The Triumph of Truth
Why is "Mubahala" day considered an important day in Islamic history?
மூலம்: செய்யத் அலி ஷாபாஸ்
إِن اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ
كَمَثَلِ اٰدَمَؕ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَيَكُوْنُ
اَلْحَـقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ
مِّنَ الْمُمْتَرِيْنَ
அல்லாஹ்விடத்தில்
நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை
மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார். (நபியே! ஈஸாவைப் பற்றி)
உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்; எனவே (இதைக் குறித்து)
ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர். (திருக்குர்ஆன் 3:59-60)
முஸ்லிம்களை பொறுத்தவரை புனித குர்ஆன் என்பது ஒரே
இறைவனின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாகும். சர்வவல்லமையுள்ள படைப்பாளன் கடந்த
காலங்களில் வெவ்வேறு புவியியல் தொலைதூர பகுதிகளில் வெவ்வேறு குழுக்களுக்கு
வெளிப்படுத்திய மற்ற அனைத்து தெய்வீக புத்தகங்களுக்கும் பதிலாக குர்ஆனை கடைசி
மற்றும் மிகவும் விரிவான வேதமாக நாங்கள் கருதுகிறோம்.
குர்ஆன்,
23 வருட காலப்பகுதியில்
கிராமமாக வெளிப்படுத்தப்பட்ட வசனங்களின் பதிவுசெய்யப்பட்ட தொகுப்பாகும். இது நேரம், காலம் மற்றும் பூகோள எல்லைகளைத் தாண்டிய அதன் உலகளாவிய செய்தியின் காரணமாக
மனித சமூகங்களில் புரட்சியை ஏற்படுத்தியது. இது இறுதி உண்மை.
ஒருபுறம், பழைமைவாதிகள் மற்றும் ஊகத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும்
பின்னவீத்துவவாதிகள் ஆகியோர் மதம் என்பது கடந்த கால பதிவுகள் என இருதரப்பினராலும்
உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள் மற்றும் யூகங்களை அம்பலப்படுத்துவதற்கு, முந்தைய வரலாற்றின்
மிக முக்கியமான சில முக்கியமான நிகழ்வுகளில் சிலவற்றை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
மறுபுறம்,
ஒப்பிடமுடியாத
மொழித்திறன் மற்றும் ஞானம் நிறைந்த இந்த பொக்கிஷம் குறிப்பிடத்தக்க வகையில் மனித
சமூகங்களின் முன்னேற்றத்தையும் மாறிவரும் தேவைகளையும் எதிர்பார்க்கிறது, மேலும் மனதில் வளரும்
எண்ணங்களை எதிர்பார்க்கிறது.
எனவே, இந்த மறுக்க முடியாத
உண்மைகளின் பார்வையில், மேற்கோள் காட்டப்பட்ட ஆயத்துக்கள் குறிப்பிடும் நபர்கள் யார்? கன்னிப் பிறப்பைப் பற்றி - தந்தையின் தொடர்பு இல்லாமல் - ஈஸா (அலை) அவர்களின்
வார்த்தைகளில் சந்தேகங்களை எழுப்பிய நபர்கள் யார்?
நமது மனம் உடனடியாக ஹிஜ்ரி 9ஆம் ஆண்டிற்குத்
பின்னோக்கி நகர்கிறது. இறுதித்தூதரின் தூதுத்துவ பணி பூர்த்தியடைய இன்னும் ஒரு
வருடமும் மற்றும் சில மாதங்களுமே எஞ்சியிருந்து. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது
காலத்தின் பிற நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் தனது பணியை
விளக்கி,
கடிதங்களை அனுப்பி, சத்திய இஸ்லாத்தின்
பால் அவர்களை அழைத்தார். அதற்கமைய யேமனில் உள்ள நஜ்ரானில் இருந்து மதீனாவிற்கு
தூதுவர்கள் வருகைத்தந்தனர்.
நபிகள் மீதும் முஸ்லிம்கள் மீதும் தமது சொந்தக்
கருத்துக்களைத் திணிக்கலாம் என்று அதீத நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவ மதகுருக்களைக் கொண்ட தூதுக்குழு இறை
தூதரை சந்தித்தது.
