுகளைத்
தடுக்கவும் வல்லாதிக்க சக்திகள் முயற்சி செய்கின்றன. ஆனால், பல நாடுகள் தங்கள் நாட்டில் மக்களை அணிதிரட்டுவதற்கு ஐ.ஆர்.ஜி.சியை
ஒரு முன்மாதிரியாக தேர்வு செய்ய என்ன காரணம்?
ஐ.ஆர்.ஜி.சி, 80 மில்லியன் பங்குதாரர்களைக் கொண்ட ஓர்
அமைப்பாகும்.
அதன் நோக்கம்
"இஸ்லாமிய புரட்சியைப் பாதுகாத்தல்" என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய குடியரசின் மறைந்த நிறுவனர் இமாம் கோமெய்னி (ரஹ்) அவர்கள்,
“புரட்சி அதற்கே
உரிய இயல்பான வளத்தில் செழித்து வளரும், இவ்வியக்கம் அதன் பாதையை கண்டுபிடிக்கும்.
புரட்சியுடன் இணைந்திருக்கும் சக்திகளும் அமைப்புகளும் இறைவனை மட்டுமே நம்பி
தங்கள் கடமைகளைச் சிறப்பாகச் செய்ய வேண்டும். அவர்கள் மக்களுடன் மக்களாக இருந்து
அவர்களுக்காக சேவைகளை செய்ய வேண்டும்.”[1] வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,
இறைவனில்
நம்பிக்கை வைத்தல், ஒருவரின் கடமைகளை நிறைவேற்றுவது மற்றும் மக்களுக்கு உதவுவது ஆகியனவே
புரட்சியைப் பாதுகாப்பதற்கான வெளிப்படையான காரணிகளாக அமையும் என்று அவர்
கருதினார்.
இந்த
தீர்க்கதரிசனமாக ஆலோசனைகள் சக்திவாய்ந்த ஒரு குறிக்கோளாகப் பயன்படுத்தப்பட்டன,
இது
வெளிப்பார்வைக்கு ஓர் இராணுவ அமைப்பாக தோன்றிய போதும்,
உண்மையில் இது
ஒரு இராணுவ படையணி அல்ல. இது ஒரு சமூக அமைப்பே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது
மக்களைப் பாதுகாப்பதையும் அவர்களுக்கு முன் இருக்கும் பிரச்சினைகளை மற்றும்
சவால்களை அடையாளம் கண்டு அவற்றை வெற்றிகொள்ளும்
செயற்பாட்டை கொள்கையாகக் கொண்டுள்ளது.
இது
ஐ.ஆர்.ஜி.சி தொடர்பான சுருக்கமான அறிமுகமாகும். இந்த கட்டுரை ஐ.ஆர்.ஜி.சி ஒரு
இராணுவ சக்தியாக அல்லாமல் மக்கள் ஒன்றிணைந்த ஓர் அமைப்பாக நிறுவப்பட்ட ஆண்டு
நிறைவையொட்டி, அதன் அடையாளத்தையும் செயல்திறனையும் எடுத்துரைப்பதன் மூலம் முக்கியமாக பின்வரும்
கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறது, முதல் கேள்வி, "நான்கு தசாப்தங்களாக செயல்பட்டு வரும்
ஐ.ஆர்.ஜி.சி யினது அடைவுகள் என்ன." இரண்டாவது கேள்வி,
"கட்டுமானம்,
வறுமையொழிப்பு
மற்றும் அதன் இடையறா பொதுப்பணி ஆகியன அதன் குறிக்கோள்களுடன் எவ்வாறு தொடர்பு
படுகின்றன.?
