Monday, August 19, 2019

எம் மீது யுத்தமொன்றை திணித்தால் இஸ்ரேல் நிர்மூலமாவதை டீவியில் நேரலையாகக் காண்பீர்கள் - ஹசன் நஸ்ரல்லாஹ்


Imposing a war on us: You will see Israel's annihilation live on TV - Hassan Nasrallah

-       - ராமின் ஹுசைன் அபாதியான் 
-           

லெபனான் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் பொதுச் செயலாளர் சையத் ஹசன் நஸ்ரல்லாஹ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 2006ம் ஆண்டு ஜூலை மாதம் லெபனான் மீதான இஸ்ரேலிய’ 33 நாள் போரின்போது ஹிஸ்புல்லாஹ் அடைந்த பெரும் வெற்றியின்” 13 வது ஆண்டு நினைவு நாளை குறிக்குமுகமாக உணர்ச்சிபூர்வமான உரையொன்றை நிகழ்த்தினார்.

உரையின் போது  நஸ்ரல்லாஹ் இஸ்ரேலியர்கள் லெபனானுக்குள் ஊடுருவினால், அவர்களின் யுத்த டாங்கிகள் அனைத்தும் அழிக்கப்படும். கடந்த காலத்தில் இஸ்ரேல் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தை அழிக்கலாம் என்று கனவு கண்டது, ஆனால் இன்று, இவ்வியக்கம் இப்பகுதியில் பாரிய ஒரு சக்தியாக மாறியுள்ளது", என்று கூறினார்.

மேலும் அவர் "லெபனானுக்குள் வர வேண்டாம் என்று நான் எச்சரிக்கிறேன், நீங்கள் லெபனானுடன் ஒரு போரைத் தொடங்கினால், இஸ்ரேல் நிர்மூலமாவதை எல்லோரும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் நேரடியாகவே காண்பார்கள். அந்த 33 நாள் போர் சியோனிச ஆட்சியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியது. இன்று, இஸ்ரேலியர்கள் லெபனானை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்என்று தெரிவித்தார்.

"எம்முடைய எதிர்ப்பை தொடர்ந்தும் உயிரோட்டம் உள்ளதாக வைத்திருப்பது முக்கியமாகும். அது சிரியாவில் பயங்கரவாதத்தின் மீள் எழுச்சியைத் தடுப்பது மட்டுமல்லாமல் அங்கிருந்து மற்றொரு உலகப் போர் உருவாதையும் தடுக்கும். நிச்சயமாக, சரணடைதல் அல்லது அடிபணித்தலை ஏற்றுக்கொள்வதினால் ஏற்படும் இழப்பை விட, எதிர்ப்பின்னாலும் சண்டையினாலும் ஏற்படும் இழப்பு மிகக் குறைவாகவே இருக்கும்,” என்றும் நஸ்ரல்லாஹ் குறிப்பிட்டார்.

ஹிஸ்புல்லாஹ் இயக்கம் எப்போதுமே பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரும்பும் ஒன்றாக இருந்து வருவதாகவும், இன்று பெஞ்சமின் நெதன்யாகு, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகியவை இப்பகுதியில் போரொன்றை உருவாக்கவே விரும்புவதாகவும் நஸ்ரல்லா கூறினார்.

நஸ்ரல்லாஹ்வின் உரையின் மிக முக்கியமான பகுதி ஈரான் இஸ்லாமிய குடியரசின் சக்தி மற்றும் அதற்கு எதிரான வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் பற்றியதாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

"இப்போது அமெரிக்க அதிகாரிகள் ஈரானைத் தாக்குவது குறித்த அவர்களது முந்தைய அச்சுறுத்தல்களிலிருந்து பின்வாங்கியுள்ளதால், நாங்கள் ஒரு வரலாற்று சாதனை நிகழ்த்துவதற்கான விளிம்பில் இருக்கிறோம். ஈரானுக்கு எதிரான எந்தவொரு போரும் முழு பிராந்தியத்தையுமே சுட்டெரிக்கும்; ஈரானைத் தாக்குவது என்பது  அநியாயத்தையும் ஆக்கிரமிப்பையும் எதிர்க்கும் அனைத்து உறுப்பினர்களையும் தாக்குவதாகும்.என்றும் நஸ்ரல்லாஹ் குறிப்பிட்டார்.

அவரது இந்த உரையின் மூலம், பிராந்தியத்தில் தொடர்ந்து பதட்டங்களை ஏற்படுத்தவும் யுத்தமொன்றை உருவாக்கவும் முயற்சிக்கும் அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட சமாதானத்தின் எதிரிகளுக்கு நஸ்ரல்லாஹ் மிகவும் கடுமையான எச்சரிக்கைகளை வழங்கினார்.