மூன்று நாட்களுக்கு ஒரு சுவாரஸ்யமான விவாதம்
இவர்களுக்கிடையே இடம்பெற்றது, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் மகிமையினை மிகவும் தர்க்கரீதியான
முறையில் பகுத்தறிவு ரீதியான ஆதாரங்களுடன் முன்வைத்தார், இறைவன் என்பவன்
மகன்கள் அல்லது குழந்தைகள் தேவைப்படுவதற்கு மனித குணாதிசயங்களைக் கொண்டிருக்க
முடியாது என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார். ஈஸா (அலை) தீர்க்கதரிசியின் பணி
மற்றும் அவரது தீர்க்கதரிசனங்களை அவர் மிகவும் துல்லியமாக விளக்கினார் - மக்களை
வழிநடத்துவதற்குப் பதிலாக வழிகெடுக்க பல நூற்றாண்டுகளாக இடைச்சொருகல்கள்
இடம்பெற்றதை விளக்கினார்.
எனினும்,
நஜ்ரான் மதகுருக்கள்
பிடிவாதமாக இருந்தனர். அவர்களால் திரித்துவ கொள்கையில் இருந்து விடுபட முடியவில்லை, அதில் பிடிவாதமாக கிருந்தனர். ஆயினும் அவர்களால் அதற்கான நியாயமான ஆதாரங்களை
வழங்க முடியவில்லை. இந்த நேரத்தில்,
கீழே குறிப்பிடப்பட்ட
வசனங்களை நபிக்கு இறைவன் வெளிப்படுத்தினான்.
فَمَنْ حَآجَّكَ فِيْهِ مِنْۢ بَعْدِ مَا
جَآءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ اَبْنَآءَنَا وَاَبْنَآءَكُمْ
وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَاَنْفُسَنَا وَاَنْفُسَكُمْ ثُمَّ
نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَتَ اللّٰهِ عَلَى الْكٰذِبِيْنَ
(நபியே!) இதுபற்றிய முழு விபரமும்
உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம்
செய்தால்: “வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள்
பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து
(ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) ”பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம்
உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்!” என நீர் கூறும். (திருக்குர்ஆன் 3:59-60)
இது ஒரு புதுமையான சவாலாக இருந்தது. நபியவர்கள்
ஏற்றுக்கொண்டார்கள், கிறிஸ்தவர்களும்
ஏற்றுக்கொண்டார்கள். பொய்யர்கள் மீதான அழிவு சாபத்திற்கான சூழலும் தேதியும்
நேரமும் நிர்ணயிக்கப்பட்டது. அது மதீனாவுக்கு வெளியே ஸில்ஹஜ் மாதம் 24 ஆவது நாளாகும். இரு தரப்பினரும் பொய்யர்கள் மீதான
இறைவனின் சாபத்தைத வேண்டுவதற்கு தயாரானார்கள் - கிறிஸ்தவர்கள் தங்கள் திரித்துவ
சடங்குகள் மூலமும் மற்றும் நபிகள் நாயகம் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கும் எளிய
பிரார்த்தனையுடன் வைபவம் ஆரம்பமானது.
அதற்கு முந்தைய நாள் இரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது இரு சிறு பேரன்களான இமாம் ஹசன் (அலை) மற்றும் இமாம் ஹுசைன் (அலை), மற்றும் அவரது மகள் ஹஸ்ரத் பாத்திமா ஸஹ்ரா (ஸலாமும் அலைஹா) மற்றும் அவரது மருமகன் இமாம் அலி (அலை).ஆகியோரைச் சுற்றி ஒரு போர்வையை அணிவித்தாரர்கள். இந்த மறக்கமுடியாத தருணத்தில்தான், சர்வவல்லமையுள்ள அல்லாஹ் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பத்தின் பொருட்டே வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தையும் படைத்தான் என்ற நற்செய்தியை வழங்குவதற்காக வானவர் தலைவர் ஜிப்ரஈல் (அலை) இறங்கினார். சர்வவல்லமை உள்ள இறைவன் தனது கண்ணியமிக்க தூதருக்கு இந்த மகத்துவமிக்க செய்தியை வெளிப்படுத்தினான்:
اِنَّمَا
يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ
تَطْهِيْرًا ۚ
(நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும்
பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (33:33)
இந்த வசனம் அஹ்ல் அல்-பைத் தூய அடையாளத்தை
உறுதிப்படுத்தியது, மேலும் மறுநாள்
நிகழவுள்ள அதிசயத்தின் குறிகாட்டியாகும்.