ஐ.ஆர்.ஜி.சியை
நிறுவுவதன் அவசியம்
இஸ்லாமிய
புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் புரட்சிகர செயற்பாட்டாளர்களைக் கொண்ட ஒரு படையணி
நிறுவ வேண்டியதன் அவசியம் ஆரம்ப சில மாதங்களிலேயே உணரப்பட்டது. ஈரானுக்குள்,
வெளிநாட்டு
சக்திகளால் பணியமர்த்தப்பட்ட புரட்சிக்கு எதிரான குழுக்கள் பல பகுதிகளில்
அமைதியின்மையை ஏற்படுத்தின. புரட்சியின் முக்கிய ஆளுமைகளை கொன்றொழிப்பது
அத்தகைய குழுக்களின் முக்கிய பணியாக இருந்து வந்தது. அதேசமயம்,
புரட்சியின்
உண்மையான உரிமையாளர்களுக்கு - அதாவது
மக்கள் - வறுமையை ஒழிப்புக்காக அளிக்கப்பட வாக்குறுதியை நிறைவேற்றவும் மற்றும்
அதன் விரிவான குறிக்கோள்களை அடைவதற்கும் குறிப்பிட்ட இலக்குகளைத் நோக்கி
தொடர்வதற்குமான ஒரு குழுவை உருவாக்க வேண்டிய அவசியத்தை அக்காலம் உணர்த்தியது.
மேலும், இஸ்லாமிய புரட்சியின் வெற்றியின் ஆரம்ப நாட்களிலிருந்து, புதிதாக உருவாக்கப்பட்ட இஸ்லாமிய குடியரசின்
உதவியையும் ஆதரவை பெறும் நோக்கத்துடன் பிராந்தியத்தில் பிரபலமான காலனித்துவ எதிர்ப்பு
மற்றும் சர்வாதிகார எதிர்ப்பு இயக்கங்களிலிருந்து இஸ்லாமிய குடியரசிற்கு செய்திகள்
கிடைத்தவண்ணம் இருந்தன. பிராந்தியத்தில் அமெரிக்காவின் அடிவருடி
ஆட்சியாளர்களை அகற்றுவதில் இஸ்லாமிய புரட்சியாளர்களின் அனுபவத்திலிருந்து பாடம்
பெற்று அவர்கள் பயனடைய விரும்பினர்.
இது குறிப்பாக
கிழக்கையோ, மேற்கையோ சாராது இஸ்லாமிய புரட்சி பெற்ற வெற்றி காரணமாக சர்வதேச அளவில்
அது பெற்றிருந்த நற்பெயர் மற்றும் அதன் முக்கிய குறிக்கோளின் ஒரு பகுதியாக
ஒடுக்கப்பட்ட நாடுகளை ஆதரிப்பதற்கான அதன் அர்ப்பணிப்பு காரணமாக இஸ்லாமிய அரசின்
மீது நம்பிக்கை வைத்தனர்.
இஸ்லாமிய
புரட்சி வெற்றியை தொடர்ந்து, அதன் இலக்குகளை அடைவதற்கும் இராணுவ அல்லது
இராணுவமற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் ஒரு சக்தி அல்லது கரு இருக்க
வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்தியது.
மேற்கத்திய
நாடுகளின் தூண்டுதலின் பேரில், அவற்றின் நேரடி ஆதரவைக் கொண்டு சதாம் ஈரான்
மீது ஒரு போரை திணித்தார். சதாமின் ஆக்கிரமிப்பை முறியடிக்கும் போராட்டத்தில்
இராணுவத்தின் பகுதியாக செயல்பட்ட
ஐ.ஆர்.ஜி.சிக்கு ஒரு சிறப்பு இருப்பைக் கொடுத்தது. ஐ.ஆர்.ஜி.சி உருவான 1979
மே மாததிலிருந்து ஒரு வருடம் கழித்து, ஈரானுக்கு எதிரான எட்டு ஆண்டு போர் 1980 ல்
வெடித்தது.
போரின்போது
ஈரானுக்கு எதிராக கிழக்கு மற்றும் மேற்கு முகாம்களால் விதிக்கப்பட்ட கடும்
பொருளாதாரத் தடைகள் காரணமாக, ஐ.ஆர்.ஜி.சி நாட்டின் இராணுவத் தேவைகளில் பங்களிப்பு செய்யவும், நாட்டை காக்கும் பணியில் யுத்தமுனையில்
போராடவும் நிர்பந்திக்கப்பட்டது. இந்த கடும் பொருளாதாரத் தடைகள் தற்போதைய காலம்
வரை வீரியத்துடன் தொடரும் ஒரு பெரும் பிரச்சினையாகும்.
இருந்தும்,
உக்கிரமான போர்
நடக்கும் நாட்களில் கூட, ஐ.ஆர்.ஜி.சி சமூகப் பகுதிகளில் அதன் கட்டுப்பாடுகள் குறித்து மறக்கவில்லை.
