Thursday, May 21, 2020

இஸ்ரேலின் மிருகத்தனமான அடக்குமுறைக்கு பாலஸ்தீனர்கள் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை

“Quds Day”: Palestinians will never succumb to brutal Israeli repression


இந்த அபகரிப்பாளர்களின் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் கைகளைத் துண்டிக்க உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் இஸ்லாமிய நாடுகளையும் ஒன்றிணையுமாறு நான் அழைக்கிறேன். பாலஸ்தீனிய மக்களின் தலைவிதியை தீர்மானிக்க கூடிய நாளாக புனித ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை சர்வதேச  "குத்ஸ் தினமாக" அறிவிக்கின்றேன். இத்தினத்தை முஸ்லிம் மக்களின் சட்டரீதியான உரிமைகளை பாதுகாக்க, குத்ஸ் விடுதலைக்கான முஸ்லிம்களின் சர்வதேச ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு நாளாக மட்டுமல்லாது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக நாளாக அனுஷ்டிக்குமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறேன்.


இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் மேற்கண்ட பிரகடனம் புனித ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை உலகளாவிய ரீதியில் சர்வதேச குத்ஸ் தினம் என்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் நிலையிலும் கூட, இவ்வருடம் மாற்று வழிமுறைகளில், முந்தைய ஆண்டுகளை விட அதிக வீரியத்துடன் குத்ஸ் தினம் நினைவுகூரப்படுகிறது.

இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களால் 1979 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினமானது அத்தினத்தை மகிமைப்படுத்தவும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தவும் சியோனிசத்தையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்க்கவும் உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் பலதரப்பட்ட செயல்பாடுகள்  வருடாந்திர நிகழ்வாகும்.

சியோனிச இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இப்பிரகடனத்தின் நோக்கமாகும்.

ஏழு தசாப்தங்களைக் கடந்தும் பாலஸ்தீனர்களின் போராட்டம் ஓயவில்லை என்பது, பலஸ்தீன மக்கள் அவர்களது பூர்வீக நிலங்களை விட்டுக்கொடுக்க தாயாரில்லை என்பதையும் இஸ்ரேல் அதன் ஆக்கிரமிப்பு திட்டத்தில் முற்றாக வெற்றி பெறவில்லை என்பதையுமே காட்டுகிறது.

பாலஸ்தீனர்கள் எதிர்கொண்டுள்ள பாரிய சவால்களுக்கு மத்தியிலும், காலனித்துவ ஆக்கிரமிப்பாளரான இஸ்ரேல், அணு ஆயுத பலத்தையும் பண பலத்தையும் அமேரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் ஆதரவை பெற்றிருந்தபோதும், அச்சத்துடனேயே செயல்பட்டு வருகிறது. இதற்கு அது அன்றாடம் மேற்கொண்டுவரும் கோழைத்தனமான குண்டுவீச்சுக்களே நல்ல உதாரணம். சுருக்கமாக கூறுவதாயின்: பாலஸ்தீனியர்கள் தோற்கடிக்கப்படவில்லை என்பதும் இஸ்ரேலின் மிருகத்தனமான அடக்குமுறைக்கு அவர்கள் ஒருபோதும் அடிபணியபோவதில்லை என்பதுமாகும்.

1948க்கு முன்னர் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இடம்பெயர்ந்ததில் இருந்து, 1967 ஆம் ஆண்டில் மேலும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருந்தபோதும், பாலஸ்தீனியர்கள் நெகிழ்ச்சியுடன் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெறுவதில் உறுதியாக உள்ளனர்.

ஒரு பக்கம் ஹிஸ்புல்லாக்களையும் மறுபக்கம் ஹமாஸ் இயக்கத்தையும் சமாளிக்க முடியாமல் இஸ்ரேல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு சவாலாக அமைந்துள்ள ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் இயக்கங்களைத் சவூதி அரேபியா பயங்கரவாத இயக்கங்கள் என்று முத்திரை குத்தியுள்ளது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். சவுதியின் பலஸ்தீன் தொடர்பான நிலைப்பாடு இதிலிருந்து மாற்றமான ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.