ஈரானுக்கு எதிராக ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்துவார்களாயின், ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அநியாயத்தையும் ஆக்கிரமிப்பையும் எதிர்க்கும் அனைத்து  உறுப்பினர்களும் அமைதிகாத்து சும்மா இருப்பர் என்று நினைக்க வேண்டாம்; மாறாக, அவர்கள் ஈரானை பூரணமாக ஆதரிப்பவர்களாகவும் ஈரானின் எதிரிகளை குறிவைப்பவர்களாகவும் இருப்பர் என்றும் நஸ்ரல்லாஹ் உறுதிபட  கூறினார்.

ஹிஸ்புல்லாவின் இந்த எச்சரிக்கைகள் ஒரு முக்கியமான நேரத்தில் வருகின்றன; கடந்த சில வாரங்களாக அமெரிக்கர்கள் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தேர்வுகள் அனைத்தும் மேசையில் இருப்பதாக பலமுறை அறிவித்தனர்; இருப்பினும், ஈரானின் சக்தியை உணர்ந்த பின்னர் அவர்கள் இந்த அச்சுறுத்தலின் வீரியத்தை குறைத்துக்கொண்டனர். இந்த நேரத்தில் ஈரான் பாரசீக வளைகுடா வான் பகுதியில் ஊடுருவிய அமெரிக்க ட்ரோனை வீழ்த்தியது மற்றும் சர்வதேச கடல் சட்டங்களை மீறிய ஒரு பிரிட்டிஷ் எண்ணெய்தாங்கி கப்பலை ஈரான் கைப்பற்றிய செயலானது ஈரானின் துணிச்சலை முழு உலகுக்கும் வெளிக்காட்டியது எனலாம்.

அநியாயத்தையும் ஆக்கிரமிப்பையும் எதிர்க்கும் ஒன்றுபட்ட அணி பற்றி நஸ்ரல்லாஹ் எதிரிகளுக்கு நினைவுபடுத்தினார்; இந்த அணியின் எந்தவொரு உறுப்பினரையும் தாக்குவது முழு ஒற்றுமையையும் தாக்குவதற்கு சமம் என்பதை தெளிவுபடுத்தினார்.

நஸ்ரல்லாஹ்வின் எச்சரிக்கை மிகவும் துல்லியமாக இருந்தது. பின் சல்மான், பின் சயீத் மற்றும் நெதன்யாகு போன்ற பிராந்தியத்தில் உள்ள யுத்த வெறியர்களுக்கு நிச்சயமாக உரிய செய்தி சென்று சேர்ந்திருக்கும் என்று நம்பலாம்.

மறுபுறம், அமேரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக ஈரானின் தற்காப்பு மற்றும் இராணுவ சக்தி குறித்து நஸ்ரல்லாஹ்  கூறியது உலகெங்கிலும் உள்ள ஊடகங்களின் கவனத்தை ஈரானை நோக்கி ஈர்த்துள்ளது.

"ஈரானின் உயர் இராணுவ சக்தியையும் திருப்பித்தாக்கும் வல்லமையையும் உணர்ந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானைத் தாக்குவதைத் தவிர்த்தார்" என்று நஸ்ரல்லாஹ் தெளிவாகக் கூறினார்.

அமேரிக்கா ஈரானுடனான போரைத் தவிர்ப்பதற்கான காரணம் ஒரு மூலோபாயமோ அல்லது இராஜதந்திர முடிவோ அல்ல என்றும் ஈரான் திருப்பித் தாக்கும் என்ற அச்சமே அதற்கு காரணம் என்பதை நஸ்ரல்லாஹ்  தெளிவுபடுத்தினார்.

நஸ்ரல்லாஹ்வின் பேச்சு ஒரு தடுப்பு விளைவைஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிகிறது; இதன் நோக்கம் என்னவென்றால், பிராந்தியத்திலும் உலகிலும் உள்ள போரார்வம் கொண்டோர்  எமது  எதிர்ப்பு சக்திகளின் ஒற்றுமையைப் புரிந்துகொள்வார்கள், எனவே அவர்கள் பிராந்தியத்தில் சாகசங்களை செய்வதற்கு முன்பு,  அதை கணக்கில் எடுத்துக்கொள்வார்கள் மற்றும் அவர்களின் அனைத்து நகர்வுகளையும் முடிவுகளையும் மறுபரிசீலனை செய்வார்கள்.

நஸ்ரல்லாஹ்வின் உரையின் மற்றொரு நோக்கம் என்னவென்றால், சவுதி மற்றும் அமேரிக்கா உட்பட எதிரிகளுக்கு ஹிஸ்புல்லாஹ்  மற்றும் ஈரானின் ஓங்கிவரும் சக்தி குறித்து அறிவிப்பதே ஆகும். இந்த சக்தி எம்மைப்பற்றிய அவர்களின் முந்தைய கணக்கீடுகளை மாற்றிவிடும், மேலும் சில மேற்கத்திய ஊடகங்கள் கூட ஈரானுக்கு எதிரான அமெரிக்க சக்தி வேகமாக குறைந்து வருவதை ஒப்புக்கொள்கின்றன.

நன்றி

No comments:

Post a Comment