வறுமையை எதிர்த்துப் போராடுவது, வறியவர்களுக்கு உதவுதல்,
கல்வியறிவு
இயக்கத்தை மேலும் மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். மக்கள் இயக்கம் என்ற அதன்
அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டிய அவசியம்
மற்றும் நாட்டை பாதுகாக்கும் அதன் பொறுப்புடன் படைகளை வழிநடத்தி நிர்வகிக்கும் ஒரு
புதிய மாதிரியின் பிறப்புக்கு வழிவகுத்தது. இந்த மாதிரியானது உலகில்
நிறுவப்பட்டுள்ள இராணுவ மரபுகளை எந்த
வகையிலும் ஒத்திருக்கவில்லை.
இந்த
மாதிரியின் அடிப்படையில்தான் இராணுவ அணிகள் இஸ்லாமிய புரட்சிகர காவல்படைகளில்
(ஐ.ஆர்.ஜி.சி) முடிவெடுக்கும் வரிசைமுறையைக் காட்டுகின்றன. போரென்று வரும்போது,
தளபதிகள்,
வெறும் கட்டளை
பிறப்பிப்போராக மட்டுமல்லாமல், தங்கள் வீரர்களையும் படைகளையும் விட முன்
வரிசையில் நின்று போராடுகிறார்கள். ஒரு போர் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது
ஐ.ஆர்.ஜி.சி , தளபதிகள் தங்கள் வீரர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
இந்த சிறப்பு
அம்சங்கள்தான் தான் அடுத்தடுத்த தசாப்தங்களில் லெபனான், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள மக்கள்
படைகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது. சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு குழுக்களைச்
சேர்ந்தவர்களும் அவர்களுடன் சேர இது ஊக்குவித்துள்ளது. இந்த பெருமானங்கள்தான்
அதன் ஈர்ப்பைப் பாதுகாத்து வருகிறது, மேலும் பிராந்தியத்திலும் உலகிலும் உள்ள
உன்னதமான படைகளில் தனித்துவமானது என்பதையும் நிலைநிறுத்தி உள்ளது.
இந்த சிறப்பின்
காரணமாக ஐ.ஆர்.ஜி.சி பஸீஜில் ஒருவராக இருப்பது என்பது ஒருவர் கற்பனை செய்யக்கூடிய
மிக உயர்ந்த தரவரிசை ஆகும்.
இரண்டாம்
கட்டம்
- போருக்குப்
பிந்தைய சகாப்தம் மற்றும் நாட்டின் அபிவிருத்தி பணியில் கவனம் செலுத்துதல்
ஈரானுக்கு
எதிரான எட்டு ஆண்டுகால யுத்தம் முடிவடைந்த நிலையில்,
நாட்டில்
இரண்டு பாரிய சவால்களை வெற்றிகொள்ள வேண்டிய நிர்பந்தம் உணரப்பட்டது. முதலாவதாக, யுத்தத்தின் காரணமாக ஈரானின் தெற்கு மற்றும்
மேற்கு பகுதிகளில் கணிசமான சேதங்கள் ஏற்பட்டிருந்தன;
அவற்றை
புனரமைத்தல். இரண்டாவது, போரினால்
ஏற்பட்ட சேதங்களை சரிசெய்வதற்கான மகத்தான திறன்கள்,
ஆற்றல்கள்
மற்றும் அனுபவங்கள் பெற்ற ஒரு சக்தியின் இருப்பின் அவசியம். மேலும்,
போருக்கு
முன்னர் கவலைக்குரியவையாக இருந்த தொடர்ச்சியான விஷயங்கள் மற்றும் சிக்கல்களில்
அதிக கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால்
போருக்குப் பின்னர் அவற்றைக் கவனிக்க அதிக நேரம் இருந்ததால் அவற்றைக் கையாள
அதிக காலம் செல்லவில்லை. ஐ.ஆர்.ஜி.சி அதன் "காத்தம் அல்-அன்பியா கட்டுமானத்
தலைமையகம்" ஊடாக கட்டுமானம், பொறியியல்
மற்றும் பொருளாதார நடவடிக்கைளில் தம்மை அர்பணித்து செயல்பட்டது.