குத்ஸ் தினத்தைக் குறிக்க உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஒவ்வொரு ஆண்டும் தெருக்களில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, பேரணிகள் வித்தியாசமான வடிவத்தையும் பாணியையும் கொண்டிருக்கும். இஸ்ரேலின் சியோனிச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதை நிரூபிப்பர். பாலஸ்தீனர்களின் நியாயமான போராட்டத்தை அவர்கள் எக்காரணம் கொண்டும் புறக்கணிக்க மாட்டார்கள் என்பதையும் சியோனிச எதிர்ப்பு பாதையில் எந்தத் தடை போடப்பட்டாலும் அதை உடைத்தெறிந்து போராட்டம் தொடரும் என்பதை நிரூபிக்க முஸ்லிம்கள் உறுதியாக உள்ளனர்.

அமெரிக்கா தலைமையிலான "சமாதான" பேச்சுக்கள் அல்லது "நூற்றாண்டின் ஒப்பந்தம்" என்று அழைக்கப்படுபவற்றில் எந்தவொரு செல்லுபடி தன்மையும் இல்லை என்பதையும் அது வெறும் ஏமாற்றுவித்தை என்பதையும் பலஸ்தீன மக்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்பதையும் இந்த வருட குத்ஸ் தினம் உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது. அதேநேரம் பாலஸ்தீன மக்கள் போராட்டத்தில் உள்ள நியாயத்தன்மை மிக முக்கியமானது, நிராகரிக்க முடியாதது  என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

குத்ஸ் தினம் என்பது பாலஸ்தீனத்தின் சுதந்திரம் மற்றும் நீதிக்கான தேடலை ஆதரிக்கும் தார்மீக மக்கள் சக்தியாகும்; இதை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்பதை நினைவூட்டுவதாகும். இது சியோனிசத்தின் ஆட்டம் காணும் காலனித்துவ திட்டத்தின் ஒருங்கிணைந்த சக்தியை விட பெரியது.

தெஹ்ரானில் உள்ள பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் பிரதிநிதி நாசர் அபு ஷெரீப், மெஹ்ர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "சர்வதேச குத்ஸ் தினம் என்பது திட்டங்கள் வகுத்து சரியான பாதையில் மாபெரும் முன்னேற்றங்களை நோக்கி நகரும் நாள்", என்று தெரிவித்தார். அதற்கு மாற்றமான வேறு எந்த பாதையும் தவறானது மற்றும் அழிவுகரமானது என்பதை இது நிரூபிக்கிறது. சரியான பாதை குத்ஸை நோக்கி நகர்கிறது. இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிதலும், சூழ்நிலையும் அவரை சர்வதேச குத்ஸ் தினத்தைத் பிரகடனப்படுத்த காரணமாக அமைந்தது, " என்றும் கூறினார்.

இஸ்ரேலை அச்சுறுத்தக்கக்கூடிய சத்தியப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தைரியம் என்பனவற்றின் மதிப்புகளை இந்தப் போராட்டம் கொண்டுள்ளது. இதன் தாக்கம் எவ்வளவென்றால் இஸ்ரேலுக்கு உள்ளேயும் வெளியேயும் நியாயம் வேண்டும் உண்மையான யூதர்கள், சியோனிஸத்தின் மிருகத்தனமான செயல்களை "என் பெயரில் இல்லை" என்று தைரியமான கூறும் நிலையை உருவாக்கியுள்ளது.

பாலஸ்தீனத்தை முற்றிலுமாக நிர்மூலமாக்குவது குறித்து கணிக்கப்பட்ட சியோனிச திட்டம், தோல்வியடைந்துள்ளது. பல தசாப்தங்கள் கழிந்த நிலையிலும் உலக வல்லரசு சக்திகளின் ஆதரவு இருந்தபோதிலும் இஸ்ரேல் தோல்வியுற்ற நாடாகவே உள்ளது என்பது நிதர்சனம்.


குத்ஸ் தினம் பாலஸ்தீன் விடுதலையை நினைவூட்டுவதற்கு மட்டுமல்லாமல், ஒடுக்குமுறைக்கு அடிபணிய மறுக்கும் மக்களை ஒன்று திரட்டி, ஜோகன்னஸ்பர்க் முதல் பாங்காக் மற்றும் தெஹ்ரான் முதல் லண்டன் வரை ஒற்றுமை கோஷம் ஓங்கி ஒலிக்கச் செய்து கொண்டிருக்கிறது.
உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஆளுக்கு ஒரு வாளித் தண்ணீரை ஊற்றினாலே போதும் இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோகும்.
                                                                                            - இமாம் கொமெய்னி (ரஹ்)

ஒன்றுபடுவோம் வெற்றிபெறுவோம்.

-       தாஹா முஸம்மில்

No comments:

Post a Comment