துல்ஹஜ் மாதம் 24ம் தேதி விடிந்ததும், கிறிஸ்தவ மதகுருமார்கள் தம் பரிவாரத்துடன் குறிப்பிட்ட இடத்தில் கூடியபோது, நபிகளார் நிதானமாகவும், சாந்தமாகவும் களத்தில்
சமூகமளிப்பதைக் கண்டு கண்டு வியந்தனர். அவருடைய தோழர்கள் எவரும் அவருடன்
இருக்கவில்லை. மேலும் அவர் 25 வருடங்கள் மகிழ்ச்சியான
குடும்ப வாழ்வைக் கழித்த அவரது விசுவாசமான மனைவி ஹஸ்ரத் கதீஜா (அலை) ஒரு
தசாப்தத்திற்கு முன்னர் காலமானதைத் தொடர்ந்து, சமூகத் தேவைகளுக்காக
அவர் திருமணம் செய்துகொண்டிருந்த போதும், அவர்களில் எவரும் அச்சமயம் அவருடன் இருக்கவில்லை.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது நெருங்கிய மற்றும்
அன்பானவர்களுடன், அதாவது, அவரது உடனடி குடும்ப உறுப்பினர்களுடன் (அஹ்லுபைத்துகளுடன்) - மகள் ஹஸ்ரத்
பாத்திமா ஸஹ்ரா, அவரது கணவர், இமாம் அலி மற்றும் தம்பதியரின் இரண்டு இளம் மகன்களான இமாம் ஹசன் மற்றும் இமாம்
ஹுசைன் (அவர்கள் மீதும் சாந்தி சமாதானம் உண்டாவதாக) ஆகியோரை மட்டும் நபியவர்கள்
அழைத்து வந்தார்கள்.
அழிவு சாபத்திற்கு நபி அவர்களின் குடும்பத்தவர்கள்? இதை கிறித்தவ மதகுருக்களால் நம்ப முடியவில்லை. ஆச்சர்யமும் அச்சமும்
அடைந்த நஜ்ரான் மதகுருமார்களும் ஏனைய கிறிஸ்தவர்களும் சத்தியத்தை உணர்ந்தனர். இந்த
ஆசீர்வதிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழு சொர்க்கத்திற்கு தங்கள் கைகளை
உயர்த்தினால், உடனடியாக இறைவனின்
கோபத்தை கொண்டுவரும் காட்சிகளை அவர்கள் கற்பனைசெய்து பார்த்தார்கள். கிறிஸ்தவர்கள்
புத்திசாலித்தனமாக சவாலை வாபஸ் பெற்று சமாதானம் செய்து, அதன் மூலம் அஹ்ல்
அல்-பைத்தை எதிர்க்கும் முட்டாள்தனத்தை வரும் சந்ததியினருக்கு உணர்த்தினார்கள்.
இவ்வாறு 'முபாஹலா தினம்' முஸ்லிம்களின் மனதில் ஆழப்பதிந்தது, நபிகள் நாயகத்தின்
சந்ததியினருக்கும் (அஹ்லுல் பத்தினருக்கும்) மனித குலத்தின் இரட்சிப்பின் ஒரே
வழிமுறையான அல்லாஹ்வின் புனித குர்ஆனுக்கும் (தகலைனுக்கும்) இடையே உள்ள பிரிக்க
முடியாத தொடர்பைப் பற்றிய ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
இமாம் அலி (அலை) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
தனது வாரிசாக நியமிக்கும் தெய்வீக ஆணையின் பேரில் இந்த நாளில் இறைவன்
வெளிப்படுத்திய மற்றொரு வசனத்துடன் கட்டுரையை முடிக்கிறேன்.
வழக்கமான தொழுகையின் போது இமாம் அலீ (அலை) ருகூஉ
நிலையில் இருந்தபோது, மதீனா மசூதியில்
உதவிக்காக கெஞ்சும் வாரியவரை நோக்கி விரலை நீட்டிக்காட்டி தனது மோதிரத்தை தர்மமாக
கொடுத்தார்:
اِنَّمَا وَلِيُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ
وَالَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ
الزَّكٰوةَ وَهُمْ رَاكِعُوْنَ
நிச்சயமாக உங்களுக்கு
உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின்
கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம். 5:55.
وَمَنْ يَّتَوَلَّ اللّٰهَ وَ رَسُوْلَهٗ
وَالَّذِيْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ
அல்லாஹ்வையும் அவனது
தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள். 5:56.
No comments:
Post a Comment