இந்த துறைகளில்
ஈடுபட வேண்டியதன் அவசியத்தை ஐ.ஆர்.ஜி.சி உணர்ந்ததற்கு மற்றொரு காரணம், வெளிநாட்டு எதிரிகள் இராணுவ மோதலில் இருந்து
நாட்டிற்கும் ஈரான் மக்களுக்கும் எதிரான தங்கள் பகைமையை பொருளாதார மோதலுக்கு
மாற்றியிருந்தனர். இந்த பகுதியில் ஐ.ஆர்.ஜி.சியின் நோக்கம்
வெறுமனே கட்டுமானத் திட்டங்களை நிறைவேற்றுவதல்ல, மாறாக வெளிநாட்டினர் விதித்த மற்றும்
உருவாக்கிய பொருளாதாரத் தடைகள் மற்றும் சிக்கல்களால் தனியார் மற்றும் அரசுத்
துறைகளால் முறியடிக்க முடியாத தடைகளை நீக்குவதாகும். தனது சொந்த
சக்திகள், வளங்கள் மற்றும் திறன்களை நம்பியே இதைச் செய்ய வேண்டி இருந்தது.
போரின் காரணமாக
ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தன - பொருளாதாரத் தடைகள் காரணமாக,
வெளிநாட்டு
ஒப்பந்தக்காரர்கள் ஈரானுடன் மீண்டும் ஒத்துழைத்து செயல்பட தயாராக இருக்கவில்லை
என்பதும் கவனிக்கத்தக்கது. போரின் பொல்லாத
வேதனையிலிருந்து விடுபட்ட நிலையில் மீள்கட்டுமானத்தின் கடுமையான தேவை மற்றும்
தேசத்தின் அதிகரித்துவரும் ஏனைய தேவைகள், ஐ.ஆர்.ஜி.சியை அத்தகைய துறைகளில் தீவிரமாக
ஈடுபடுவதற்கு தள்ளியது. குறுகிய காலத்துக்குள் 1,800 க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு மற்றும்
பாரிய திட்டங்களை நிறைவேற்றுவதில் அது வெற்றி அடைந்தது,
அதன்
செயல்திறன் காரணமாக ஓர் உன்னத சாதனையை சரித்திர சான்றில் பதிவு செய்ய இதனால் முடிந்தது.
இன்று, ஐ.ஆர்.ஜி.சியின் காத்தம் அல்-அன்பியா
கட்டுமானத் தலைமையகம் சாலைகள் மற்றும் அணைகள் அமைத்தல், சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுதல், எண்ணெய் தளங்களை நிர்மாணித்தல் போன்ற
துறைகளில் விரிவான திறன்களைக் கொண்டுள்ளது.
காத்தம்
அல்-அன்பியா கட்டுமானத் தலைமையகம் கார்கே, வடக்கு அஸாடேகன் மற்றும் திமாப்-சாங்குலாஹ் எண்ணெய் வயல்களை
விரிவுபடுத்தும் மூன்று முக்கிய திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
தென் பார்ஸ்
சுத்திகரிப்பு நிலையங்களின் 2, 3, 4, 5, 15 மற்றும் 16
கட்டங்களை
விரிவுபடுத்துதல்,
கச்சா எண்ணெயை
ரேயிலிருந்து தப்ரிஸ் வரை செலுத்துதல், மஹ்ஷாஹர் எண்ணெய் சேமிப்பு மையத்தை உருவாக்குதல், தப்ரிஸில் சேமிப்பு தொட்டிகளை வடிவமைத்தல், கட்டமைத்தல் மற்றும் அமைத்தல் ஆகியவை அதன்
பிற சாதனைகளில் சில.
மஹ்ஷாஹர்
எண்ணெய் சேமிப்பு மையத்தை உருவாக்குதல், தப்ரிஸ்,
அஹ்வாஸ்
மற்றும் யசுஜ் ஆகிய இடங்களில் சேமிப்பு தொட்டிகளை வடிவமைத்தல், கட்டமைத்தல் மற்றும் நிறுவுதல், ஷஹீத் சலீமி நேகா மின் நிலையத்தில் 32,000 கன மீட்டர் எரிபொருள் தொட்டிகளை அமைத்தல், டோம்பக் துறைமுகத்தில் எல்.என்.ஜி மற்றும்
எல்.பி.ஜி தொட்டிகளை வடிவமைத்தல், கட்டமைத்தல் மற்றும் நிறுவுதல், நாட்டின் 11
நகரங்களில் 424 ஆயிரம் கன மீட்டர் திறன் கொண்ட பெட்ரோலிய
பொருட்களுக்கான 23
சேமிப்பு
தொட்டிகளை வடிவமைத்தல்,
கட்டமைத்தல்
மற்றும் நிறுவுதல்,
மற்றும்
இஸ்பஹான் சுத்திகரிப்பு நிலையத்தில் 100,000 பீப்பாய்களை சேமிக்கக்கூடியதான 6
தொட்டிகளை வடிவமைத்தல், கட்டமைத்தல் மற்றும் நிறுவுதல்.
அணைகள் கட்டும்
பகுதியில்,
காத்தம்
அல்-அன்பியா கட்டுமானத் தலைமையகத்தால் கட்டப்பட்ட அணைகளின் திறன் 15 பில்லியன் கன மீட்டருக்கு மேல் உள்ளது. 221 நீர் பரிமாற்ற சுரங்கங்கள், 3,000 கி.மீ.க்கு மேற்பட்ட நீர் விநியோக குழாய்கள், 10 க்கும் மேற்பட்ட பெரிய துறைமுகம் மற்றும்
கடலோர கட்டுமானத் திட்டங்கள் மற்றும் சுரங்கத் தொழில்துறையில் விரிவான
செயல்பாடுகள்,
ஒரு இரும்பு
ஆலை அமைத்தல் உட்பட. பல துறைகளில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு ஐ.ஆர்.ஜி.சி சாதனை
புரிந்துள்ளது.
வறுமை ஒழிப்பு,
ஐ.ஆர்.ஜி.சியின் நிரந்தர பொறுப்பு
நாடு முழுவதும்
அதன் பாரிய கட்டுமான மற்றும் மேம்பாட்டுத்
திட்டங்களுக்கு இணையாக,
வறுமை
ஒழிப்பும் ஐ.ஆர்.ஜி.சியின் நிகழ்ச்சி நிரலில் முதலிடத்தில் உள்ளது. நாட்டின்
தேவைகள் காரணமாக ஐ.ஆர்.ஜி.சி கட்டுமான திட்டங்களில் நுழைந்தாலும்,
நாட்டு
மக்களின் நலன் கருதி, புரட்சியின் முக்கிய பணிகள் மற்றும் குறிக்கோள்களில் ஒன்றான வறுமை ஒழிப்பில்
அது தனது பங்கைக் செலுத்தி வருகிறது. தற்போதுள்ள புள்ளிவிவரங்களின்படி,
இது 296க்கும்
மேற்பட்ட நீர் வழங்கல் திட்டங்களையும் 288 சாலை கட்டுமான திட்டங்களையும் இன்று வரை
முன்னெடுத்து வருகிறது. மேலும் இது 235 கல்விக்கூடங்கள்,
207 விளையாட்டு
காம்ப்ளெக்ஸ்கள் மற்றும் 191 சுகாதார மையங்களையும் கட்டியுள்ளது.
இன்னும் இது 3,000க்கும் மேற்பட்ட கலாச்சார மையங்கள்,
நூலகங்கள்
மற்றும் பள்ளிவாசல்களை அமைத்துள்ளதுடன் வறியவர்களுக்கான 159 வீட்டுத் திட்டங்கள்
மற்றும் 113 பாலம் கட்டுமானத் திட்டங்களையும் தொடங்கியுள்ளது. மேலும்,
21க்கும்
மேற்பட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி பண்ணைகள், 28க்கும் மேற்பட்ட நீர் விநியோக நிலையங்கள்,
435 கி.மீ மின்
இணைப்புகள் மற்றும் 102 கிராமப்புற கூட்டுறவு அமைப்புகளை நிறுவுவதிலும்
ஈடுபட்டுள்ளது. மேலும், விவசாய நிலங்களை செயல்படுத்துவதற்காக 602
நீர் கிணறுகளை தோண்டியுள்ளதுடன் மேலும் 548 கிணறுகளுக்கு தேவையான உபகரணங்களை
வழங்கியுள்ளது. மேலும், 500 கி.மீ க்கும் அதிகமான நீர்ப்பாசனக்
கால்வாய்களைக் அமைத்துள்ளதுடன், 56 ஆயிரம் சதுர கி.மீ க்கும் அதிகமான
நிலத்தை செப்பனிட்டு, விவசாய மற்றும் கட்டுமானத் திட்டங்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. மேலும்,
இது 1,450 கி.மீ நீளமான 93 கிராமப்புற சாலை
கட்டுமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது, 2,800 கி.மீ க்கும் அதிகமான ரயில் பாதைகளை
உருவாக்கியுள்ளது, மேலும் 19,000 மருத்துவமனை படுக்கைகளை தயாரித்து நாட்டின் சுகாதாரத் துறைக்கு வழங்கியுள்ளது.
[2]
மேலே
குறிப்பிடப்பட்ட திட்டங்கள் இஸ்லாமிய புரட்சியைப் பாதுகாக்கும் செயற்திட்டத்தில்
ஒரு பகுதி மட்டுமேயாகும்.
நிவாரணப்
பணிகளை ஒருங்கிணைப்பதில் ஐ.ஆர்.ஜி.சியின் மிக பங்களிப்பு முக்கியமானது
மக்களின்
வாழ்க்கையை பாதிக்கும் வெள்ளமாகட்டும், பூகம்பமாகட்டும்,
வறட்சியாகட்டும்
அல்லது நோய் ஆகட்டும் ஒவ்வொரு பகுதிக்கும் ஐ.ஆர்.ஜி.சியின் பங்களிப்பு இன்றியமையாதது. கடந்த
தசாப்தத்தில் அஜர்பைஜான் மற்றும் கெர்மன்ஷா பகுதிகளில் பூகம்பங்களால் ஏற்பட்ட
சேதங்களைத் தொடர்ந்து அதன் புனரமைப்பு
உட்பட, நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட
பகுதிகளை புனரமைப்பதிலும் ஐ.ஆர்.ஜி.சியின் பங்களிப்பு அளப்பரியது.
2019 ஆம்
ஆண்டில், 15க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தாலும் மற்றும் அதனால் ஏற்பட்ட
சேதங்களாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இந்த இயற்கை
பேரழிவுகள் ஏற்பட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள் ஐ.ஆர்.ஜி.சியின் அலகுகள்
களத்தில் இறங்கி மனித நேய பணிகளில் ஈடுபட்டன. நாட்டு மக்களே ஐ.ஆர்.ஜி.சியின்
முக்கிய உரிமையாளர்கள் என்பதை மனதில்கொண்டு மக்களுக்கு உதவுவதற்கும் அவர்களை மீட்பதற்கும்
தொடங்கின. இந்த இயற்கை அழிவுகள் ஏற்பட்டு பல ஆண்டுகள்
கடந்துவிட்ட போதிலும், ஐ.ஆர்.ஜி.சி தொண்டர் படைகள் இன்னும் சில பகுதிகளில் சேவைகளை வழங்குவதில்
மும்முரமாக உள்ளன. ஓர் உதாரணத்தை மேற்கோள் காட்டுவதாயின்,
நிலநடுக்கத்தால்
பாதிக்கப்பட்ட பகுதிகளில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பல ஆயிரம் தற்காலிக தங்குமிடங்களை
ஐ.ஆர்.ஜி.சி வழங்கியுள்ளது. நாட்டின் வடக்குப் பகுதிகளிலும் - குறிப்பாக
குலிஸ்தான் மாகாணத்திலும் இதேபோன்ற பணிகளை அது செய்துள்ளது. இயற்கை
பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐ.ஆர்.ஜி.சி நிவாரணப் பணிகளைப் பற்றிய ஒரு
முக்கியமான விடயம் என்னவென்றால், அவர்கள் கெர்மன்ஷா மற்றும் குலிஸ்தானில்
உள்ள சுன்னி முஸ்லிம்களாகும். அவர்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி உதவி
வழங்குகிறார்கள். இந்த நிவாரணப் பணிகளுக்கு அவர்கள் முன்னுரிமை வழங்கி செயல்பட்டு
வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19 மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் பரவுவதால், ஐ.ஆர்.ஜி.சி தற்காலிக மருத்துவமனைகளை
அமைத்தல் மற்றும் மக்களுக்கு - குறிப்பாக வறியவர்களுக்கு - மருத்துவப் பொருட்களை
வழங்குதல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அத்துடன் மருத்துவமனைகளில்
உதவுதல் மற்றும் நோயாளிகளுக்கு சேவை செய்யும் பணியை அதன் மருத்துவ மற்றும் சுகாதார
நிபுணர்கள் சிறப்பாக செய்துவருகின்றனர். மேலும், இது நாடு முழுவதும் உள்ள பொதுப் பகுதிகளை
கிருமிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதுடன், மருத்துவப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய
பாவனைப் பொருட்களின் பதுக்கலை எதிர்கொள்ள அதன் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை
பிரிவுகளையும் ஈடுபடுத்தியுள்ளது.
முடிவுரை
புரட்சியையும்
அதன் சாதனைகளையும் பாதுகாக்கும் அதேவேளை ஏற்படக்கூடிய ஒவ்வொரு அச்சுறுத்தலையும்
எதிர்கொள்ளும் பணியை ஐ.ஆர்.ஜி.சி சிறப்பாக செய்து வருகிறது.. அத்தோடு அதனது நோக்கத்தை
அடையும் பொருட்டு அதன் செயல்பாடுகளின் முயற்சிகள் எல்லையற்து.
ஆயுதம்தரித்த
உள்நாட்டு பயங்கரவாதிகள், வெளிச்சக்திகளின் தலையீடு இருந்த காலகட்டத்தில் இஸ்லாமிய குடியரசு எதிர்கொண்டிருந்த
அச்சுறுத்தல் காரணமாக ஐ.ஆர்.ஜி.சி நிறுவப்பட்டது. அது உருவான ஒரு
வருடத்திற்குப் பிறகு, ஈரான் இஸ்லாமிய குடியரசின் இராணுவத்துடன் இணைந்து,
நாட்டின்
எல்லைகளை பாதுகாப்பதற்காக எட்டு ஆண்டுகள் நீடித்த ஒரு போரின்
போது முன்
அணியில் நின்று
நாட்டைக் காக்க அதன் படைகளை அனுப்பியது.
ஈரானுக்கு
எதிரான போர் பொருளாதாரத் தடைகள் பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டபோது
ஐ.ஆர்.ஜி.சி
அந்த பகுதியிலும் நாட்டின் எல்லைகளை பாதுகாத்தது போல் பொருளாதார பயங்கரவாதத்துக்கு
எதிராக சொந்த வளங்களை பாதுகாத்து பயன்படுத்துவதன் மூலம் தனது இருப்பைக் காட்டியது. அதே நேரத்தில்,
நாட்டை
அபிவிருத்தி செய்வதற்கும், முன்னேற்ற பாதையில் செல்ல உதவுவதற்குமான அதன் முக்கிய குறிக்கோளை மறக்காமல்
செவ்வனே செய்து வருகிறது..
ஐ.ஆர்.ஜி.சி
அமைப்பினுள் முஸ்லிம்களின் தன்மானச் சின்னமான குதஸை சியோனிஸ்ட்டுகளிடம் இருந்து மீட்கும்
படையணியும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
ஆகையால்,
ஐ.ஆர்.ஜி.சி
மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், உலக மக்களின் பார்வையை திசைதிருப்பி அதன்
நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் வல்லாதிக்க சக்திகள் மேற்கொண்டு வரும்
பெரும்
முயற்சிகளின் மத்தியிலும்,
மேற்கூறிய
சாதனைகள் அனைத்தையும் ஐ.ஆர்.ஜி.சி ஆன்மீக வழிகாட்டலுக்கு அமைய பாதுகாத்துக்கொண்டு
வருகிறது. மேலும், உலகெங்கிலும் உள்ள அனைத்து நீதி தேடும் நாடுகளுடனும் தமது உறவை
வலுப்படுத்தியும் வருகிறது.
ஆகவே,
நீதிக்காக
போராடும் நாடுகளுக்கு ஐ.ஆர்.ஜி.சி ஒரு முன்மாதிரியாக தன்னை ஆக்கிக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment